தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: 71.79 சதவீத வாக்குப்பதிவு - சென்னையில் குறைந்த பட்ச வாக்குப்பதிவு

தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களிலும் புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்திலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. வாக்குச்சாவடிகளில் கமல் ஆய்வு

    கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், தெற்கு தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    கமல் ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் அவருடன் உள்ளார்.

    kamal haasan
  2. காங்கிரஸ் - நாம் தமிழர் வேட்பாளர்கள் ஒன்றாக போராட்டம்

    கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் டோக்கன் முறையில் பணம் விநியோகம் செய்வதாக குற்றம் சாட்டி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் தனது ஆதரவாளர்களோடு சாலை மறியல் போராட்டம் நடத்தினார்.

    அவரோடு அதே தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அப்துல் வகாப்பும் போராட்டத்தில் பங்கேற்றார்.

    புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

    நடிகர் கமல் ஹாசனும் இந்தத் தொகுதியில்தான் போட்டியிடுகிறார்.

    coimbatore south congress naam tamilar
    coimbatore south congress naam tamilar
  3. புதுச்சேரி - காலை 11 மணி வரை

    புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தில் காலை 11 மணி வரை 20.07 % வாக்குகள் பதிவாகியுள்ளது.

    • புதுச்சேரி - 19.92 %
    • காரைக்கால் - 20.70 %
    • மாஹே - 15.46 %
    • ஏனாம் - 24.17 %
  4. சத்யபிரத சாகு வாக்களித்தார்

    தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு நெற்குன்றத்தில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.

    tn ceo sathyapradha sahu votes
  5. வாக்களித்தார் எடப்பாடி கே. பழனிசாமி

    எடப்பாடி தொகுதியில் உள்ள தமது சொந்த ஊரான சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தமது வாக்கை பதிவு செய்தார் முதலமைச்சர் கே. பழனிசாமி.

    EPS
  6. சைக்கிளில் சென்று வாக்களித்த விஜய்

    நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் இருக்கும் வேல்ஸ் இன்டர்நேஷனல் ப்ரி ஸ்கூல் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் சென்று வாக்களித்தார்.

    வீடு திரும்பும்போது அவர் இரு சக்கர வாகனம் ஒன்றில் திரும்பிச் சென்றார்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை மறைமுகமாக சுட்டிக்காட்ட விஜய் இவ்வாறு செய்ததாக சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டுவருகின்றனர்.

    vijay in cycle
  7. கேரள மாநில நிலவரம்

    காலை 10.15 மணி வரை கேரள மாநிலத்தில் உள்ள 140 தொகுதிகளிலும் 21 % வாக்குகள் பதிவாகியுள்ளது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    கொரோனா பாதிப்பு மீண்டும் தீவிரமாக அதிகரிக்கும் அந்த மாநிலத்தில் கடும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் தேர்தல் நடக்கிறது.

  8. புதுச்சேரி வாக்குப்பதிவு நிலவரம்

    புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தில் 9.30 மணி வரை 16.42% வாக்குகள் பதிவாகியுள்ளன.

    புதுச்சேரியில் - 16.51%, காரைக்காலில் - 16.86%, மாஹேவில் - 14.85%, ஏனாமில் - 14.98% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது.

    assembly electionbs
  9. கேரளா - யார் எத்தனை இடங்களில் போட்டி?

    • கேரளாவில் உள்ள 140 தொகுதிகளில் இடதுசாரிக் கூட்டணியின் பிரதான கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 77 இடங்களிலும் , இந்திய கம்யூனிஸ்ட் 21 இடங்களிலும் போட்டியிடுகின்றன. பிற இடங்கள் சிறு கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
    • இடதுசாரிக் கட்சிகள் 11 இடங்களில் சுயேச்சை வேட்பாளர்களை ஆதரிக்கின்றன.
    • கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் காங்கிரஸ் 93 இடங்களிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 25 இடங்களிலும் களமிறங்கியுள்ளன.கேரள காங்கிரஸ் 10 இடங்களில் போட்டியிடுகிறது.
    • பாரதிய ஜனதா கட்சி கேரளாவில் 113 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணிக் கட்சியான பாரத் தர்ம ஜன சேனா 21 இடங்களில் போட்டியிடுகிறது.
  10. முதல் 2 மணி நேரத்தில் 13.8 % வாக்குப்பதிவு

    தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் சேர்த்து காலை 9 மணி வரை 13.80 % வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் 20.23 % வாக்குகளும், குறைந்தபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 9.98 % வாக்குகளும் பதிவாகியுள்ளன என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

    சென்னை மாவட்டத்தில் 10.58 % வாக்குகள் பதிவாகியுள்ளன.

  11. தமிழ்நாடு தவிர பிற மாநிலங்களில் என்ன நிலைமை?

    • இன்று அசாம் மாநிலத்தில் மூன்றாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு 40 தொகுதிகளில் நடக்கிறது. இவற்றில் 337 பேர் போட்டியிடுகின்றனர்.
    • எட்டு கட்டங்களாக தேர்தலை சந்திக்கும் மேற்கு வங்கத்தில் 31 தொகுதிகள் மூன்றாவது கட்ட வாக்குப்பதிவில் தேர்தலைச் சந்திக்கின்றன. இந்தத் தொகுதிகளில் 205 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
    • கேரளாவில் உள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் , புதுச்சேரியின் 30 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது.
    • கேரளாவில் மொத்தம் 2.74 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அனைத்து தொகுதிகளிலும் சேர்த்து 957 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
    புதுச்சேரியில் உள்ள வாக்குச் சாவடி ஒன்று
    படக்குறிப்பு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 10,04,507 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
  12. அடுத்த கட்ட திட்டம் என்ன? - கமல் ஹாசன்

    வாக்குக்கு பணம் கொடுப்பது மக்கள் வாழ்க்கைக்கும் ஜனநாயகத்துக்கு எவ்வளவு ஆபத்தானது என்று மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்குவது தங்கள் அடுத்தகட்ட நடவடிக்கையாக இருக்கும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் வாக்களித்தபின் தெரிவித்துள்ளார் என்கிறது ஏ.என்.ஐ செய்தி முகமை.

    பணம் விநியோகிக்கும் அரசியல்வாதிகள் அதை வாங்குவதாக மக்கள் மீது பழி சுமத்துகிறார்கள் என்கிறார் அவர்.

    kamal haasan Makkal needhi maiam

    பட மூலாதாரம், ani

  13. உங்கள் தொகுதியில் வேட்பாளர் யார்?

    தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான தேர்தலில் போட்டியிடும் திராவிட முன்னேற்ற கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளின் தலைமையிலான கூட்டணிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி, ஆகியவற்றின் வேட்பாளர்கள் பட்டியலை தொகுதி வாரியாகத் தொகுத்துள்ளது பிபிசி தமிழ்.

  14. வாக்களித்தார் மு.க. ஸ்டாலின்

    மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு அதிகம் நடப்பதாக தகவல்கள் வருகின்றன. இது ஆளும்கட்சிக்கு எதிரான வாக்கு என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்களித்தபின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  15. பிரபலங்கள் வாக்களிக்கும் படங்கள்

    tamil nadu polling
    kamal hassan

    பட மூலாதாரம், bbc

  16. வாக்களிப்பது எப்படி?, வாக்குச்சாவடியில் என்ன நடைமுறைகள்?

    கோடிக் கணக்கானோர் தங்களின் வாக்குகளை பதிவு செய்ய தயாராகி வருகின்றனர்.

    அவ்வாறு தயாராகி வருவோரில் நீங்களும் இருந்தால், நீங்கள் சில தகவல்களை அறிய வேண்டும்.

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பது எப்படி?

    பட மூலாதாரம், Getty Images

  17. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். சட்டப்பேரவைத் தேர்தல் செய்திகள் பற்றிய சிறப்பு நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    பிபிசி டெல்லி அலுவலகத்தில் இருந்து சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு குறித்த செய்திகளை உங்களுக்காகத் தொகுத்து வழங்குவது விக்னேஷ்.

    சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு குறித்த உடனடி செய்திகளுக்கு இந்தப் பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.

    சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு