சென்னை, காஞ்சிபுரம் உள்பட 18 மாவட்டங்களில் மழை நீடிக்கும் - வானிலை மையம்

சென்னையின் மத்திய பகுதிகளில் கன மழை பெய்ததால் பல இடங்களில் சாலைகள் மற்றும் தெருக்களில் மழை நீர் தேங்கியுள்ளது. மழை நீரை அகற்றும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இன்றைய நேரலை நிறைவடைகிறது

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,

    இத்துடன் இந்த நேரலை பக்கத்தை நிறைவு செய்கிறோம்.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

    பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழகம், காரைக்கால் உள்பட 18 இடங்களில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், கடலூர், மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு மிதமான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  3. வந்துகொண்டிருக்கும் செய்தி, வீரப்பனின் சகோதரன் மாதையன் கவலைக்கிடம்

    33 ஆண்டுகளாக சிறையில் உள்ள வீரப்பனின் அண்ணன் மாதையன் உடல்நல பாதிப்பால் உடல்நலம் மிகவும் மோசமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

    அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  4. வந்துகொண்டிருக்கும் செய்தி, 10 மணி நேர கன மழை - சென்னை வீதிகளில் மீண்டும் வெள்ளம்

    சென்னையில் 10 மணி நேரமாக தொடர்ந்து பெய்த மழை காரணமாக நகரின் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் மழை நீர் வெள்ளம் போல ஓடுகிறது.

    தற்போது மழை நின்றபோதும் அதன் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிக்குள்ளாயினர்.

    சென்னையின் மத்திய பகுதிகளில் கன மழை பெய்ததால் பல இடங்களில் சாலைகள் மற்றும் தெருக்களில் மழை நீர் தேங்கியுள்ளது. மழை நீரை அகற்றும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

    இந்த அளவுக்கு மழை பெய்யும் என்ற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் மாநகராட்சிக்கு தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

    நகரின் பெரும்பாலான சுரங்கப்பாதை சாலைகளில் மழை நீர் புகுந்து வடியாமல் உள்ளது. இதனால் போக்குரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கெங்கு ரெட்டி, துரைசாமி, ஆர்பிஐ சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.

    மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியிருக்கிறது. அந்த ஏரிக்கு நீர்வரத்து 2900 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் ஏரியில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீரை திறந்து விடும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

  5. கலைமாமணி விருதின் பெயரை மாற்ற யோசனை கூறும் விழுப்புரம் எம்.பி

    தமிழ்நாடு அரசு வழங்கும் கலைமாமணி விருதின் பெயரை மாற்றியமைத்து அதை சாகித்ய அகாடமி விருதுக்கு நிகராக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு யோசனை கூறியிருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த விழுப்புரம் தொகுதி எம்.பி ரவிக்குமார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  6. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக முன்னாள் முதல்வரை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை - ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல்

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு
    படக்குறிப்பு, வழக்கறிஞர் அருள் வடிவேல்

    தூத்துக்குடியில் 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று அது தொடர்பாக விசாரித்து வரும் ஆணையத்தின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். அந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.ஆணையத்தின் 34ஆம் கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் சாலை விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த 27ஆம் தேதி தொடங்கியது.

    இதில் துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது பணியில் இருந்த மாவட்ட ஆட்சியர், பாதுகாப்பு பணியில் இருந்த காவல் கண்காணிப்பாளர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் 9 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.

    ஒரு நபர் ஆணையத்தின் 34ஆம் அமர்வு இன்றுடன் நிறைவு பெற்றது.

