டெல்லியில் குரங்கம்மை பாதித்தவருக்கு தொடர் சிகிச்சை - அதிகாரிகளுடன் எல்ஜி முக்கிய ஆலோசனை

மருத்துவ சேவைகள், மருத்துவமனை உள்கட்டமைப்பு, வைரஸ் பாதிப்போருடன் தொடர்பில் இருந்தவர்களின் அடையாளத்தை பின் தொடருதல், கண்காணிப்பு மற்றும் மருத்துவ வசதிகளை தயார்நிலை வைத்திருக்கும்படி அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் வினய் கே. சக்சேனா அறிவுறுத்தியுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

பிரசாந்த் முத்துராமன்

  1. பணியில் இல்லாத டாக்டருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் - மாநகராட்சி மேயர் நடவடிக்கை

    பணியில் இல்லாத டாக்டருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் - மாநகராட்சி மேயர் நடவடிக்கை

    தஞ்சாவூர் மாநகராட்சியில் 'நம்ம வார்டு நம்ம மேயர்' என்ற திட்டத்தின் படி மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் ஆய்வு செய்து வருகிறார்

    இதையடுத்து மாநகராட்சிக்கு உட்பட்ட 31 வது வார்டு மகர் நோன்பு சாவடி பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார்.

    அப்போது அங்கு பணிபுரியும் டாக்டர் பணியில் இல்லாதது மற்றும்அங்கு பணிபுரிபவர்களும் குறைவாகவே வந்துள்ளது தெரியவந்தது.

    இதையடுத்து மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் வருகை பதிவேட்டில் வருகை தராதவர்களுக்கு ஆப்சென்ட் போட்டு பணியில் இல்லாத காரணத்தால் மருத்துவர் உள்ளிட்டோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

  2. நேப்பியர் பிரிட்ஜ் போல மயிலாடுதுறையில் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பாலம்

    நேப்பியர் பிரிட்ஜ் போல மயிலாடுதுறையில் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பாலம்

    "நேப்பியர் பிரிட்ஜ்" போன்றுசெஸ் ஆர்வலர்களின் முயற்சியால் மயிலாடுதுறையில் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பாலம் தயாராகி வருகிறது.

    சர்வதேச 44-ஆவது ஒலிம்பியாட் செஸ் விளையாட்டு போட்டிகள் மாமல்லபுரத்தில் வருகின்ற 28-ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    இதையொட்டி தமிழகத்தில் செஸ் போட்டி குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    நேப்பியர் பிரிட்ஜ் போல மயிலாடுதுறையில் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பாலம்

    சென்னையின் பிரதான பகுதியில் அமைந்துள்ள நேப்பியர் பாலம் செஸ் போர்டு கட்டங்களைப் போன்று கருப்பு வெள்ளை நிறத்தில் வர்ணம் தீட்டப்பட்டது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

    அதேபோல் மயிலாடுதுறையில் செஸ் ஆர்வலர்களின் முயற்சியால் மருத்துவமனை சாலையில் உள்ள காவிரி ஆற்றுப்பாலம்"நேப்பியர் பிரிட்ஜ்" போன்று கருப்பு, வெள்ளை வண்ணம் தீட்டப்பட்டு வருகிறது.

    நேப்பியர் பிரிட்ஜ் போல மயிலாடுதுறையில் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பாலம்
  3. திருவள்ளூர் பள்ளி மாணவி சந்தேக மரணம்: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

  4. வந்துகொண்டிருக்கும் செய்தி, மக்களவை மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் 4 காங்கிரஸ் எம்.பிக்கள் இடைநீக்கம்

    மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

    பட மூலாதாரம், SANSAD LOK SABHA

    மக்களவையில் விதிகளை மீறி செயல்பட்டதாகக் கூறி தமிழ்நாட்டின் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், கரூர் எம்.பி ஜோதிமணி உள்பட நான்கு காங்கிரஸ் எம்.பி.க்களை நடப்பு மழைக்கால கூட்டத்தொடரின் மீதமுள்ள நாட்களுக்கு இடைநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளார் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா.

    குடியரசு தலைவர் பதவியேற்பு விழா முடிவடைந்த பிறகு மக்களவை அலுவல் பிற்பகல் 2 மணிக்கு சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லா தலைமையில் கூடியது. அப்போது காங்கிரஸ் எம்பிக்கள், விலைவாசி உயர்வுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறு அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர்.

