பழங்குடியின பெண் தலைவரை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக அறிவித்தது பாஜக
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக இருந்த முர்மு பழங்குடியினத் தலைவர்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
ஜோ மகேஸ்வரன்
இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது
வணக்கம்.
இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து நேரலைப் பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.
இதுவரையிலான இன்றைய முக்கிய நிகழ்வுகள்.
- அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆள் சேர்ப்பு பணிகள் நாளை தொடங்குவதாக கடற்படை துணைத் தளபதி தினேஷ் கே திரிபாதி தெரிவித்துள்ளார்.
- புதுச்சேரி கடற்கரை சாலையில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உட்பட 2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
- அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம், நிலச்சரிவுகளால், 34 மாவட்டங்களில் 47,72,140 பேர் கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது மகராஷ்ட்ராவில் ஏக்நாத் ஷிண்டே 11 எம்.ல்.ஏ-க்களுடன் மாயமாகி விட்டதாகச் சொல்லப்பட்ட நிலையில், அவர்கள் குஜராத் மாநிலம் சூரத்திலுள்ள லி மெரிடியன் ஹோட்டலில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
- மேகேதாட்டு அணை கட்டும் முயற்சிக்கு தடை விதிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவை கட்சிகளின் குழுவினர் டெல்லி செல்கின்றனர். மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உள்ளிட்டோரை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
- இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார்.
- அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளிக்க கூடாது என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஆவடி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணைதளம், முகநூல், ட்விட்டர், இண்ஸ்டாகிராம் பக்கங்களில் இணைந்திருங்கள். நன்றி
வந்துகொண்டிருக்கும் செய்தி, குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு

பட மூலாதாரம், Draupadi Murmu
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக இருந்த முர்மு பழங்குடியினத் தலைவர்.
குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கான அறிவிப்பை பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா வெளியிட்டார்.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹாவை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராகத் தேர்ந்தெடுத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு பாஜகவின் அறிவிப்பு வந்துள்ளது.
முர்மு 20015 முதல் 2021 வரை ஜார்கண்ட் ஆளுநராக இருந்தார். 2015 வரை பாஜகவின் எஸ்.டி. மோர்ச்சாவின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இரண்டு முறை ஒடிசா சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர், நவீன் பட்நாயக்கின் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
விஜயின் அடுத்த படம் 'வாரிசு'
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
நடிகர் விஜய் தனது 48ஆவது பிறந்த தினத்தை, நாளை கொண்டாட இருக்கும் நிலையில், 'விஜய் 66' என்ற பெயரில் அவர் நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் இந்தப் படத்திற்கு 'வாரிசு' என தலைப்பிடப்பட்டுள்ளது.
தில் ராஜூ தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாகிவரும் இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.
"தி.மு.கவுடன் ஓ.பி.எஸ். தரப்பினர் நெருக்கம் காட்டினார்கள்": கே. பாண்டியராஜன்
விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் - நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர்
விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தேமுதிக நிறுவன தலைவரும் திரைப்பட நடிகருமான விஜயகாந்த் உடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீரிழிவு நோய் பிரச்னையால் அவர கால் விரல் அகற்றப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்களின் கண்காணிப்பில் நலமுடன் இருப்பதாக அக்கட்சியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ''என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.'' என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
தமிழ்ப் பாடத்தில் 47,000 பேர் தோல்வியடைந்தது ஏன்? - அதிர்ச்சியளிக்கும் பின்னணி
அதிமுக பொதுக்குழுவை அனுமதிக்க கூடாது- காவல் ஆணையரிடம் ஓபிஎஸ்

பட மூலாதாரம், O Panneerselvam
படக்குறிப்பு, ஓ பன்னீர்செல்வம் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என ஆவடி மாநகர காவல் ஆணையரிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மனு அளித்துள்ளார்.