    இது தொடர்பாக ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒரு நபர் ஆணையத்தில் இதுவரை 1,417 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு, 1,037 பேரிடம் விசாரணை நடத்தி அவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றார். அவர் மேலும் கூறியது:1,483 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டு உள்ளன. இன்றைய விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்ட 9 உயர் அதிகாரிகளில் 6 பேர் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். இதில் ஒரு ஐ.ஏ.எஸ்., ஒரு காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் அடங்குவர்‌. ஒரு நபர் ஆணையத்தின் 35ஆம் அமர்வு விசாரணை வரும் ஜனவரி 24ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெறும். இதில், சம்மன் அனுப்பப்பட்டு ஆஜராகாதவர்கள் ஆணையத்தின் முன்பு விளக்கமளிப்பார்கள். மேலும், துப்பாக்கி சூட்டின் போது பணியிலிருந்த காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன், தென்மண்டல ஐ.ஜி, டி.ஐ.ஜி உள்பட முக்கிய சாட்சிகள் விசாரிக்கப்பட உள்ளனர். துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, முன்னாள் முதல்வரை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. ஏற்கெனவே ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கமளித்தவர்களுக்கு தேவையென்றால் மட்டும் மீண்டும் அழைபு்பாணை அனுப்பி விசாரிக்கப்படுவார். அரசு கொடுத்த காலக்கெடுவுக்குள் ஆணையத்தின் விசாரணையை முடிப்பதற்கு அணைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இனி வரும் சாட்சியங்கள் அனைத்தும் முக்கியமானவை என்பதால் விசாரணை நீண்ட நேரம் நடக்கும்.தூத்துக்குடி மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியரிடம் காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. எனவே, இனிவரும் சாட்சியங்களில் ஒருவரை தீர விசாரிப்பதற்கு ஒரு நாள் கூட தேவைப்படலாம் என்று வழக்கறிஞர் அருள் வடிவேல் கூறினார்.

  7. சூடானில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக போராடியவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு

    சூடான்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, சூடான்

    சூடான் தலைநகர் கார்ட்டூமில், அதிபர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.

    கடந்த அக்டோபரில் சூடானில் ஆட்சிக்கவிழ்ப்பு ஏற்பட்டது. அதை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் கட்டுப்பாடுகளை மீறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்த நிலையில் அங்குள்ள மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்றைய போராட்டத்தை தொடர்ந்து மக்கள் கூடுவதைத் தடுக்க தொலைபேசி மற்றும் இணைய வசதிகளை ராணுவ நிர்வாகம் துண்டித்துள்ளது. மக்களை கண்காணிக்க முக்கிய சாலைகளில் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

  8. புயல், மழையால் பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கிய இந்திய அரசு - தமிழ்நாடு பெயர் இல்லை

    2021 ஆம் ஆண்டில் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியின் (NDRF) கீழ் கூடுதல் மத்திய தொகுப்பு நிதி ஒதுக்க இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், புயல் வெள்ள பாதிப்பை 2021இல் எதிர்கொண்ட தமிழ்நாட்டுக்கு ரூ. 4,625 கோடியை தமிழக அரசு கோரியிருந்தது. ஆனால், அது தொடர்பான அறிவிப்பு இன்றைய உள்துறையின் அறிவிப்பில் இடம்பெறவில்லை. இதை சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டுக்கு எப்போதும் தாமதம்தானா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தமது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    இந்திய உள்துறையின் இன்றைய செய்திக்குறிப்பின்படி ஆறு மாநிலங்களுக்கு கூடுதல் மத்திய உதவியாக தேசிய பேரிடர் நிதியில் இருந்து ரூ. 3,063.21 கோடி வழங்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் தெள தே புயலை எதிர்கொண்ட குஜராத்துக்கு ரூ.1,133.35 கோடி; ‘யாஸ்’ புயலை எதிர்கொண்ட மேற்கு வங்கத்திற்கு ரூ.586.59 கோடி, தென்மேற்கு பருவமழையின் போது ஏற்படும் வெள்ளம்/நிலச்சரிவுகளை எதிர்கொண்ட அசாமுக்கு ரூ.51.53 கோடி, கர்நாடகாவுக்கு ரூ.504.06 கோடி, மத்திய பிரதேசத்துக்கு ரூ. 600.50 கோடி, உத்தராகண்ட் மாநிலத்துக்கு ரூ. 187.18 கோடி ஒதுக்கப்படும்.இந்த கூடுதல் நிதி உதவியானது, ஏற்கெனவே மாநிலங்களின் வசம் உள்ள மாநில பேரிடர் நிவாரண நிதியில் (SDRF) மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை விட அதிகம் என இந்திய உள்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.2021-22 நிதியாண்டில், மத்திய அரசு 28 மாநிலங்களுக்கு அவற்றின் மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக ரூ.17,747.20 கோடியை வழங்கியுள்ளது. மேலும் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஏழு மாநிலங்களுக்கு ரூ.3,543.54 கோடியை விடுவிக்கப்பட்டுள்ளது.‘தெள தே’ மற்றும் ‘யாஸ்’ புயலுக்குப் பிறகு, 20.05.2021 அன்று குஜராத்திற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து முன் தொகையாக ரூ. 1,000 கோடி யை இந்திய அரசு விடுவித்தது.29.05.2021 அன்று மேற்கு வங்கத்துக்கு ரூ. 300 கோடியை விடுவித்தது.2021-22 ஆம் ஆண்டில், இயற்கைப் பேரிடர்களுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட மாநில அரசுகளிடமிருந்து ஒரு குறிப்பாணையைப் பெறுவதற்குக் காத்திருக்காமல், மத்திய அரசு உடனடியாக 22 அமைச்சகங்களுக்கு இடையேயான மத்திய குழுக்களை (IMCTs) நியமித்தது என்றும் இந்திய உள்துறை செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

