மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு மமதா ஆதரவு

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசுக்கு நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், அங்கு நடக்கும் நிகழ்வுகளுக்கு மத்தியில் ஆளும் நரேந்திர மோதி அரசை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மகாராஷ்டிராவில் ஜனநாயகத்தின் மீது புல்டோசர் இயக்கப்படுகிறது என்று மமதா பானர்ஜி கூறியுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம்.ஆர். ஷோபனா

  1. வந்துகொண்டிருக்கும் செய்தி, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த பாஜகவின் சி.டி ரவி, அண்ணாமலை

    அதிமுக

    பட மூலாதாரம்,

    படக்குறிப்பு, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கும் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி, மாநில தலைவர் கே. அண்ணாமலை

    அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை தனித்தனியே அவரவர் வீடுகளுக்குச் சென்று பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவியும், மாநில தலைவர் அண்ணாமலையும் சந்தித்துள்ளனர்.

    அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் முடிவடைந்த நிலையில், பாஜக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியையும் பன்னீர்செல்வத்தையும் சந்தித்தனர்.

    இந்த நிலையில், குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான திரெளபதி முர்மூவுக்கு ஆதரவாக கூட்டணி கட்சிகளின் ஆதரவு எம்பிக்களிடம் கையெழுத்து பெறுவதற்காக பாஜக மேலிடம் சி.டி.ரவி, அண்ணாமலை ஆகியோரை கேட்டுக் கொண்டதாகவும் அது தொடர்பாக பேசுவதற்காக இருவரும் எடப்பாடி பழனிசாமியையும் ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்துப் பேசியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

  2. திமுகவை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போயிருக்கிறார்கள் - முதல்வர் ஸ்டாலின்

    முதல்வர் ஸ்டாலின்

    பட மூலாதாரம், DMK - Dravida Munnetra Kazhagam/Facebook

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் இல்ல திருமண விழாவில் கலந்துக்கொண்டு பேசினார்.

    அப்போது அதிமுக உட்கட்சி பிரச்னை குறித்து பேசிய அவர், “இவ்வளவு பெரிய மண்டபத்தில் நம்முடைய வீட்டுத் திருமணம் நடப்பதைப்போல எண்ணி நாமெல்லாம் கலந்துகொண்டு, இந்த நிகழ்ச்சியில் வாழ்த்திக் கொண்டிருக்கிறோம்.

    இன்னொரு பக்கத்தில் - திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அந்தப் பிரச்சினைக்கெல்லாம் போக விரும்பவில்லை.

    அதில் நாம் தலையிட வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் அவர்கள்தான் நம்மை அழிக்க முடிவு செய்திருக்கிறார்களாம். தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போயிருக்கிறார்களே தவிர, தி.மு.க. அழிந்ததாக வரலாறு கிடையாது. எனவே அந்த உணர்வோடு நாம் இருக்கிறோம்.” என்றார்.

  3. கேரள தங்க கடத்தல் வழக்கில் 2வது நாளாக ஸ்வப்னா சுரேஷிடம் விசாரணை

    கேரளாவில் தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக ஸ்வப்னா சுரேஷிடம் அமலாக்கத்துறை கொச்சியிலுள்ள தனது அலுவலகத்தில் 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றது என்று ஏ. என். ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.இந்த வழக்கு தொடர்பாக நேற்று அவரிடம் ஆறு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  4. அதிமுக பொதுக்குழுவில் நடந்தவை என்ன? - 10 முக்கியத் தகவல்கள்

  5. எங்களது கட்சி இன்றும் வலுவான நிலையில் உள்ளது - சிவ சேனா எம்.பி சஞ்சய் ராவத்

    மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், தங்களின் கட்சி இன்றும் வலுவான நிலையில் உள்ளது என்று சிவ சேனா எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

    இது குறித்து அவர் பேசுகையில், “நான் எந்த முகாம் பற்றியும் பேச மாட்டேன். என் கட்சி பற்றி பேசுகிறேன். எங்களுடைய கட்சி இன்றும் வலுவான நிலையில் உள்ளது. எங்களுடன் எம். எல்.ஏக்கள் 20 பேர் தொடர்பில் இருக்கின்றனர்.

    அவர்கள் மும்பை வரும்போது, அவர்கள் எந்த சூழ்நிலையில் சென்றார்கள் என்பது தெரிய வரும்,” என்று கூறியுள்ளார்.

    முன்னதாக, மகாராஷ்டிராவின் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரும் சிவ சேனாவின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு எதிராக குரல் எழுப்பியபோது மகாராஷ்டிராவின் கூட்டணி அரசியலில் பிளவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவருடைய தலைமையில் கிட்டதட்ட 35 எம். எல். ஏக்கள் கெளஹாத்தியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  6. அதிமுகவில் தொடரும் உட்கட்சி பிரச்னை - உங்கள் கருத்து என்ன?

    ஒற்றைத் தலைமை கோஷத்தை ஒட்டி அதிமுகவில் தொடரும் உட்கட்சி பிரச்னை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    பிபிசி தமிழின் ட்விட்டர் பக்கத்தில் பகிருங்கள்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. அதிமுக பொதுக்குழு: எடப்பாடி ஆதரவு அலை, ஜூலை 11 அடுத்த பொதுக்குழு - வெளிநடப்பு செய்த ஓபிஎஸ்

  8. வணக்கம் நேயர்களே!