அதிமுக பொதுக் குழு கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர்களை பொதுக்குழுவிற்கு அழைக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும். அந்த ஒற்றைத் தலைமை எடப்பாடி பழனிச்சாமி வர வேண்டும் என்று நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். இதற்கு ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தனித்தனியாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு நிர்வாகிகள் தெரிவித்து, கூட்டத்திற்கான ஏற்பாடுகளை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆவடி மாநகர காவல் ஆணையரிடம் அளித்துள்ள மனுவில், "செயற்குழு பொதுக்குழு கூட்டத்திற்கான பொருள், தீர்மானங்கள் இறுதி செய்யப்படவில்லை. கடந்த 18ம் தேதி கட்சியின் தலைமைக்கழகத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தன.
இதனால் தொண்டர்கள் கொதித்து போய் உள்ளனர். நிர்வாகிகள், பொது மக்கள் மத்தியில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக சட்டம், ஒழுங்கு பிரச்னை, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளிக்க கூடாது.'' என்று தெரிவித்துள்ளார்.
'உங்கள் விஜய்' உருவான கதை: சுவாரஸ்யமான தகவல்கள்
அசாம் வெள்ளம்: 45 பேர் பலி, பல லட்சம் பேர் வீடிழந்தனர்- எங்கும் தண்ணீர்
வீடுகளில் ஆர்டர்லிகளை பயன்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை - உயர் நீதிமன்றம் அதிரடி
மகாராஷ்டிரா அரசுக்கு ஆபத்து - அதிருப்தி எம்எல்ஏக்களுடன் பேச்சு நடத்த சிவசேனை முயற்சி
அக்னித் திட்டம்: கடற்படைக்கு ஆள் சேர்ப்பு பணி நாளை தொடக்கம் - துணைத் தளபதி
அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆள் சேர்ப்பு பணிகள் நாளை தொடங்குவதாக கடற்படை துணைத் தளபதி தினேஷ் கே திரிபாதி தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தின் முப்படைகளில் 4 ஆண்டுகால சேவையாற்றும் அக்னிபத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. திட்டத்தை கைவிடக் கோரி பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், 'அக்னிபத் திட்டத்தின் கீழ் கடற்படையில் ஆள் சேர்ப்பு முகாம் நாளை (ஜூன் 22ம் தேதி) தொடங்குகிறது ஆன் லைனில் வரும் ஜூலை 1ம் தேதியில் இருந்து பதிவு செய்யலாம்' என்று கடற்படை துணைத் தளபதி தினேஷ் கே திரிபாதி தெரிவித்துள்ளார்.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
நீர்வீழ்ச்சி முதல் டெட் சோன்கள் வரை: ஆழ்கடலின் ரகசியங்கள் என்ன?
அக்னிபத்திற்கு எதிரான போராட்டங்கள்: 'திட்டமிட்டு தூண்டப்படுகிறது' - மத்திய அமைச்சர் எல்.முருகன்

படக்குறிப்பு, செய்தியாளர் சந்திப்பில் எல்.முருகன் அக்னிபத் திட்டம் குறித்து மக்கள் மத்தியில் தவறாகத் திரிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களில் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த திட்டத்திற்கு எதிராக சில இடங்களில் ஆர்பாட்டம் செய்கின்றனர். ஆனால் அவர்கள் இளைஞர்கள் கிடையாது மத்திய அமைச்சர் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில பாஜக பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன், பாஜக மாநிலத் தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 'சென்னை காசிமேடு, கொச்சி உட்பட 5 துறை முகங்கள் தேர்வு செய்யப்பட்டு, சர்வதேச அளவிற்கு தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.'என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், 'அக்னிபத் திட்டத்தின் மூலம் நிறைய இளைஞர்கள் ராணுவத்திற்கு கிடைக்க வாய்ப்பாக இருக்கிறது. அக்னிபத் திட்டத்தில் இணையும் இளைஞர்களுக்குச் சிறந்த பேக்கேஜ், தலைசிறந்த கல்வி நிறுவனத்தில் படிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது.
