மக்கள் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
"ஐந்து மாநில தேர்தல் நடைபெறும் சூழலில் தங்களுக்கு ஏதாவது நல்ல அறிவிப்பு கிடைக்காதா என ஏங்கித் தவித்த மக்களின் எதிர்பார்ப்பை புறக்கணித்து, மக்களை பற்றி சிந்திக்காத இந்த நிதிநிலை அறிக்கை, மக்களின் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை என்று அடைமொழியிட்டு அழைப்பதே முற்றிலும் பொருத்தமானது," என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
சமையல் எரிவாயு உஜ்வாலா திட்டம் மேலும் ஒரு கோடி குடும்பங்களுக்கு விரிவுபடுத்தப்படும் - நிர்மலா சீதாராமன்
பட மூலாதாரம், Getty Images
எல்பிஜி இணைப்புகள் மூலம் வறியநிலை மக்களின் வீடுகளுக்கு சமையல் எரிபொருளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட உஜ்வாலா திட்டம் மேலும் ஒரு கோடி குடும்பங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் உரையில் 5 உள்கட்டமைப்பு திட்டங்களின் அம்சங்களை அறிவித்தார்.
நெடுஞ்சாலை விரிவாக்கம் 25,000 கி.மீ
நல் சே ஜல் திட்டத்தில் ரூ.60,000 கோடி
பல்வேறு மாநிலங்களில் ஐந்து நதிகள் இணைப்பு திட்டங்கள்
பிரதமர் வீட்டுத் திட்டத்தில் ரூ.48,000 கோடி
வடகிழக்கு மாநிலங்களில் செயல்படுத்தப்படும் உள்கட்டமைப்பு திட்டங்கள் மேம்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
`ஒரே நாடு, ஒரே பத்திரப்பதிவு’ திட்டம்: நிர்மலா சீதாராமன்
நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் எளிதில் பத்திரப்பதிவு மேற்கொள்ள `ஒரே நாடு, ஒரே பத்திரப்பதிவு’ திட்டத்தை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது -
பட மூலாதாரம், ㅤ
வந்துகொண்டிருக்கும் செய்தி, பட்ஜெட் 2022: இந்த நிதியாண்டில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
2022-23 நிதியாண்டில் டிஜிட்டல் ரூபாய் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியால் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்துவது மலிவான கரன்சி மேலாண்மைக்கு வழிவகுக்கும் என்றும் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தும் டிஜிட்டல் ரூபாய் 2022-23 நிதியாண்டிலிருந்து பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் என்று ம் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
பின்னணி: இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு அக்டோபரில் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934இல் திருத்தம் செய்து, டிஜிட்டல் வடிவிலான கரன்சியை சேர்க்க, ‘வங்கி நோட்டு’ வரையறையின் நோக்கத்தை மேம்படுத்தும் திட்டத்தை முன்வைத்தது.
"டிஜிட்டல் கரன்சியை உருவாக்குவதன் நோக்கம், பணத்தின் மீதான சார்பு குறைதல், குறைந்த பரிவர்த்தனை செலவுகள் மற்றும் செட்டில்மென்ட் ரிஸ்க் குறைதல் போன்ற குறிப்பிடத்தக்க பலன்களை வழங்குவதாகும்" என்று இந்திய நிதித்துறை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டிருந்த கேள்வியொன்றுக்கு அளித்த பதிலில் தெரிவித்திருந்தது.
பட்ஜெட் 2022: பெண்களுக்கான அறிவிப்புகள் என்ன?
பெண்களுக்கான பட்ஜெட்டில் என்ன இருக்கிறது என்பது குறித்து பட்டியலிடிட் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மிஷன் சக்தி, மிஷன் வாத்சல்யா, சக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 போன்ற திட்டங்களை மோதி அரசாங்கம் விரிவாகச் சீரமைத்துள்ளது என்று தெரிவித்தார்.
