You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

தெள தே புயல்: 89 பேரை தேடும் பணி தீவிரம், பாதிப்பு நிலவரத்தை வான் வழியாக ஆய்வு செய்யும் பிரதமர் மோதி

குஜராத்தில் கரையை கடந்த தெள தே புயல் ஏற்படுத்திய பாதிப்புகளை வான் வழியாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆய்வு செய்து வருகிறார். டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோதி, குஜராத்தின் பாவ்நகரில் தரையிறங்கிய பிறகு, உனா, டியு, ஜாஃப்ராபாத், மஹுவா ஆகிய பகுதிகளில் வான் வழியாக ஆய்வு மேற்கொண்டார். இதற்கிடையே, புயல் சீற்றத்தின்போது கடலில் அடித்துச் செல்லப்பட்ட கப்பலில் இருந்த 89 பேரின் கதி என்ன ஆனது என்றே தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் இந்திய கடற்படை ஈடுபட்டு வருகிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. 'இந்திய கொரோனா திரிபுக்கு எதிராக அமெரிக்க தடுப்பூசிகள்

    இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் திரிபுக்கு எதிராக அமெரிக்ககாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்துகள் வேலை செய்வதாக அமெரிக்க சுகாதார துறையின் மூத்த அதிகாரி ஆண்டனி ஃபாசி தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் மையத்தின் இயக்குநராக இருக்கும் இவர் அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகராகவும் விளங்குகிறார்.

    இந்தியாவில் கண்டறியப்பட்ட B.1.617 கொரோனா வைரஸ் திரிபு 'சர்வதேச கவலைக்குரிய திரிபு' (variant of global concern) என்று உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியுள்ளது.

    தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகள் இந்த திரிபுக்கு எதிராக பகுதி அளவோ, ஒரு வேளை முழுமையாகவோ பாதுகாப்பு அளிக்கலாம் என்று அவர் வாஷிங்டனில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

  2. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    சர்வதேச அளவிலும், இந்திய மற்றும் இலங்கை அளவிலும், தமிழ்நாட்டிலும் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகளை உங்களுக்கு இந்தப் பக்கத்தில் செய்தியாகத் தொகுத்து வழங்குகிறோம்.