You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட பாதுகாப்புப் படைகளுக்கு ரணில் விக்ரமசிங்க உத்தரவு

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொலைக்காட்சியில் உரையாற்றினார். அவர் தனது உரையில், "சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட தேவையான அனைத்தையும் செய்வதற்கு" ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஆ. லட்சுமி காந்த் பாரதி

  1. "நேர்மையான தலைவர்களே எங்களுக்கு தேவை" - இலங்கை போராட்டக்காரர்

    இலங்கை பிரதமர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிக்சன் சந்திரநாதன் என்பவர் பிபிசியிடம் கூறுகையில், இலங்கை பொறுப்பு ஜனாதிபதியாக உள்ள ரணில் விக்ரமசிங்க, மக்களிடம் ஒத்துழைப்பை கோரியுள்ள நிலையிலும், தாங்கள் இன்னும் "போராடுவதாக" தெரிவித்தார்.

    அரசாங்கத்திற்கு எதிரான இந்த போராட்டத்தால் தான் "இன்று மகிழ்ச்சியாக உணர்வதாக" அவர் தெரிவித்தார். ஆனால், தலைமையில் முழு மாற்றம் வரும் வரையில் தான் முழு திருப்தியடைய போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

    "கோட்டா வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது நோக்கம். ரணில் உள்ளிட்ட அமைச்சர்களும் வீட்டுக்கு செல்ல வேண்டும். உண்மையான, நேர்மையான தலைவர்களே இலங்கையை கட்டமைக்க எங்களுக்குத் தேவை" என அவர் தெரிவித்தார்.

  2. 'ஜனநாயகத்திற்கு எதிரான ஃபாசிச அச்சுறுத்தலை நிறுத்த வேண்டும்' - ரணில்

  3. இலங்கை காலி பிரதமர் அலுவலகத்திற்குள் குவியும் மக்கள்; வலுப்பெறும் போராட்டம்

  4. ஊராட்சி மன்றத் தலைவர்களின் உரிமைகள் மீறப்பட்டால் மட்டுமே தலையிட முடியும் - உயர் நீதிமன்றம்

    ஊராட்சிகள் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளை இ-டெண்டர் முறையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் பணிகள் ஒதுக்கப்படுவதை ரத்து செய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் தரப்பில் ஏராளமான மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. அதில், "அண்ணா மறுமலர்ச்சி திட்டம் உள்ளிட்ட பணிகள் அந்தந்த ஊராட்சிகள் மூலம் மேற்கொள்ளப்படும்.

    கடந்த மார்ச் 8ல் ஊரக வளர்ச்சித்துறை செயலர் வெளியிட்டுள்ள அரசாணையில் இந்த பணிகளை இ-டெண்டர் முறையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் பணிகள் ஒதுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இது ஊராட்சிகளின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது.

    எனவே, இந்த அறிவிப்பின் கீழ் பணிகளை மேற்கொள்ளத் தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தனர்.

    இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், "பேக்கேஜ் டெண்டரால் ஒப்பந்ததாரர்களுக்கு சிறிய அளவிலான போட்டியே என்றாலும், அரசு மற்றும் பொதுப்பணித்துறையால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எந்த ஒப்பந்ததாரரும் வரவில்லை.

    ஊராட்சி மன்றத் தலைவர்களின் அடிப்படை மற்றும் நிர்ணயிக்கப்பட்ட உரிமைகள் மீறப்பட்டிருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட வேண்டும். இதுபோல் இல்லாததால் இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன" என உத்தரவிட்டுள்ளார்.

  5. சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட ராணுவத்திற்கு உத்தரவு - ரணில் விக்ரமசிங்க

    இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொலைக்காட்சியில் உரையாற்றினார். அவர் தனது உரையில், "சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட தேவையான அனைத்தையும் செய்வதற்கு" ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

    தன்னுடைய அலுவலகம் மற்றும் மற்ற அரசு கட்டடங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போராட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேறுமாறும் அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

    "அரசியலமைப்பு சட்டத்தைக் கிழித்து எறிய முடியாது. சட்டத்தை பாசிசவாதிகள் கையிலெடுப்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது. ஜனநாயகத்திற்கு எதிரான இந்த பாசிச அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்," எனவும் அவர் தெரிவித்தார்.

