பாலமேடு ஜல்லிக்கட்டு: அரசு வேலை, அங்கீகாரம் வழங்க மாடுபிடி வெற்றியாளர்கள் கோரிக்கை

அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளைத் தொடர்ந்து அடுத்த போட்டி ஜனவரி 17ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறவுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. ஜனவரி 15ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,

    இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.

    எங்களுடன் இந்த பக்கத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

    பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. வந்துகொண்டிருக்கும் செய்தி, கெயில் பொதுத்துறை நிறுவன விற்பனைப்பிரிவு இயக்குநர் மீது சிபிஐ ஊழல் வழக்குப்பதிவு

    சிபிஐ வழக்கு

    பட மூலாதாரம், PTI

    இந்திய எரிவாயு ஆணையத்தின் GAIL) விற்பனைப்பிரிவு இயக்குநரான இ.எஸ்.ரங்கநாதனுக்கு எதிராக லஞ்சம் வாங்கியதாக ஒரு வழக்கை இந்திய புலனாய்வுத்துறையான சிபிஐ பதிவு செய்துள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக டெல்லி மற்றும் நொய்டாவில் சனிக்கிழமை சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இ.எஸ்.ரங்கநாதனின் வீட்டிலும் சனிக்கிழமை சோதனை நடத்தப்பட்டது.

    வழக்கு என்ன?

    கெயில் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களுக்கு தள்ளுபடி வழங்க லஞ்சம் கேட்டு பெற்றுக் கொண்டதாக இ.எஸ். ரங்கநாதன் மீது சிபிஐ பதிவு செய்துள்ள முதல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விவகாரத்தில் டெல்லியைச் சேர்ந்த இரண்டு நபர்கள் இடைத்தரகர்களாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்கள் மூலம் ரங்கநாதன் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

    கெயில் நிறுவனம் என்பது இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அரசு பொதுத்துறை நிறுவனமாகும்.

  3. ஐந்து மாநில தேர்தல்: பொதுக்கூட்டம், பேரணிக்கு ஜனவரி 22வரை தடை நீட்டிப்பு - தேர்தல் ஆணையம்

    உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரங்களுக்காக அரசியல் கட்சிகளோ வேட்பாளர்களோ பேரணிகள் மற்றும் சாலை வழி பேரணியை நடத்த விதித்துள்ள தடையை ஜனவரி 22ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

    இதேவேளை இந்த மாநிலங்களில் கட்சிகளுக்கு சில தளர்வுகளையும் ஆணையம் வழங்கியுள்ளது.

    அதன்படி பொதுவெளியில் அல்லாது உள்ளரங்குகளில் கூட்டங்களை நடத்த ஆணையம் விலக்கு அளித்துள்ளது.

    இது தொடர்பான ஆணையத்தின் சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, இதுபோன்ற கூட்டங்களில் அதிகபட்சம் 300 பேர் பங்கேற்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதே சமயம், அரங்கின் கொள்ளளவில் 50 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற கட்டுப்பாடும் உள்ளது.

    மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (எஸ்டிஎம்ஏ) நிர்ணயித்த கொரோனா தற்காப்பு வழிமுறைகளை அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    முன்னதாக, ஜனவரி 8ஆம் தேதி ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போது அவற்றில் பொதுக்கூட்டம், பேரணி நடத்த ஜனவரி 15ம் தேதி வரை தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.

    கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 10-ம் தேதி தொடங்குகிறது. மார்ச் 10-ம் தேதி முடிவுகள் வெளியாகும்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  4. இலங்கையில் 205 ஆக அதிகரித்த ஒமிக்ரோன் தொற்றாளர்கள்

    இலங்கை

    பட மூலாதாரம், Getty Images

    இலங்கையில் கோவிட் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை மற்றும் மூலக்கூறு பிரிவு தெரிவித்துள்ளது.இலங்கையில் புதிதாக 160 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.182 மாதிரிகளின் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் ஊடாகவே, இந்த 160 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதன்படி, இலங்கையில் இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட 45 ஒமிக்ரோன் தொற்றாளர்களுடன், மொத்த ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை 205ஆக அதிகரித்துள்ளது.இலங்கையில் முதலாவது ஒமிக்ரோன் தொற்றாளர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 03ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டார்.இதேவேளை, இலங்கையில் அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றாளர்களில் 12 முதல் 24 வீதமானோர் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் அந்த பணியகம் குறிப்பிட்டுள்ளது.

