ராகுல் காந்தி மீண்டும் ஜூன் 14இல் விசாரணைக்கு வர அமலாக்கத்துறை உத்தரவு
நேஷனல் ஹெரால்ட் நாளிதழ் தொடர்புடைய பண மோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மத்திய அமலாக்கத்துறை இயக்குநரகம் டெல்லியில் உள்ள அதன் அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துள்ளது. ராகுல் விசாரணைக்கு அழைக்கப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் தொடர்ந்து போலீஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
ஜோ மகேஸ்வரன்
முகமது நபி பற்றிய சர்ச்சை கருத்து: மேற்கு வங்கத்தில் வன்முறையில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது

பட மூலாதாரம், ANI
முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: மேற்கு வங்க மாநிலத்தில் வன்முறையில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து மேற்கு வங்க காவல்துறை தலைமை இயக்குநர் மனோஜ் மாளவியா கூறுகையில், இதுவரை 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஹெளராவில் நடந்த வன்முறை சம்பவம் குறித்து மேற்கு வங்க காவல்துறை கூடுதல் டிஜிபி ஜாவேத் ஷமிம் கூறுகையில், "இதுவரை நடந்த வன்முறையில் உயிர் சேதம் ஏதும் இல்லை. நிலைமை கட்டுக்குள் உள்ளது. நாகாஷிபாராவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது," என்றார்.
மேற்கு வங்கத்தில் முதலமைச்சரே பல்கலை. வேந்தர் - மசோதா நிறைவேற்றம்
மேற்கு வங்கத்தில் உள்ள மாநில அரசுப் பலக்கலைகழகங்களின் வேந்தராக முதலமைச்சரே இருக்கும் வகையில் சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநில அரசின் பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் வேந்தராக இருப்பதை விட, முதலமைச்சரே வேந்தராக இருக்கும் வகையில் அமைச்சரவை கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவு செய்தது. இந்த முடிவு தற்போது, சட்டப்பேரவையில் மசோதாவாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை முதலமைச்சரே நியமிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
அதானிக்கு மின் திட்டம்: கோட்டாபய, மோதியின் அழுத்தம் பற்றி பேசிய அதிகாரி ராஜினாமா
டெல்லியில் ராகுல் காந்தியிடம் தொடரும் விசாரணை - அமலாக்கத்துறை அலுவலகத்தில்

பட மூலாதாரம், Congress@INCIndia/Twitter
படக்குறிப்பு, அமலாக்கத்துறை அலுவலகம் சென்ற ராகுல் காந்தி நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக, டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரக அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஆஜரானார்.
டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக தன் சகோதரி பிரியங்கா காந்தியுடன் ராகுல் காந்தி சென்றார். காரிலிருந்து இறங்கிய ராகுல் காந்தி, அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகளுடன் பேரணியாக சென்றார். பேரணியாக சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, அமலாக்கத்துறை அலுவலகத்தை சென்றடைந்த ராகுல் காந்தியிடம் அதிகாரிகள் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு ராகுல் காந்தி மீண்டும் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். அமலாக்கத்துறை அலுவலகத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் பல்வேறு இடங்கள் மற்றும் சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
குஜராத் சிங்கத்திற்கு கண்புரை அறுவை சிகிச்சை - உதவும் மதுரை நிறுவனம்
குஜராத்தின் கிர் காட்டிலுள்ள ஜாம்வாடா மலைத்தொடரில் ஐந்து வயது சிங்கத்தின் நடமாட்டம் மலையேற்றக்காரர்களால் கவனிக்கப்பட்டது. இரை அருகில் இருந்தாலும் அந்த சிங்கம் எதுவும் செய்யாமல் இருந்துள்ளது.
அதைத் தொடர்ந்து செய்யப்பட்ட பரிசோதனையில், அதன் இரு கண்களிலும் கண்புரை இருப்பது தெரியவந்தது. பின்னர் சிங்கம் ஜூனாகத்தில் உள்ள சக்கர்பாக் உயிரியல் பூங்காவுக்கு மாற்றப்பட்டு அங்கு அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சக்கர்பாக் உயிரியல் பூங்கா வழங்கிய தகவலின்படி, சிங்கத்தின் கண்களுக்காக லென்ஸ் தயாரிப்பதற்கு, மதுரையைச் சேர்ந்த லென்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தை அணுகியுள்ளனர். இது குறித்த விரிவான காணொளியைப் பார்க்க இங்கே சொடுக்கவும்.
புதுச்சேரியில் கிரண்பேடி பதவிக் காலத்தில், ரூ. 1.28 கோடி மத்திய படை பாதுகாப்பிற்கு செலவு - ஆர்டிஐ தகவல்

புதுச்சேரி மாநிலத்தில் கிரண்பேடி துணைநிலை ஆளுநராக இருந்தபோது, ஆளுநர் மாளிகை பாதுகாப்புக்கு மத்திய பாதுகாப்புப் படைக்கு, சுமார் ரூ.1.28 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.
புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியின் போது, ஓய்வுபெற்ற காவல் அதிகாரியான கிரண்பேடி துணைநிலை ஆளுநராக இருந்தார். மாநிலத்தில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தத் தடையாக இருக்கும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைத் திரும்பப் பெற வலியுறுத்தி, அப்போதைய முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், காங்கிரஸ், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சி தலைவர்கள் ஆளுநர் மாளிகை அருகே தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, கிரண்பேடி பாதுகாப்பைத் தீவிரப்படுத்தினார். இதனால் 4.1.2021 முதல் 18.2.2021 வரையிலான 44 நாட்களுக்கு ஆளுநர் மாளிகையைச் சுற்றி மட்டுமின்றி, அதனை ஒட்டியுள்ள பிற சாலைகளிலும் தடுப்புகள் அமைத்தனர். ஆர்ஏஎப் (Rapid Action Force), சிஐஎஸ்எப் (Central Industrial Security Force) ஆகிய பிரிவுகளின் காவலர்களால் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மத்திய பாதுகாப்புப் படைக்கு ஒன்றுக்கு ரூபாய் 28.42 லட்சமும், அவர்களுக்குப் போக்குவரத்து செலவு ரூபாய் 39.95 லஞ்சமும், சாலை தடுப்புகளுக்கு ரூபாய் 2.87 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக தகவல்களைப் பெற்ற ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி கூறுகையில், ''பாதுகாப்பிற்காக 44 நாட்கள் ஆன செலவு பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் புதுச்சேரி காவல்துறை தலைமையகத்தில் 11.2.2021 அன்று தகவல்களாக கேட்டதற்கு அவர்கள் தகவல்கள் தரவில்லை. மேல்முறையீடு செய்து, புகார் தந்ததற்கு பிறகே தந்தனர்.' என்றார்.
அஃப்ரீன் பாத்திமா வீட்டை இடித்துத் தரைமட்டமாக்கிய உபி அரசு - யார் இவர்?
வந்துகொண்டிருக்கும் செய்தி, அதானி திட்டம்: இந்திய பிரதமர், இலங்கை ஜனாதிபதி தொடர்பாக சர்ச்சை கருத்தை வெளியிட்ட உயரதிகாரி ராஜினாமா

பட மூலாதாரம், CEB SRI LANKA
படக்குறிப்பு, எம்.எம்.சீ.பெர்டினான்டோ இந்திய பிரதமர் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்ட இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ.பெர்டினான்டோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக இலங்கை மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ.பெர்டினான்டோ கையளித்த ராஜினாமா கடிதத்தை தான் ஏற்றுக்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, உப தலைவராக கடமையாற்றிய நலிந்த இலங்ககோன், இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக, நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழுத்தங்களை விடுத்ததாக பொது முயற்சியாண்மை தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு (கோப் குழு) முன்னிலையில் கடந்த 10ம் திகதி எம்.எம்.சீ.பெர்டினான்டோ கருத்து தெரிவித்திருந்தார்.
எனினும், இந்த கருத்து வெளியிடப்பட்டு 24 மணித்தியாலத்திற்குள், அந்த கருத்தை அவர் வாபஸ் பெற்றிருந்தார்.
இதேவேளை, இலங்கை மின்சார சபையின் தலைவர் வெளியிட்ட கருத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக நிராகரித்திருந்தார்.
இந்த நிலையில், இலங்கை மின்சார சபையின் தலைவர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
நேஷனல் ஹெரால்டு: சோனியா குடும்பத்தை சோதிக்கும் ஊழல் புகாரின் கதை
நூபுர் ஷர்மாவிற்கு மேற்கு வங்க காவல்துறை சம்மன்
பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நூபுர் ஷர்மா மீது மேற்கு வங்கத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, நூபுர் ஷர்மா பாரதிய ஜனதா கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடத்தப்படுகின்றன.
மும்பை காவல் துறை இது குறித்து வாக்குமூலம் அளிக்க நூபுர் ஷர்மாவிற்கு, ஏற்கனவே சம்மன் அனுப்பியுள்ளது. இந்நிலையில், மேற்கு வங்கத்தின் நர்கெல்தங்கா காவல் நிலையத்தில் இருந்து அவருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவர் மீது ஐபிசி 153ஏ, 195ஏ, 298, 34 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதி அல்லது அதற்கு முன்னதாக அவர் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
காவிரி மேக்கேதாட்டு அணை விவகாரம்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
காவிரி ஆற்றின் குறுக்கே, மேக்கேதாட்டு அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்த்து, தமிழ்நாடு அரசால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது என்றும், இதுதொடர்பாக உரிய அறிவுரைகளை ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்திற்கு வழங்குமாறும் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
அமெரிக்கா, சீனா இணைந்து இலங்கைக்கு உதவி
இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளன.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு தூதுவர்களுக்கும் இடையில் இன்று முற்பகல் நட்பு ரீதியில், இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு தொடர்பில் சீன தூதரகம் டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக இதனைக் குறிப்பிட்டுள்ளது.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
படிக்காமலே சாதிக்கலாம் என்பது சூழ்ச்சி:கல்வியே முன்னேற்றும் - மு.க.ஸ்டாலின் பேச்சு

