செஸ் ஒலிம்பியாட் போட்டி: முதல் சுற்றில் பெற்ற இந்திய அணி வீரர்
தமிழ்நாட்டில் நடைபெறும் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் நிகழ்வுக்கான செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய பி அணியில் விளையாடிய வீரர் ரோனக் சத்வானி முதல் சுற்றில் ஐக்கிய அமீரா வீரா அப்துல் ரகுமானை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
க. சுபகுணம்
புல்வாரி ஷெரீப் பயங்கரவாத சதி வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு
பிகாரின் புல்வாரி ஷெரீப் பயங்கரவாத சதி வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு இரண்டு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளதுனர். முதல் தகவல் அறிகையில் 26 சந்தேக நபர்கள் மீதும் இரண்டவாது தகவல் அறிக்கையில் ஒருவர் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
குஜராத்தில் கள்ளச்சாரயத்திற்கு 42 பேர் பலி - நடந்தது என்ன?
தமிழக மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது வைகோ குற்றச்சாட்டு
கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை பாதுகாக்கும் கடமையை மத்திய அரசு தவறிவிட்டது என வைகோ குற்றம் சாட்டினார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள பாம்பனில் மதிமுக கட்சி பிரமுகரின் திருமண விழாவில் கலந்து கொண்ட ம.தி.மு.க. பொது செயலாளர், வைகோ மணமக்களை வாழ்த்தி மேடையில் பேசினார்.
அப்போது பேசிய அவர் இலங்கை இறுதிக்கட்ட போரில் பல நாடுகளின் உதவியால் மட்டுமே விடுதலை புலிகளை இலங்கை ராணுவத்தால் வெற்றி பெற முடிந்தது. இலங்கை இறுதி கட்ட போரின் போது தமிழ் மக்களை கொன்று குவித்த ராஜபக்ஷ குடும்பத்தினர் இப்போது உயிருக்கு பயந்து பல நாடுகளில் தஞ்சம் கோரி வருகின்றனர். சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ள கோட்டபய இந்தியாவிற்கு வர முயற்சி செய்வதாகவும் தெரிய வருகிறது.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை வெற்றி பெற்றதாக சிங்கள அரசு குறிப்பாக ராஜபக்ஷ கொண்டாடியபோது எனக்கு தெரியும்; இன்னும் சில ஆண்டுகளில் ராஜபக்ஷ குடும்பம் உயிரை காப்பாற்றி கொள்ள இலங்கையை விட்டு தப்பி செல்வார்கள் என நான் அன்று சொன்னது இன்று நடந்துள்ளது என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ, கடந்த ஜுலை மாதத்தில் மட்டும் தொடர்ந்து மூன்று முறை 30க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதை தடுக்க வேண்டிய மத்திய அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. மீனவர்களை பாதுகாக்கும் கடமை மத்திய அரசிடம் உள்ளது ஆனால் அதனை மத்திய அரசு தவறவிட்டுள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு வாய்ப்பு இல்லாமல் உள்ளது.எனவே மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
"விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு பிரச்னைகளை பாஜக திசை திருப்பு நினைக்கிறது"
"விலைவாசி உயர்வு மற்றும் வேலை வாய்ப்பு ஆகிய பிரச்னைகளைத் திசை திருப்ப பாஜக நினைக்கிறது. அதனால் தான் இந்த நாடகங்களை நடத்துகிறார்கள்.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதிர் ரஞ்சன், ஏற்கெனவே வாய்தவறிப் பேசியதாகக் கூறியபோதும் அவர்கள் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டுமென்கிறார்கள். சோனியா காந்தியை முடக்கப் பார்க்கிறார்கள்," என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கேசி வேணுகோபால் ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
இலங்கையைப் போலவே அடுத்த பொருளாதார நெருக்கடியில் சிக்கவுள்ள நாடுகள்
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்
YouTube பதிவின் முடிவு
நாடாளுமன்ற அவைகள் திங்கள் கிழமைக்கு ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தில்
ஏற்பட்ட அமளியால், மக்களவை மற்றும் மாநிலங்களவை திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை இரண்டு அவைகளும்
தொடங்கியவுடன், பல விஷயங்களில் சலசலப்பு தொடங்கியது. முன்னதாக அவை நடவடிக்கைகள் 12 மணி வரை
ஒத்தி வைக்கப்பட்டது. 12 மணிக்கு அவை தொடங்கியபோதும் மீண்டும் அமளி நிலவியதால்,
திங்கள் கிழமை காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: பள்ளி தாளாளர் உட்பட 5 பேர் ஜாமீன் மனு நிராகரிப்பு
கள்ளக்குறிச்சி
தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமீன் மனுவை நீதிபதி நிராகரித்துள்ளார். மேலும் சிபிசிஐடி பதிவு செய்யும் முதல் தகவல் அறிக்கையைக் கொண்டு
ஜாமீன் மனு தாக்கல் செய்யவும் ஜாமீன்
மனு தொடர்பாக சிபிசிஐடி விளக்கம் அளிக்குமாறும் விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தி உத்தரவிட்டு
வழக்கை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குத்
தள்ளி வைத்தார்.