  5. ஜல்லிக்கட்டு: "அரசு வேலை, அங்கீகாரம் கொடுங்கள் - இதுவும் தமிழக விளையாட்டுதான்" - வெற்றியாளர்கள் கோரிக்கை, நடராஜன் சுந்தர்

    ஜல்லிக்கட்டு

    பட மூலாதாரம்,

    படக்குறிப்பு, பிரபாகரன், பாலமேடு ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்தவர்.

    தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் மாடி பிடி வீரர்களை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கு அரசு வேலை வழங்கி இந்த விளையாட்டில் மேலும் பலர் பங்கேற்க அரசு ஊக்கம் தர வேண்டும் என்று போட்டியில் வென்றவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடித்த பிரபாகரன், "ஜல்லிக்கட்டு போட்டி தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று. இதில் ஏதோ வீதியில் திரியும் இளைஞர்கள் கலந்து விளையாடு போல சிலர் நினைக்கிறார்கள். அது தவறு. இதுவும் ஒரு விளையாட்டுதான். முறையான பயிற்சியின்றி எளிதில் யாரும் இதில் வெற்றி பெற்று விட முடியாது. இந்த விளையாட்டை பாதுகாக்க வேண்டுமானால், அரசின் அங்கீகாரம் அவசியம்," என்றார்.

    "வருடந்தோறும் வீரர்கள் வெற்றி பெற்றாலும் அவர்களைப் போல மேலும் பலர் இந்த போட்டியில் பங்கேற்ற வேண்டும். அதை ஊக்குவிக்கும் விதமாக வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு, அரசு வேலையில் இடஒதுக்கீட்டில் முன்னுரிமை போன்ற சலுகைகளை வழங்க வேண்டும்," என்று பிரபாகரன் கேட்டுக் கொண்டார்.

  6. வந்துகொண்டிருக்கும் செய்தி, விராட் கோலி இந்திய டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

    இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து உடனடியாக விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

    2014ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை கோலி முதல் முறையாக வழி நடத்தினார்.

    பின்னர் முதன்மையாக அந்த பதவியில் அவர் தொடர்ந்தார். கேப்டவுன் டெஸ்டில் கேப்டனாக அவர் கடைசியாக விளையாடினார். இதில் இந்தியா ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    இந்த நிலையில் தமது ட்விட்டர் பக்கத்தில் தமது கேப்டன் பதவி விலகல் தொடர்பான கடிதத்தை பகிர்ந்துள்ளார் கோலி.

    அதில், "அணியை சரியான திசையில் கொண்டு செல்ல ஏழு வருட கடின உழைப்பை செலுத்தி, இடைவிடாத விடாமுயற்சியுடன் தினமும் போராடினேன். இப்போது பதவியில் இருந்து ஒதுங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது," என்று கூறியுள்ளார்.

    மேலும், "எல்லா விஷயங்களும் ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட வேண்டும், இந்தியாவின் டெஸ்ட் கேப்டனாக எனக்கு அந்த நேரம் இப்போது தான் வந்துள்ளது," என்று அவர் கூறினார்.

    "எனது இந்தப் பயணத்தில் பல ஏற்றங்கள் மற்றும் சில தாழ்வுகள் உள்ளன. ஆனால் ஒருபோதும் முயற்சியின்மை அல்லது நம்பிக்கையின்மை இருந்ததில்லை. நான் செய்யும் எல்லாவற்றிலும் எனது 120 சதவீதத்தை வழங்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். அதை என்னால் செய்ய முடியாவிட்டால் இது சரியான செயல் அல்ல என்று எனக்குத் தெரியும்," என்று கோலி குறிப்பிட்டுள்ளார்.