பட மூலாதாரம், CMOTamilNadu
படக்குறிப்பு, திருவள்ளுர் மாவட்டம், புழல் ஒன்றியம், அழிஞ்சிவாக்கம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் “எண்ணும் எழுத்தும்” திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார், தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு இன்று தொடங்கின.
தமிழ்நாடு் அரசுப் பள்ளிகளில, எட்டு வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் அடிப்படை கணிதத் திறனுடன், பிழையின்றி எழுதுவதையும் படிப்பதையும் உறுதிசெய்யும் விதமாக 'எண்ணும் எழுத்தும்' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
திருவள்ளூரில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்து பேசுகையில், 'தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களின் தொடர் வாசிப்பு இயக்கத்தால், 200 கோடி சொற்களை வாசித்து, உலக சாதனை படைத்துள்ளனர். கல்வி விலை மதிக்க முடியாதது. கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து.
தமிழ்நாட்டு குழந்தைகள், கல்வியில், அறிவாற்றலில் சிறந்து விளங்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கல்வி மட்டும்தான் நம் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும்.' என்றார்.
மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், 'படிக்காமல் சாதித்த ஒருவரை யாராவது எடுத்துகாட்டாகக் காட்டினால், படித்து சாதித்த லட்சம் பேரை நாம் காட்ட முடியும். படிக்காமல் சாதிக்கலாம் என்று யாராவது சொன்னால், அது தன்னம்பிக்கை ஊட்டுவதல்ல.
வெறும் ஆசை வார்த்தை. இவர்களெல்லாம் படித்து முன்னேறுகிறார்களே என்ற எரிச்சலில், தவறான பாதையைக் காட்டும் சூழ்ச்சி அது. குழந்தைகளே, படிப்பு படிப்பு படிப்பு மட்டும்தான். ' என்றார்.
தொடர்ந்து இணைந்திருங்கள்
வணக்கம்.
நான் ஜோ மகேஸ்வரன். இது வரை நந்தினி வெள்ளைச்சாமி தொகுத்து வழங்கிய நேரலைப் பக்கத்தை இனி நான் வழங்குகிறேன்.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.
குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 8,084 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 8,084 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 10 பேர் இத்தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர் என, இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 47,995ஆக உள்ளது. தினசரி தொற்று விகிதம் 3.24% ஆக உள்ளது.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இதனிடையே, தமிழ்நாட்டில் ஒருநாளில் 249 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 148 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு இல்லை. 1,332 பேர் தற்போது வரை கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியா-சீனா எல்லை விவகாரம்: அமெரிக்க கருத்தில் கோபமடைந்த சீனா - இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
கோவை: யானை தாக்கியதில் வேட்டை தடுப்பு காவலர் காயம்

கோவை மாவட்டம் தீத்திபாளையம் அருகே ஊருக்குள் புகுந்த யானை கூட்டத்தில் இருந்து ஒற்றை யானை திசைமாறி தனித்துச் சென்றது.
தற்போது ஊருக்குள் ஆவேசத்துடன் சுற்றித்திரியும் ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த நாகராஜ் என்ற வேட்டை தடுப்பு காவலரை அந்த யானை தாக்கியதில் காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நூபுர் ஷர்மா விவகாரம் - கவுதம் கம்பீர் கருத்து
நூபுர் ஷர்மா விவகாரம்: “மன்னிப்புக் கேட்ட ஒரு பெண்ணுக்கு எதிராக நாடு முழுவதும் வெறுப்பு காட்டப்படுகிறது; கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது..." - பாஜகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கவுதம் கம்பீரின் இந்த கருத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பதை பிபிசி தமிழின் இந்த ட்விட்டர் பதிவுக்கு சென்று தெரிவியுங்கள்:
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை தொடங்கிவைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், @TNDIPRNEWS
'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.
எட்டு வயதுக்கு உட்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் அடிப்படை கணிதத் திறனுடன், பிழையின்றி எழுதுவதையும் படிப்பதையும் உறுதிசெய்யும் விதமாக 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டது. இந்நிலையில், இத்திட்டத்தை இன்று திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டம் வடகரையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோருடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கழிப்பறை வளாகம், சத்துணவு சமைக்கப்படும் இடம் உள்ளிட்டவற்றை பார்வையிட்ட ஸ்டாலின், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்ப்பாடம் கற்பிக்கப்படுவதையும் வகுப்பறைக்கு சென்று பார்வையிட்டார்.