You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

செஸ் ஒலிம்பியாட் போட்டி: முதல் சுற்றில் பெற்ற இந்திய அணி வீரர்

தமிழ்நாட்டில் நடைபெறும் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் நிகழ்வுக்கான செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய பி அணியில் விளையாடிய வீரர் ரோனக் சத்வானி முதல் சுற்றில் ஐக்கிய அமீரா வீரா அப்துல் ரகுமானை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

க. சுபகுணம்

  1. மு.க.ஸ்டாலின் - நரேந்திர மோதி: சதுரங்க மேடையில் அரங்கேறிய அரசியலுக்கு என்ன பொருள்?

  2. “நேயர்களுக்கு நன்றி!”

    இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ:

    • குடியரசு தலைவர் திரெளபதி முர்மூவை தவறாக பேசியதற்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார் காங்கிரஸ் எம்.பி.
    • ஆசிய கண்டத்தில் முதல் முறையாக தங்கச்சிமடத்தில் கண்டறியப்பட்ட 'அண்டரண்ட' பறவை பற்றிய தகவலை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
    • இரான் நாட்டில், ஒரே வாரத்தில் 32 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
    • மதுரை காந்தி அருங்காட்சியகத்திற்க்கு கூடுதலான நிதியை ஒதுக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    • புல்வாரி ஷெரீப் பயங்கரவாத சதி வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளியால், மக்களவை மற்றும் மாநிலங்களவை திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
    • தமிழ்நாட்டில் இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில் ‘தமிழ்நாடு உலக புலிகள் உச்சி மாநாட்டை’ இந்திய அரசுடன் இணைந்து சென்னையில் நடத்தவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
    • தமிழ்நாட்டில் இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில் ‘தமிழ்நாடு உலக புலிகள் உச்சி மாநாட்டை’ இந்திய அரசுடன் இணைந்து சென்னையில் நடத்தவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
    • குரங்கம்மை நோய் அறிகுறியுடன் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தந்தை, மகன், மகள் உட்பட நான்கு பேர் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமீன் மனுவை நீதிபதி நிராகரித்துள்ளார்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் அறிய பிபிசி தமிழ் இணையதளம், முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இணைந்திருங்கள். நன்றி.

  3. சோனியா காந்தி Vs ஸ்மிருதி இரானி: இதுவரை நேரில் பார்க்காத கோபம் - என்ன நடந்தது?

  4. பிபிசி தமிழ் தொலைக்காட்சி இன்றைய செய்தியறிக்கை

  5. மும்பை விமான நிலையம் அருகே உள்ள 48 கட்டிடங்கள் மீது நடவடிக்கை நீதிமன்றம் உத்தரவு

    மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே நிர்ணயிக்கப்பட்ட உயரத்தை விட அதிக உயரம் கொண்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க மும்பை மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மும்பை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, விமான நிலையத்திற்கு அருகில் உள்ள 48 கட்டிடங்கள், குறிப்பிட்ட அளவை விட உயரம் அதிகம உள்ளதால் அதன் உயரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    .யஷ்வந்த் ஷெனாய் என்ற வழக்கறிஞர், மும்பை உயர் நீதிமன்றத்தில், விமான நிலையத்திற்கு அருகில் உள்ள கட்டிடங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக உள்ள கட்டிங்கள் மீது நடவடிக்கை எடுக்க தொடுத்த வழக்கில் விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

  6. செஸ் ஒலிம்பியாட் 2022: இந்தியா வெற்றி வாகை சூட நல்ல வாய்ப்பு உள்ளது - ஏன்?

  7. பிரிட்டன் பிரதமர் போட்டியில் முந்தப்போவது யார்? விரிவான காணொளி

  8. "மண்டேலா எடுத்தது மாரி செல்வராஜின் ஊரில் என்று பிறகு தான் தெரிந்தது" - மடோன் அஸ்வின்

  9. 'அண்டரண்ட' பறவை : 5,000 கி.மீ பறந்து தங்கச்சி மடத்துக்கு வந்த பின்னணி

  10. குடியரசு தலைவர் திரெளபதி முர்மூவை தவறாக பேசியதற்கு மன்னிப்பு கடிதம் எழுதிய காங்கிரஸ் எம்.பி

    குடியரசு தலைவர் திரெளபதி முர்மூவிடம் மன்னிப்பு கோரி மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் எம்.பி ரஞ்சன் செளத்ரி கடிதம் எழுதியுள்ளார். அவர் அந்த கடிதத்தில் வாா்தையை தவறி பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், இதை ஏற்றுக்கொள்ளுமாறு என குறிப்பிட்டுள்ளார்.