    "என் மனதில் எனக்கு முழுமையான தெளிவு உள்ளது. எனது அணிக்கு நான் நேர்மையற்றவனாக இருக்க முடியாது. இவ்வளவு நீண்ட காலத்திற்கு எனது நாட்டு அணியை வழிநடத்தும் வாய்ப்பை வழங்கியதற்காக பிசிசிஐக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். முக்கியமாக முதல் நாளிலிருந்தே அணிக்காக நான் கொண்டிருந்த பார்வையை ஏற்றுக் கொண்டு செயல்பட்ட அணியின் அனைத்து வீரர்களும் என்னை எந்த சூழ்நிலையிலும் கைவிடவில்லை. இந்த பயணத்தை மறக்க முடியாததாகவும் அழகாகவும் மாற்றியுள்ளீர்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் எங்களை தொடர்ந்து மேல்நோக்கி நகர்த்துவதற்காக எங்கள் பயணத்தில் பின்புலமாக இருந்த ரவி பாய் மற்றும் ஆதரவுக்குழுவினர், எங்களுடைய பார்வையை உயிர் கொடுத்துக் கொண்டே பெரிய பங்களிப்பை வழங்கினீர்கள். கடைசியாக ஒரு கேப்டனாக என்னை நம்பி, இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய திறமையான தனி நபராக என்னைக் கண்டறிந்த எம்.எஸ் தோனிக்கு நன்றி," என்று விராட் கோலி கூறியுள்ளார்.

    கடந்த ஆண்டு டிசம்பரில் கோலிக்கு பதிலாக ரோஹித் சர்மா இந்தியாவின் முழு நேர ஒயிட்-பால் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    அதற்கு சில ஆண்டுகள் முன்னதாக, 2014ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் மத்தியில் எம்.எஸ் தோனி விலகியபோது கோலி டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு: 21 காளைகளை பிடித்த பிரபாகரன் சிறந்த மாடு பிடி வீரராக அறிவிப்பு

    ஜல்லிக்கட்டு

    பட மூலாதாரம்,

    மதுரை பாலமேடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்துள்ளது. இதில் 21 காளைகளை பிடித்த பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் முதலிடத்தை பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு கார் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

    இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த போட்டி விறுவிறுப்பாக நடந்தன. வாடிவாசலில் சீறிக்கொண்டு காளைகள் வருவதும் அவற்றைப் பிடிக்க மாடுபிடி வீரர்கள் களமாடியதும் நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பை கூட்டிக் கொண்டே இருந்தன.

    ஒரு சுற்றுக்கு 1 மணி நேரம் என 30 வீரர்கள் என்ற வகையில் மொத்தம் ஏழு சுற்று போட்டிகள் நடந்தன.

    இன்றைய போட்டியில் 729 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சரியாக மாலை 5 மணிக்கு போட்டி நிறைவடைந்தது.

    இதன் முடிவில் முதலிடம் பிடித்த வீரராக பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் அறிவிக்கப்பட்டார். இவர் நான்காவது சுற்றில்தான் களத்துக்கு வந்தார். இவர் 21 காளைகளை பிடித்தார். 2020, 2021ஆம் ஆண்டுகளிலும் இவர் முதலிடம் பிடித்திருக்கிறார். இப்போது மூன்றாவது முறையாக வென்ற இவருக்கு கார் பரிசு தமிழக முதல்வர் சார்பில் வழங்கப்பட்டது.

    சிறந்த காளைக்குரிய பரிசாக சிவகங்கை புலியூரைச் சேர்ந்த சூறாவளி என்ற காளைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. அதன் உரிமையாளருக்கும் கார் பரிசாக வழங்கப்பட்டது.

    இரண்டாமிடம் பிடித்த வீரராக குருவித்துறையைச் சேர்ந்த கார்த்திக் ராஜா அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் 12 மாடுகளை பிடித்துள்ளார். இவருக்கு திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் சார்பில் இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

    மூன்றாம் இடம் பிடித்த வீரராக மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா தேர்வாகியிருக்கிறார்.

    முன்னதாக காலை 11.30 மணியளவில் விதிகளை மீறி சிலர் காளைகளை வாடிவாசலின் பின்பகுதியில் அழித்து விட முயன்றனர். அவர்களை தடியடி நடத்தி காவல்துறையினர் கலைத்தனர். இந்த போட்டியில் ஆள் மாறாட்டம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் இருவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

  8. தமிழக அரசின் பெருந்தலைவர் காமராசர் விருது அறிவிப்பு

    காமராசர் காலத்திலிருந்து அரசியலில் பணியாற்றி வரும் முன்னாள் நாடாளுமன்ற மற்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன் அவர்களுக்கு 'பெருந்தலைவர் காமராசர்' விருதை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.

    விருதாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கி,ம் பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்படுவார்கள். இவ்விருதுகளை தமிழ்நடு முதலைமைச்சர் மு க ஸ்டாலின் வழங்க உள்ளார் என தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்புத் துறை விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  9. நியூசிலாந்து, ஃபிஜி, டோங்கா உள்ளிட்ட பல நாடுகளில் ராட்சத எரிமலை வெடிப்புக்கு பிறகு சுனாமி எச்சரிக்கை

    எரிமலை

    பட மூலாதாரம், NOAA

    ராட்சத எரிமலை வெடித்ததை அடுத்து நியூசிலாந்து, பிஜி, டோங்கா உள்ளிட்ட பல நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த எரிமலை தண்ணீருக்கு அடியில் வெடித்துள்ளது.

    சமூக ஊடகங்களில் வரும் படங்களில், டோங்காவின் ஓர் தேவாலயம் மற்றும் பல வீடுகளைக் கடந்து அலைகள் செல்வதைக் காணலாம்.

    டோங்காவின் தலைநகரான நுகுவாலோபாவில் எரிமலை சாம்பல் எங்கும் நிறைந்திருப்பதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். அங்கு வசிக்கும் மக்கள் உயரமான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    ஹங்கா டோங்கா-ஹுங்கா ஹாபாய் எரிமலை சீற்றத்திற்குப் பிறகு சமீபத்தில் ஏற்பட்ட வெடிப்பு இதுவாகும்.

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    8 நிமிடங்களுக்கு நீடித்த எரிமலை வெடிப்பின் சத்தம் 500 மைல் தொலைவில் கூட பிஜியில் கேட்டதாக பிஜியின் தலைநகர் சுவாவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

    எரிமலையில் இருந்து வெளியேறிய வாயு மற்றும் புகை மேகங்களில் படர்ந்து சுமார் 20 கிலோ மீட்டர் உயரத்தை எட்டியதாக டோங்கா புவியியல் துறை தெரிவித்துள்ளது.

    டோங்காவின் தலைநகரான ஹுங்கா, ஹாபாய் எரிமலையிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அங்கு 1.2 மீட்டர் உயரத்தில் சுனாமி பதிவானதாக ஆஸ்திரேலியாவின் வளிமண்டலவியல் இணையதளம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக ஹாபாய் எரிமலையில் இருந்து 2,300 கிமீ தொலைவில் அமைந்துள்ள நியூசிலாந்திலும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

  10. தமிழக அரசின் 2022ஆம் ஆண்டுக்கான 'அய்யன் திருவள்ளுவர் விருது' அறிவிப்பு

    திருவள்ளுவர் சிலை

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, திருவள்ளுவர் சிலை

    ஒவ்வொரு ஆண்டும் திருக்குறல் சார் பணிகளுக்கு தமிழக அரசு அய்யன் திருவள்ளுவர் விருது வழங்கி வருகிறது. 2022ஆம் ஆண்டுக்கான அய்யன் திருவள்ளுவர் விருது, பெங்களூரில் வசிக்கும் மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    2009ஆம் ஆண்டு, முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் தலைமையில், திருவள்ளுவர் சிலையை பெங்களூரில் திறக்கக் காரணமானவர்களில் முதன்மையானவர் மீனாட்சி சுந்தரம்.

    இவர் பெங்களூரு தமிழ்ச் சங்கம் மற்றும் அனைத்திந்திய தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல கன்னியாகுமரி மாவட்டத்தில் காப்பியன் காட்டில் தொல்காப்பியர் சிலை நிறுவி திறந்தவர்களில் இவர் பணி குறிப்பிடத்தக்கது.

  11. ஜனவரி 23 முதல் குடியரசு தின கொண்டாட்டங்கள் தொடக்கம்

    நரேந்திர மோதி

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, நரேந்திர மோதி

    இந்தியக் குடியரசு தின கொண்டாட்டங்கள் ஜனவரி 24ஆம் தேதிக்கு பதிலாக இந்த ஆண்டு ஜனவரி 23ஆம் தேதியே தொடங்கவுள்ளது.

    ஜனவரி 23ஆம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் வருவதால், அதையும் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக்க இந்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

    நேதாஜி பிறந்தநாளை பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான இந்திய அரசு, வீரத்துக்கான தினமாக (பராக்கிரம் திவாஸ்) அனுசரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

  12. நைல் நதிக்கு மேல் 35,000 அடி உயரத்தில் பிரசவம்

    விமானம் - மாதிரிப் படம்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, விமானம் - மாதிரிப் படம்

    சௌதி அரேபியாவில் பணியாற்றும் யுகாண்டா பெண்மணி ஒருவர் தமது முதல் குழந்தையை பிரசவித்துள்ளார். கருவான 35 வாரத்தில் பிரசவம் ஆகியுள்ள இந்த குழந்தைக்கு 'மிராக்கிள் ஆயிஷா' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    டொரான்டோவில் பணியாற்றிவரும் மருத்துவர் ஆயிஷா விமானப் பயணத்தின்போது ஓய்வாக இருந்தார்.

    அப்பொழுது அங்கு மருத்துவர்கள் யாரும் உள்ளனரா என்று விமான ஊழியர்கள் இன்டர்காம் மூலம் கேட்டனர். உடனே சிகிச்சை தேவைப்படும் பெண்ணின் இருக்கைக்கு அருகில் சென்றார் ஆயிஷா.

    ''அந்தப் பெண்ணைச் சுற்றிலும் மக்கள் கூட்டமாக நின்றனர். அப்பொழுது மாரடைப்பு போன்ற ஏதாவது ஒரு நெருக்கடியான நிலை இருப்பதாக நான் கருதினேன்,'' என்று பிபிசியிடம் பேசிய மருத்துவர் ஆயிஷா தெரிவித்தார்.

  13. வாடிவாசலில் காளை முட்டி உரிமையாளர் உயிரிழப்பு

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. 300 வீரர்கள், 400 காளைகள் பங்கேற்ற இப்போட்டியில், காளையை வாடி வாசலுக்கு அழைத்து வந்தபோது, 30 வயதான மாடு உரிமையாளர் மீனாட்சிசுந்தரம் என்பவரை மாடு தன் கொம்பைக் கொண்டு அவரது தொடை பகுதியில் குத்தியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மீனாட்சி சுந்தரம் உயிரிழந்துவிட்டார்.

