"கார்ப்பரேட் வேலைவாய்ப்பில் அக்னி வீரர்களுக்கு வாய்ப்புகள்" - ஆனந்த் மஹிந்த்ரா

"தலைமைப் பண்பு, அணி செயல்பாடு போன்ற திறன்கள், அக்னி வீரர்களை சந்தையிலுள்ள தொழில்துறைகளின் தேவைக்கேற்ப தயார் நிலையில் இருக்க வைக்கிறது. இது கார்ப்பரேட் துறையில் அக்னிவீரர்களுக்குச் சிறந்த வேலை வாய்ப்பை வழங்கும்"

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம்.ஆர். ஷோபனா

  1. சர்வதேச யோகா தினம்: ஆசனங்கள் மட்டுமே யோகா கிடையாது

  2. சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கு பாதிப்பு: ஆசையாக வாங்கிய வீடுகளில் அகதியாக வாழும் மக்கள்

  3. நேயர்களுக்கு நன்றி!

    இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது.

    இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ:

    • அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் தொடர்ந்து வருகிறது. தெலங்கானா, பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த போராட்டங்கள் காரணமாக 300க்கும் அதிகமான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
    • காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி கொரோனா தொற்று அறிகுறிகளுக்கான சிகிச்சையுடன், சுவாசக்குழாயில் ஏற்பட்டுள்ள பூஞ்சை தொற்றுக்கும் சிகிச்சை பெற்று வருவதாக அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
    • 'அக்னிபத்' திட்டத்தின் கீழ் வீரர்களை தேர்வு செய்யும் பணி குறித்து இன்னும் இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என்று இந்திய ராணுவ ஜெனரல் மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
    • ஒற்றைத் தலைமை குறித்து அ.தி.மு.கவின் பொதுக் குழுவில் ஓ.பி.எஸ். ஒப்புதல் இன்றி தீர்மானம் கொண்டுவந்தால் அது செல்லாது என அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தெரிவித்திருக்கிறார்.
    • மேகேதாட்டு அணை விவகாரங்கள் குறித்து வரும் ஜூன் 23ம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் விவாதிக்கும் என்று ஆணையத்தின் தலைவர் ஹல்தர் தெரிவித்துள்ளார்.
    • விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச்சை அமெரிக்காவுக்கு நாடு கடத்த பிரிட்டன் உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
    • ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
    • இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 12,847 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணையதளம், முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இணைந்திருங்கள். நன்றி.

  4. "இப்படி எதிர்ப்பு வரும் என எதிர்பார்க்கவில்லை" - இந்திய கடற்படை தலைமைத் தளபதி

    அக்னிபத் திட்டத்துக்கு செயல்வடிவம் கொடுக்க ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்த வேளையில் அதற்கு இப்படியொரு எதிர்ப்பு வரும் என எதிர்பார்க்கவில்லை என்று இந்திய கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் ஆர். ஹரி குமார் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் ஏஎன்ஐ செய்தி முகமைக்குக்கு அளித்துள்ள காணொளி பேட்டியில், ராணுவ பணியில் சேர விரும்பும் சிலர் இந்த திட்டத்தை எதிர்க்கிறார்கள். இந்திய ராணுவத்தில் மிகப்பெரிய மனித வள மேலாண்மை மாற்றமாக அக்னிபத் திட்டம் திகழும் என்று கூறினார்.

    இந்த திட்டம் குறித்த அச்சங்களை போராட்டத்தில் ஈடுபடுவோர் களைய வேண்டும் என்றும் அனைவரது வேலைவாய்ப்பு, எதிர்காலத்துக்கும் பாதிப்பு நேராது என்றும் அட்மிரல் ஹரிகுமார் கூறியுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  5. நயன்தாரா நடித்த O2 திரைப்படம் எப்படி இருக்கிறது?