    குடியரசு தலைவர் திரெளபதி முர்மூவை‘ராஷ்டிரபத்னி’ விமர்சித்ததற்காக ஆதிர் ரஞ்சன் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாராளுமன்றத்தில் பாஜகவினர் அமளியில் ஈடுபட்டு வந்த நிலையில், இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என ஆதிர் ரஞ்சன் சவுத்திரி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  11. பிரிட்டன் பிரதமர் போட்டியில் இந்திய வம்சாவளி ரிஷி சூனக் பின்தங்குகிறாரா?

  12. ஆசிய கண்டத்தில் முதல் முறையாக தங்கச்சிமடத்தில் கண்டறியப்பட்ட 'அண்டரண்ட' பறவை

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடத்தில் கண்டம் விட்டு கண்டம் பறக்கும் அன்டார்டிகாவின் அரிய 'அண்டரண்ட' பறவை ஆசியாவிலேயே முதல் முறையாக மதுரை பறவைகள் கண்காணிப்பாளர் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    மதுரை இறகுகள் இயற்கை அறக்கட்டளை ஆய்வாளர் ரவீந்திரன் அண்ணாமலை பல்கலைக்கழக ஆய்வாளர் பைஜூ நடத்திய ஆய்வின் போது இந்த பறவை தங்கச்சிமடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

  13. தன்பாலின உறவில் இருந்தவரை அவரது விருப்பப்படி செல்ல அனுமதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

    விருதுநகரைச் சேர்ந்த பெண் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், எனக்கும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த ஒரு ஆண்டாக இருவரும் காதலித்து வந்த நிலையில் ஜூலை 7ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.

    அந்த பெண்ணின் குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, அப்பெண்ணை கடத்திச் சென்றுவிட்டனர். அவரை மீட்டுத் தரக்கோரி காவல்துறையினரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்நிலையில் ஆட்கொணர்வு வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு, மனுதாரரின் தோழி 21 வயது நிரம்பியவர். ஆகவே அவரது விருப்பப்படி செல்ல அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

  14. ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் காவிக் கொடியை ஏற்றிய ஏபிவிபி

    ஜெய்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செயலகத்தில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் வியாழக்கிழமையன்று காவிக்கொடியை ஏற்றியது.

    பல்கலைக்கழக நிர்வாகத்தினுடைய புகாரின்பேரில், அரசுப் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாக கொடியேற்றியவர்கள் மீது காந்தி நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    காந்தி நகர் காவல் நிலையத் தரப்பிலிருந்து பேசிய நெமி சந்த் பிபிசியிடம், “பல்கலைக்கழக நிர்வாகத்தினுடைய புகாரின் பேரில், அரசுப் பணியைத் தடுத்ததாக ஏபிவிபி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. படங்களில் கொடி காவி நிறத்தில் உள்ளது. நாங்கள் விசாரித்து வருகிறோம்,” என்றார்.

    இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் எதிர்ப்பு

    இந்நிலையில், இந்திய தேசிய மாணவர் சங்கத்தோடு தொடர்புடைய மாணவர்கள் மூவர்ணக் கொடியை ஏந்தியவாறு இன்று துணைவேந்தர் செயலகத்தை அடைந்தனர். ஏபிவிபி கொடியை ஏற்றியதற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். நிலைமையைக் கருத்தில் கொண்டு தற்போது துணைவேந்தர் செயலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ரமேஷ் பாடி பிபிசியிடம் பேசியபோது, “துணைவேந்தர் செயலகத்தில் காவிக்கொடி ஏற்றியதன் மூலம் அரசியலமைப்பை மீற ஏபிவிபி முயன்றுள்ளது. காவி இருக்கும் இடத்தில் மூவர்ணக் கொடியை ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்பதே பல்கலைக்கழக நிர்வாகத்தின் கோரிக்கை,” என்று தெரிவித்தார்.

    ஏபிவிபி சொன்னது என்ன?

    ஏபிவிபி தேசிய அமைச்சர் ஹோஷியார் மீனா பிபிசியுடன் தொலைபேசியில் பேசியபோது, “எங்கள் நியாயமான கோரிக்கைகளுடன் துணைவேந்தர் செயலகத்திற்குச் சென்றோம். ஆர்ப்பாட்டத்தின்போது, எங்கள் கைகளில் ஏபிவிபி அமைப்பின் கொடி இருந்தது. எங்கள் கொடி காவி. காவி எங்கள் பெருமை.