    திருவெறும்பூர்

    பட மூலாதாரம், district pro

  14. தமிழ்நாட்டில் ஒரே நாளில் 23,459 பேருக்கு கொரோனா தொற்று

    கொரோனா தடுப்பூசி முகாம்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கொரோனா தடுப்பூசி முகாம்

    தமிழ்நாட்டில் ஜனவரி 14ஆம் தேதி ஒரே நாளில் 23,459 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 231 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் 1,18,017 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் அல்லது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

    நேற்று ஒரே நாளில் 1,50,037 பேருக்கு ஆர் டி - பி சி ஆர் சோதனை நடத்தப்பட்டுள்ளது. 26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

    சென்னையில் 8,963 பேரும், செங்கல்பட்டில் 2,504 பேரும், கோவையில் 1,564 பேரும் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  15. தேர்தல் பேரணிகள் நடத்துவது குறித்து - இந்திய தேர்தல் ஆணையர் ஆலோசனை

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிபூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத்துக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் நடத்தப் பட உள்ளது.

    தேர்தல் பிரசாரங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவது தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையர் சுஷீல் சந்திரா, காணொளிக் காட்சி மூலம் தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களின் சுகாதாரச் செயலர்கள், தலைமைச் செயலர்கள், தேர்தல் அதிகாரிகளிடம் கலந்தாலோசிக்க உள்ளார்.

    இந்த சந்திப்பில் இந்திய சுகாதார அமச்சகத்தின் செயலரும் கலந்து கொள்லவிருப்பதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

  16. இந்தியாவில் ஒரே நாளில் 2.68 லட்சம் பேருக்கு கொரோனா - இந்திய சுகாதார அமைச்சகம்

    கொரோனா வைரஸ்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கொரோனா வைரஸ்

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,68,833 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றை விட, கடந்த 24 மணி நேரத்தில் 4,631 பேர் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6,041 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அதே போல கடந்த 24 மணி நேரத்தில் 402 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,85,752 ஆக உயர்ந்துள்ளது என இந்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

    இந்தியாவில் மொத்தம் 14,17,820 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இதுவரை இந்தியாவில் 156.02 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்றும் இந்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

  17. தடுப்புக் காவலில் நோவாக் ஜோக்கோவிச்

    டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிச் ஆஸ்திரேலியாவில் தங்குவதற்கான விசா இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்ட பின்னர் அவர் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    திங்களன்று ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நோவாக் ஜோக்கோவிச் விளையாடுவாரா, நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவாரா என்று ஞாயிறன்று நீதிமன்றம் முடிவு செய்யும்.

    கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாததால் அவருடைய விசா முதலில் ரத்து செய்யப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் மூலம் அவர் ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதி பெற்றார்.

    எனினும் இரண்டாவது முறையாகவும் அவரது விசா ரத்து செய்யப்பட்டது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அவர் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்று அதற்கு ஆஸ்திரேலிய அரசு காரணம் கூறியது.

    நோவாக் ஜோக்கோவிச்

    பட மூலாதாரம், EPA

    படக்குறிப்பு, நோவாக் ஜோக்கோவிச்
  18. பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது, நடராஜன் சுந்தர்

    மதுரையில் உள்ள பாலமேட்டில் மாடுபிடி வீரர்களின் உறுதி மொழியோடு இன்று காலை 7.30 மணியளவில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி தொடங்கியது.

    பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 700 மாடுகளும், 300 மாடு பிடி வீரர்களும் பங்கேற்கிறார்கள்.

    இப்போட்டி மாலை 4 மணி வரை நடைபெறும். ஒரு சுற்றுக்கு 30 வீரர்கள் வீதம் போட்டியில் வீரர்கள் களம் இறங்குகிறார்கள்.

    மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட வீரர்கள், காளை உரிமையாளர், உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

    மாடுபிடி வீரர்கள் மது போதை, ரத்த அழுத்தம், உடலில் உள்ள காயங்கள் ஆகியவை குறித்து பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்ட பின்னரே வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    அலங்காநல்லூர், அவனியாபுரம் போலவே பாலமேடு ஜல்லிக்கட்டும் உலகப் புகழ் பெற்றது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5.15 மணியளவில் நிறைவடைந்தது.

    பாலமேடு ஜல்லிக்கட்டு

    பட மூலாதாரம், bbc

  19. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் விக்னேஷ்.அ, கெளதமன் முராரி.