நேயர்களுக்கு வணக்கம்!
இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ:
- வட கொரியா எந்த நேரத்திலும் தமது ஏழாவது அணு ஆயுத சோதனையை நடத்தலாம் என அமெரிக்க அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
- தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்புக்கு பிறகே நூபுர் ஷர்மா விவகாரத்தில் பாஜக நடவடிக்கை எடுத்துள்ளதாக, ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
- புத்தளம் - மாரவில பகுதியிலிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்த 91 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவுடன், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
- இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் மித்தாலி ராஜ் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
- நிதி மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்ட யூட்யூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு பூந்தமல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
- கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில், கண்ணகி சகோதரர் மருதுபாண்டிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணைய தளம், முகநூல், ட்விட்டர், இண்ஸ்டாகிராம் பங்கங்களில் இணைந்திருங்கள்.