    ரணில் விக்ரமசிங்கவின் சமீபத்திய இந்த அறிவிப்பு, இலங்கை தலைநகரில் ராணுவம் பாதுகாப்பை நிலைநிறுத்த உள்ளது என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று கொழும்புவில் உள்ள பிபிசி நிருபர் கூறுகிறார்.

  6. இலங்கை பிரதமர் அலுவலகத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள். களத்தில் இருந்து பிபிசி தமிழ் நேரலை

  7. ரணில் விக்கிரமசிங்க அலுவலகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்

    இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலுவலகத்தின் கதவுகளை உடைத்து நுழைந்த போராட்டக்காரர்கள் தற்போது பிரதமர் அலுவலகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

    ரணில் விக்கிரமசிங்க அலுவலக வளாகத்தின் வாயில்களுக்கு வெளியே ஆயுதமேந்திய காவல்துறை அதிகாரிகளுடன் சுமார் ஒரு மணி நேரம்தள்ளுமுள்ளு நடந்து வந்த நிலையில் தற்போது போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தில் நுழைந்துள்ளனர்.

  8. இலங்கையில் காலி முகத்திடலில் நடந்துவரும் போராட்டக்காரர்கள் மத்தியில் இலங்கை ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் பகுதியில் சுற்றி வருகிறது.

  9. இலங்கை அரச தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தம்

    இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரக்கூடிய சூழலில் அந்நாட்டின் அரச தொலைக்காட்சியான 'ரூபவாஹினி' தனது ஒளிபரப்பை நிறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில் போராட்டக்காரர்கள் அரசு தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் நுழைந்ததால் பொறியாளர்கள் ஒளிபரப்பை நிறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

  10. வந்துகொண்டிருக்கும் செய்தி, இலங்கை பொறுப்பு ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க செயல்படுவார் - நாடாளுமன்ற சபாநாயகர் தகவல்

    இலங்கை பொறுப்பு ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க செயல்படுவார் என கோட்டாபய ராஜபக்ஷ தன்னிடம் கூறியதாக நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

    இலங்கை தலைநகர் கொழும்பில் ஜூலை 9ம் தேதி நடந்த போராட்டத்துக்குப் பிறகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று பதவி விலகத் தயார் என தெரிவித்த நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

    இலங்கையின் அரசியலமைப்பின் 37வது சரத்தின் முதல் பிரிவின் கீழ் இந்த நியமனம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்ததாக இலங்கை அதிகாரிகள் கூறினார்.

    பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள போராட்டங்களுக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ மாலத்தீவுக்கு தப்பிச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  11. ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கொழும்புவில் ஒன்று சேர்கின்றனர். காலி முகத்திடலில் இருந்து #நேரலை

  12. இலங்கையில் அவசரநிலை அறிவிப்பு. சட்டம் ஒழுங்கை மீறுபவர்களை கைது செய்ய உத்தரவு

  13. வந்துகொண்டிருக்கும் செய்தி, இலங்கையில் அவசரநிலை பிரகடனம் - ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு

    இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளார் பொறுப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.

    கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு சென்றுள்ள நிலையில், இலங்கையில் ஜனாதிபதி அலுவலகம் அருகே ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில் அவசர நிலை பிரகடனம் செய்துள்ளார் ரணில் விக்ரமசிங்க.

