You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

பெண் அமைச்சர்கள் இல்லாத தாலிபனின் இடைக்கால அமைச்சரவை – காபூலில் போராட்டம்

இந்த போராட்டம் குறித்த செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகத்தின் பத்திரிகையாளர்கள் சிலர் தாக்கப்பட்டதாகவும், கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இந்தோனீசியாவின் ஜகார்த்தா சிறையில் தீ - 41 பேர் பலி

    இந்தோனீசிய தலைநகர் ஜகார்த்தாவின் புறநகர் பகுதியில் உள்ள டாங்கரெங் சிறைச்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ காரணமாக குறைந்தபட்சம் 41 பேர் பலியாகியுள்ளனர்.

    இந்த சம்பவம் புதன்கிழமை அதிகாலையில் நடந்துள்ளது. அப்போது பெரும்பாலான கைதிகள் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    தீ ஏற்பட்ட சி பிளாக் பகுதியில் 122 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். அந்த சிறை அறைகள், 40 கைதிகளை அடைக்கும் வகையில் கட்டப்பட்டிருந்தது என்றும் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் கைதானவர்கள் அவற்றில் அடைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தில் சிக்கிய பன்னிரண்டுக்கும் அதிகமானோர் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    தீ ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விசாரித்து வருவதாக சிறைத்துறை செய்தித்தொடர்பாளர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

  2. அதிமுக முன்னாள் அவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன் காலமானார்

    தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான புலமைப்பித்தன் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 86.

    புலமைப்பித்தனுக்கு வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த வாரம் உடல்நிலை மிக மோசமான நிலையில் இருந்ததால் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார்.அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

    அவரை அ.தி.மு.கவின் முக்கியப் பிரமுகர்கள் வந்து பார்த்துச் சென்றிருந்தனர். நேற்று வி.கே. சசிகலா மருத்துவமனைக்குச் சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்துவந்திருந்தார்.

    1935ல் கோயம்புத்தூரில் பிறந்த புலமைப்பித்தன் சினிமாவில் பாடல்களை எழுதுவதற்காக சென்னைக்கு வந்தார். அவரது இயற்பெயர் ராமசாமி. சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் அவர் பணியாற்றி வந்தார்.

    முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு மிக நெருக்கமாக இருந்த புலமைப்பித்தன், அவருக்காக குடியிருந்த கோவில் படத்தில் எழுதிய 'நான் யார், நான் யார்' பாடல் மிகப் பிரசித்தமானது.

    இவர் தமிழக சட்ட மேலவையின் துணைத் தலைவராகவும் இருந்தார். தமிழக அரசவைக் கவிஞராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.

    "ஆயிரம் நிலவே வா", "பாடும்போது நான் தென்றல் காற்று", "நீங்க நல்ல இருக்கோனும் நாடு முன்னேற", "பட்டுவண்ண ரோசாவாம்" போன்றவை இவருடைய புகழ்பெற்ற பாடல்களில் சில.

    கடைசியாக, 2015ல் வடிவேலு நடித்து வெளியான எலி படத்திற்கு பாடல்களை எழுதியிருந்தார்.

    அதிமுகவை எம்ஜிஆர் நிறுவிய நாள் முதல் அக்கட்சியின் தீவிர உறுப்பினராக கடந்த 49 ஆண்டுகளாக இருந்தவர் புலமைப்பித்தன். அவர் அந்த கட்சியின் அவைத்தலைவராகவும் இருந்திருக்கிறார்.

  3. வியட்நாமில் கொரோனா பரப்பிய இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

    வியட்நாமில் தமது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பிறருக்கு கொரோனா தொற்றை பரப்பிய இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    லீ வான் த்ரி எனும் அந்த இளைஞர் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றை பரப்பி உள்ளார் என்று நீதிமன்றம் கண்டுபிடித்துள்ளது. அந்த எட்டுப் பேரில் ஒருவர் உயிரிழந்துவிட்டார்.

    வியட்நாமில் கட்டுப்பாடுகள் காரணமாக தொற்று பரவல் குறைவாகவே இருந்தது. எனினும் டெல்டா திரிபு காரணமாக அங்கு பரவல் அதிகரித்தது. 28 வயதாகும் லீ வான் த்ரி ஹோசி மின் நகரத்திலிருந்து தமது சொந்த மாநிலமான கா மாவிற்கு ஜூலை மாத தொடக்கத்தில் வந்துள்ளார்.

    அவர் இரு சக்கர வாகனம் மூலம் பயணித்து வந்தது குறித்த தகவல்களை மறைத்துள்ளதுடன் தனிமைப்படுத்தல் விதிகளையும் பின்பற்றாமல் இருந்துள்ளார்.

    இதனால் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் அவர் சென்ற சமூக நல மையம் ஒன்றின் ஊழியருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது ஒரே நாள் மட்டுமே நடத்தப்பட்ட நீதிமன்ற விசாரணையில் உறுதியானது.

    இவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது உடன் இந்திய மதிப்பில் சுமார் 60 ஆயிரம் ரூபாய் அளவுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

  4. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் சிறப்பு நேரலைப் பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். த

    மிழ்நாடு, இந்தியா, உலக நாடுகள் தொடர்புடைய செய்திகளை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குவது விக்னேஷ். அ மற்றும் பரணிதரன்.