5ஜி சேவையை அறிமுகப்படுத்த ஏதுவாக அலைக்கற்றை ஏலம் இந்த ஆண்டு விடப்படும்: நிர்மலா சீதாராமன்
இந்தியாவில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் 5ஜி செல்பேசி சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கு வசதியாக, அலைக்கற்றை ஏலம் 2022இல் நடத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு - நிர்மலா சீதாராமன்
பட மூலாதாரம், Getty Images
அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.
2,000 கிமீ ரயில் வலையமைப்பு பாதுகாப்பு மற்றும் திறன்கள் உள்நாட்டு உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பமான KAWACH-இன் கீழ் கொண்டு வரப்படும்.
கோதாவரி -பெண்ணாறு - காவிரி நதிகள் இணைப்புத் திட்டம் - பட்ஜெட்டில் அறிவிப்பு
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், கோதாவரி -பெண்ணறு-காவிரி நதிகள் இணைப்பு திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதில், விவசாயம் சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
குறிப்பாக,
ரசாயனம் இல்லாத இயற்கை விவசாயம் மேம்படுத்தப்படும். இதற்காக திட்டங்கள் நடைமுறை. முதல்கட்டமாக, கங்கை நதியை ஒட்டி 5 கி.மீ சுற்று வட்டாரத்தில் இயற்கை விவசாயத் திட்டம், ஜீரோ பட்ஜெட் மற்றும் இயற்கை விவாசயத்தை மேம்படுத்த பல்கலைக்கழக பாடத்திட்டம். நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற 44, 000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எண்ணெய் வித்துக்களை இறக்குமதி செய்வதைக் குறைத்து, உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கப்படும்.
வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க 2.7 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோதாவரி - காவிரி உள்ளிட்ட 5 நதிகள் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும். மாநில அரசுகளின் ஒப்புதல் பெற்ற பிறகு இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டும்.
கோதாவரி -பெண்ணாறு-காவிரி நதிகள் இணைப்புத் திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது.
வேளாண் நிலங்களை அளவீடு செய்யவும், விளைச்சல் பகுதிகளை கணக்கீடு செய்யவும் கிசான் ட்ரோன் திட்டம். நில சீர்த்திருத்தின்படி ஒரு நாடு ஒரு பதிவு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
நில ஆவணங்கள் மின்னணு முறையில் ஆவணப்படுத்தப்படும். என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், PIB
பட்ஜெட் 2022: 'சிறப்பு பொருளாதார மண்டலங்கள் சட்டம் விரைவில் மாற்றப்படும்'
நாடு முழுவதும் தற்போது அமல்படுத்தப்பட்டு வரும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சட்டத்துக்கு பதிலாகவும் தொழில் நிறுவனங்கள் மற்றும் மையங்களின் மேம்பாட்டிற்காகவும் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
இது தற்போதுள்ள தொழில்துறை பகுதிகளை உள்ளடக்கும் மற்றும் ஏற்றுமதியின் போட்டித்தன்மையை அதிகரிக்கும்.
பாதுகாப்புக்கான மூலதன கொள்முதல் பட்ஜெட்டில் 68% உள்நாட்டு தொழில்துறைக்கு ஆத்ம நிர்பார் திட்டத்தை ஊக்குவிக்கவும் இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்கவும் ஒதுக்கப்படும். இது கடந்த நிதியாண்டில் இருந்து 58% அதிகம்
அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் துறை (AVGC) இளைஞர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான அபரிமிதமான திறனை வழங்குகிறது. அனைத்து பங்குதாரர்களுடன் ஏவிஜிசி ஊக்குவிப்பு செயல் நடவடிக்கை குழு அமைக்கப்படும்,
இதை உணர்ந்து, நமது சந்தைகள் மற்றும் உலகளாவிய தேவைக்கு சேவை செய்வதற்கான உள்நாட்டு திறனை உருவாக்குவதற்கான வழிகளை பரிந்துரைக்கும்.
