You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

நரேந்திர மோதி அமைச்சரவை 2.0: கிரண் ரிஜிஜு, அனுராக் சிங் உள்பட 15 பேருக்கு கேபினட் அமைச்சர் பதவி

அடுத்த ஆண்டு கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தராகண்ட், பஞ்சாப், உத்தர பிரதேசம் ஆகிய மாநிளங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி தற்போது மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகியவர்களுக்கு பாஜக மேலிடம் தேர்தல் பணிகளை ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. ஜூலை 7ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது

    இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

    பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. மோதி அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை ஒதுக்கீடு?

    பிரதமர் நரேந்திர மோதியின் விரிவுபடுத்தப்பட்ட மத்திய அமைச்சரவையில் பலருக்கும் புதிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    பழைய அமைச்சர்களில் மூத்த அமைச்சர்கள் சிலர் தவிர்த்து, பிறரின் துறைகள் மாற்றப்பட்டுள்ளன. புதிய அமைச்சரவையில் பிரதமர் நீங்கலாக 30 கேபினட் அமைச்சர்கள், 2 தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள், 45 இணை அமைச்சர்கள் என மொத்தம் 77 பேர் இடம்பெற்றுள்ளனர்.

    பிரதமர் நரேந்திர மோதி:பணியாளர், குறைதீர், ஓய்வூதியம்; அணுசக்தி, விண்வெளி, முக்கிய கொள்கை விவகாரங்கள், பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள்

    எந்தெந்த கேபினட் அமைச்சர்களுக்கு என்னென்ன துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன, மத்திய அமைச்சர்களுக்கு என்னென்ன துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பதை விரிவாக அறிய இங்கே சொடுக்கவும்.

  3. நரேந்திர மோதி அமைச்சரவை 2.0: எல். முருகன் உள்பட 43 பேர் பதவியேற்பு

    பிரதமர் நரேந்திர மோதிய தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கத்தின் அங்கமாக டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா தொடங்கியிருக்கிறது.

    குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் புதிய அமைச்சர்களக பிரதமர் மோதியால் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

    அமைச்சர் பொறுப்பேற்பவர்களின் விவரம்:

    • நாராயண் டாடு ராணே
    • சர்பானந்த சோனவால்
    • டாக்டர் வீரேந்தர் குமார்
    • ஜோதிர்ஆதித்ய சிந்தியா
    • ராம்சந்திர பிரசாத் சிங்
    • அஷ்வினி வைஷ்ணவ்
    • பஷுபதி குமார் பராஸ்
    • கிரண் ரிஜிஜு
    • ராஜ் குமார் சிங்
    • ஹர்தீப் சிங் பூரி
    • மன்சூக் மாண்டவியா
    • பூபேந்தர் யாதவ்
    • பர்ஷோத்தம் ரூபாலா
    • ஜி. கிஷண் ரெட்டி
    • அனுராக் சிங் தாகுர்
    • பங்கஜ் செளத்ரி
    • அனுப்ரியா சிங் படேல்
    • டாக்டர் சத்ய பால் சிங் பாகெல்
    • ராஜீவ் சந்திரசேகர்
    • ஷோபா கரண்ட்லஜே
    • பானு பிரதாப் சிங் வெர்மா
    • தர்ஷண விக்ரம் ஜார்தோஷ்
    • மீனாக்ஷி லேகி
    • அன்னபூர்ணா தேவி
    • ஏ. நாராயணசுவாமி
    • கெளஷல் கிஷோர்
    • அஜய் பட்
    • பி.எல். வெர்மா
    • அஜய் குமார்
    • செளஹான் தேவுசின்ஹ்
    • பக்வந்த் குபா
    • கபில் மோரேஷ்வர் பாட்டீல்
    • பிரதிமா பூமிக்
    • டாக்டர் சுபாஸ் சர்கார்
    • பகவத் கிஷண் ராவ் கரட்
    • ராஜ்குமார் ரஞ்சன் சிங்
    • டாக்டர் பாரதி பிரவீண் பவார்
    • பிஷேஸ்வர் துடு
    • ஷாந்தனு துடு
    • டாக்டர் முஞ்சபாரா மகேந்திரபாய்
    • ஜான் பார்லா
    • எல். முருகன்
    • நிஷித் பிராமனிக்
  4. மத்திய அமைச்சரவையில் இருந்து 12 பேர் பதவி பறிப்பு