கள்ளக்குறிச்சி
மாவட்டம் சின்னசேலம் கணியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் மரணித்தது
தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர்
சாந்தி,
பள்ளி முதல்வர்
சிவசங்கரன், வேதியியல்
ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை
கீர்த்திகா ஆகியோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் 15 நாள்கள் நீதிமன்ற காவலில்
அடைக்கப்பட்டனர். இதனிடையே இவ்வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, மாணவி
மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில்
கைது செய்யப்பட்ட 5 பேரையும் சிபிசிஐடி போலீசார் மூன்று நாள் காவலில் எடுத்து விசாரணை செய்ய விழுப்புரம்
நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி புஷ்பராணி
முன்னிலையில் கடந்த 27ஆம் தேதியன்று
விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது சேலம் மத்திய சிறையிலிருந்த ஐந்து பேரும்
விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அன்றைய தினம் சிபிசிஐடியால் கைது செய்யப்பட்ட 5 பேரை காவலில் விசாரணை செய்ய அனுமதி அளித்திருந்தது. அதேவேளையில் கைது செய்யப்பட்டவர்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டுமென பள்ளி நிர்வாகம் தரப்பில் முன் வைத்த ஜாமீன் மனுவை நீதிபதி நிராகரித்தார்.
இந்நிலையில் அந்த மனுவின் மீதான விசாரணை இன்று விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, “சின்னசேலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் நகலைக் கொண்டு ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அந்த மனுவை ஏற்க முடியாது,” என்று கூறிய நீதிபதி சாந்தி,வழக்கு சிபிசிஐடி வசம் சென்றுவிட்டதால் சிபிசிஐடி பதிவு செய்யும் முதல் தகவல் அறிக்கையைக் கொண்டு ஜாமீன் மனு தாக்கல் செய்யுமாறு பள்ளி தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினார்.
மேலும் வருகின்ற ஆகஸ்ட் 1ஆம் தேதி ஜாமீன் மனு மீதான விசாரணை எடுத்துக் கொள்ளப்படும் எனவும் ஜாமீன் மனு தொடர்பாக சிபிசிஐடி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டார்.
பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 4 பேருக்கு ராமச்சந்திரன் என்ற வழக்கறிஞர், பள்ளி முதல்வர் சிவசங்கரனுக்கு மட்டும் சீனிவாசன் என்ற வழக்கறிஞர் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை
காவல் நிலையத்தில் சக போலீசின் செல்போனை திருடிய 2 போலீசார் இடைநீக்கம்
"இந்தியாவின் இளைஞர்களை உலகம் நம்பிக்கையுடன் பார்க்கிறது" - பிரதமர் மோதி
சென்னையில்
இன்று நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது
பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர்
மு.க.ஸ்டாலின், மத்திய
அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில்
உரையாற்றிய பிரதமர், பட்டம் பெற்ற
மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். “அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் இன்று
பட்டம் பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள். உங்கள் மனதில் உங்களுக்கான எதிர்காலத்தை
நீங்கள் ஏற்கெனவே கட்டியெழுப்பியிருப்பீர்கள். எனவே, இன்றைய நாள் சாதனைகளின் நாள் மட்டுமல்ல, லட்சியங்களின் நாளாகும்,”என்றார். அவர்களை நாளைய தலைவர்கள்
என்று அழைத்த பிரதமர், பெற்றோர்களின்
தியாகம் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின்
ஆதரவையும் குறிப்பிட்டார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
மேலும், “இந்தியாவின் இளைஞர்களை உலகம் முழுவதும் நம்பிக்கையுடன் பார்க்கிறது. ஏனென்றால் நீங்கள் நாட்டின் வளர்ச்சி இயந்திரங்கள் மற்றும் இந்தியா உலகின் வளர்ச்சி இயந்திரம்," என்றவர், அண்ணா பல்கலைக்கழகத்துடன் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் தொடர்பை நினைவு கூர்ந்து, "அவரது எண்ணங்களும் மதிப்புகளும் எப்போதும் உங்களை ஊக்குவிக்கட்டும்," என்று கூறினார்.
