காமன்வெல் 2022: தங்கம் வென்ற பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் - பதக்கம் குவிக்கும் இந்திய வீரர்கள்

காமன்வெல்த் போட்டியின் எட்டாம் நாளான வெள்ளிக்கிழமை இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகிறார்கள். மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர். மற்ற வீரர்களும் பதக்கங்களை குவித்து வருகிறார்கள். வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மூ, பிரதமர் நரேந்திர மோதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. வந்துகொண்டிருக்கும் செய்தி, இந்தியாவில் ஜனநாயகம் இல்லாத நிலை - ராகுல் காந்தி

    இந்தியாவில் ஜனநாயகம் என்பதே இல்லாத சூழ்நிலை நிலவுவதாகவும், சர்வதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் தாக்கப்படுகின்றனர் என்றும் டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  2. வணக்கம் நேயர்களே!

    நான் எம். ஆர். ஷோபனா. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.

    • திருவரங்கத்தில் உள்ள தந்தை பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென பேசிய சினிமா ஸ்டண்ட் மாஸ்டரும் இந்து முன்னணியின் கலை இலக்கிய மாநிலச் செயலாளருமான கனல் கண்ணன் மீது சென்னை சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
    • வைகை அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • அமெரிக்காவின் மூத்த அரசியல்வாதியும் நாடாளுமன்ற சபாநாயகருமான நான்சி பெலோசி தைவானுக்கு சென்றுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தைவானின் கிழக்கு கடற்கரையை நோக்கி சீனா ஏவுகணை வீசியுள்ளதாகவும், அது இலக்கை துல்லியமாக தாக்கியதாகவும் சீன அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.
    • முன்னறிவிப்பின்றி அணைகளில் அதிக நீர் திறப்பு கூடாது என, முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
    • தங்கள் வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்ற வேண்டுமென ஓ. பன்னீர்செல்வம் கோரியது நீதித்துறையைக் களங்கப்படும் கீழ்த்தரமான செயல் என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
    • "நரேந்திர மோதியைக் கண்டு எனக்கு பயமில்லை. என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள்" - காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேச்சு
    • உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி உதய் உமேஷ் லலித்தின் (யு.யு.லலித்) பெயரை தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா பரிந்துரைத்துள்ளார்.
    • சினிமா ஃபைனான்சியரான 'கோபுரம் பிலிம்ஸ்' அன்புச் செழியன் தொடர்பான சுமார் 40 இடங்களில் மூன்று தினங்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்தது.