    பிரதமர் மோதி தலைமையிலான அமைச்சரவை புதன்கிழமை விரிவுபடுத்தப்பட்ட வேளையில், பழைய அமைச்சரவையில் இருந்து சதானந்த கெளடா, ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜாவடேகர் உள்பட 12 பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

    இது தொடர்பாக அந்த 12 பேரின் ராஜிநாமாவை ஏற்கும்படி பிரதமர் மோதி இன்று மாலை பரிந்துரை செய்ததையடுத்து அவர்களின் கடிதங்களை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டுள்ளார் என்று அவரது மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் பட்டியலில் டி.வி. சதானந்த கெளடா, ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜாவடேகர் ஆகியோருடன் சேர்த்து தாவர்சந்த் கெலாட், ரமேஷ் பொக்ரியால், ஹர்ஷ் வர்தன், சந்தோஷ் குமார் காங்வார், பாபுல் சுப்ரியோ, தோத்ரே சஞ்சய் ஷாம்ராவ், ரத்தன் லால் கட்டாரியா, பிரதாப் சந்திர சாரங்கி, தேபஸ்ரீ செளத்ரி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

    இதில் தாவர்சந்த் கெலாட் ஏற்கெனவே மாநில ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரை கர்நாடகா மாநில ஆளுநராக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் நியமித்தார்.

    அடுத்த ஆண்டு கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தராகண்ட், பஞ்சாப், உத்தர பிரதேசம் ஆகிய மாநிளங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி தற்போது மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகியவர்களுக்கு பாஜக மேலிடம் தேர்தல் பணிகளை ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  5. வீட்டில் நடந்த தாக்குதலில் ஹைதி அதிபர் மோசே படுகொலை

    கரீபிய நாடான ஹைதியின் அதிபர் ஜோவானெல் மோசே அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டதாக அந்நாட்டின் இடைக்காலப் பிரமர் கிளாடி ஜோசப் கூறியுள்ளார்.

    அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய நபர்கள் தலைநகர் போர்ட்-ஆப்-பிரின்ஸில் உள்ள மோசேவின் வீட்டை முற்றுகையிட்டுத் தாக்கியதாக ஜோசப் கூறியுள்ளார்.

    இந்தத் தாக்குதலில் அதிபரின் மனைவியும் படுகாயமடைந்துள்ளார். "நாட்டில் நிலைமையைச் சமாளிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என ஜோசப் கூறியுள்ளார்.

    53 வயதான மோசே 2017-ஆம் ஆணஅடு பிப்ரவரி முதல் ஹைதியின் அதிபராகப் பதவி வகித்து வருகிறார். முந்தைய அதிபர் மார்ட்டெல்லி பதவி விலகியதைத் தொடர்ந்து அவருக்கு இந்த வாய்ப்புக் கிடைத்தது.

    அவரது பதவிக் காலத்தில் அவரது அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர் பதவி விலகக் கோரி வன்முறைப் போராட்டங்கள் நடந்தன.

    இந்த ஆண்டின் தொடக்கத்திலும் மோசே பதவி விலக வேண்டும் என்று கோரி தலைநகரிலும் நாட்டின் பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

    கடந்த பிப்ரவரி மாதத்துடன் மோசேவின் பதவிக் காலம் முடிந்துவிட்டதாக எதிர்கட்சிகள் கூறுகின்றன. ஆனால் தாம் தாமதமாகவே பதவியேற்றுக் கொண்டதால் மேலும் ஓராண்டு காலம் பதவியில் நீடித்திருக்கப் போவதாக மோசே அறிவித்திருந்தார்.

