அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

பட மூலாதாரம், VIJAYABHASKAR
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முன்னாள் சுகாதார துறை அமைச்சர் விஜய் பாஸ்கரின் இலுப்பூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில் அவரது வீட்டின் முன்பு விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் குவிந்து வருவதால் பரபரப்பு
ஏற்கெனவே கடந்த 2019, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வருமானவரித் துறையினர், அமலாக்க துறையினர் மற்றும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது அவரது வீட்டின் முன்பு விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் குவிந்து வருவதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக, பாஜக கூட்டணி முடிவு ஏற்பட்ட பின்னர் முதல் முறையாக விஜயபாஸ்கரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.