  9. வந்துகொண்டிருக்கும் செய்தி, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநில தலைநகரில் கன மழை மாலை முதல் பெய்து வருகிறது. சென்னையில் ஒரு சில இடங்களில் 20 செ.மீ வரை பொழிவு பதிவாகியுள்ளது. செய்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னையில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  10. நீட் விலக்கு மசோதா: ஜனவரியில் மீண்டும் நேரம் ஒதுக்கக் கோரும் டி.ஆர். பாலு

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா தொடர்பாக இந்திய அரசிடம் நேரில் வலியுறுத்துவதற்காக டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக முகாமிட்டிருந்த தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவினரை இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்திக்காத நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் தங்களுக்கு நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு.

    டிஆர். பாலு

    பட மூலாதாரம், T.R. BAALU

  11. அர்னால்டு ஸ்வார்ஸ்னேகர் - மரியா விவாகரத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் ஒப்புதல்

    அர்னால்டு

    பட மூலாதாரம், REUTERS/Lucy Nicholson

    படக்குறிப்பு, மரியாவுடன் அர்னால்டு (கோப்புப்படம்)

    ஹாலிவுட் நடிகர்கள் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் மற்றும் மரியா ஷ்ரிவரின் விவாகரத்துக்கு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

    அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் மனைவிக்கு இழைத்த துரோகம் தொடர்பான தகவல் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்ததிலிருந்து அவரிடம் இருந்து மரியா பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

    அமெரிக்க ஊடக செய்திகளின்படி, இருவரின் விவாகரத்து வழக்கு முடிவடைய நீண்ட காலம் எடுத்ததற்கு நிதி மற்றும் சொத்துகள் பிரிப்பு குறித்த பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட தாமதம் ஒரு காரணம்.

    தொழில்முறை பத்திரிகையாளரான ஷ்ரிவருக்கு, முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எப்.கென்னடியின் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் அர்னால்டிடம் இருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.

    அந்த வழக்கிற்குப் பிறகு, டெர்மினேட்டர் நட்சத்திரமான அர்னால்டு தனது வீட்டு பணிப்பெண்ணுடன் தனக்கு தொடர்பு இருப்பதாகவும், அந்த உறவில் இருந்து அவருக்கு 1997ஆம் ஆண்டில் ஒரு மகன் பிறந்ததாகவும் ஒப்புக்கொண்டார்.

    2003 முதல் 2011 வரை கலிபோர்னியாவின் ஆளுநராகப் பணியாற்றிய அர்னால்டு ஸ்வார்ஸ்னேகர், ஷ்ரிவருடனான பிரிவு குறித்து லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், "ஆளுநர் பதவியில் இருந்து வெளியேறிய பிறகு, எனது பத்தாண்டு கால சம்பவத்தைப் பற்றி என் மனைவியிடம் கூறினேன் என்று தெரிவித்தார்.

