வந்துகொண்டிருக்கும் செய்தி, இந்திய நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையை தொடங்கினார் நிர்மலா சீதாராமன்
இந்திய நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை 4-வது முறையாக தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்திய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத் தொடரின் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று (பிப். 01) காலை 11 மணியளவில் தொடங்கியது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 4வது முறையாக தனது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, காகிதமில்லா, டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக குடியரசுத் தலைவரை நிதியமைச்சர் சந்தித்தார். மத்திய பட்ஜெட்டிற்கு பிரதமர் மோதி தலைமையிலான ம்த்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.