    சட்டம் ஒழுங்கை மீறும் வகையில் செயல்படுவோரை கைது செய்யவும் அவர் பாதுகாப்பு பிரிவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

  14. ஜனாதிபதி ராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை - இலங்கை நாடாளமன்ற சபாநாயகர்

    இலங்கை தலைநகர் கொழும்பில் ஜூலை 9ம் தேதி நடந்த போராட்டத்துக்குப் பிறகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று பதவி விலகத் தயார் என தனக்கு அறிவித்ததாக நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன" தெரிவித்திருந்த நிலையில்

    ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார் என ஏ.என்.ஐ. செய்தி முகமை ட்வீட் செய்துள்ளது.

    பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள போராட்டங்களுக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ மாலத்தீவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.

  15. வந்துகொண்டிருக்கும் செய்தி, இலங்கையில் அதிபர் அலுவலகம் அருகே போராட்டம் கண்ணீர் புகை குண்டு வீச்சு

    இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு சென்றுள்ள நிலையில் இலங்கையில் அதிபர் அலுவலகம் அருகே போராட்டம் நடந்துவருகிறது.

    போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  16. ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் 24 நாள்களில் 9வது முறையாக தொழில்நுட்பக் கோளாறு

  17. இலங்கையை விட்டு வெளியேறி கோட்டாபய - காலி முகத்திடலில் இருந்து பிபிசி தமிழ் செய்தியாளர் மணிகண்டன்

    இலங்கையை விட்டு வெளியேறி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பாக காலி முகத்திடலில் இருந்து இன்று காலையில் பிபிசி தமிழ் செய்தியாளர் மணிகண்டன் வழங்கிய ஃபேஸ்புக் நேரலையின் மீள்பதிவு.

  18. கொழும்பு போராட்ட களத்தில் 'இலங்கை எம்ஜிஆர்' - பாட்டுப்பாடி அரசு எதிர்ப்பாளர்களுக்கு ஊக்கம் தருகிறார்

    இலங்கையின் 'எம்ஜிஆர்' என அறியப்படும் மாணிக்கம், போராட்டக் களத்தில் எம்ஜிஆர் பாடல்களை பாடி வருகிறார்.

  19. காலி முகத்திடலில் கோஷங்களும் ஆரவாரங்களும்

    இலங்கை தலைநகர் கொழுப்பில் உள்ள காலி முகத்திடல் மைதானத்தில் இன்று காலை உற்சாகத்துடன் மக்கள் திரண்டுள்ளனர்.

    போராட்டங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சிங்களத்தில் 'அரகலயத ஜெயவேவா' அல்லது "போராட்டத்திற்கு வெற்றி" என்ற பிரபலமான சொற்றொடரின் கோஷங்கள் ஒலிக்கின்றன.

    இதேவேளை மற்றவர்கள் "கோட்டா வீட்டுக்கு போ" என்ற வாசங்கள் ஏந்திய பதாகைகளுடன் போராட்ட களத்தில் இருக்கிறார்கள். அங்கு பலரும் அரசின் செயல்பாடுகள் பற்றி மிகவும் ஆவேசமாகப் பேசி சக போராட்டக்காரர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.

    கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பிரதான இடத்தில் இரண்டு இரட்டை சகோதரிகளுடன் பிபிசி பேசியது.

    ரெஷினி மற்றும் ரெஷானி சமர்கோன் ஆகியோர் தங்களது தாயாருடன் இரண்டு நாட்களுக்கு முன்பு மால்வாவில் இருந்து போராட்ட களத்துக்கு வந்துள்ளனர். ரெஷினி கூறும்போது, “ஜனாதிபதி ஒரு பயங்கரவாதி போன்றவர் என நினைக்கிறேன். இவ்வளவு காலமும் நாட்டையே அச்சுறுத்தி வந்துள்ளார்," என்றார்.

    "ஜனாதிபதி வெளியேறியதில் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் இலங்கையின் நிலைமை குறித்து நான் வருத்தமாக இருக்கிறேன். எதிர்காலத்திலாவது நாம் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வளர்ச்சி அடைந்த நாடாக மாற முடியும் என நம்புகிறோம்," என்கிறார் ரெஷானியின் சகோதரி ரெஷானி சமர்கோன்.