நிவர் புயல் - அச்சுறுத்தல் நீங்கியது : பிபிசி நேரலை பக்கம் நிறைவு
கடந்த ஐந்து நாட்களாக நிவர் புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரிக்கு நீடித்து வந்த அச்சுறுத்தல், அது வலுவிழந்து முழுமையாக கரையை கடந்ததன் மூலம் நீங்கியிருக்கிறது.
எனினும், புயல் கரையை கடந்த போதும் அதன் பிறகும் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்யும் பணியை தமிழக அரசும் புதுச்சேரி அரசும் முடுக்கி விட்டிருக்கின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக புதன்கிழமை காலை முதல் வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிவரை "பிபிசி தமிழ்" சிறப்பு நேரலை பக்கத்தில் பல்வேறு தகவல்களை வழங்கி வந்தது.
இத்துடன் இந்த நேரலை பக்கத்தை நிறைவு செய்கிறோம்.
இந்த பக்கத்தில் இணைந்திருந்ததற்காக நன்றி.







