நன்றி நேயர்களே...
இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.
இதுவரையிலான இன்றைய முக்கிய நிகழ்வுகள்:
- இலங்கை ஜனாதிபதி கோட்டாபய அந்நாட்டில் இருந்து வெளியேறிய தகவலை பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியது.
- இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில் இந்தியா பின்னணியில் உதவி செய்ததாக சில ஊடகங்களில் வெளியான தகவலை இலங்கைக்கான இந்திய தூதர் மறுத்துள்ளார்.
- ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார் என ஏ.என்.ஐ. செய்தி முகமை ட்வீட் செய்துள்ளது.
- இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளார் பொறுப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.
- இலங்கை பொறுப்பு ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க செயல்படுவார் என கோட்டாபய ராஜபக்ஷ தன்னிடம் கூறியதாக நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
- இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரக்கூடிய சூழலில் அந்நாட்டின் அரச தொலைக்காட்சியான 'ரூபவாஹினி' தனது ஒளிபரப்பை நிறுத்தியது.
- ரணில் விக்ரமசிங்க அலுவலக வளாகத்தின் வாயில்களுக்கு வெளியே ஆயுதமேந்திய காவல்துறை அதிகாரிகளுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே சுமார் ஒரு மணிநேரம் தள்ளுமுள்ளு நடந்து வந்த நிலையில் போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தில் நுழைந்தனர்.