இந்தியாவில் கொரோனா தொற்று ஒரே நாளில் 90 சதவீதம் அதிகரிப்பு
இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மொத்தம் 2, 183 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மொத்தம் 1, 985 பேர் சிகிச்சை முடிந்து, நலம் பெற்றனர். ஒரு நாளில் 214 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை மொத்த, 11,542 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கு முந்தைய நாளின் கொரோனா தொற்று எண்ணிக்கையான 1,150 என்ற எண்ணிக்கையோடு ஒப்பிட இது சுமார் 90 சதவீதம் அதிகம். நேற்றை கொரோனா மரண எண்ணிக்கையான 214ல் முந்தைய நாள்களில் நடந்து அப்போது கணக்கிடப்படாத 62 மரண எண்ணிக்கையும் சேர்ந்துள்ளது என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. ஆனாலும், ஒரே நாளில் தொற்று எண்ணிக்கை 90 சதவீதம் அதிகரிப்பு என்பது அதிகம்தான்.

பட மூலாதாரம், Getty Images


