நரேந்திர மோதி கேதார்நாத் சென்றடைந்தார்

நரேந்திர மோதி இன்று உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத்துக்கு சென்றடைந்துள்ளார். கேதார்நாத் கோயிலில் பிரார்த்தனை செய்தார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. மீண்டும் ஐரோப்பாவில் மையம் கொள்ளும் கொரோனா வைரஸ்

    கொரோனா வைரஸ் - கோப்பு படம்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கொரோனா வைரஸ் - கோப்பு படம்

    ஐரோப்பா கண்டம், வரும் பிப்ரவரி மாதத்துக்குள் மேலும் ஐந்து லட்சம் மரணங்களைச் சந்திக்கலாம் என ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார் ஐரோப்பாவுக்கான உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஹான்ஸ் க்ளூக்.

    கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்புக்கு போதுமான அளவுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததை ஒரு காரணமாக கூறினார் அவர்.

    "நாம் நம் செயல்திட்டத்தை மாற்ற வேண்டும், கொரோனா அதிகம் பரவிய பின் எதிர்வினையாற்றுவதற்கு பதிலாக, பரவலைத் தடுக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும்" என்றார் ஹான்ஸ்.

  2. மலையை காக்க கரம் கோர்த்த பாமக விசிக

    பாமக-  விசிக இணைந்து போராட்டம்

    பட மூலாதாரம், HANDOUT/VIDEO GRAB

    படக்குறிப்பு, பாமக- விசிக இணைந்து போராட்டம்

    மலையின் வளத்தைக் காப்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பா.ம.கவும் இணைந்து போராட்டம் நடத்திய சம்பவம், ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ` எங்கள் கிராமத்தில் இரு தரப்பினரும் ஒற்றுமையாக இருப்பதால், அனைத்துப் போராட்டங்களிலும் பா.ம.கவினர் எங்களுக்குத் துணை நிற்கின்றனர்' என்கிறார் ஊராட்சி மன்றத் தலைவி ஜெயலட்சுமி.

    வி.சி.க நடத்திய போராட்டத்தில் பா.ம.க பங்கேற்றது எப்படி? என்றோம். `` நாங்கள் அனைவரும் ஒரே ஊரில் வசிக்கிறோம். இங்கு வன்னியர்களும் தலித் மக்களும் நிரம்பியுள்ளனர். இங்கு 560 வன்னியர் வாக்குகள் உள்ளது என்றால் அதில் 500 வாக்குகள் எங்களுக்கு விழுந்தன. அவர்களையும் அரவணைத்துச் செல்வதால் எந்தப் பிரச்னையும் இல்லை என்று கூறினார்.

  3. கேதார்நாத்தில் ஆதிசங்கரர் சிலையை திறந்துவைத்த பிரதமர்

    இந்திய பிரதமர் நரேந்திர மோதி இன்று உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் சென்றடைந்துள்ளார். கேதார்நாத் கோயிலில் பிரார்த்தனை செய்தார். அடுத்து ஆதி சங்கரர் சிலையைத் திறந்துவைத்துள்ளார். 2013ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பேரழிவு பாதிப்பில், ஆதி சங்கரரின் சமாதி சேதமடைந்தது. அதுவும் தற்போது மறு கட்டுமானம் செய்யப்பட்டு திறக்கப்படுகிறது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  4. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் அ தா பாலசுப்ரமணியன், கெளதமன் முராரி. நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே சொடுக்கவும் https://bbc.com.im/tamil/live/global-59159472%3C/p%3E%3C/div%3E%3C/div%3E%3C/article%3E%3C/li%3E%3C/ol%3E%3C/div%3E%3Cdiv class="css-1s4wzbg">