You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ISWOTY: பிபிசி-யின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது பெற்றார் P V Sindhu
பிபிசியின் 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த இந்திய வீராங்கனை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர் யார் என்பது சர்வதேச மகளிர் தினமான இன்று அறிவிக்கப்பட உள்ளது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
Iswoty நிகழ்வுக்கு வருகை தந்தார் சசி தரூர்
பிபிசியின் 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனையை அறிவிக்கும் விழாவில் காங்கிரஸ் கட்சியின் எம்பி சசி தரூர் பிபிசியின் Director General டோனி ஹாலுடன்
இசை நிகவுடன் தொடங்கியது நிகழ்வு
நம்பிக்கை தரும் பி.டி. உஷாவின் வாழ்க்கை
"ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் எனது லட்சியத்திற்கான காரணமென்ன என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்டார். ஆனால், அதற்காக மட்டும்தான் நான் ஒவ்வொரு நாளும் எனது வாழ்க்கை முழுவதும் உழைத்தேன்!" - பி.டி. உஷா
விரிவாகப் படிக்க:
இன்னும் சில நிமிடங்களில்
பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை யார் என்ற தகவலை அறிந்துகொள்ள
Sports Personality of the Year, வெல்லப் போவது யார்? மகளிர் தினத்தில் டெல்லியில் விழா
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருந்த பிபிசியின் 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருதை பெறப்போவது யார் என்ற கேள்விக்கான பதில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிடைத்துவிடும்.
ஓர் ஆண்டுக்கான சிறந்த இந்திய வீராங்கனை விருது வழங்கும் விழாவை இந்தியாவில் முதல்முறையாக நடத்துகிறது பிபிசி.
தூத்தி சந்த், மானசி ஜோஷி, மேரி கோம், பி.வி. சிந்து, வினேஷ் போகாட் ஆகியோரே இந்த விருதுக்குரிய இறுதிச் சுற்று போட்டியாளர்கள்.
இன்று மாலை, புது டெல்லியிலுள்ள தாஜ் பேலஸ் விடுதியில் நடைபெறும் விழாவில் வெற்றியாளர் அறிவிக்கப்படுகிறார்.