You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
ஆ. லட்சுமி காந்த் பாரதி
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டை முற்றுகையிட்டு, பெண்கள் போராட்டம்
புல்டோசருடன் கொடி அணி வகுப்பு நடத்தியதா காவல்துறை? - நடந்தது என்ன?
மதுரையில் 1 டன் கஞ்சா பறிமுதல்
மதுரை வணிகவரித்துறையினரால் 1 கோடி மதிப்பிலான, சுமார் 1 டன் கஞ்சாவை வாகன தணிக்கையின் போது மினி வேனுடன் பறிமுதல் செய்துள்ளனர்.
மதுரை வணிகவரித்துறை நுண்ணறிவு பிரிவினர் மதுரை ரிங்ரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக விசாகப்பட்டினத்தில் இருந்து மினி வேன் ஒன்று அதி வேகமாக வந்தது. அதே சமயத்தில் அங்கே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த வணிக வரித்துறை அதிகாரிகள் வந்த வேனை அவர்கள் நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த வேன் நிற்காமல் சென்றது. அதைத்தொடர்ந்து வணிகவரித்துறை அதிகாரிகள் மினி வேனை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டி சென்று ஒத்தக்கடை பகுதியில் பிடித்தனர்.
பின்னர் அந்த வேனை சோதனை செய்தபோது நெல், தவிடில் மறைத்து சுமார்1000 கிலோ கஞ்சா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அதிகாரிகள் அந்த சரக்கு வேனை கஞ்சாவுடன் பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் விசாகபட்டினத்தில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டதும், அந்த வேனை பிரகாஷ் என்பவர் ஓட்டி வந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் டிரைவரை கைது செய்துதொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரணில் விக்ரமசிங்கவின் வீட்டின் முன் பெண்கள் போராட்டம்
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டை முற்றுகையிட்டு, பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் வரும் 23ஆம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஒற்றைத் தலைமையாக அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கு எதிராக, கடந்த ஒரு வாரமாக ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் தரப்பினர் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்வேறு தரப்பில் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அதிமுக அலுவலகத்திற்கு அதிமுகவினரும், கட்சி தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர்.
எனவே பதற்றமான சூழலை கருத்தில் கொண்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வணக்கம் நேயர்களே!
நான் விஷ்ணுப்ரியா ராஜசேகர். பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.
குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
நேற்றைய நேரலை பக்கத்திலிருந்து சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்கிறோம்.
- அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆள் சேர்ப்பு பணிகள் நாளை தொடங்குவதாக கடற்படை துணைத் தளபதி தினேஷ் கே திரிபாதி தெரிவித்துள்ளார்.
- புதுச்சேரி கடற்கரை சாலையில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உட்பட 2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
- அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம், நிலச்சரிவுகளால், 34 மாவட்டங்களில் 47,72,140 பேர் கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது மகராஷ்ட்ராவில் ஏக்நாத் ஷிண்டே 11 எம்.ல்.ஏ-க்களுடன் மாயமாகி விட்டதாகச் சொல்லப்பட்ட நிலையில், அவர்கள் குஜராத் மாநிலம் சூரத்திலுள்ள லி மெரிடியன் ஹோட்டலில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
- மேகேதாட்டு அணை கட்டும் முயற்சிக்கு தடை விதிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவை கட்சிகளின் குழுவினர் டெல்லி செல்கின்றனர். மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உள்ளிட்டோரை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
- இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார்.
- அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளிக்க கூடாது என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஆவடி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.