  6. அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் - 340 ரயில் சேவைகள் பாதிப்பு

    அக்னிபத் திட்டம்

    பட மூலாதாரம், Getty Images

    அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் போராட்டம் காரணமாக, 340 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

    அதில் 94 விரைவு ரயில்கள், 140 பயணிகள் ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 65 விரைவு ரயில்கள், 30 பயணிகள் ரயில்களில் சில ரத்து செய்யப்பட்டன. மேலும் 11 விரைவு ரயில்கள் திருப்பி விடப்பட்டன என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

  7. மேகேதாட்டு அணை குறித்து ஜூன் 23ம் தேதி விவாதிப்போம் - காவிரி ஆணையம்

    மேகேதாட்டு அணை

    மேகேதாட்டு அணை விவகாரங்கள் குறித்து வரும் ஜூன் 23ம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் விவாதிக்கும் என்று ஆணையத்தின் தலைவர் ஹல்தர் தெரிவித்துள்ளார்.

    தஞ்சை கல்லணையில் இன்று ஆணையத்தின் தலைவர் ஹல்தர் ஆய்வு செய்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பு என்றும், அணைகள் குறித்த விவகாரங்களை விவாதிக்க ஆணையத்திற்கு முழு அதிகாரம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

    மேகேதாட்டு அணை விவகாரத்தில், ஆணையக் குழு கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி, அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, காவிரி உரிமை மீட்புக் குழு கருப்பு கொடியை காட்டி கண்டனம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 40க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

  8. அக்னிபத் திட்டத்துக்கு எதிராக தெலங்கானாவில் போராட்டம் தீவிரம் - ஒருவர் பலி, 14 பேர் காயம்

  9. விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச்சை அமெரிக்காவுக்கு நாடு கடத்த பிரிட்டன் அனுமதி

    ஜூலியன் அசாஞ்ச்

    பட மூலாதாரம், Getty Images

    விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச்சை அமெரிக்காவுக்கு நாடு கடத்த பிரிட்டன் உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

    இந்த முடிவை எதிர்த்து மனு அளிக்க அசாஞ்ச்வுக்கு 14 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

    அசாஞ்ச்வை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது அவரது மனித உரிமைகள் கீழ் வராது என்றும், அமெரிக்கா அவரை சரியான முறையில் நடத்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    கடந்த 2010, 2011ஆம் ஆண்டுகளில், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடந்த போர்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட்ட காரணத்திற்காக, அமெரிக்கா அதிகாரிகளால் ஜூலியன் அசாஞ்ச் தேடப்பட்டு வருகிறார்.

    இந்த நிலையில், பிரிட்டனின் உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை எதிர்த்து மனு அளிக்கவுள்ளதாக விக்கிலீக்ஸ் உறுதி செய்துள்ளது.

    தனது கணவர் எந்த தவறும் செய்யவில்லை என்று அசாஞ்ச் மனைவி ஸ்டெல்லா கூறியுள்ளார்.

  10. இலங்கையில் உணவு நெருக்கடியை தவிர்க்க பிரதமர் நடவடிக்கை

    ரணில் விக்ரமசிங்க

    பட மூலாதாரம், PMM

    இலங்கையில் உணவு நெருக்கடியினால் யாரும் பசியோடு வாடக்கூடாது என்பதே தனது கொள்கை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

    உணவுப் பாதுகாப்பு தொடர்பான குழுக் கூட்டத்தில் இன்று (ஜூன் 17) கலந்துக்கொண்டு பேசிய அவர், இதனைக் குறிப்பிட்டார்.

    உணவு நெருக்கடியானது எதிர்காலத்தில் 4 மில்லியன் முதல் 5 மில்லியன் இலங்கையர்களை நேரடியாகப் பாதிக்கக் கூடியதாக இருந்தாலும், அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

    குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மீது அதிக கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

    உணவு நெருக்கடியைத் தணிக்கும் முயற்சிகளை ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையிலான குழுவொன்றை நியமிக்கவும் பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

    உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பிரதேச செயலகங்களில் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள முன்மொழியப்பட்டது.

    மீனவ மக்களுக்கு உணவு, எரிவாயு மற்றும் எரிபொருள் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை விடுத்தார்.

