முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட்டார் துரைமுருகன்
தமிழ்நாடு அரசில் நீர்வளத் துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகன், நேற்று (நவம்பர் 5ம் தேதி, வெள்ளிக்கிழமை) கேரளாவில் உள்ள முல்லை பெரியாறு அணையை பார்வையிட்டார் என ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது. சமீபத்தில் ஒரு சில கேரள நடிகர்கள் முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டதை சுட்டிக்காட்டு பாதுகாப்பு தொடர்பாக சில கேள்விகளை எழுப்பினர். கேரள அரசும் அணையின் நீர் மட்டத்தை அதிகரிப்பதாலும் மற்றும் அணையிலிருந்து நீர் வெளியேறும் போதும் வெள்ள அபாயம் ஏற்படலாம், லட்சக் கணக்கான கேரள மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கூறியது. அணையை ஆய்வு செய்த பிறகு, இப்பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்படும் என துரைமுருகன் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
