குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்த பாஜகவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக மத்திய அமைச்சர்கள் வெங்கைய்யா நாயுடுவை சந்தித்து பேசினர்.
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளரை நிறுத்த முயற்சித்து வருகின்றன. வேட்பாளர் தேர்வு பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவை உள்துறை அமைச்சர் அமித் ஷா பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் சந்தித்து பேசினர்.