பட்ஜெட் 2022: இயற்கை விவசாயம், விவசாயிகள் திட்டங்களுக்கு முன்னுரிமை - நிர்மலா சீதாராமன்
பட மூலாதாரம், YOHAA
விவசாயிகளுக்கு டிஜிட்டல் மற்றும் ஹைடெக் சேவைகளை வழங்குவதற்காக பொத்துறை தனியார் கூட்டு மாதிரியில் இத்திட்டம் தொடங்கப்படும்.
ஜீரோ பட்ஜெட் விவசாயம் மற்றும் இயற்கை விவசாயம், நவீன விவசாயம், மதிப்பு கூட்டல் மற்றும் மேலாண்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
சிறு விவசாயிகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான திறமையான தளவாடங்களை இந்திய ரயில்வே உருவாக்குகிறது.
2023 ஆம் ஆண்டு சிறு தானியங்களின் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2021-22 ராபியில் 163 லட்சம் விவசாயிகளிடம் இருந்து 1,208 மெட்ரிக் டன் கோதுமை மற்றும் நெல் கொள்முதல் செய்யப்படும்.
விவசாயத்துறையில் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது நெல், காரீஃப் மற்றும் ராபி பயிர்களுக்காக விவசாயிகளை உள்ளடக்கிய அரசாங்கத்தின் முன்னுரிமையாகும், இதன் கீழ் 1,000 LMT நெல் கொள்முதல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 1 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு பயனளிக்கும்.
விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள, மாநில அரசுகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் ஈடுபாட்டிற்காக ஒரு விரிவான தொகுப்பு அறிமுகப்படுத்தப்படும்.
விவசாயிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு நீர்ப்பாசனம், விவசாயம் மற்றும் வாழ்வாதார வசதிகளை வழங்கும் 9 லட்சம் ஹெக்டேர் விவசாயிகளின் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய ரூ.44,605 கோடி மதிப்பிலான கென்-பெட்வா இணைப்பு செயல்படுத்தப்படும்.
பயிர் மதிப்பீடு, நிலப் பதிவுகள், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல் ஆகியவற்றுக்கு விவசாயி ட்ரோன்களைப் பயன்படுத்துவது விவசாயம் மற்றும் விவசாயத்தில் தொழில்நுட்ப அலைகளை உந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 80 லட்சம் வீடுகள்
பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 44 ஆயிரம் கோடி செலவில் 80 லட்சம் குறைந்த விலை வீடுகள் 2022-23 நிதியாண்டில் கட்டி முடிக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா அறிவித்தார்.
பட்ஜெட் 2022: ரயில்வே துறை மேம்பாட்டுத் திட்டம்
'கதி சக்தி' திட்டத்தின் கீழ் ரயில்வேக்கு ஒரு ஊக்கம்
அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய தலைமுறை வந்தே பாரத் ரயில்கள் உருவாக்கப்பட்டு தயாரிக்கப்படும்.
உள்ளூர் வணிகங்களுக்கு உதவும் வகையில் ஒரே நிலையம், ஒரு தயாரிப்பு' என்ற கருத்தாக்கம் பிரபலப்படுத்தப்படும்.
3 ஆண்டுகளில் 100 சரக்கு டெர்மினல்களை உருவாக்க இந்தியா திட்டமிடுகிறது
பட்ஜெட் 2022: விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்புகள்
பட மூலாதாரம், YOHAA
இந்திய விவசாயிகளுக்கு
ரசாயனமற்ற இயற்கை விவசாயம் இந்தியாவில் ஊக்குவிக்கப்படும்.
பயிர் மதிப்பீடு, நிலப் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குதல், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல் ஆகியவற்றுக்கு கிசான் ட்ரோன்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படும்.
கோதுமை மற்றும் நெல் விவசாயிகளுக்கு ரூ.2.37 லட்சம் கோடி மதிப்பிலான குறைந்தபட்ச ஆதார விலைக்கான நேரடித் தொகை வழங்கப்படும்.
