பழங்குடியின பெண் தலைவரை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக அறிவித்தது பாஜக

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக இருந்த முர்மு பழங்குடியினத் தலைவர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்த பாஜகவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக மத்திய அமைச்சர்கள் வெங்கைய்யா நாயுடுவை சந்தித்து பேசினர்.

    இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளரை நிறுத்த முயற்சித்து வருகின்றன. வேட்பாளர் தேர்வு பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவை உள்துறை அமைச்சர் அமித் ஷா பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் சந்தித்து பேசினர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  2. டெல்லி செல்லும் தமிழ்நாடு அனைத்துக் கட்சிக் குழு - காவிரி விவகாரம் தொடர்பாக

    கல்லணை
    படக்குறிப்பு, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கல்லணை

    மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் குழு இன்று டெல்லி செல்கிறார்கள்.

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதில் கர்நாடகா அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இது குறித்து உச்சநீதிமன்றத்திலும் தமிழ்நாடு அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை கட்சிகளின் குழுவினர் டெல்லி செல்கின்றனர். மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து, வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.

    மேலும், வரும் ஜூன் 27ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

  3. பழங்குடியின பெண் தலைவரை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக அறிவித்தது பாஜக

  4. டெல்லியில் ராகுல் காந்தி 5வது நாளாக ஆஜர் - அமலாக்கத்துறை அலுவலகத்தில்

    ராகுல் காந்தி

    டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி 5வது நாளாக இன்றும் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

    நேஷனல் ஹெரால்ட் பண முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா, அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை இயக்குரகம் சம்மன் அனுப்பியுள்ளது.

    இதையடுத்து, கடந்த வாரம் திங்கள் கிழமையன்று ராகுல் காந்தி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். பின்னர் அடுத்த நாளும் விசாரணைக்கு சென்றார். இந்நிலையில், 5வது நாளாக இன்றும் ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்

  5. அஷ்வினுக்கு கொரோனா தொற்று உறுதி

    ashwin

    பட மூலாதாரம், Getty images

    கிரிக்கெட் வீரர் அஷ்வினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இங்கிலாந்துக்கு செல்ல முடியாமல் மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

    அணியின் பிற வீரர்கள் ஏற்கனவே லெசெஸ்டர் சென்றுவிட்ட நிலையில் இங்கிலாந்து செல்ல மும்பைக்கு வந்த அஷ்வினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஜூன் 24ஆம் தேதி நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும் ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கவுள்ள டெஸ்ட் போட்டிக்கு அஷ்வின் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இங்கிலாந்தில் தேதி மாற்றியமைக்கப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளை விளையாடவுள்ளது இந்திய அணி. ஜூன் 26 மற்றும் ஜூன் 28ஆகிய தேதிகளில் ஐயர்லாந்து அணியுடன் இரு டி20 போட்டிகளிலும் இந்திய அணி விளையாடவுள்ளது

  6. “அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு முழுக்கப் போராட்டங்களை முன்னெடுப்போம்” – சீமான்

    நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

    பட மூலாதாரம், NAAM TAMILAR

    அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட்டர் பதிவில், “அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் போராடி வரும் இளைஞர்களின் அறப் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.

    அவர்களுடைய கோரிக்கை மிக நியாயமானது; தார்மீகமானது. அவர்களுடைய போராட்டக் கோரிக்கை வெல்ல வாழ்த்துகிறேன்! அவர்களுக்குத் துணை நிற்கிறேன்.

    அக்னிபத் திட்டத்திற்கு எதிராகப் போராடி வரும் இளைஞர்களின் அதே கோரிக்கையை முன்வைத்து, நாம் தமிழர் கட்சியும் எழுச்சிமிகு போராட்டங்களை மாநிலமெங்கும் முன்னெடுக்கும் எனப் பேரறிவிப்பு செய்கிறேன்.

    அக்னிபத் திட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டை முன்வைத்திருக்கும் திமுக அரசு, அதே கோரிக்கைக்காகப் போராடும் இளைஞர்கள் மீது வழக்குகளைத் தொடுக்கும் கொடுங்கோல் போக்கைக் கைவிட வேண்டும்

    அறவழி போராட்டங்களை அனுமதிக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கு பாதிப்பு: ஆசையாக வாங்கிய வீடுகளில் அகதியாக வாழும் மக்கள்

  8. தொடர்ந்து இணைந்திருங்கள்

    வணக்கம். நான் ஜோ மகேஸ்வரன்.

    இது வரை விஷ்னுப்ரியா ராஜசேகர் வழங்கி வந்த நேரலைப் பக்கத்தை இனி நான் தொகுத்து வழங்குகிறேன். தொடர்ந்து இணைந்திருங்கள்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்

  9. அசாம் வெள்ளம்: நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் மக்கள் – இப்போதைய நிலவரம் என்ன?

    அசாம் வெள்ளம்

    பட மூலாதாரம், Assam State Disaster Management Authority

    அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகளால், 34 மாவட்டங்களில் 47,72,140 பேர் கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது என்று ஏ.என்.ஐ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.

    ஏ.என்.ஐ செய்தி முகமையின் கூற்றுப்படி, அசாமில் கடந்த 24 மணிநேரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர், 7 பேரைக் காணவில்லை, 2,31,819 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    மேலும், மீட்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் நகர்ப்புற பகுதிகள் உட்பட கச்சார் மாவட்டத்திலும் சில்சார் மாவட்டத்தின் கிராமப்புறங்களிலும் இந்திய ராணுவம், சி.ஆர்.பி.எஃப், பி.எஸ்.எஃப், என்.டி.ஆர்.எஃப், எஸ்.டி.ஆர்.எஃப் ஆகியவை மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அசாம் பேரிடர் மேலாண்மை வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    அதோடு, இதுவரை, கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் உட்பட 3,000 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    அசாம் வெள்ளம்

    பட மூலாதாரம், Assam State Disaster Management Authority

    அசாம் வெள்ளம்

    பட மூலாதாரம், Assam State Disaster Management Authority

  10. மகாராஷ்டிரா: ஏக்நாத் ஷிண்டேவும் 11 சட்டமன்ற உறுப்பினர்களும் எங்கு இருக்கிறார்கள்?

    சிவசேனா

    ஏக்நாத் ஷிண்டே 11 எம்.ல்.ஏ-க்களுடன் மாயமாகி விட்டதாகச் சொல்லப்பட்ட நிலையில், அவர்கள் குஜராத் மாநிலம் சூரத்திலுள்ள லி மெரிடியன் ஹோட்டலில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

    இன்று மதியம் 12 மணிக்கு உத்தவ் தாக்கரே தனது கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கிறார். அதேநேரத்தில், ஏக்நாத் ஷிண்டேவும் செய்தியாளர் சந்திப்பை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஷிண்டேவையும் மற்ற எம்.எல்.ஏ-க்களையும் தொடர்புகொள்ள முடியாத நிலை வந்தபோதே, முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் மற்ற எம்.எல்.ஏ-க்களோடு ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. இந்தச் சந்திப்பு இரவு 2 மணி வரை நடந்தது.

    சிவசேனா தலைவர் நீலம் கோடே, வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். அவர், “ஏக்நாத் ஷிண்டே எங்களுடன் பல ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டு வருகிறார். அவர் எவ்வளவு நேரமாக தொடர்புகொள்ள முடியாத நிலையில் இருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால், அவர் ஒரு கடின உழைப்பாளி" என்று கூறினார்.

  11. தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு கொரோனா பாதிப்பு

    கனிமொழிக்கு கொரோனா பாதிப்பு

    பட மூலாதாரம், RAVEENDRAN/AFP/GETTY IMAGES

    திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதற்கு முன்பே ஒருமுறை, அவருக்கு 2021ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.தற்போது இரண்டாவது முறையாக அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், சென்னையில் உள்ள தனது வீட்டில் கனிமொழி, தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

  12. சர்வதேச யோகா தினம்: புதுச்சேரி கடற்கரை சாலையில் கொண்டாட்டம்

    சர்வதேச யோகா தினம்

    புதுச்சேரி கடற்கரை சாலையில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உட்பட 2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    சர்வதேச யோகா தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய தகவல் தொடர்பு அலுவலகம், தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் மற்றும் புதுச்சேரி அரசு சார்பில் 8ஆவது சர்வதேச யோகா தின விழா புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்றது.

    சர்வதேச யோகா தினம்

    இந்த நிகழ்வை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு யோகாசனங்களைச் செய்தார். யோகாசன நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், யோக கலைஞர்கள் உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடற்கரையில் ஒன்று சேர்ந்து சர்வதேச யோகா தின விழாவில் பங்கேற்றனர்.