கோவிட்-19 தொற்றுநோய் ஓர் எதிர்பாராத நிகழ்வு என்று குறிப்பிட்ட பிரதமர், “இது நூற்றாண்டில் ஒருமுறை ஏற்பட்ட நெருக்கடி, அதற்கான பயனர் கையேடு யாரிடமும் இல்லை. இது அனைத்து நாடுகளையும் சோதித்தது. துன்பங்கள் நாம் எதனால் உருவாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை வெளிப்படுத்துகின்றன,” என்று அவர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில், தங்கப்பதக்கம் வென்ற 69 பேருக்கு தங்கப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை பிரதமர் வழங்கினார்.
நாகர்கோவில்: குரங்கம்மை நோய் அறிகுறியுடன் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதி
குரங்கம்மை
நோய் அறிகுறியுடன் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தந்தை, மகன், மகள் உட்பட நான்கு பேர் நாகர்கோவில்
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குரங்கம்மை
நோய் நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் இது பரவுவதைத் தடுக்க நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவில்
கேரளாவில் சேர்ந்த மூன்று பேருக்கும் டெல்லியை சேர்ந்த ஒருவருக்கும் குரங்கம்மை
நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையில்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை வில்லுக்குறியைச் சேர்ந்த நான்கு பேர் குரங்கம்மை
நோய் அறிகுறியுடன் இருப்பது தெரியவந்தது.
இதில் தந்தை, மகன், மகள் உட்பட
நான்கு பேர் குரங்கம்மை நோய் அறிகுறியுடன் இருப்பதைத் தொடர்ந்து அவர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு குரங்கம்மை நோய் உள்ளதைக் கண்டறிய புனேவில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி மையத்திற்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதைத் தொடர்ந்து அவர்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள். குரங்கம்மை நோய் ஏற்படுவதற்கு வெளித் தொடர்பு எதுவும் அவர்களுக்கு இல்லாத நிலையில், இதற்கான அறிகுறி குறித்தும் மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
புனேவுக்கு சென்றுள்ள இவர்களுடைய ரத்த மாதிரிகளின் பரிசோதனை முடிவுள் வந்தால் தான் அவர்களுக்கு நோய் பாதிப்பு உள்ளதா என்பது உறுதி செய்யப்படும் என்று மருத்துவர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.
திரௌபதி முர்மூவுக்கு ராணி வேலுநாச்சியார் படத்தை பரிசளித்த எம்.பி ரவீந்திரநாத்
புதிதாகப் பதவியேற்ற இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மூவை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத், அவருக்கு ராணி வேலுநாச்சியார் படத்தை நினைவுப் பரிசாக வழங்கினார்.அதிமுகவில் சமீபத்தில் நடந்த மோதலை அடுத்து ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்கிய எடப்பாடி பழனிசாமி அணி, அவரது மகனான ரவீந்திர நாத்தையும் கட்சியை விட்டு நீக்கியது. அதிமுகவுக்கு மக்களவையில் இருந்த ஒரே எம்.பி. அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கோடிக்கணக்கில் பணம், நகை: மே.வங்க முன்னாள் அமைச்சரை கட்சியை விட்டு நீக்கிய மம்தா
பட மூலாதாரம், Sanjay Das
நெருக்கமானோர் வீடுகளில் இருந்து 21 கோடி ரூபாய் ரொக்கம், ஐந்து கிலோ நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி திரிணமூல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் கல்வி
அமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பார்த்தா சாட்டர்ஜி, மேற்கு வங்கத்தில் பள்ளி சேவை
ஆணையம் மூலம் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து,
அவருடைய அரசியல் எதிர்காலம் குறித்த ஊகங்கள் தீவிரமடைந்துள்ளன.
