இந்திய மீனவர்கள் இலங்கையில் விடுதலை:

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட, தமிழ்நாடு மற்றும் காரைக்கால் மீனவர்கள் 12 பேர் விடுதலை, விசைப் படகை பறிமுதல் செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. அடுத்த பிரிட்டன் பிரதமர் தேர்வு எப்படி நடைபெறும்?

  2. இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது

    வணக்கம்.

    இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.

    இதுவரையிலான இன்றைய முக்கிய நிகழ்வுகள்.

    • ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்டதாக 'ஜப்பான் டைம்ஸ்' ஊடகம் தெரிவித்துள்ளது.
    • இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட, தமிழ்நாடு மற்றும் காரைக்கால் மீனவர்கள் 12 பேர் விடுதலை, விசைப் படகை பறிமுதல் செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைருக்கு 5 நாட்கள் இடைக்கால பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் சித்தாபூரில் பதிவான வழக்கில் அவருக்கு பிணை கிடைத்துள்ளது.
    • தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டனர். இதற்கு எட்பாடி பழனிச்சாமி கண்டன்ம் தெரிவித்துள்ளார்.
    • ஜூலை 11ஆம் தேதி நடக்கவிருக்கும் பொதுக் குழுவிற்குத் தடை விதிக்க வேண்டுமென ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், எடப்பாடி கே. பழனிச்சாமித் தரப்பிற்குப் பல்வேறு கேள்விகளை எழுப்பி வழக்கை வரும் திங்கள் கிழமைக்கு (11ம் தேதி) சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணைய தளம், முகநூல், ட்விட்டர், இண்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ந்து இணைந்திருங்கள்.

  3. பிரனிர்ஷா: இலங்கையின் சிங்கள இசை நிகழ்ச்சியில் முதல்முறையாக தமிழ் சிறுமி வெற்றி

  4. இலங்கை தலைநகர் கொழும்புவில் போலீஸ் ஊரடங்கு

    இலங்கை தலைநகர் கொழும்புவில் போலீஸ் ஊரடங்கு.. இரவிலும் தொடரும் போராட்டம்.. களத்தில் இருந்து நேரலை.

  5. அ.தி.மு.க. பொதுக் குழுவுக்குத் தடைகோரும் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு

    ஜூலை 11ஆம் தேதி நடக்கவிருக்கும் அ.தி.மு.கவின் பொதுக் குழுவிற்குத் தடைவிதிக்க வேண்டுமென ஓ. பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கில், தீர்ப்பு திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.நேற்று (வியாழக்கிழமை) இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றபோது, "பொதுக் குழு நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் கூறிவிட்ட நிலையில், நாங்கள் என்ன செய்ய முடியும்? ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு தற்போது அதிகாரம் ஏதும் இல்லையென்றால் பொதுக் குழுவைக் கூட்டும் அதிகாரம் படைத்தவர் யார்? ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டதா? பொதுக் குழுவுக்கான அறிவிப்பில் கையெழுத்திடுவது யார்? பொதுக் குழு கூடுவதற்கு எத்தனை நாட்களுக்கு முன்பாக அறிவிப்பு வழங்க வேண்டும்? பொதுக் குழுவை கூட்ட தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா?" என்பது உள்ளிட்ட பத்துக் கேள்விகளை எழுப்பிய நீதிபதி, இதற்கு பதிலளிக்கும்படி எடப்பாடி கே. பழனிசாமி தரப்பிற்கு உத்தரவிட்டு வழக்கை வெள்ளிக்கிழமைக்கு, அதாவது இன்றைக்கு ஒத்திவைத்தனர்.

    அதன்படி இன்று பிற்பகல் இரண்டேகால் மணியளவில் இந்த வழக்கின் விசாரணை மீண்டும் துவங்கியது. முதலில் வாதிட்ட எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பு, வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென வாதிட்டது.