    அத்தகைய பேனர்களையோ பதாகைகளையோ ஏந்தியபடி யாரும் அவையில் ்கூச்சலிட்டு அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கக் கூடாது என்று சபாநாயகர் எச்சரித்தார். ஆனால், தொடர்ந்து எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, விலைவாசி உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டுமென்றால் அவைக்கு வெளியே பிளக்ஸ் பேனர்களை பிடித்துக்கொண்டு செயல்படுங்கள். அவைக்கு உள்ளே அப்படி நடக்க அனுமதியில்லை என்று எச்சரித்த சபாநாயகர் பிறகு அவர்களை கூட்டத்தொடரின் மீதமுள்ள நாட்களுக்கு இடைநீக்கம் செய்வதாக அறிவித்தார்.

    காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் மற்றும் டிஎன் பிரதாபன் ஆகியோர் இடைநீக்க நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர்.

  5. கோடிக்கரையில் கரை ஒதுங்கிய போலந்து நாட்டு இளைஞர்

    கோடிக்கரையில் கரை ஒதுங்கிய போலந்து நாட்டு இளைஞர்

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடிக்கரை காட்டுயிர் சரணாலயத்தை ஒட்டியுள்ள முனைக்காடு கடற்கரையில் நேற்று காலை ஆளில்லாத ரப்பர் படகு ஒன்று கரை ஒதுங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் நாகை, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தஞ்சைசரக டிஐஜி உள்ளிட்டோர் படகைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    படகில் யாரேனும் வந்தார்களா என்பது குறித்து மோப்பநாய் கொண்டு தடயங்களை வைத்து தேடும் பணி நடைபெற்றது. மேலும் டிரோன் பயன்படுத்தி காட்டுப்பகுதியல் யாரனும் பதுங்கியுள்ளனரா என்றும் கண்காணிக்கப்பட்டது.

    கோடிக்கரையில் கரை ஒதுங்கிய போலந்து நாட்டு இளைஞர்

    இதனிடையே இன்று அதிகாலை வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டு துறை பகுதியில் ஒருவர் சந்தேகத்திற்குரிய முறையில் நடமாடியதாக அப்பகுத மீனவ மக்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் அந்த நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர் .

    விசாரணையில் அவர் போலந்து நாட்டைச் சேர்ந்த வாடட்ஸ்மே என்பதும்,2019 ஆண்டு சுற்றுலாவுக்காகஇலங்கை சென்றபோது மதுக்கூடத்தில் (பார்) ஏற்பட்ட தகராறில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் சமீபத்தில் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

    மேலும் இவர் இந்தியா வழியாக போலி பாஸ்போர்ட் மூலம் போலந்து நாட்டிற்கு தப்பிச் செல்வதற்காக ஒரு துடுப்பு படகை விலைக்கு வாங்கி தமிழகம் வந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இவர் மீது பாஸ்போர்ட் இல்லாமல் இந்திய எல்லைக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோடிக்கரையில் கரை ஒதுங்கிய போலந்து நாட்டு இளைஞர்
  6. “கே.என்.நேருவுக்கு யார் பணத்தில் ரூ.5 கோடி கார் வந்தது?” – அதிமுகவைச் சேர்ந்த ப.குமார் கேள்வி

    மின் கட்டண உயர்வை எதிர்த்து அதிமுகவினர் திருச்சியில் போராட்டம்

    கே.என்.நேருவின் கல்லூரிக்கு கடன்பாக்கி காரணமாக ஜப்தி நோட்டீஸ் அனுப்பிய நிலையில், யார் பணத்தில் ரூ. 5 கோடிக்கு கார் வந்தது என்று ப.குமார் கேள்வியெழுப்பியுள்ளார்.

    தமிழகத்தில் மின் கட்டண உயர்வு மற்றும் தி.மு.க. அரசை கண்டித்து திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க.சார்பில் மணப்பாறை பெரியார் சிலை அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ப.குமார் பேசும்போது, “மின் வாரியத்தை சீர்திருத்தம் செய்யுங்கள் என மத்திய அரசு கூறியதற்கு ஏற்ப மின் உற்பத்தி நிலையங்களை மேம்படுத்தாமல், மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது விடியா தி.மு.க. அரசு. அடுத்த ஆட்சி அ.தி.மு.க. தான். நாடாளுமன்ற தேர்தலிலேயே மக்கள் தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.

    மின் கட்டண உயர்வை எதிர்த்து அதிமுகவினர் திருச்சியில் போராட்டம்

    அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இறக்குமதியாக உள்ள, விலையே நிர்ணயம் செய்யாத, 5 கோடி ரூபாய் சொகுசு காரில் அமைச்சர் கே.ன்.நேரு செல்கிறார். அவரது கல்லூரிக்கு கடன்பாக்கி காரணமாக ஜப்தி நோட்டீஸ் அனுப்பிய நிலையில், யார் பணத்தில் ரூ.5 கோடிக்கு கார் வந்தது.

