You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

தேர்தல் முடிவுகள்: மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கும் பாஜக, ஹரியாணாவில் இழுபறி

இந்தியாவின் மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கு அக்டோபர் 21 அன்று நடந்த தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியாகின்றன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. தமிழக சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், விக்கிரவாண்டி தொகுதி

    அதிமுக - 33,401 வாக்குகள்

    திமுக - 20, 529 வாக்குகள்

  2. குஜராத் சட்ட மன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை

    குஜராத் சட்ட மன்ற இடைத்தேர்தலில் 3 தொகுதிகளில் காங்கிரஸூம், 2 தொகுதிகளில் பாஜகவும் முன்னிலை பெற்றுள்ளன.

  3. தமிழ்நாடு இடைத்தேர்தல் - 10.45 மணி நிலவரம், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 5வது சுற்று

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 5வது சுற்று முடிவில்,

    அதிமுக - 27,318 வாக்குகள்

    திமுக - 16,963

    நாம் தமிழர் - 696

  4. ஹரியாணா முன்னிலை நிலவரம்

    காலை 9.30 மணி நிலவரப்படி ஹரியாணாவில் பாஜக 49 இடங்களிலும், காங்கிரஸ் 25 இடங்களிலும், பிற கட்சிகள் 15 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

  5. மகாராஷ்டிரா முன்னிலை நிலவரம்

    காலை 9.30 மணி நிலவரப்படி மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி 179 இடங்களிலும், காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 85 இடங்களிலும், பிற கட்சிகள் ஒன்பது இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

  6. நாங்குநேரி விக்கிரவாண்டியில் அதிமுக முன்னிலை

    தமிழகத்தில் இடைத் தேர்தலை சந்தித்த நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் காலை 9.00 மணி நிலவரப்படி அதிமுக முன்னிலை வகிக்கிறது.

  7. புதுவை இடைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

    இடைத்தேர்தலை சந்தித்த புதுச்சேரி காமராஜ்நகர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பளார் ஜான்குமார் 7171 வாக்குகள் வித்தியாசத்தில் என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை வென்றுள்ளார்.

  8. பாரதிய ஜனதா கட்சி கூட்டணி முன்னிலை

    ஆரம்பகட்டமாக வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில் இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணியைவிட பாரதிய ஜனதா கட்சி கூட்டணி முன்னிலையில் உள்ளது.

  9. கொண்டாட்டத்துக்கு ஆயத்தம்

    கருத்து கணிப்பு முடிவுகள் தங்களுக்கு சாதகமாக உள்ளதால், மும்பையில் உள்ள பாஜகவின் மகாராஷ்டிர மாநில தலைமை அலுவலகம் கொண்டாட்டத்துக்கு ஆயத்தமாக்கப்பட்டுள்ளது.

  10. மகாராஷ்டிரா, ஹரியாணா தேர்தல் முடிவுகள், ஒரே கட்டமாக நடந்த வாக்குப்பதிவு

    மகாராஷ்டிரா, ஹரியாணா மாநிலங்களின் சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று அக்டோபர் 21 அன்று ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது.

    மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளிலும், ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்தது.

    இந்த இரண்டு மாநிலங்களிலும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ளது. வாக்கு எண்ணிக்கை காலை எட்டு மணிக்குத் தொடங்குகிறது.

    காலை 11 மணியளவில் முன்னிலை நிலவரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கான 17வது பொதுத் தேர்தல் நடந்து முடிந்த பின் சட்டமன்றங்களுக்கு நடக்கும் முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.