திறக்கப்பட்ட மதுக்கடைகள் - வரிசையில் காத்திருந்த மக்கள்
இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட முடக்கநிலை மேலும் இரண்டு வாரங்களுக்கு (மே 17 வரை) நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சில நகரங்களில் மதுக்கடைகள் இன்று முதல் திறக்கப்பட்டு சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகின்றன.
மும்பையில் ஹாட்ஸ்பாட்களாக அடையாளம் காணப்பட்ட மண்டலங்களை தவிர மற்ற இடங்களில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ள சூழலில், வரிசையில் நின்று மக்கள் மது பானங்களை வாங்கி செல்கின்றனர்.
அதேபோல், டெல்லியில் திறக்கப்பட்டுள்ள மதுக்கடைகளில் சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுவதாக டெல்லி கிழக்கு மண்டலத்தின் போலீஸ் இணை ஆணையரான அலோக் குமார் தெரிவித்துள்ளார்.
அதேபோல் அசாமிலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, மதுக்கடைகள் மற்றும் இனிப்பு கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு











