பெண் அமைச்சர்கள் இல்லாத தாலிபனின் இடைக்கால அமைச்சரவை – காபூலில் போராட்டம்
இந்த போராட்டம் குறித்த செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகத்தின் பத்திரிகையாளர்கள் சிலர் தாக்கப்பட்டதாகவும், கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
நேயர்களுக்கு வணக்கம்!
இன்றைய நேரலை இன்றுடன் நிறைவு பெறுகிறது.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்புபக்கம்செல்லவும்.
ஆப்கனை விட்டு தப்பி ஓடியது ஏன்? அஷ்ரஃப் கனி விளக்கம்
பட மூலாதாரம், Reuters
ஆப்கானிஸ்தானிலிருந்து
தான் பணம் எதுவும் எடுத்து கொண்டு தப்பவில்லை என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர்
அஷ்ரஃப் கனி தெரிவித்துள்ளார்.
மேலும் காபூலில் அமைதியை
நிலைநாட்டவே தான் தப்பித்து ஓடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டிவிட்டரில் இதுகுறித்து
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “ஆகஸ்டு 15ஆம் தேதி தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை
கைப்பற்றிய பிறகு காபூலைவிட்டு தான் உடனடியாக தப்பி ஓடியது ஏன் என்று ஆப்கன்
மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். பாதுகாப்பு அதிகாரிகளின் கட்டாயத்தின்
பேரில் தான் நான் காபூலைவிட்டு தப்பினேன்” என்று தெரிவித்துள்ளார்.
காபூலைவிட்டு சென்றது தன்
வாழ்நாளின் கடினமான ஒரு முடிவு என்றும் ஆனால் காபூலின் 60 லட்சம் மக்களின் உயிரை
காப்பாற்ற அதுமட்டும்தான் ஒரே வழி என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோன்று
விரைவில் தான் தப்பித்த நிகழ்வை விவரமாக தெரியப்படுத்தவுள்ளதாகவும் அவர்
தெரிவித்தார்.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
விராத் கோலி தலைமையிலான இந்த அணியில், ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார்
யாதவ், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, ரவிந்திர ஜடேஜா, ராகுல் சஹர்,
அஷ்வின், அக்சர் பட்டேல், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார்
மற்றும் ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணியின் கேப்டன் மகேந்திர
சிங் தோனி டி20க்கான அணியை வழிநடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு, 2
பெண்கள் அற்ற இடைக்கால ஆட்சியை எதிர்த்து போராட்டம்
பட மூலாதாரம், Getty images
ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் இடைக்கால அட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் இதில் பெண்கள்
யாரும் இடம்பெறவில்லை என்பதால் காபூல் மற்றும் வட கிழக்கு மாகாணமான படக்ஷனில் பெண்கள்
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெண் அமைச்சர் இல்லாத அரசாங்கத்தை ஏற்றுகொள்ளப் போவதில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தை கலைக்க பெண்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த போராட்டம் குறித்த செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகத்தின் பத்திரிகையாளர்கள்
சிலர் தாக்கப்பட்டதாகவும், கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் குறித்து ஏதும் கருத்து தெரிவிக்காத தாலிபன்கள் இம்மாதிரியான போராட்டம்
சட்டவிரோதமானது என்று தெரிவித்துள்ளனர்.
பேரணி நடத்துவதற்கு முன் அனுமதி வேண்டும் என்று தாலிபன்கள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாயன்று, ஹெராத் நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
முன்னதாக ஆப்கானிஸ்தானின் இடைக்கால அரசில்
அங்கம் வகிப்பவர்களின் விவரத்தை தாலிபன் தலைமை அறிவித்திருந்தது மேலும் ஆப்கானிஸ்தானை இனி 'ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்' என்றும் அவர்கள்
அறிவித்துள்ளனர்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, அசாமில் இரு படகுகள் மோதி விபத்து
பட மூலாதாரம், DILIP KUMAR SHARMA/BBC
அசாமில் படகுகள் இரண்டு மோதி கொண்ட விபத்தில் பலரை காணவில்லை.