    குறிப்பாக சிறுவர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்களில் உணவுப் பாதுகாப்பிற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

    பிராந்திய ரீதியில் போட்டி நிறைந்த சந்தையை உருவாக்கும் நவீன விவசாய முறைக்கான நடுத்தர மற்றும் நீண்ட காலத் திட்டத்தின் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.

  11. ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்த வேண்டாம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

    அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பிகார், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், அசாம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

    சில இடங்களில், ரயில்களுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் நடந்தன.

    இந்நிலையில், வன்முறை போராட்டங்களில் இளைஞர்கள் ஈடுபட வேண்டாம் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கேட்டுக்கொண்டுள்ளதாக ஏ.என்.ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

    மேலும், ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்த வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  12. "இந்த நெருக்கடியை முன்பே தடுத்திருக்கலாம்" - என்ன சொல்ல வருகிறது இலங்கை மத்திய வங்கி?

  13. அக்னிபத் திட்டத்தின்கீழ் ஆள் சேர்ப்பு தொடங்கும் என அறிவிப்பு - உங்கள் கருத்து என்ன?

    அக்னிபத் திட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடக்கும் நிலையில் ஆள்சேர்ப்பு தொடங்கும் என்ற அறிவிப்பு குறித்து உங்கள் பார்வை என்ன?

    பிபிசி தமிழின் ட்விட்டர் பக்கத்தில் பகிருங்கள்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  14. உடலில் ஒரு கை, உள்ளத்தில் நம்பிக்கையுடன் 80 வயதிலும் உழைக்கும் தாத்தா

    கோயம்புத்தூரைச் சேர்ந்த ராமன் என்ற இந்த முதியவருக்கு வயது 80. தினந்தோறும் சைக்கிளில் சென்று கூரியர் டெலிவரி செய்து வருகிறார். உடலில் ஒரு கையுடனும் உள்ளத்தில் நம்பிக்கையுடனும் உழைத்து வரும் ராமன் தாத்தாவின் கதை என்ன?

    காணொளிக் குறிப்பு, 80 வயதிலும் ஓயாமல் உழைக்கும் தன்னம்பிக்கை தாத்தா
  15. இலங்கை இறுதிக்கட்ட யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு தேதி அறிவிப்பு

    இலங்கை இறுதிக்கட்ட யுத்தம்

    பட மூலாதாரம், KOGULAN

    இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தில் சரணடைந்து, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான இறுதித் தீர்ப்பு எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் தேதி வழங்கப்படவுள்ளது.

    வட மாகாண சபை முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்டோரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

    இந்த வழக்கு விசாரணைகளின் போது நீதிபதிகள் இந்த விடயத்தை அறிவித்ததாக மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி இரட்ணவேல் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த வழக்கு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படவிருந்த போதிலும், தவிர்க்க முடியாத காரணங்களினால் தீர்ப்பு வழங்கும் தேதி எதிர்வரும் முதலாம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

    இறுதிக் கட்ட யுத்தத்தில் ராணுவத்திடம் சரணடைந்த ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்ற நிலையில், இந்த தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

  16. ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 20 லட்சம் ரூபாய் இழந்த நபர் தற்கொலை

    ஆன்லைன் ரம்மி

    பட மூலாதாரம், POLICE

    சென்னை மணலியில் மீண்டும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 20 லட்சம் ரூபாய் இழந்த பெயின்டிங் ஒப்பந்தக்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    சென்னை மணலி அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர் நாகராஜ்(42).இவரது மனைவி வரலஷ்மி.இவருக்கு திருமணமாகி, பிரணவ்(8), பிரவீன்(6) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இவர் கடந்த 4 ஆண்டுகளாக ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததாகவும், அதில் 20 லட்சம் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. மனைவியின் நகைகளை அடமானம் வைத்து அந்த பணத்தை தமது சேமிப்பு கணக்கில் போட்டு ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், 20 லட்சம் பணத்தை இழந்த நாகராஜ், நேற்றிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்து வந்த மணலி காவல் துறையினர், சடலத்தை மீட்டு உடல் கூராய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து மணலி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 5ஆம் தேதி மணலி புதுநகரில் பவானி என்ற பெண் ஆன்லைன் விளையாட்டில் உயிரிழந்த நிலையில், ஆன்லைன் ரம்மியால் மீண்டும் ஒருவர் உயிரிழந்திருப்பது ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