பார்த்தா சாட்டர்ஜி
குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்படும் வரை அவர் கட்சியிலிருந்து நீக்குவதாக திரிணாமுல்
காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
அமலாக்கத் துறை மேற்கொண்ட ரெய்டில், அவருடன் நெருக்கமாக இருந்த அர்பிதா
முகர்ஜி வீட்டிலிருந்து 21 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கம்,
ஐந்து கிலோ நகைகள் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் மீட்கப்பட்டதை அடுத்து, முன்னாள் கல்வி அமைச்சரும் தற்போதைய ஆட்சியின் தொழில்துறை அமைச்சருமான பார்த்தா சாட்டர்ஜியும் அர்பிதா மூக்கர்ஜியும்
ஜூலை 23-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொது செயலாளர்
அபிஷேக் பானர்ஜி, “பார்த்தா சாட்டர்ஜி, அவர் மீதான விசாரணை தொடரும் வரை கட்சியிலிருந்து
இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் குற்றமற்றவர் என்பது நிரூபமனமானால் மீண்டும்
சேர்த்துக்கொள்ளப்படுவார்,” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடக்கவுள்ள ‘உலக புலிகள் உச்சிமாநாடு’ – எப்போது?
தமிழ்நாட்டில்
இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில் ‘தமிழ்நாடு உலக புலிகள் உச்சி மாநாட்டை’ இந்திய அரசுடன்
இணைந்து சென்னையில் நடத்தவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரபூர்வ ட்விட்டர்
பக்கத்தில் அறிவித்துள்ளார்.
அதுகுறித்து
அவருடைய ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் மொத்த புலிகள் எண்ணிக்கையில் 10 சதவீதம், அதாவது 234 புலிகள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன.
‘தமிழ்நாடு
உலக புலிகள் உச்சிமாநாடு’ சென்னையில் தமிழ்நாடு அரசு மற்றும்
இந்திய அரசு இணைந்து அக்டோபர் 2022-இல் நடத்தவுள்ளது என்ப்[அதை அறிவிப்பதில் நான்
மகிழ்ச்சியடைகிறேன். புலிகள் பாதுகாப்பில் முன்னோடியாக இருக்கும் தமிழகத்தில் இது
நடப்பது பொருத்தமானது,” என்று தெரிவித்துள்ளார்.
கோவை: ஆபரேஷன் கந்துவட்டி 2.0-வின் கீழ் 1.26 கோடி ரூபாய் பணம் பறிமுதல்
கோயம்புத்தூர் காவல்துறை, ஆபரேஷன் கந்துவட்டி 2.0 என்ற திட்டத்தின் கீழ் முன்னெடுத்த நடவடிக்கையில் 1.26 கோடி ரூபாய் பணம் 379 நில பத்திரங்கள், 127 காசோலைகள், 54 கையெழுத்திடப்பட்ட வெற்றுப் பத்திரங்கள் ஆகியவற்றைப்
பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின்போது கந்துவட்டிக்கு
கடன் வழங்கிய ஒருவரைக் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி
முகமை கூறுகிறது.
செஸ் ஒலிம்பியாட்: போட்டியிலிருந்து வெளியேறிய பாகிஸ்தான் அணி
பட மூலாதாரம், Getty Images
மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44ஆவது செஸ்
ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் மறுத்துவிட்டது. அவர்களது அணி சென்னை
வந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் எடுத்துள்ளது.
பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா ஆச்சர்யம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவு
அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜம்மு காஷ்மீரில் இருந்து புகழ்பெற்ற சர்வதேச விளையாட்டுப் போட்டியின்
தீபத்தை ஏந்தி வந்து, இந்தியா அதை அரசியலாக்கியுள்ளது. சர்வதேச
செஸ் சம்மேளனத்திடம் இந்தப் பிரச்னையை எடுத்துக் கூறுவேன்,” என்று
கூறியுள்ளார்.
வியாழனன்று, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்
அரிந்தம் பக்சி, “செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான்
அணி ஏற்கெனவே இந்தியா வந்திருந்தாலும், அதில் பங்கேற்க வேண்டாம்
என திடீரென முடிவெடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது," என்று கூறினார்.
மேலும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை
இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்றும் இதில் பாகிஸ்தான் அரசியல் செய்வது வருத்தமளிக்கிறது
என்றும் கூறினார்.
வணக்கம் நேயர்களே!
நான் க.சுபகுணம். பிபிசி தமிழின் நேரலை பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும்
முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.