பட்ஜெட் 2022 - இளைஞர்கள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான முக்கிய அறிவிப்புகள்
இந்திய நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
திறன் மேம்பாட்டுத் திட்டம் புதுப்பிக்கப்படும்.
இளைஞர்களின் திறன், மேம்பாடு மற்றும் மறுதிறன் ஆகியவற்றுக்காக, டிஜிட்டல் தேஷ் இ-போர்ட்டல் தொடங்கப்படும்.
தன்னம்பிக்கை இந்தியா திட்டத்தின் கீழ் 16 லட்சம் வேலைகள் வழங்கப்படும்.
மேக் இன் இந்தியாவின் கீழ் 60 லட்சம் வேலை வாய்ப்புகள் வரும்.
தரமான மன நல ஆலோசனைகளை மேம்படுத்த தேசிய டெலி மென்டல் ஹெல்த் திட்டம்: நிர்மலா சீதாராமன்
தேசிய டிஜிட்டல் சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பிற்காக திறந்தவெளி தளம் உருவாக்கப்படும். இது சுகாதார டிஜிட்டல் பதிவுகள் மற்றும் சுகாதார வசதிகளையும் தனிப்பட்ட சுகாதார அடையாளம் மற்றும் உலகளாவிய அணுகல் வசதியைக் கொண்டிருக்கும். தரமான மனநல ஆலோசனை மற்றும் பராமரிப்பு சேவைகளை மேம்படுத்த, தேசிய டெலி மென்டல் ஹெல்த் திட்டம் தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இ பாஸ்போர்ட்டுகள் அறிமுகம் செய்யப்படும்
வரும் 2022-23 நிதியாண்டில் இ பாஸ்போர்ட் முறை அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
ட்ரோன் மூலம் பயிர் மதிப்பீடு, பூச்சி மருந்து தெளிப்பு
விவசாயிகளுக்கு பயிர்களைப் பற்றி மதிப்பிட்டு கூற, நில ஆவணங்களை டிஜிடல் மயமாக்க, பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்க ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
பட்ஜெட்: 5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் - நிர்மலா சீதாராமன்
அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஆத்மநிர்பார் தன்னிறைவு இந்தியாவை அடைவதற்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் 60 லட்சம் புதிய வேலைகள் மற்றும் 30 லட்சம் கோடி கூடுதல் உற்பத்தியை உருவாக்கும் சாத்தியம் உள்ளது என்று நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் கூறியுள்ளார்.
இந்த பட்ஜெட் இளம் விவசாயிகள், பட்டியல் சாதியினர், பழங்குடியினர், பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு பயனளிக்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
முந்தைய பட்ஜெட்டில் பொது முதலீட்டை வழங்கியதன் மூலம், இளம் விவசாயிகள், பட்டியல் சாதியினர், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு பயனளிக்கும் வகையில், இந்த பட்ஜெட் மிகவும் பயனுள்ள முடிவுகளைத் தொடர்ந்து வழங்கும்.
#PMGatiShakti பொருளாதாரத்தை உயர்த்தி, இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளையும், வாய்ப்புகளையும் உருவாக்கும்.
தேசிய நெடுஞ்சாலை நெட்வொர்க் 2022-23ல் 25,000 கி.மீ.
#PMGatiShakti மாஸ்டர் பிளானில் பொருளாதார மாற்றம், தடையற்ற மல்டிமாடல் இணைப்பு மற்றும் லாஜிஸ்டிக்ஸ் செயல்திறன் ஆகியவற்றுக்கான 7 இன்ஜின்கள் இருக்கும்.
சிறு விவசாயிகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான திறமையான தளவாடங்களை ரயில்வே உருவாக்குகிறது.
உள்ளூர் தயாரிப்பு விநியோகச் சங்கிலியை ஆதரிக்க 'ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு' என்ற முறை அமல்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
சர்வதேச சிறுதானிய ஆண்டாக 2022-23 அறிவிப்பு
2022ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்படும் என்று தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.