    திருச்சி பஞ்சப்பூரில் புதிய பேருந்துநிலையம், திருச்சி மாநகராட்சியின் ரூ.50 கோடி மக்கள் வரி பணத்தில் ரூ.20 கோடிக்கு கிராவல் மண் நிரப்புவதாக டெண்டர் விடப்பட்டதை மறைத்து, திருச்சி குளங்களில் இருந்து எடுக்கப்படும் வண்டல் மண்ணைக் கொண்டு புதிய பேருந்து நிலையம் கட்ட அடித்தளத்திற்கான மண் நிரப்பப்படுகிறது.

    கே.என்.நேருவின் இடங்கள், சொத்துக்கள் புதிய பேருந்துநிலையம் அமையவுள்ள இடத்தைச் சுற்றியுள்ளது. இவை அதிக விலைபோகும் என்ற கணக்கில் பாதுகாப்பில்லாத பேருந்து நிலையத்தைக் கொண்டுவரப் பார்க்கிறார். அவரது சுயநலத்திற்கு திருச்சி மாவட்ட ஆட்சியரும்மாநகராட்சி ஆணையரும் உடந்தையாகதுணைபோகக் கூடாது,” எனப் பேசினார்.

    அதேபோல் முன்னாள் அமைச்சரும்மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் கரூர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மின் கட்டண உயர்வை எதிர்த்து அதிமுகவினர் திருச்சியில் போராட்டம்

    பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். கையில் அரிக்கேன் விளக்கை ஏந்தியும்இனி இதன் விற்பனை சூடு பிடிக்கும் எனக் கூறியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், “மின் கட்டண உயர்வை நியாப்படுத்தி வருகிறார்கள். மின் உயர்வுக்கு மத்திய அரசு மீது பழியைப் போடுகிறார்கள்.

    ஆட்சிக்கு வந்த பிறகு சொத்து வரி, மின் கட்டண உயர்வைத் தொடர்ந்து அடுத்ததாக விரைவில் பேருந்து கட்டணமும் உயரும். நிச்சயமாக அடுத்தது பேருந்து கட்டணம் உயரும்,” என்றார்.

    மேலும், “நம்ம ஊர் அமைச்சர் மின் கட்டணத்தை உயர்த்தி விட்டார். அடுத்து ஸ்மார்ட் மீட்டர் பொறுத்துகிறோம் எனச் சொல்லி கொள்ளையில் ஈடுபடுவார். பொய்யை மட்டுமே எழுதிய கலைஞரின் பேனாவிற்கு கடலில் சிலை வைக்க வேண்டுமா?,” என்றார்.

    மின் கட்டண உயர்வை எதிர்த்து அதிமுகவினர் திருச்சியில் போராட்டம்
  7. ராஷ்டிரபதி பவன் ட்விட்டர் பக்கத்தில் திரெளபதி முர்மூ படம் பதிவேற்றம்

    இந்திய குடியரசு தலைவராக திரெளபதி முர்மூ பதிவியேற்ற சில நிமிடங்களில் ராஷ்டிரபதி பவனின் அலுவல்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ராம்நாத் கோவிந்துக்கு பதிலாக திரெளபதி முர்மூவின் படம் பதிவேற்றப்பட்டிருக்கிறது.

    குடியரசு தலைவர் ராஷ்டிரபதி பவன்

    பட மூலாதாரம்,

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்பு விழா முடிந்தவுடன் குதிரைப்படை மெய்க்காப்பாளர்கள் புடை சூழ குடியரசு தலைவர் மாளிகைக்குச் சென்ற முர்மூவை முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வரவேற்றார்.

    குடியரசு மாளிகை வளாகத்தில் திரெளபதி முர்மூவுக்கு முப்படையினர் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் திரெளபதி முர்மூவை அழைத்துக் கொண்டு குடியரசு தலைவர் மாளிகை முழுவதும் ராம்நாத் கோவிந்த் சுற்றி்க் காண்பித்தார். இதைத்தொடர்ந்து முர்மூவுடன் சில நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்.

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

    இதையடுத்து ராம்நாத் கோவிந்துக்கு முப்படையினரும் குடியரசு தலைவர் மாளிகையில் வழியனுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. அவருக்கு டெல்லி ஜன்பத் சாலையில் தனி பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது.

