You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி
தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
பிரசாந்த் முத்துராமன்
பசில் ராஜபக்ஷ துபாய் செல்ல எதிர்ப்பு: விமான நிலையத்தில் நடந்த நள்ளிரவுப் போராட்டம்
பசில் ராஜபக்ஷவுக்கு விமான சேவை மறுப்பு
இலங்கை முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இன்று அதிகாலை துபாய் செல்வதற்காக விமான நிலையம் சென்ற நிலையில், அவருக்கு சேவைகள் வழங்கக்கூடாது என பிற பயணிகள் போராட்டம் நடத்தியதால், அவருக்கு சேவைகள் மறுக்கப்பட்டதாக இலங்கை விமான நிலைய அதிகாரி பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
கேரள தங்க கடத்தல் வழக்கு: "நடக்கக்கூடாத சம்பவங்கள் நடந்துள்ளன" - எஸ்.ஜெய்சங்கர்
வணக்கம் நேயர்களே!
நான் பிரசாந்த் முத்துராமன். பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.
இன்றைய தினம் அதிமுகவின் பொதுக்குழு குறித்த விவரங்கள் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.