தமிழகத்தில் கடைகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் மித்தாலி ராஜ் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
எம்.ஆர். ஷோபனா
வணக்கம் நேயர்களே!
நான் எம். ஆர். ஷோபனா. இதுவரை நந்தினி வெள்ளைச்சாமி வழங்கிய நேரலையை இனி நான் தொகுத்து வழங்கவுள்ளேன். உலகம், இந்தியா மற்றும் தமிழக அளவிலான முக்கிய செய்திகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் இரண்டாம் நாளாக தொடரும் ஆய்வு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இரண்டாம் நாளாக ஆய்வு தொடர்ந்து வருகிறது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வுக்கு தீட்சிதர்கள் தொடர்ந்து ஒத்துழைக்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர். சிதம்பரம் சபாநாயகர் கோயில் நிர்வாகம் தொடர்பாக வரப்பெற்ற மனுக்கள் குறித்தும், மேற்கொண்ட கோயில் சட்டவிதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறதா என்பது குறித்தும், கோயிலை நேரடியாக ஆய்வு செய்ய இந்து சமய அறநிலைய துறை விசாரணை குழுவை நியமித்தது.
அதன்படி இரண்டு தினங்களுக்கு சிதம்பரம் நடராஜர் கோயிலில் விசாரணை குழு ஆய்வு செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் நாள் ஆய்வுக்கு இந்து சமய அறநிலையத் துறை சார்பாக விசாரணைக் குழு ஆய்வை மேற்கொண்டது.
முன்னதாக நேற்று காலை கோயிலுக்கு ஆய்வுக்கு வந்த 6 பேர் கொண்ட குழு தீட்சிதர்களை சந்தித்து விசாரணை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி கோயில் நிர்வாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை தன்னிச்சையாக விசாரணை நடத்த முடியாது என்றும், சட்டப்படி அணுகுமாறும் தீட்சிதர்கள் தரப்பில் தெரிவித்து கடிதம் கொடுத்தனர்.
குறிப்பாக நேற்று காலை மற்றும் மாலை மூன்று முறை விசாரணைக் குழு கோயில் பொது தீட்சிதர்களிடம் விசாரணைக்கு ஒத்துழைக்க வலியுறுத்தினர். ஆனால், தொடர்ந்து தீட்சிதர்கள் ஆய்வுக்கு ஆட்சேபனை தெரிவித்து, ஆவணங்களை சமர்ப்பிக்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இரண்டு நாட்கள் ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்ததால், இரண்டாம் நாளான இன்று விசாரணை குழு ஆய்வு செய்ய தொடங்கினர்.
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 91 பேர் கைது

பட மூலாதாரம், SRI LANKA NAVY MEDIA
புத்தளம் - மாரவில பகுதியிலிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்கு செல்ல முயற்சித்த 91 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மாரவில கடலோர பிரதேசத்தில் நேற்றைய தினம் நடத்தப்பட்ட விசேட சுற்றி வளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.இந்த சந்தேகநபர்கள் இருவேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்றிரவு நடத்தப்பட்ட சுற்றி வளைப்பில் 9 முதல் 58 வயதுக்கு இடைப்பட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன், கடற்படைக்கு சொந்தமான விரைவு படகுகளின் ஊடாக நடத்தப்பட்ட விசேட சுற்றி வளைப்பில் படகொன்றில் பயணித்துக்கொண்டிருந்த 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 58 ஆண்களும், 5 பெண்களும், 7 சிறார்களும், ஆட்கடத்தலுடன் தொடர்புடைய 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஒன்று முதல் 62 வயதுக்குட்பட்ட 76 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம், திருகோணமலை, முல்லைத்தீவு, நீர்கொழும்பு, புத்தளம், சிலாபம், கல்பிட்டி, கிளிநொச்சி, புத்தளம், மற்றும் மாரவில ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை கடற்படையினர், சட்ட நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பாரா துப்பாக்கிச்சூடு உலக கோப்பைப் போட்டியில் தங்கம் வென்ற அவனி லெகராவுக்கு பிரதமர் வாழ்த்து
டோக்யோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் பாரா துப்பாக்கிச் சுடும் வீராங்கனை அவனி லெகராவுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டோக்யோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் பாரா துப்பாக்கிச் சுடும் வீராங்கனை அவனி லெகரா பிரான்சில் நடைபெற்ற பாரா துப்பாக்கிச் சுடும் உலகக் கோப்பைப் போட்டியில் செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்குத் தங்கப் பதக்கம் வென்றார்.
அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோதி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "இந்த வரலாற்று சாதனைக்காக அவனி லெகராவுக்கு வாழ்த்துகள். நீங்கள் வெற்றியின் புதிய உயரங்களை எட்டிக்கொண்டே இருக்கவும் மற்றவர்களை ஊக்குவிக்கவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார்.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 17,923 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,000 கன அடியிலிருந்து 17,923 கன அடியாக அதிகரித்துள்ளது. பாசனத்திற்காக அணையிலிருந்து விநாடிக்கு 8,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