அவர்களது அறிவுத் திறனை நன்கு மேம்படுத்தவும், வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் சூழலை இந்த திட்டம் உருவாக்குகிறது. இதில் இளைஞர் இணைந்து பணிபுரிய ஆர்வம் காட்டுகின்றனர். மக்கள் மத்தியில் அக்னிபத் குறித்து தவறாகத் திரிக்கப்பட்டுள்ளது. பல ராணுவ உயர் அதிகாரிகள் மூலம், பல மட்டங்களில் கலந்து ஆலோசிக்கப்பட்டது. அனைத்து தரப்பிலும் பேசி தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களில் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த திட்டத்திற்கு எதிராக சில இடங்களில் ஆர்ப்பாட்டம் என்கின்றனர். ஆனால் அவர்கள் இளைஞர்கள் கிடையாது," என்றார். இந்த திட்டத்திற்கு பாஜக ஆளும் மாநிலங்களில் வலுவான எதிர்ப்பு வருகிறது என்று பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், "திட்டமிட்டுத் தூண்டப்படும் எதிர்ப்பானது அப்படித்தான் இருக்கும்," என்று தெரிவித்தார்.
95 வயது முதியவரை கட்டிலோடு தூக்கி தெருவில் வைத்துவிட்டு வீட்டை இடித்த அதிகாரிகள்
வந்துகொண்டிருக்கும் செய்தி, இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிப்பு
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான 22 கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதினார்.
இதைத் தொடர்ந்து டெல்லியில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பொது வேட்பாளராக போட்டியிட காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் மறுத்து விட்டனர்,
இந்நிலையில், இன்றைய தினம் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை நிறுத்த ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக'' அறிவித்தார்.
அவர் வரும் 27ம் தேதி காலை காலை 11.30 மணிக்கி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாஜ்பாய் பிரதமராக இருந்த போது யஷ்வந்த் சின்ஹா நிதி அமைச்சராகவும் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
கடந்த ஆண்டு, திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, துணைத் தலைவராக இருந்தார். அக்கட்சியில் இருந்து யஷ்வந்த் சின்ஹா தற்போது விலகியுள்ளார். இதையடுத்து அவர் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
உலகின் இளம் வயது யோகா ஆசிரியரான 9 வயது சிறுவன்
அதிகாரிகள் வீடுகளில் ஆர்டர்லிகள்: 'உடனே திரும்ப பெற வேண்டும்' - உயர் நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images
'காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் பணியமர்த்தப்பட்ட ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்' என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் யு.மாணிக்கவேல் என்பவர், தனக்கு ஒதுக்கப்பட்ட காவலர் குடியிருப்பு இல்லத்தைக் காலி செய்யுமாறு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனு இன்று (ஜூன் 21) விசாரணைக்கு வந்தபோது, 'ஓராண்டுகாலம் பயிற்சி முடித்த பிறகு 45,000 ரூபாய் சம்பளம் பெறும் காவலர்களை தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்துவது குற்றம்.
இந்த விவகாரத்தில் ஆர்டர்லிகளை தவறாகப் பயன்படுத்தும் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்' என நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் குறிப்பிட்டார்.
மேலும், 'ஓய்வுபெற்ற காவல்துறையினர், நீதிபதிகள் ஆகியோரது வீடுகளில் உள்ள காவலர்களை திரும்பப் பெற வேண்டும்' என உத்தரவிட்டார்.
அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், 'ஆர்டர்லி குறித்து உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொள்ளும்படி தமிழ்நாடு டி.ஜி.பிக்கு உள்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சரும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் கூட்டங்களை நடத்தியுள்ளார்.
அந்தவகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' எனக் குறிப்பிட்டார். இதனையடுத்து, அரசு அளித்த விளக்கம் திருப்தியளிப்பதாகக் கூறிய நீதிபதி, வரும் ஜூலை 25 ஆம் தேதிக்கு வழக்கினை ஒத்திவைத்தார்.
808 கோடி ரூபாய்க்கு தன் நோபல் பரிசு பதக்கத்தை விற்ற ரஷ்ய பத்திரிகையாளர் டிமிட்ரி முராடோவ்