  6. டோக்கியோவில் ஒலிம்பிக் தீப ஓட்டம் ரத்து

    கோவிட் அச்சம் காரணமாக டோக்கியோ நகரத் தெருக்களில் நடக்க இருந்த ஒலிம்பிக் தீப ஓட்டம் ரத்து செய்யப்பட்டது.

    வரும் வெள்ளிக்கிழமை தொடங்க இருந்த தொடர் தீப ஓட்டத்துக்குப் பதிலாக ஆங்காங்கே தீபம் ஏற்றும் நிகழ்வுகள் நடக்கும் எனவும் அவை ஆன்லைனில் ஒளிபரப்பாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    எதிர்ப்புகளை மீறி வரும் 23-ஆம் தேதி முதல் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இருக்கின்றன. ஜப்பானின் பல பகுதிகளில் ஒலிம்பிக் போட்டிகளை தள்ளிவைக்கக் கோரி தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த மார்ச் மாதத்தில் ஜப்பானில் ஒலிம்பிக் தீப ஓட்டம் தொடங்கியது முதலே பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. தொடர் ஓட்டத்துக்கான பாதைகளில் தடை ஏற்பட்டது.

    டோக்கியோவைப் போலவே கியோட்டோ, ஹிரோஷிமா ஆகிய நகரங்களும் தீப ஓட்ட நிகழ்வுகளை ரத்து செய்திருக்கின்றன.

    தீப ஓட்டத்துக்கு எதிர்ப்பு மிட்டோ என்ற நகரில் தீப ஓட்டம் நடந்து கொண்டிருந்தபோது அதை தண்ணீர் ஊற்றி ஒரு பெண் அணைக்க முயன்ற காணொளியில் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

    அந்தக் காணொளியில் ஒரு வீரர் தீபத்தை எடுத்துக் கொண்டு ஓடிவரும்போது பிளாஸ்டிக் நீர்த் துப்பாக்கி மூலம் நீரைப் பீய்ச்சியடித்து அதை அணைப்பதற்கு முயற்சி செய்கிறார்.

    அவரது பெயர் கயோகோ தகாஹாஷி எனத் தெரியவந்துள்ளது.. 53 வயதான அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியபோது, "ஒலிம்பிக் வேண்டாம். விளையாட்டை நிறுத்துங்கள்" என அவர் முழங்கினார்.

    அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  7. இலங்கையில் பசில் ராஜபக்ஷ எம்.பி.யாக நியமனம் - பின்னணி என்ன?

    அமெரிக்க மற்றும் இலங்கை குடியுரிமை கொண்டுள்ள பசில் ராஜபக்ஷ (ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சகோதரர்) இலங்கையின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக வர்த்தமானி ஊடாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இதன் மூலம் மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது அனைத்து சகோதரர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இலங்கை நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 196 பேர் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் தேர்வு செய்யப்படுவர். ஏனைய 29 நாடாளுமன்ற உறுப்புரிமையும் தேசியப்பட்டியல் என்று அழைக்கப்படும்.

  8. அதிமுக-பாஜக கூட்டணி தொடரும்: ஓ. பன்னீர்செல்வம் திட்டவட்டம்

    "பாஜகவுடன் கூட்டணி வைத்ததால், சிறுபான்மையினர் வாக்குகளை இழந்தோம். தேர்தலில் தோல்வியை சந்திதோம்," என தமிழக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் பேசிய விவகாரம் அந்த இரு கட்சிகளின் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    இந்த நிலையில், அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாஜக மீதும் பிரதமர் நரேந்திர மோடி மீதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முழு நம்பிக்கை வைத்துள்ளது. தேசநலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும். அஇஅதிமுக - பாஜக கூட்டணி தொடரும். இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை," என்று கூறியுள்ளார்.