அசாம் மாநிலம் ஜோர்ஹட் என்ற மாவட்டத்தில் பிரமபுத்திரா நதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் நடைபெற்றபோது படகுகளில் குறைந்தது 100 பேர் வரை இருந்தனர் என உள்ளூர் அதிகாரிகள்
பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு செல்லவுள்ளதாக அசாம் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
படகில் சென்றவர்களை மீட்பதற்கான தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
பலர் கரைக்கு திரும்பினாலும், மேலும் பலரை காணவில்லை. மீட்புப் பணிகள் தொடர்ந்து
நடைபெற்று வருகின்றன
இந்த சம்பவம் மாலை 4 மணி அளவில் நடைபெற்றது.
ரஷ்ய அமைச்சர் யெவ்கேனீ பலி - தண்ணீரில் விழுந்தவரை காப்பாற்றும் முயற்சியில் பரிதாபம்
படக்குறிப்பு, யெவ்கேனீ ஸீனிட்செஃப்
ரஷ்யாவின் அவசரகாலத்துறை அமைச்சர் யெவ்கேனீ ஸீனிட்செஃப், நோரீல்ஸ் என்ற இடத்தில் உள்ள செங்குத்தான பாறையில் கால் தவறி கீழே விழுந்த நபரை காக்கும் முயற்சியின்போது உயிரிழந்தார். அவருக்கு வயது 55.
ரஷ்யாவின் ஆர்டிக் பகுதி, ஏழு பிராந்தியங்கள் முழுமையாக நீளுகிறது. அந்த பிராந்தியத்தின் வளர்ச்சிப் பணிகளை கவனிப்பது யெவ்கேனீயின் பொறுப்பு. இந்த நிலையில அந்த பிராந்தியத்தில் ஆபத்து காலங்களில் மக்கள் எதிர்கொள்வது எப்படி என்ற ஒத்திகையில் ரஷ்ய வீரர்களுடன் சேர்ந்து சுமார் ஆறாயிரம் பேர் ஈடுபட்டனர்.
இத்தனை பேருடன் அசாதாரணமான ஓர் பயிற்சி இதற்கு முன்பு அங்கு நடந்ததில்லை.
ரஷ்ய தொலைக்காட்சியான ஆர்டியின் தலைமை அதிகாரி மார்கரிடா சைமோன்யானின் தகவலின்படி, செங்குத்தான பாறை மீது பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார் யெவ்கேனீ ஸீனிட்செஃப். அவருடன் இயக்குநர் அலெக்சாண்டர் மெல்னிக் இருந்தார்.
அப்போது கால் வழுங்கியதில் மார்கரிட்டா சைமோன்யான் பின்னால் இருந்த தண்ணீரில் விழுந்தார். அவரை காப்பாற்ற முற்பட்ட முயற்சியில் யெவ்கேனியும் உயிரிழந்தார். அவருக்கு முன்பாகவே சைமோன்யானும் இறந்தார்.
ரஷ்யாவில் அதிபர் விளாதிமீர் புதின் அமைச்சரவையில் நீண்டகாலமாக பணியாற்றி வந்தவர் யெவ்கேனீ. ரஷ்ய அவசரகாலத்துறை அமைச்சராக அவர் 2018 முதல் இருந்தார் அவர்.
ரஷ்ய அதிபரின் விரிவான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை கவனிக்கும் அதிகாரிகளில் யெவ்கேனியும் ஒருவர்.
தமது பணிக்காலத்தின் பெரும்பகுதியை அவர் தேச பாதுகாப்பு பணியிலேயே கழித்திருந்தார்.
சோவியத் கேஜிபி என்ற ரஷ்ய உளவுத்துறையில் பணியைத் தொடங்கிய அவர், படிப்படியாக அந்த துறையின் இரண்டாம் நிலைவரை உயர்ந்தார்.
அதிபர் புதினுடன் யெவ்கேனீ நீண்ட காலம் பணியாற்றியவர் அவரது மரணம், மிகப்பெரிய இழப்பு என்று ரஷ்ய அதிபரின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோஃப் கூறியுள்ளார்.
திரைப்பட இயக்குநர் மெல்னிக் ஒரு எழுத்தாளரும் கூட. ஆர்டிக் ஆவணப்படம் ஒன்றை எடுத்ததன் மூலம் 2015இல் அவர் பிரபலம் அடைந்தார்.
ஆர்டிக் பிராந்தியத்திலும் ரஷ்யாவின் வடக்கு கடல் பகுதியிலும் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக ஆவணப்படம் எடுக்கும் நோக்குடன் அவர் இங்கு வந்திருந்தார்.
கிராஸ்நோயார்ஸ் பிராந்தியத்தில் சம்பவம் நடந்த வேளையில் ஊடகக் குழுவினர் மக்கள் பயிற்சி செய்யும் காணொளியை பதிவு செய்திருந்தனர்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, டெல்லியில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை
டெல்லியில் கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தியை பொது இடங்களில் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை தங்களுடைய இல்லங்களிலேயே பொதுமக்கள் கொண்டாட வேண்டும் என்றும் டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையில் உணவுப் பஞ்சமா? களத்தில் உள்ள நிலவரம் என்ன?, ரஞ்சன் அருண் பிரசாத், இலங்கை
பட மூலாதாரம், LAKRUWAN WANNIARACHCHI / GETTY IMAGES
இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தால் அவசரநிலை அறிவிக்கப்பட்டபின், அங்கு உணவுப் பஞ்சம் நிலவி வருவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. செய்கை உரப் பயன்பாட்டிற்கு அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டு, இயற்கை வேளாண்மைக்கு மாறியது, இந்த உணவு பஞ்சத்திற்கான காரணம் எனவும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.
கோவிட் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பும், உணவு பஞ்சத்திற்கான ஒரு காரணம் என கூறப்பட்டு வருகின்றது. இந்த விடயங்களின் உண்மைத் தன்மை தொடர்பில் பிபிசி தமிழ் ஆராய்ந்தது.
அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோகத்திற்கான அவசரகால சட்ட விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை கடந்த 30ம் தேதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டிருந்த நிலையில், அதற்கான அனுமதியை நாடாளுமன்றம் திங்களன்று வழங்கியிருந்தது.
இலங்கையில் செய்கை உர பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில், முன்னாள் நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த மே மாதம் 6ம் தேதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டது.
இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், செய்கை உர இறக்குமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. எனினும், இந்த வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதை அடுத்து, இலங்கையில் திடீரென உரத்துக்கான தட்டுப்பாடு ஏற்பட்டது.இந்த செய்தியை விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்
தேசிய பாதுகாப்பு கல்லூரி மூலம் பெண்களுக்கு ராணுவத்தில் நிரந்தர கமிஷன் - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு
பட மூலாதாரம், Getty Images
இந்திய ராணுவத்தில் நிரந்தர கட்டளை பணியில் சேர ஏதுவாக பெண்கள் தேசிய ராணுவ கல்லூரியில் சேரலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கில் இன்று ஆஜரான இந்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டீ, "ஒரு நற்செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன். இந்திய முப்படை தளபதிகளும் அரசாங்கமும் நிரந்தர கட்டளை பணியில் பெண்களை நியமிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். தேசிய பாதுகாப்பு கல்லூரி மற்றும் கடற்படை பயிற்சிக் கல்லூரியில் அவர்களுக்கு நிரந்தர கட்டளைப் பணி வழங்கப்படுவதற்கான முடிவு நேற்று மாலை எடுக்கப்பட்டது," என்று கூறினார்.
ஆனால், இந்த வழக்கில் மத்திய அரசின் இந்த முடிவுக்காக இந்திய முப்படைகளில் பணியாற்றி வந்த பல முன்னாள் பெண் அதிகாரிகள் கடுமையான சட்ட போராட்டத்தை முன்னெடுத்தனர். சிலர் பணிக்காலத்திலேயே ஓய்வு பெற்றனர். முழு விவரம் அறிய இந்த செய்தியை பார்க்கவும்.
தாலிபனின் இடைக்கால அமைச்சரவை - யாருக்கு என்ன பொறுப்பு?
ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசில் அங்கம் வகிப்பவர்களின் விவரத்தை தாலிபன் தலைமை அறிவித்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானை இனி 'ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்' என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்
YouTube பதிவின் முடிவு
இந்தோனீசிய சிறையில் தீ விபத்து
பட மூலாதாரம், INDONESIAN MINISTRY OF LAW AND HUMAN RIGHTS
இந்தோனீசியாவின்
தலைநகர் ஜகார்டாவில் சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 சிறைவாசிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்த சிறையில்
ஏற்கனவே அதிக எண்ணிக்கையிலான கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த தீ விபத்து
பலரும் தூங்கி கொண்டிருந்தபோது ஏற்பட்டுள்ளது.