    கோரிக்கைகளை வலியுறுத்தி துணைவேந்தர் செயலகத்தை முற்றுகையிட்டோம், கோரிக்கைகள் நிறைவேறாத வரை மாணவர்களின் நலன் கருதி போராட்டம் தொடரும்,” என்றார்.

  15. இரான் நாட்டில், ஒரே வாரத்தில் 32 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

    இரானில் செயல்படும் மனித உரிமை குழு ஒன்று, கடந்த ஒரு வாரத்தில் அந்நாட்டில் 32 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்துள்ளது. அதில் புதன்கிழமையன்று மூன்று பெண்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் அதில் ஒரு பெண்ணுக்கு குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளது.

    சொஹேலா அப்திக்கு 15 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டது என்று கூறிய மனித உரிமை குழு, திருமணமாகி 10 ஆண்டுகள் கழித்து அவர் தன் கணவரைக் கொலை செய்ததாகக் கூறுகிறது. இவருக்கு மரண தண்டனை விதிக்கும்போது, நீதிமன்றம் இது குடும்பப் பிரச்னையைவிடப் பெரியது எனக் குறிப்பிட்டது.

    இந்த ஆண்டில் மரண தண்டனை அதிகளவில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் கூறுகிறது.

    இந்த ஆண்டில் இதுவரை நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு இருந்ததைவிட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

    மனித உரிமை அமைப்பு, மற்ற நாடுகளைவிட இரானில் அதிகளவிலான பெண்கள் தண்டிக்கப்படுவதாகவும் அதில் பெரும்பாலான பெண்கள் கணவரைக் கொன்றதற்காக தண்டிக்கப்படுவதாகவும் கூறுகிறது.

    மேலும், பெண்கள் மீதான குடும்ப வன்முறை தான் இந்தக் கொலைகளுக்குக் காரணம் என்றும் ஆனால், இரானிய நீதிமன்றம் அதில் அக்கறை செலுத்துவதில்லை என்றும் கூறுகிறது.

  16. வந்துகொண்டிருக்கும் செய்தி, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்றில் பெற்ற இந்திய அணி வீரர்

    செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி வீரர் ரோனக் சத்வானி முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.

    தமிழ்நாட்டில் நடைபெறும் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் நிகழ்வுக்கான செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய பி அணியில் விளையாடிய வீரர் ரோனக் சத்வானி முதல் சுற்றில் ஐக்கிய அமீரா வீரா அப்துல் ரகுமானை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

  17. எச்ஐவியால் 22 ஆண்டுகள் பாதிக்கப்பட்டவர் குணமடைந்தாரா? எப்படி முடிந்தது?

  18. மதுரை காந்தி அருங்காட்சியகத்திற்க்கு கூடுதலான நிதியை ஒதுக்க கோரிய வழக்கு.

    மூன்று மாதத்திற்குள் மத்திய அரசு மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.

    மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்களின் இளைய சகோதரர் வடிவேலு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தனர். அதில், "நான் காந்தியக் கொள்கையைப் பின்பற்றுபவர் மற்றும் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் நிர்வாக உறுப்பினராகவும் உள்ளேன்.

    மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் சுமார் 20 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். காந்திஜியின் சித்தாந்தங்களையும் கொள்கைகளையும் பரப்புவதும் காந்தி அருங்காட்சியகத்தைப் பராமரிப்பதும்தான் இவர்களின் முக்கிய நோக்கமாகும். இவர்களில் பெரும்பாலான ஊழியர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர்.

    மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் காந்திய சித்தாந்தத்தின் பாதுகாவலர்களாக கருதப்பட்டாலும், தங்களுக்குக் கிடைக்கும் சொற்ப சம்பளத்தால் அவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகவே ஊதியத்தை உயர்த்திக் கொடுக்க பலமுறை முறையிட்டும் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை.

    எனவே மதுரை காந்தி அருங்காட்சியகத்தின் பராமரிப்புக்காகவும் ஊழியர்களின் ஊதியத்திற்காகவும் கூடுதலான நிதியை ஒதுக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள், மூன்று மாதத்திற்குள் மத்திய அரசு மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

  19. "கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து." -தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

  20. BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்