    இந்த விவகாரத்தில் "நல்லிணக்கத்திற்கான அனைத்து வாய்ப்புகளும் தீர்ந்து விட்டதாக மரியா தனது விவாகரத்து வழக்கில் கூறியிருந்தார்.

    இந்த ஜோடி 1977ஆம் ஆண்டில் சந்தித்தனர். 1986இல் திருமணம் செய்து கொண்டனர். ஸ்வார்ஸ்னேகர் மற்றும் மரியா ஷ்ரிவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

  12. தீவிர குற்றங்களைத் தடுக்க 2 சிறப்பு பிரிவுகள் - சென்னை மாநகரக் காவல் ஆணையர்

    சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தீவிர குற்றவாளிகளைக் கண்காணிக்கவும் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளைத் தடுக்கவும் 2 சிறப்பு பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    சென்னை மாநகரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய புற நகர்ப் பகுதிகளில் கட்டப் பஞ்சாயத்து, தொழிற்சாலைகளில் ரவுடிகளின் மிரட்டல்கள் குறித்து காவல்துறைக்கு அதிகளவில் புகார்கள் வருகின்றன.

    இவற்றைத் தடுக்கும் வகையில், சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு சந்தன கடத்தல் வீரப்பன், அயோத்தி குப்பம் வீரமணி உள்ளிட்டோரின் என்கவுன்டர்களில் பங்கேற்ற காவல் அதிகாரி வெள்ளதுரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

  13. தமிழில் அம்பை, முருகேசனுக்கு சாகித்ய அகாடமி விருதுகள்

    தமிழ் எழுத்தாளர் அம்பை எழுதிய "சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை" என்கிற சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், முருகேசன் எழுதிய "அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை" என்கிற குழந்தைகளுக்கான சிறுகதைத் தொகுப்பிற்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

  14. புதுக்கோட்டை சிறுவன் தலையில் பாய்ந்த குண்டு அகற்றப்பட்டது, ஜி. மணிவண்ணன், திருச்சி

    புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலை அருகே பசுமலைப்பட்டியில் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது சிறுவன் புகழேந்தி தலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு, 4 மணி நேரம் அறுவை சிகிச்சைக்குப் பின் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

    தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவர்கள் அகற்றினர். இதைத் தொடர்ந்து இருபத்தி நான்கு மணி நேரம் தீவிர சிகிச்சை பிரிவில் சிறுவன் புகழேந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    துப்பாக்கி குண்டு பாய்ந்ததையடுத்து, துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்ட மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் (சி.ஐ.எஸ்.எப்) மீது புதுக்கோட்டை வெள்ளனூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

  15. வந்துகொண்டிருக்கும் செய்தி, நீட் விலக்கு மசோதா: அமித் ஷா நேரம் ஒதுக்கவில்லை - டி.ஆர். பாலு

    டி.ஆர். பாலு

    பட மூலாதாரம், SUCHITRA

    படக்குறிப்பு, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர். பாலு மற்றும் தமிழக எம்.பி.க்கள்

    நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க தமிழ்நாடு அனைத்து கட்சி எம்.பிக்களுக்கு 2வது நாளாக இன்றும் நேரம் கிடைக்கவில்லை. சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக திமுக எம்.பிக்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து டெல்லியில் இன்று தமிழ்நாடு அனைத்து கட்சி எம்.பிக்களுடன் செய்தியாளர்களை டி.ஆர்.பாலு சந்தித்தார். அப்போது, " நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இது குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்ப வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டப்படி எங்களது கோரிக்கையை முன் வைக்கிறோம். இதில் மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. மாநில அரசின் உரிமை.

    நீட் விலக்கு என்கிற தமிழ்நாடு முதல்வரின் கோரிக்கை, சட்ட மசோதா ஆகியவை குறித்து எடுத்துச் சொல்ல, உள்துறை அமைச்சரை சந்திக்க நேற்று 12 மணிக்கு நேரம் கேட்டிருந்தோம். இரவு 9 மணி வரை காத்திருந்தோம். இன்றைக்கும் சந்திக்க முடியவில்லை. வரும் 3ஆம் தேதி சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்," என்றார்.