  17. "ஓ.பி.எஸ். ஒப்புதல் இன்றி தீர்மானம் கொண்டுவந்தால் அது செல்லாது"

    ஓ.பி.எஸ். ஒப்புதல்

    ஒற்றைத் தலைமை குறித்து அ.தி.மு.கவின் பொதுக் குழுவில் ஓ.பி.எஸ். ஒப்புதல் இன்றி தீர்மானம் கொண்டுவந்தால் அது செல்லாது என அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தெரிவித்திருக்கிறார்.

    அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி கே. பழனிச்சாமியும் தத்தம் ஆதரவாளர்களுடன் விவாதித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று ஓ. பன்னீர் செல்வத்தை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்துப் பேசினார்.

    இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், ஓ. பன்னீர்செல்வத்தின் ஒப்புதல் இல்லாமல், பொதுக் குழுவில் ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானத்தைக் கொண்டுவந்தால் அது செல்லாது என்று கூறினார்.

  18. வாஞ்சிநாதன்: குறிக்கோள் இந்திய சுதந்திரமா? இந்து மதமா?

  19. செகந்தராபாத் ரயில் நிலையத்தில் வன்முறையாக மாறிய போராட்டம்

    செகந்தராபாத் ரயில் நிலையம்

    பட மூலாதாரம், UGC

    அக்னிபத் திட்டத்திற்கு எதிராக, தெலங்கானா மாநிலத்திலுள்ள செகந்தராபாத் ரயில் நிலையத்தில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது.

    அங்கு வெள்ளிக்கிழமையன்று காலை நூற்றுக்கணக்கான இளைஞர்கள் குவிந்து, ரயில் நிலையத்தில் உள்ள கடைகளை சேதப்படுத்தினார்கள். மேலும், ரயில்வே பார்சல்களில் வந்த பொருட்களை, ரயில் தண்டவாளத்தில் வைத்து எரித்தனர்.

    சில போராட்டக்காரர்கள் திருப்பதி-செகந்தரபாத் வழி செல்லும் ரயிலில் உள்ள சில ரயில் பெட்டிகளுக்கு தீ வைத்தனர்.

    அங்கு தெலங்கானா காவல்துறை வந்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர்.

    போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதாகவும், வானை நோக்கி தூப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் பிபிசி தெலுங்கு சேவை செய்தியாளர் சுரேகா அல்லுரி கூறினார்.

    1,2 மற்றும் 3ஆம் நடைபாதைகளில் பெரும்பாலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

    அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

  20. நோட்டாவோடு போட்டி போடுபவர்களின் கனவு பலிக்காது- அண்ணாமலை கருத்துக்கு செந்தில் பாலாஜி பதில்

    செந்தில் பாலாஜி

    தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் முதல் கைது மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிதான் என்றார்.

    இந்நிலையில், கோவை மாநகராட்சியில் இன்று செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கு பதிலளித்தவர், "வேலை வெட்டி இல்லாதவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கு நாங்கள் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. எங்களுக்கு நிறைய வேலை உள்ளது," என்று கூறியுள்ளார்.

    மேலும் பேசிய அவர், "தமிழ்நாட்டில் நோட்டாவோடு போட்டி போடுபவர்களின் கனவு ஒருநாளும் பலிக்காது. இவ்வளவு பேசுகிற அண்ணாமலை அரவக்குறிச்சியில் ஏன் மன்னை கவ்வினார்.

    ஊடக வெளிச்சத்திற்காக ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். ஆதாரம் இருந்தால் ஏன் ஆட்சி மாறும் வரை தாமதிக்க வேண்டும் இப்போதே நடவடிக்கை எடுக்கலாமே,” என்றும் கேள்வி எழுப்பினார்.