    சம்பிரதாய நடைமுறைப்படி பதவிக்காலத்தை நிறைவு செய்த குடியரசு தலைவரை குதிரைப்படை மெய்க்காப்பாளர்கள் அவருக்கு ஒதுக்கப்பட்ட புதிய குடியிருப்புக்கு சென்று விட்டு, விட்டு வருவார்கள். அதன்படியே ராம்நாத் கோவிந்தை குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து அழைத்து வந்து அவரது புதிய குடியிருப்பில் படையினர் விட்டு, விட்டு வந்தனர்.

  8. திரெளபதி முர்மூ பதியேற்பு விழாவில் காங்கிரஸுக்கு அவமதிப்பு - எதிர்கட்சிகள் புகார்

    திரெளபதி முர்மூ பதவியேற்பு விழாவில் மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அவருக்குரிய இருக்கை தரப்படவில்லை என்று எதிர்கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் கையெழுதிட்ட புகார் கடிதத்தை குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான வெங்கய்ய நாயுடுவிடம் அளித்துள்ளனர்.

    இது தொடர்பாக காங்கிரஸ் ஊடகப்பிரிவு பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கடிதத்தில், குடியரசு தலைவர் பதவியேற்பு விழாவில், சம்பிரதாய நடைமுறை, விதிகளை மீறி மாநிலங்களவை எதிர்கட்சி தலைவருக்குரிய மரியாதையை வேண்டுமென்றே மிக மூத்த தலைவராக இருப்பவருக்குத் தராமல் இருந்த செயல் குறித்த அதிர்ச்சியையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்துகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    அகில இந்திய காங்கிரஸ்

    பட மூலாதாரம்,

  9. குடியரசு தலைவராக பதவியேற்ற திரௌபதி முர்மூவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    குடியரசு தலைவராக பதவியேற்ற திரௌபதி முர்மூவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

    அதில், “இந்திய குடியரசு தலைவராக பதவியேற்கும் தங்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது ஜனநாய கொள்கையின் மீது நாட்டின் நம்பிக்கையையும் பலத்தையும் வெளிப்படுத்துகிறது.

    இந்திய குடியரசு தலைவராக உங்கள் சேவைகளால் நாடு பயனடையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், வாழ்த்துகிறேன்,” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  10. திரெளபதி முர்மூ: 15ஆவது குடியரசுத் தலைவராக பதவியேற்றார்

  11. கோவை வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி

    கோவை வந்த ஒலிம்பியாட் ஜோதி

    மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற இருக்கிறது.

    அதற்கான செஸ் ஒலிம்பியாட் ஜோதி இன்று கோவை வந்தடைந்தது. கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதன் வரவேற்பு நிகழ்ச்சி கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது.

    இதில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், முத்துசாமி, சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்வில் பிரதமர் மோதி பெயரை மாவட்ட ஆட்சியர் பயன்படுத்தவில்லை எனக் கூறி பாரதிய ஜனதா கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

    கோவை வந்த ஒலிம்பியாட் ஜோதி
    கோவை வந்த ஒலிம்பியாட் ஜோதி
  12. வணக்கம் நேயர்களே!

    நான் க.சுபகுணம். பிபிசி தமிழின் நேரலை பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறேன். இதுவரை பிரசாந்த் முத்துராமன் வழங்கிக் கொண்டிருந்த நேரலை செய்திகளை இனி நான் வழங்கவுள்ளேன்.

    இதுவரை நடந்த சில முக்கியச் செய்திகள் உங்களுக்காக

    • இந்தியாவின் 15ஆவது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மூ இன்று பதவியேற்றார்.
    • திருத்தணியை அடுத்த தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த மாணவி, திருவள்ளூர் அருகே உள்ள அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளி விடுதியில் இன்று காலை தற்கொலை செய்துகொண்டார். அவருடைய உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • கலிஃபோர்னியாவில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதுவரை 6,000 பேர் இதனால் இடம்பெயர்ந்துள்ளனர்.
    • இந்திய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 8ஆவது நாள் அவை இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
    • முதல்முறையாக இந்தியாவில் நடத்தப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி தமிழ்நாடு வந்து சேர்ந்தது.
    • இலங்கையில் போராட்டக்காரர்கள் வெளியேறிய நிலையில், இலங்கை அதிபர் அலுவலகம் மீண்டும் இன்று திறக்கப்படுகிறது.
  13. பள்ளி விடுதியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை – உறவினர்கள் போராட்டம்

    உறவினர்கள் போராட்டம்

    திருத்தணி அடுத்த தெக்கலூர் பகுதியைச் சார்ந்த மாணவி, திருவள்ளூர் அருகே உள்ள கீழச்சேரியில் செயல்பட்டு வரும்அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