  16. இந்திய அணியின் தேர்வு முறை: கேள்வி எழுப்பும் ரவி சாஸ்திரி

    ரவி சாஸ்திரி

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, ரவி சாஸ்திரி

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய அணியின் தேர்வு முறைகளில் பெரிய மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடனான உரையாடலில், அணி தேர்வில் கேப்டன் மற்றும் பயிற்சியாளருக்கும் பங்கு இருக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி கூறினார்.

    "அணியை தேர்வு செய்வதில் கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் பங்கு இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன், இது மிகவும் முக்கியமானது. குறிப்பாக பயிற்சியாளர் அனுபவமிக்கவராக இருக்கும்போது," என்றார் ரவி சாஸ்திரி. சமீபத்தில், டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி, ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட விதம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தன.

    இது குறித்து ஒரு செய்தியாளர் சந்திப்பில் விராட் கோலி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

    விராட் கோலி

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, விராட் கோலி

    அணி தேர்வுக்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பு தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் கிடையாது என தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

    2019இல் நடந்த உலக கோப்பைக்கான அணியில் மூன்று விக்கெட் கீப்பர்கள் சேர்க்கப்பட்டது பற்றிய தமது அதிருப்தியை ரவி சாஸ்திரி மீண்டும் வெளிப்படுத்தினார்.

    அரையிறுதியில், இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது, இந்த ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி, தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பந்த் ஆகிய மூன்று விக்கெட் கீப்பர்களும் விளையாடினர்.

    இருப்பினும், தேர்வாளர்களின் பணிகளில் தான் தலையிடவில்லை என்றும் ரவி சாஸ்திரி தெளிவுபடுத்தினார்.

    கிரிக்கெட்

    பட மூலாதாரம், Getty Images

    உலக கோப்பை அணியில் 3 விக்கெட் கீப்பர்களை தக்க வைக்க சரியான உத்தி இல்லை, அம்பதி ராயுடு அல்லது ஸ்ரேயாஸ் ஐயரை வைத்து இருக்கலாம் என்று ரவி சாஸ்திரி கூறினார். உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியில் இருந்து அம்பதி ராயுடுவை நீக்குவது குறித்தும் பல சர்ச்சைகள் எழுந்தன.

    இந்த ஆண்டு டி20 உலக கோப்பைக்குப் பிறகு ரவி சாஸ்திரியின் பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைந்தது. அவருக்குப் பதிலாக ராகுல் டிராவிட்டிற்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    உலக கோப்பைக்கு முன்னதாகவே டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக விராட் கோலி முடிவு செய்திருந்தார். ஆனால் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு பதிலாக ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் நீடிப்பார்.

  17. புதுக்கோட்டை துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் மூடல் - மாவட்ட எஸ்.பி தகவல்

    துப்பாக்கி குண்டு பாய்ந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
    படக்குறிப்பு, துப்பாக்கி குண்டு பாய்ந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலை அருகே பசுமலைப்பட்டியில் துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது, 11 வயது சிறுவன் புகழேந்தி தலையில் குண்டடிபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    அப்பகுதியில், மாவட்ட எஸ்.பி நிஷா பார்த்திபன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கும். அது போல் தான் இந்த இடமும் உள்ளது. ஆனால் ஏதோ தவறுதலாக இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை செய்யப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். பசுமலைபட்டி துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

    சுடப்பட்ட குண்டு எந்த வகையை சேர்ந்தது என்பது குறித்து விசாரணை செய்யப்படுகிறது. பயிற்சி மையம் அமைந்துள்ள இடம் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதியின் தூரம். ஆகியவை குறித்த ஆய்வு செய்யப்படுகிறது," என்றார்.

    மேலும், "இது போன்ற முக்கியமான பிரச்னைகளில் முன்கூட்டியே எந்த தகவலும் தர இயலாது. கடந்த பதினைந்து ஆண்டுகளாக இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இதுபோன்ற துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். அது குறித்து விசாரணை செய்து பின்னர் முடிவு எடுக்கப்படும்." என்றார்.

  18. தூத்துக்குடி துப்பாக்கி சூடு - விசாரணை ஆணையத்தில் அதிகாரிகள் ஆஜர், பிரபுராவ் ஆனந்தன்

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த விசாரணை ஆணையத்தில் அதிகாரிகள் ஆஜராகி வருகின்றனர்.
    படக்குறிப்பு, தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த விசாரணை ஆணையத்தில் அதிகாரிகள் ஆஜராகி வருகின்றனர்.

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை ஆணையத்தில் முன்னாள் உதவி ஆட்சியர் இன்று ஆஜரானார்.

    தூத்துக்குடியில் கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற துப்பாக்கி சூடு, தடியடியில் 13 பேர் பலியாகினர்.

    இது தொடர்பாக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    ஏற்கெனவே, 33 கட்ட விசாரணையில் 1,031 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 1,346 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டு உள்ளன.இந்த மாதம் தொடக்கத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் 34-வது கட்ட விசாரணை தூத்துக்குடி அரசு சுற்றுலா மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் கடந்த 27ம் தேதி தொடங்கியது.

    தூத்துக்குடி மாவட்ட முன்னாள் ஆட்சியரும், துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது பொறுப்பிலிருந்த மாவட்ட ஆட்சியருமான வெங்கடேஷ் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இன்று 34வது இறுதி விசாரணையில் முன்னாள் உதவி ஆட்சியர் கோபால கிருஷ்ணன் ஆஜரானார். நீதிபதி அருணா ஜெகதீசன் அவரிடம் தொடர் விசாரணை நடத்தினார்.

  19. சர்ச்சை சாமியார் காளிசரண் கைது - காந்தியடிகள் குறித்து இழிவாக பேசியதாக புகார்

    காந்தியடிகள் குறித்து இழிவாக பேசியதாக கூறப்பட்ட புகாரைத்தொடர்ந்து சர்ச்சைக்குள்ளான சாமியார் காளிசரணை மத்திய பிரதேசத்தில் ராய்ப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

    தரம் சன்சாத் என்கிற நிகழ்ச்சியில், காந்தியை இழிவு படுத்தும் வகையில் அவர் பேசியதாக கூறப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், கஜூரகோவில் அவரை ராய்ப்பூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    மத்திய பிரதேசத்தில் இருந்து அவரை சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூருக்கு போலீசார் அழைத்து சென்றுள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  20. ராஜேந்திர பாலாஜி மீது புகாரளித்தவர்களிடம் விசாரணை, பிரபுராவ் ஆனந்தன், பிபிசி தமிழுக்காக

    முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது ஆன்லைனில் புகார் அளித்தவர்கள் நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தனர்.

    தமிழ்நாடு பால்வளத்துறை முன்னாள் அமைச்சரும் அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. .

    இதுகுறித்து, மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் இரு வழக்குகள் பதிவு செய்துள்ளனர், தலைமறைவாக உள்ள ராஜேந்திரபாலாஜியை 8 தனிப்படைகள் தேடி வருகின்றன. .கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களிடம் ரூ.73.66 லட்சம் பணம் கொடுத்து ஏமாற்றமடைந்ததாக சாத்தூர் நந்தவனபட்டி தெருவைச் சேர்ந்த ஹரிபாலு, கருப்பையா, கார்த்திக்குமார், மதுரை ஆதித்யன், திருவில்லிபுத்தூர் வெங்கடாசலம், சிவகாசி குணா தூயமணி, மதுரை மீனாட்சிசுந்தரம், கடலூர் ஜோசப்ராஜ் ஆகியோர் ஆன்லைனில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்னர் புகார் அளித்தனர்.

    தொடர்ந்து, மின்துறையில் வேலைவாங்கித் தருவாதக் கூறி சாத்தூர் அதிமுக ஒன்றியச் செயலர் விஜய நல்லதம்பி மூலம் ரூ.21 லட்சம் கொடுத்து ஏமாந்ததாக கும்பகோனத்தை சேர்ந்த இருவரும் புகார் அளித்துள்ளனர்.

    இதையடுத்து, ஜோசப்ராஜ் மற்றும் புகார் அளித்த 8 பேரிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட நடுவர் நீதிமன்றம் 2ல் நீதிபதி முன் புகார் அளித்தவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.