  9. சி.வி. சண்முகம் கருத்து: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

    பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துக் கொண்டதால்தான் அ.தி.மு.க. தோல்வியடைந்தது என முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அது கட்சியினர் மத்தியில் தனிப்பட்ட முறையில் தெரிவித்த கருத்து என்றும் அதற்கும் கட்சியின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டிற்கும் தொடர்பில்லை என்றும் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

    சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "கூட்டணி குறித்து சி.வி. சண்முகம் கட்சியினர் மத்தியில்தான் பேசினார். அது அவரது தனிப்பட்ட கருத்து. கட்சியினர் மத்தியில் அவர் பல கருத்துகளைச் சொல்லியிருக்கலாம். தனிப்பட்ட முறையில் கட்சியினரிடம் பேசியது குறித்து கருத்து சொல்ல வேண்டியதில்லை. ஆனால், கே.டி. ராகவன் இதற்குப் பதிலளித்திருக்கிறார். அது தேவையில்லை. பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசுவதுதான் அதிகாரபூர்வமான கருத்து.

    சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி இருந்தது. ஆனால், அது தொடர்கிறதா என்பதை கட்சித் தலைமைதான் முடிவு செய்யும். நானோ, முன்னாள் சட்ட அமைச்சரோ முடிவு செய்ய முடியாது.

    உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி இருக்கிறதா என்பதை கட்சித் தலைமை அறிவிக்கும். அது தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகுதான் தெரியும். யாரும் எங்களைக் கட்டுப்படுத்த முடியாது. எங்கள் கட்சித் தலைமைதான் கூட்டணி குறித்து முடிவெடுக்க முடியும்," என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

  10. இந்திய தொழிலாளர் துறை அமைச்சர் பதவி விலகல்

    இன்று இந்திய அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றியமைக்கப்படவுள்ள நிலையில் தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் பதவி விலகியுள்ளார். இத்தகவலை பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

  11. பிரதமருடன் பாஜக கூட்டணி தலைவர்கள் சந்திப்பு

    பிரதமர் நரேந்திர மோதியுடன் பாஜக கூட்டணி தலைவர்கள் மற்றும் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் இன்று சந்தித்துப் பேசியுள்ளனர்.

    2019ஆம் ஆண்டில் மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த நரேந்திர மோதி அரசு, முதல் முறையாக இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்ய உத்தேசித்திருக்கிறது.

    இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி மேற்கொண்டுள்ள அப்னா தளம் கட்சி தலைவர் அனுப்ரியா, ஜோதிர்ஆதித்ய சிந்தியா, நாராயண் ரானே, வருண் காந்தி, சர்பானந்த சோனவால், லோக் ஜன சக்தி தலைவர் பஷுபதி பராஸ் உள்ளிட்டோர் பிரதமர் நரேந்திர மோதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளனர்.

  12. ரயிலுக்கும் நடைபாதைக்கும் இடையே விழுந்த பிகார் இளைஞரை காப்பாற்றிய பெண் காவலர்கள்

    சேலம் ரயில் நிலையத்தில் ரயிலுக்கும் தண்டவாளத்துக்கும் இடையே சிக்கிய பிகார் இளைஞரை அங்கு பணியில் இருந்த இரண்டு பெண் காவலர்கள் காப்பாற்றிய காணொளி வைரலாகி வருகிறது.

    சேலம் ரயில் நிலையத்தின் நான்காவது நடைமேடையில் ரயில்வே தலைமைக் காவலர் மஞ்சு, அஸ்வினி ஆகியோர் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அதிகாலை 1:30 மணியளவில் ஜார்கண்ட் மாநிலம் ஹாட்யாவிலிருந்து எர்ணாகுளம் நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் வண்டி சேலம் ரயில்நிலையத்தில் நிறுத்தி பட்டிருந்தது.

    அது மீண்டும் புறப்படும் போது திடீரென குதித்த இளைஞர் ஒருவர் ரயில்வண்டியின் இடையில் சிக்கியுள்ளார்.

    இதைப்பார்த்த பெண் காவலர்கள் இருவரும் துரிதமாக செயல்பட்டு அவரை மேலே தூக்கி காப்பாற்றினார்கள். இதனால் அந்த இளைஞர் லேசான காயங்களோடு தப்பினார்.

    பின்னர் காவல்துறையினர் அந்த இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில் அந்த நபர் பிகார் மாநிலத்தை சேர்ந்த சிவன்குமார் என தெரிய வந்தது.

    அவர் சேலம் ரயில் நிலையத்தில் இறங்க முற்பட்டபோது ரயில் புறப்பட்டு விட்டதால் அவசரமாக ரயிலிலிருந்து குதித்துள்ளார் அப்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்த்தாக கூறியுள்ளார்.

    அந்த இளைஞரை காப்பாற்றிய பெண் காவலர்களை அதிகாரிகளும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், பிகார் இளைஞரை பெண் காவலர்கள் காப்பாற்றும் காணொளி வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.

  13. இந்திய அளவில் திடீரென உயர்ந்த கொரோனா பாதிப்பு அளவு

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய பாதிப்பு எண்ணிக்கை 43 ஆயிரத்து 733 ஆக பதிவாகியிருக்கிறது. மேலும் 930 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

    இதேவேளை, வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களன் சதவீதம் 97.18 ஆக பதிவாகியுள்ளது.

    இந்திய அளவில் அதிகபட்ச பாதிப்புகளை சந்தித்த முதல் ஐந்து மாநிலங்கள் வரிசையில் 14,373 பாதிப்புகளுடன் கேரளா, 8,418 பாதிப்புகளுடன் மகாராஷ்டிரா, 3,479 பாதிப்புகளுடன் தமிழ்நாடு, 3,104 பாதிப்புகளுடன் கர்நாடகா, 3,042 பாதிப்புகளுடன் ஆந்திர பிரதேசம் ஆகியவை உள்ளன.

    கொரோனா உயிரிழப்புகள் அதிகம் பதிவான மாநிலங்களில் 395 உயிரிழப்புகளுடன் மகாராஷ்டிரா, 142 உயிரிழப்புகளுடன் கேரளா, 73 உயிரிழப்புகளுடன் தமிழ்நாடு உள்ளன.

  14. மத்திய அமைச்சரவை கூட்டம் திடீர் ரத்து

    டெல்லியில் பிரதமர் மோதி தலைமையில் இன்று நடப்பதாக இருந்த பொது விவகாரங்கள் தொடர்புடைய மத்திய அமைச்சரவை கூட்டம் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் இரண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று மாலை விரிவுபடுத்தப்படும் என்று தகவல்கள் வெளி வந்துள்ள நிலையில், இந்த அமைச்சரவை கூட்டம் ரத்து செய்யப்படும் தகவலை பிரதமர் அலுவலக அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

  15. முதுபெரும் இந்தி நடிகர் திலீப்குமார் மறைவு, பிரதமர் மோதி இரங்கல்

    முதுபெரும் இந்தி நடிகர் திலீப்குமார் தமது 98வது வயதில் காலமானார்.

    அவர் சிகிச்சை பெற்றுவந்த மும்பை இந்துஜா மருத்துவமனை பிபிசி இந்தி சேவையிடம் அவரது மரணத்தை உறுதிப்படுத்தியது.

    புதன்கிழமை காலை 7.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக இந்துஜா மருத்துவமனை மருத்துவர் ஜலில் பால்கர் தெரிவித்தார்.

    அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோதி டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அவர் திரைத்துறை நாயகனாக எப்போதும் நினைவுகூரப்படுவார். அவரிடம் ஒப்பற்ற திறமை இருந்தது. அதனால்தான் பல தலைமுறையைச் சேர்ந்த ரசிகர்களை அவர் மகிழ்வித்தார் என்று தமது பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.