    நான் எம். ஆர். ஷோபனா. இதுவரை விஷ்ணுப்ரியா ராஜசேகர் வழங்கிய நேரலையை இனி நான் தொகுத்து வழங்கவுள்ளேன். உலகம், இந்தியா மற்றும் தமிழக அளவிலான முக்கிய செய்திகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்.

  9. வந்துகொண்டிருக்கும் செய்தி, வெளியேறினார் பன்னீர் செல்வம்

    பரபரப்புக்கு மத்தியில் இன்று காலை தொடங்கிய அதிமுகவின் பொதுக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார் ஓ. பன்னீர் செல்வம். அவர் மேடையை விட்டு இறங்கும்போது அவர் மீது பாட்டில் வீசப்பட்டது.

    முன்னதாக ஒற்றைத் தலைமை குறித்து மேடையில் பேசப்பட்டது. அவைத் தலைவரிடம் கடிதமும் கொடுக்கப்பட்டது. அடுத்த பொதுக் குழுவிற்கான தேதியும் முடிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில் பொதுக் குழுவில் கூச்சல் நிலவியதால் பொதுக் குழுவைவிட்டு வெளியேறினார் பன்னீர் செல்வம்.

  10. 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரித்தது – சி.வி. சண்முகம்

    பெரும் பரபரப்புக்கு மத்தியில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மேடை ஏறி அமர்ந்துள்ளனர்.

    பொதுக் குழுவில் பேசிய சி.வி. சண்முகம் 23 தீர்மானங்களையும் பொதுக் குழு நிராகரிப்பதாக தெரிவித்தார்.

    முன்னதாக அதிமுகவின் பொதுக்குழுவை நடத்த எந்த தடையும் இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததை எதிர்த்து ஓ. பன்னீர் செல்வம் சார்பில் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை இன்று அதிகாலை நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் விசாரித்தனர்.

    விசாரணைக்கு பின் பொதுக்குழுவை நடத்த எந்த தடையும் இல்லை என்று தெரிவித்தும் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர, புதிய தீர்மானங்களை கொண்டுவரக்கூடாது எனவும் ஆணை பிறப்பித்துள்ளனர்.

  11. அதிமுக பொதுக் குழு: கூட்ட அரங்குக்கு வந்தார் எடப்பாடி பழனிசாமி

    ஒற்றைத் தலைமை குறித்த பரபரப்பான விவாதம், அதிமுக பொதுக் குழுவுக்கு நீதிமன்ற அனுமதி, நள்ளிரவு மேல் முறையீடு, அனுமதி பெறாத தீர்மானம் எதையும் கொண்டுவருவதற்கு தடை என்று அதிமுக சுற்றி பரபரப்பான விவாதங்கள் நடந்துகொண்டிருக்கும் நிலையில் அந்தக் கட்சியின் பொதுக் குழுகூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தொடங்கவுள்ளது.

    கூட்ட அரங்கத்துக்கு கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வந்தார்.

  12. சர்வதேச நாடுகளிடம் உதவி கோரும் தாலிபன்

    Taliban

    பட மூலாதாரம், Getty Images

    ஆப்கானிஸ்தானில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு 1000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து சர்வதேச நாடுகளிடம் தாலிபன் உதவி கோரியுள்ளது.

    மண்ணால் ஆன வீடுகளின் இடிபாட்டு குவியலில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது தெரியவில்லை.

    அங்கு பெய்து வரும் கன மழை மற்றும் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணங்களால் மீட்புப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    சில இடங்களில் கிராமங்கள் முழுவதுமாக அழிந்துவிட்டதாக நேரில் பாதிக்கப்பட்டவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

    பல இடங்களில் சாலைகள் பழுதடைந்துள்ளன. மொபைல் டவர்கள் சேதமடைந்துள்ளன. உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  13. பறிபோன அரசு ஆசிரியர் பதவி 55 வயதில் மீண்டும் கிடைத்த ஆச்சரியம்

  14. வணக்கம் நேயர்களே!

    நான் விஷ்ணுப்ரியா ராஜசேகர். பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

    நேற்றைய நேரலை பக்கத்திலிருந்து சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்கிறோம்.

    • அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
    • கட்சி எம்எல்ஏக்கள் விரும்பினால் பதவியை ராஜிநாமா செய்யத் தயார் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
    • ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
    • 'குமுதம்' இதழின் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் மாரடைப்பால் காலமானார்.
    • மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் பார்வையாளர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
    • அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பிகார் விதான் சௌதாவிலிருந்து பாட்னாவில் உள்ள ராஜ் பவனுக்கு ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட அக்கட்சி உறுப்பினர்கள் பேரணி நடத்தினர்.
    • இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டை முற்றுகையிட்டு, பெண்கள் போராட்டம்.
    • மதுரை வணிகவரித்துறையினரால் 1 கோடி மதிப்பிலான, சுமார் 1 டன் கஞ்சாவை வாகன தணிக்கையின் போது மினி வேனுடன் பறிமுதல் செய்துள்ளனர்.