    "ஒருபக்கம் தன்னை கட்சியின் ஒருங்கிணைப்பாளராக கருதும் ஓ.பன்னீர்செல்வம் மற்றொரு பக்கம் ஒட்டுமொத்த கட்சியும் தனக்கு எதிராக உள்ளது என கருதி வழக்குத் தொடர்ந்துள்ளார். கட்சிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்காகவே இதனைப் பார்க்க வேண்டும்.அ.தி.மு.க. பொதுக் குழுவை நடத்த உச்ச நீதிமன்றமே அனுமதி வழங்கியுள்ளது.

    இந்த நிலையில் பொதுக் குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றால் மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்தைதான் அணுக வேண்டும். மேலும், ஜூலை 11ஆம் தேதி பொதுக் குழு கூட்டம் நடத்துவதற்கு 2,190 உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

    கடந்த டிசம்பர் மாத செயற்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்ந்து எடுக்க முடியும் என விதி திருத்தப்பட்டது. இந்த விதிக்கு பொதுக் குழுவின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஆனால், ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக் குழுவில் இந்த திருத்தத்திற்கு ஒப்புதல் பெறப்படவில்லை. ஆகவே, அதன் அடிப்படையில் நடந்த உடகட்சி தேர்தலும் செல்லாது.

    மேலும், கட்சியின் பொதுக் குழுவில் எந்தப் பிரச்சினை குறித்தும் விவாதிக்க உரிமை உள்ளது. எதிர் கருத்து இருந்தால் பொதுக்குழுவில் விவாதிக்கலாம். அதை விடுத்து நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற முடியாது" என எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பில் வாதிட்டனர்.

    இதற்கடுத்து வாதத்தை தொடங்கிய ஓ. பன்னீர்செல்வம் தரப்பு, "கட்சி விதியில் திருத்தம் செய்ய பொதுக் குழுவின் ஒப்புதல் தேவையில்லை. பொதுக் குழு ஒப்புதல் வழங்காததாலேயே இரு பதவிகளும் காலாவதியாகிவிட்டதாக முன்வைத்த வாதம் ஏற்கத்தக்கதல்ல. பொதுக் குழுவைக் கூட்டுவதைப் பொறுத்தவரை, கட்சியின் விதிப்படி ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர்தான் கூட்ட வேண்டும்" எனதங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தது.

    இரண்டே கால் மணியளவில் துவங்கிய வழக்கின் விசாரணை மாலை சுமார் ஐந்தேகால் மணிவரை நீடித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை வரும் திங்கட்கிழமையன்று காலை 9 மணிக்கு ஒத்திவைத்தது.

    வரும் திங்கட்கிழமை அதாவது ஜூலை 11ஆம் தேதி சென்னையில் உள்ள ஸ்ரீ வாரி திருமண மண்டபத்தில் ஒன்பதேகால் மணிக்கு அ.தி.மு.கவின் பொதுக் குழு கூடுமென எடப்பாடி தரப்பு அறிவித்துள்ள நிலையில், அன்று காலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகுமெனநீதிமன்றம் அறிவித்துள்ளது.

  6. வந்துகொண்டிருக்கும் செய்தி, கொழும்பின் பல பகுதிகளில் ஊரடங்கு சட்டம்

    கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்றிரவு முதல் மறுஅறிவித்தல் வரை போலீஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்திய, நுகேகொடை, களனி, நீர்கொழும்பு ஆகிய பகுதிகளுக்கு போலீஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் நாளை மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையிலேயே, இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது

  7. பொன்னியின் செல்வன் டீசர் வெளியீடு: எப்படி உள்ளது?

  8. அ.தி.மு.க. பொதுக் குழுவுக்குத் தடை கோரும் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு

    edappadi and panner selvam

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கோப்புப் படம்

    ஜூலை 11ஆம் தேதி நடக்கவிருக்கும் பொதுக் குழுவிற்குத் தடை விதிக்க வேண்டுமென ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், எடப்பாடி கே. பழனிச்சாமித் தரப்பிற்குப் பல்வேறு கேள்விகளை எழுப்பி வழக்கை வெள்ளிக் கிழமைக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

    அதன்படி இன்று பிற்பகல் இரண்டேகால் மணியளவில் இந்த வழக்கின் விசாரணை மீண்டும் துவங்கியது.

    இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பும் பொதுக் குழுவிற்குத் தடை விதிக்க வேண்டுமென ஓ. பன்னீர்செல்வம் தரப்பும் வாதிட்டனர்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை வரும் திங்கட்கிழமையன்று காலை 9 ஒத்திவைத்துள்ளனர்.

    வரும் திங்கட்கிழமை அதாவது ஜூலை 11ஆம் தேதி சென்னையில் உள்ள ஸ்ரீ வாரி திருமண மண்டபத்தில் அ.தி.மு.கவின் பொதுக் குழு கூடுமென எடப்பாடி தரப்பு அறிவித்துள்ள நிலையில், அன்று காலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகுமெனக் கூறப்பட்டுள்ளது.

  9. BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்

  10. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக்கொலை: யார் இவர்?

  11. பொன்னியின் செல்வன் -1 ட்ரைலர் வெளியிடப்பட்டது

    மணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் பொன்னியின் செல்வனை அடிப்படையாக கொண்ட திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி இன்று வெளியிடப்பட்டது.

    தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த பேரரசன் ராஜராஜ சோழன், வந்தியத்தேவன், குந்தவை நாச்சியார் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு, கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் தமிழ் இலக்கிய உலகில் முக்கியத்துவம் பெற்றது.

    இந்த நாவலைக் கதைக்கருவாக கொண்டு, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, பார்த்திபன், நடிக்கைகள் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் - 1 திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் இன்று வெளியிடப்பட்டன.

    ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைப்பில் உருவாகியுள்ள இந்த படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னத்தின் மெட்ராஸ் டாகீஸ், லைகா நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  12. அ.தி.மு.க. பொதுக் குழு: தடை கோரும் வழக்கு, வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு

    அதிமுக மோதல்

    பட மூலாதாரம், AIADMK

    ஜூலை 11ஆம் தேதி நடக்கவிருக்கும் பொதுக் குழுவிற்குத் தடை விதிக்க வேண்டுமென ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், எடப்பாடி கே. பழனிச்சாமித் தரப்பிற்குப் பல்வேறு கேள்விகளை எழுப்பி வழக்கை வரும் திங்கள் கிழமைக்கு (11ம் தேதி) சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

    அ.இ. அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் பொதுக் குழு உறுப்பினர் ஒருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில், ஜூலை 11ஆம் தேதி நடக்கவுள்ள பொதுக் குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நேற்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு பல்வேறு கேள்விகளை முன் வைத்து, விசாரணையை ஒத்தி வைத்தார்.

    இரண்டாவது நாளாக இன்று பிற்பகல் இரண்டேகால் மணியளவில் இந்த வழக்கின் விசாரணை மீண்டும் துவங்கியது. இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பும் பொதுக் குழுவிற்குத் தடை விதிக்க வேண்டுமென ஓ. பன்னீர்செல்வம் தரப்பும் வாதிட்டனர்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை வரும் திங்கட்கிழமையன்று காலை 9 ஒத்திவைத்துள்ளனர்.

    வரும் திங்கட்கிழமை அதாவது ஜூலை 11ஆம் தேதி சென்னையில் உள்ள ஸ்ரீ வாரி திருமண மண்டபத்தில் அ.தி.மு.கவின் பொதுக் குழு கூடுமென எடப்பாடி தரப்பு அறிவித்துள்ள நிலையில், அன்று காலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகுமெனக் கூறப்பட்டுள்ளது.

  13. முன்னாள் பிரதமர் சுட்டுக்கொலை: பாதுகாப்புக்கு பெயர்போன ஜப்பானில் குற்றம் நடந்தது எப்படி?

  14. கோயம்புத்தூரில் அ.தி.மு.க பிரமுகர் இடங்களில் 3வது நாளாக வருமானவரித்துறை சோதனை

    வருமான வரித்துறை சோதனை

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு நெருக்கமானவரும் நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் மூன்றாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

    கோயம்புத்தூர் மாவட்டம் வடவள்ளி சந்திரசேகரின் வீடு உட்பட அவருக்கு சொந்தமான ஆறு இடங்களில் கடந்த இரு தினங்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.