பட மூலாதாரம், GETTY IMAGES
அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், "அதிமுக ஆட்சியில் அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்ட எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளை நடப்பு கல்வியாண்டு முதல் மூட அரசு முடிவெடுத்துள்ளதாக பத்திரிகைகளில் வெளிவந்துள்ள செய்தியைப் பார்க்கும்போது 'அழிப்பது சுலபம் ஆக்குவது கடினம்' என்ற பழமொழிதான் என் நினைவுக்கு வருகிறது.
எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் நிறுத்தப்படவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. அப்படியென்றால், எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி மாணவ, மாணவிகளுக்கு எந்த ஆசிரியர்கள் பாடம் எடுப்பார்கள் என்பதற்கு விடை இல்லை. அமைச்சரின் பதில் ஒரு குழப்பமான நிலையை உருவாக்கி உள்ளது. அமைச்சருடைய பதில் 'இருக்கும், ஆனால் இருக்காது' என்பதுபோல் உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, முன்பு இருந்ததைப் போலவே எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டுமென்று அதிமுகவின் சார்பில் வலியுறுத்திக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
வந்துகொண்டிருக்கும் செய்தி, ரெப்போ வட்டி விகிதம் உயர்வு - ரிசர்வ் வங்கி ஆளுநர்

பட மூலாதாரம், ANI
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4.90 ஆக உயர்ந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அப்போது இதனை அவர் தெரிவித்தார்.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
'அடுத்த சில மாதங்களில் இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு' - எச்சரிக்கும் ஐ.நா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 5,233 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 5,233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3,345 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை: 28,857
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
வணக்கம் நேயர்களே!
நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.
குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.
நேற்றைய நேரலை பக்கத்திலிருந்து முக்கியமான செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:
- பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட, நூபுர் ஷர்மாவின் வாக்குமூலத்தை பதிவு செய்ய மும்பை காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
- பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றார். 211 எம்.பி.க்கள் போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவாகவும் 148 எம்.பிக்கள் எதிராகவும் வாக்களித்தனர்.
- எஞ்சிய இரண்டு வருட பதவி காலத்தையும் நிறைவு செய்த பிறகே விலகப்போவதாக, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
- சிதம்பரம் நடராஜர் கோயிலில் நிர்வாக ரீதியான அலுவல் ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத்துறை குழு கோயிலுக்கு சென்றனர். இந்த குழு ஆய்வு செய்ய, தீட்சிதர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.
- இலங்கையில் ஓராண்டு காலத்திற்கு சம்பளத்தை பெற்றுக்கொள்ளாமல் கடமையாற்ற அனைத்து அமைச்சர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
- உத்தரப்பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகங்களை தகர்க்க போவதாக மிரட்டியதாக, புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜா முகமது என்பவரிடம் லக்னௌ காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.