தீ ஏற்பட்ட சிறை
பகுதியில், வெறும் 40 பேர் மட்டுமே இருக்க முடியும் ஆனால் அங்கு 122 பேர் கைதிகள் தங்க
வைக்கப்பட்டிருந்தனர்.
உயிரிழந்தவர்களில்
போர்ச்சுகல் மற்றும் தென் ஆப்ரிக்காவை சேர்ந்தவர்கள் இருவர்.
இந்த தீயில் பத்துக்கும்
மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, உத்தராகண்ட் மாநில ஆளுநர் பேபி ராணி மெளரியா ராஜிநாமா
பட மூலாதாரம், Baby Rani Mourya
படக்குறிப்பு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த உத்தராகண்ட் ஆளுநர் பேபி ராணி மெளரியா
உத்தராகண்ட் மாநில ஆளுநர் பதவியில் இருந்து பேபி ராணி மெளரியா விலகியிருக்கிறார். இதற்கான கடிதத்தை அவர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பியிருப்பதாக ஆளுநரின் செயலாளர் பி.கே. சந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தினங்களுக்கு முன்பு டெல்லி வந்த பேபி ராணி மெளரியா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோதி ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதிதான் அவர் ஆளுநர் பதவியில் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்திருந்தார்.
ஆப்கன் சூழ்நிலை: நட்பு நாடுகளுடன் பாகிஸ்தான் ஆலோசனை
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஷா மெஹ்மூத் குரேஷி, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்
ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழ்நிலை குறித்து தமது நட்பு நாடுகளான சீனா, இரான் துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் பாகிஸ்தான் அரசு இன்று ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்த கூட்டத்துக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தலைமை தாங்கி வருகிறார். ஆப்கானிஸ்தானில் புதிய தாலிபன் ஆளுகை அரசு அமைந்துள்ளதால் எழுந்துள்ள சவால்கள் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபட அனுதிக்க நீதிமன்றம் மறுப்பு, முரளிதரன் காசிவிஸ்வநாதன்
விநாயகர் சதுர்த்தியின்போது பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கேட்ட கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. பொதுநலனைக் கருத்தில் கொண்டே தடை விதிக்கப்பட்டிருப்பதால் அதில் தலையிட முடியாது என தீர்ப்பளித்துள்ளது.
கொரோனா பரவலை மனதில் கொண்டு, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின்போது பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த இல. கணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கில், பொது இடங்களில் விநாயகரை வைத்து வழிபடவும் பிறகு ஊர்வலமாகச் சென்று நீர் நிலைகளில் கரைக்கவும் அனுமதிக்க வேண்டும். குறைந்தது ஐந்து பேர் என்ற அளவிலாவது ஊர்வலமாகச் செல்ல அனுமதிக்க வேண்டும்; இது மத உரிமை என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், "மத உரிமை என்பது முக்கியம்தான். ஆனால், அதைவிட வாழ்வாதாரம் மிக முக்கியம்" என தெரிவித்தனர். பொதுநலன் கருதியே அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்றும் அதில் தாங்கள் தலையிட முடியாது என்று கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.
திருப்பூரைச் சேர்ந்த இந்து முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பைச் சேர்ந்த கோபிநாத் என்பவரும் இதேபோன்ற ஒரு வழக்கைத் தொடர்ந்திருந்தார்.
அதில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகரை பொது இடங்களில் வைத்து வழிபடவும் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கவும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டுமெனக் கோரி அந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கில் ஆஜரான தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக கூறினார். இதையடுத்து அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
ராமநாதபுரத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு, பிரபுராவ் ஆனந்தன்
பட மூலாதாரம், Getty Images
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர் ஒருவர் உள்பட நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் செப்.1 முதல் திறக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில், தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவ, மாணவியரை நிறுவன வாகன இருக்கைகளில் சமூக இடைவெளியை பின்பற்றி பள்ளி, கல்லூரிகளுக்கு அழைத்து வருகின்றன.
இந்த நிலையில் ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த சனிக்கிழமை 150 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பரிசோதனை முடிவு செவ்வாய்கிழமை மாலையில் வெளியானது.