    அதில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றப்பட்டன். மூன்றாவது நாளாக இன்ரும் சந்திரசேகர் நிர்வாக இயக்குநராக உள்ள கே.சி.பி. இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் பீளமேடு அலுவலகம், புலியகுளம் பகுதியில் உள்ள ஆலயம் அறக்கட்டளை, சந்திரசேகரின் சகோதரர் சந்திரபிரகாஷின் வீடு, சந்திரபிரகாஷ் அலுவலகம் ஆகிய 4 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

  15. சிங்கப்பூரில் மலேசியருக்கு தூக்கு: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதானவர்

    சிங்கப்பூர் தீர்ப்பு

    பட மூலாதாரம், Getty Images

    போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய மேலும் ஒரு மலேசியர் நேற்று சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டுள்ளார்.

    மனித உரிமை ஆர்வலர்கள் இறுதிவரை போராடியும் தூக்குத் தண்டனையை ஒத்தி வைக்கவோ, அந்த மலேசியருக்கான தண்டனையைக் குறைக்கவோ முடியவில்லை.

    தூக்கிலிடப்பட்ட மலேசியர் 32 வயதான கல்வந்த் சிங் என்பவர் ஆவார்.

    கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூர் காவல்துறையால் அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து நடைபெற்ற வழக்கின் முடிவில் கடந்த 2016ஆம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதித்தது சிங்கப்பூர் நீதிமன்றம்.

    இது குறித்த விரிவான செய்திக்கு இங்கே சொடுக்கவும்.

  16. நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதி - என்ன பிரச்னை?

  17. நடிகர் விக்ரம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

    விக்ரம்

    பட மூலாதாரம், Chiyaan Vikram FC

    உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நடிகர் விக்ரம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    தமிழ் திரைப்பட நடிகர் விக்ரம். இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை காவேரி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

  18. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: மணல் ஆறுமுகசாமியிடம் தனிப்படை விசாரணை

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமியிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்குகளை மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.

    இந்த வழக்கில் கடந்த சில மாதங்களில் சென்னையிலும் கோயம்புத்தூரிலும் பல்வேறு கட்ட விசாரணைகள் நடைபெற்றுள்ளன. சசிகலா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கோயம்புத்தூரைச் சேர்ந்த செந்தில் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் செந்தில்குமாரிடம் தனிப்படை காவல்துறையினர் நேற்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

    இன்றைய தினம் செந்தில்குமாரின் தந்தை மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமியிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்களின் நிறுவனம்தான் கோடநாடு இல்லத்தின் பராமரிப்பு பணிகளை கவனித்து வந்ததுள்ளது.

    மேலும், அ.தி.மு.க ஆட்சியில் மணல் குவாரி தொடர்பான ஒப்பந்தங்களை ஆறுமுகசாமி கவனித்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  19. மர்ம நபரால் சுடப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்தார்

  20. இந்திய மீனவர்கள் இலங்கையில் இருந்து விடுதலை: படகு பறிமுதல் - இலங்கை நீதிமன்றம் உத்தரவு

    மீனவர்கள் விடுதலை

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட, தமிழ்நாடு மற்றும் காரைக்கால் மீனவர்கள் 12 பேர் விடுதலை, விசைப் படகை பறிமுதல் செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    காரைக்கால் துறைமுகத்தில் இருந்து கடந்த 30 தேதி மயிலாடுதுறை, காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேர் மீன்பிடிக்கச் சென்றனர். கடந்த 3ம் தேதி நள்ளிரவு எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

    அவர்கள் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு பருத்திதுறை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிசாந்த் பொன்னுத்துரை, ''மீனவர்கள் 12 பேரையும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்த்து'' உத்தரவிட்டார்.

    அதேநேரத்தில், ''மீனவர்கள் சென்ற பல லட்சம் ரூபாய் மதிப்பிலான விசைப்படகை அரசுடமையாக்கி' தீர்ப்பளித்தார்.

    இதனையடுத்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் அனுப்பி வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.