    இந்நிலையில், இன்றுகாலை விடுதியில் மாணவி தற்கொலை செய்துகொண்டார். பள்ளி நிர்வாகம் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மாணவியின்உடலை கைப்பற்றி திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்ய அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே மாணவி உயிரிழந்ததை முறையாக பெற்றோருக்கு தெரியப்படுத்தவில்லை மேலும் மாணவியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி அவரது சொந்த ஊரான தெக்கலூரில் மாணவியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    மேலும் சாலைகளில் கற்களால் தடுப்புகள் அமைத்து அரசு பேருந்துகளை சிறை பிடித்துள்ளனர் இது தொடர்பாக காவல்துறையினர் கிராம மக்களிடையே சமரச பேச்சுவார்த்தையில் தற்போது ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதைத்தொடர்ந்து மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து அப்ப பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பள்ளி நிர்வாகத்திடம் காஞ்சிபுரம்சக டிஐஜி சத்யபிரியா மற்றும் திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் கல்யாண் நேரடியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் நூற்றுக்கணக்கான போலீசார்பாதுகாப்புக்காக பள்ளி வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் மாணவியின் சொந்த கிராமத்திலும் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    மாணவி உயிரிழந்த செய்தி மாணவியின் சொந்த கிரமமான தெக்களூர் கிராமத்தில் காட்டுத்தீயாக பரவியது. அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொதட்டூர்பேட்டை- திருத்தணி மாநில நெடுஞ்சாலையில் அரசு பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் பற்றி தகவலறிந்த வந்த திருத்தணி தாசில்தார் வெண்ணிலா, டிஎஸ்பி சாரதி உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  14. பூலன் தேவி: சம்பல் பள்ளத்தாக்கில் மீண்டும் ஒரு பயணம்

  15. யார் இந்த திரெளபதி முர்மூ?

    நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரெளபதி முர்மூவின் பின்னணி என்ன?

    காணொளிக் குறிப்பு, திரெளபதி முர்மூ: பாஜக கூட்டணி அறிவித்துள்ள குடியரசு தலைவர் வேட்பாளர் - யார் இவர்?
  16. கலிஃபோர்னியாவில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ: 6 ஆயிரம் பேர் இடம் பெயர்வு

    காட்டுத்தீ

    பட மூலாதாரம், GETTY IMAGES

    கலிஃபோர்னியாவில் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.

    ஆனால் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் தீயை அணைப்பது மிகவும் கடினமாக உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்த காட்டுத்தீயில் இதுவரை 15 ஆயிரம் ஏக்கர் நிலம் அழிந்துள்ளது. இருப்பினும் இந்த தீயை கட்டுப்படுத்த முடியவில்லை என தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

    இருப்பினும் கடந்த காலங்களை காட்டிலும் தீயின் வேகம் சற்று குறைந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதுவரை 6 ஆயிரம் பேர் இந்த காட்டுத் தீயால் இடம் பெயர்ந்துள்ளனர்.

    10 கட்டடங்கள் அழிந்துவிட்டன. மேலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளும் வணிக வளாகங்களும் ஆபத்தில் உள்ளன என கலிஃபோர்னியாவின் வனம் மற்றும் தீ விபத்து கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.

  17. இந்திய நாகரிகத்தை மேம்படுத்த ஆன்மிக மறுமலர்ச்சி அவசியம்: குடியரசு துணைத் தலைவர் பேச்சு

  18. வந்துகொண்டிருக்கும் செய்தி, நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றார் திரெளபதி முர்மூ

    நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றார் திரெளபதி முர்மூ

    பட மூலாதாரம், sansadTv

    நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றார் திரெளபதி முர்மூ.

    நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மூ.

    மேலும் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர் என்ற சிறப்பையும் பெற்றார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  19. உலகளவில் உணவு நெருக்கடியை உருவாக்கியதா ரஷ்யா?

  20. இந்தியாவின் 15ஆவது குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மூ இன்று பதவியேற்பு

    திரெளபதி முர்மூ

    பட மூலாதாரம், Getty images

    இந்தியாவின் 15ஆவது குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மூ இன்று பதவியேற்கிறார்.

    பதவியேற்பு விழா இன்று காலை 10.15 மணியளவில் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

    பதவியேற்பு விழாவிற்கு பிறகு திரெளபதி முர்மூ நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.

    உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என். வி. ரமணா பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

    நாட்டின் முதல் பெண் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்ற சிறப்பை பெறுகிறார் திரெளபதி முர்மூ என்பது குறிப்பிடத்தக்கது.