இதில் ராமேஸ்வரத்தை சேர்ந்த ஒருவர், பனைகுளத்தை சேர்ந்த ஒருவர் என இரண்டு மாணவர்கள் மற்றும் உதவியாளர் என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் ராமநாதபுரம் அடுத்த ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராமநாதபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குநர் குமரகுருபரன், "கீழக்கரையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வாகனத்தில் வந்து செல்லும் பனைக்குளம், ராமேஸ்வரம் பகுதி மாணவர் இருவர் மற்றும் கல்லூரி உதவியாளர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அக்கல்லூரி மாணவ, மாணவியர், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாக பணியாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ரெகுநாதபுரத்தில் அரசு பள்ளி மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவருடன் தொடர்பில் இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பரிசோதனை முடிவு வரும் வரை அவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி செயல்படாத கல்வி நிறுவனங்கள் மீது பொது சுகாதார பராமரிப்பு மற்றும் பேரிடர் மேலாண் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.
தமிழகத்தில் இன்றும் சில பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதேபோல, அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி செருவத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
உ.பி. தேர்தல்: தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக மேலிடம்
உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான கட்சிப் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை பாரதிய ஜனதா கட்சி மேலிடம் நியமித்துள்ளது.
மேலும், இணை பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், ராம் மேக்வால், ஷோபா கரண்ட்லஜே ஆகியோரையும் பாஜக மேலிடம் நியமித்திருக்கிறது.
"தாலிபன் ஆளுகையில் கூட்டணி ஆட்சி கிடையாது", லீஸ் டூசெட், பிபிசி செய்தியாளர்
பட மூலாதாரம், SERGEI SAVOSTYANOV\TASS VIA GETTY IMAGES
ஆப்கானிஸ்தானில் புதிய இடைக்கால அரசின் நிர்வாகிகள் யார் என்பது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமது ஆளுகையில் கூட்டணி ஆட்சி இருக்காது என்று தாலிபன் தெளிவுபடுத்தியுள்ளது.
இது குறித்து பிபிசி செய்தியாளர் லீஸ் டூசெட் கூறுகையில், "தாலிபன் ஆளுகையில் ஆட்சியை நடத்தும் பொறுப்பு தங்கள் வசமே இருக்க வேண்டும் என அதன் தலைவர்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக, ஊழல் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களுடைய அமைச்சரவையில் சேருவதை தாலிபன் விரும்பவில்லை என்று அந்த அமைப்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறின," என்று தெரிவித்தார்.
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தீர்மானம்
இந்தியாவில் மத்திய அரசு 2019இல் நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தீர்மானம் முன்மொழிந்துள்ளார்.
அந்த திருத்தச் சட்டம் இந்திய அரசின் மதசார்பின்மை கோட்பாடு, மத நல்லிணத்துக்கு உகந்ததாக இல்லை என்றும் இந்தியாவுக்கு அகதிகளாக வருவோரை மத ரீதியாக பாகுபாடுபடுத்தும் வகையில் இருப்பதாக தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு
தமிழ்நாட்டில் முந்தைய அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை முடக்க தற்போது ஆளும் திமுக அரசு முயல்வதாகக் கூறி பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
இது குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
"வேளாண் விற்பனைக் குழுவுக்கு தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட வேளையில், அதை திரும்பப் பெறும் வகையில் தற்போதைய திமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தவிர விழுப்புரம் மாவட்டத்தில் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் தொடங்க ஆளுநரின் அனுமதி பெறப்பட்டு சிண்டிக்கேட் உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டோம்.
ஆனால், பல்கலைக்கழகத்தை செயல்படுத்தும் முன்பாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அந்த பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்க திமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பின்தங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் ஆராய்ச்சி படிப்பில் ஏழை, எளிய மாணவர்கள் படிக்க வாய்ப்பு தரும் வகையில் அந்த பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
ஆனால், அதற்கு ஜெயலலிதாவின் பெயர் உள்ளது என்ற ஒரே காரணத்துக்காக அதை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்க திமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இப்படி அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஒவ்வொரு திட்டங்களாக திமுக அரசு முடக்கி வருவது குறித்து அவையில் நேரமில்லா நேரத்தில் எழுப்ப முனுசாமி முற்பட்டார்.
ஆனால், பேச அனுமதித்த பேரவைத் தலைவர் பிறகு அதை பாதியிலேயே நிறுத்தி விட்டு, நாங்கள் பேசிய வார்த்தைகளை கூட நீக்கி விட்டார். அதனால், நாங்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம், என்று கூறினார்.