    புதுச்சேரி சுற்றுலா தலங்கள் உள்ளடக்கிய 75 முக்கிய இடங்களிலும் காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட பகுதிகளிலும் யோகா தின விழா கொண்டாடப்பட்டது. இதில் 3500க்கும் மேற்பட்ட மாணவர்கள் யோக கலைஞர்கள் பங்கேற்றுள்ளதாக புதுச்சேரி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    சர்வதேச யோகா தினம்
  13. அக்னிவீரர்களுக்கு ஹரியானா அரசில் பணி: மனோகர்லால் கட்டார்

    manoharlal kattar

    பட மூலாதாரம், Getty images

    அக்னி வீரர்களுக்கு ஹரியானா அரசாங்கத்தில் நிச்சயம் பணி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

    நான்கு வருடங்கள் நாட்டிற்காக சேவை செய்துவிட்டு வரும் அக்னிவீரர்களுக்கு ஹரியானா அரசு நிச்சயம் வேலை வழங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    மத்திய அரசு அறிவித்த அக்னிபத் திட்டத்தை எதிர்த்து பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராடி வருகின்றனர். இந்த திட்டம் குறித்து நிபுணர்கள் சிலரும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

    மறுபுறம் இந்த திட்டத்திற்குபல்வேறு தரப்பிலிருந்து ஆதரவும் வந்துள்ளது.

    அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் சில தொழிலதிபர்களும் அக்னிபத் திட்டத்திற்கான தங்களின் ஆதரவை தெரிவித்து அக்னிவீரர்களை பணியமர்த்திக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

    ஆனந்த் மகேந்திரா, அத்தகைய பயிற்சி பெற்றவர்களை வேலைக்கு எடுக்கும் வாய்ப்பை மகேந்திரா குழுமம் வரவேற்கிறது என்று தெரிவித்தார்.

    ஆர்பிஜி குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, "அக்னிவீரர்களை வேலைக்கு எடுக்கும் வாய்ப்பை வரவேற்கிறேன். பிற கார்ப்பரேட் நிறுவனங்களும் இதற்கு முன்வர வேண்டும்," என்று டிவிட்டர் பதிவின் மூலம் தெரிவித்தார்.

  14. வணக்கம் நேயர்களே!

    வணக்கம் நேயர்களே!

    நான் விஷ்ணுப்ரியா ராஜசேகர். பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

    நேற்றைய சில முக்கியமான செய்திகளையும் இன்று நடக்கவிருக்கும் சில நிகழ்வுகள் பற்றிய தகவல்களையும் இங்கே தொகுத்து வழங்குகிறோம்:

    • பிரான்ஸ் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குள், இடதுசாரி கூட்டணி மற்றும் தீவிர வலதுசாரிகளின் புதிய கூட்டணியால் எமானுவேல் மக்ரோங் பிரெஞ்சு தேசிய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளார்.
    • இந்தியா மற்றும் வங்கதேசத்தில் கடுமையான பெய்து வரும் பருவ மழை, புயல்களால் சில இடங்களில் மின்னல் தாக்குதல்கள் காணப்பட்டன. பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த சம்பவங்களால் குறைந்தது 59 பேர் இறந்ததாக அறியப்படுகிறது.
    • காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விசாரணைக்கு அழைத்துள்ள இந்திய அமலாக்கத்துறை நடவடிக்கையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பிக்கள் உள்ளிட்டோர் மீது போலீஸ் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறி குடியரசு தலைவரிடம் முறையிட காங்கிரஸ் எம்.பிக்கள் திட்டமிட்டுள்ளனர்.
    • தலைமைப்பண்பு, அணி செயல்பாடு போன்ற திறன்கள், அக்னிவீரர்களை சந்தையிலுள்ள தொழில்துறைகளின் தேவைக்கேற்ப தயார் நிலையில் இருக்க வைக்கிறது," என்று மஹிந்த்ரா அண்ட் மஹிந்த்ரா நிறுவனர் ஆனந்த் மஹிந்த்ரா தெரிவித்துள்ளார்.
    • அக்னிபத் திட்டத்தையும் ராகுல் காந்தியை விசாரணை என்ற பெயரில் அழைத்து துன்புறுத்துவதாகவும் கூறி காங்கிரஸ் கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்ற இந்தியா உண்மையான பங்களிப்பை வழங்கி வருவதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.