தமிழகத்தில் கடைகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் மித்தாலி ராஜ் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம்.ஆர். ஷோபனா

  1. நேயர்களுக்கு வணக்கம்!

    இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ:

    • வட கொரியா எந்த நேரத்திலும் தமது ஏழாவது அணு ஆயுத சோதனையை நடத்தலாம் என அமெரிக்க அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
    • தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
    • இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்புக்கு பிறகே நூபுர் ஷர்மா விவகாரத்தில் பாஜக நடவடிக்கை எடுத்துள்ளதாக, ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
    • புத்தளம் - மாரவில பகுதியிலிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்த 91 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவுடன், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
    • இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் மித்தாலி ராஜ் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
    • நிதி மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்ட யூட்யூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு பூந்தமல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
    • கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில், கண்ணகி சகோதரர் மருதுபாண்டிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணைய தளம், முகநூல், ட்விட்டர், இண்ஸ்டாகிராம் பங்கங்களில் இணைந்திருங்கள்.

  2. முகமது நபியை அவமதிக்கும் எவரையும் கொலை செய்வோம்: அல் காய்தா எச்சரிக்கை

  3. முஸ்லிம் வெறுப்பால் இந்தியா வெளிநாடுகளில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன?

  4. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் அறிவிப்பு

    ஹர்மன்பிரீத் கவுர்

    பட மூலாதாரம், Getty Images

    அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் இன்று அறிவித்த நிலையில், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், துணை கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, வரும் ஜூன் 23ம் தேதி இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கு இடையே மூன்று டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளன.

  5. சிதம்பரம் கோயில் விவகாரம் - "சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்"

    விசாரணை குழு அதிகாரி சுகுமார்

    சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில், பொது தீட்சிதர்கள் ஒத்துழைக்காத காரணத்தினால் அடுத்த கட்டமாக சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என விசாரணைக் குழு அதிகாரி சுகுமார் தெரிவித்துள்ளார்.

    தீட்சிதர்கள் தரப்பில் 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள்காட்டி இந்த விசாரணையை நீதிமன்ற அவமதிப்பு என்று கூறுவது தவறான தகவல் என இந்து சமய அறநிலையத் துறை விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் இரண்டு நாட்கள் ஆய்வு செய்வதற்காக இந்து சமய அறநிலையத் துறை சார்பாக வந்த விசாரணைக் குழுவுக்கு கோயிலை நிர்வகிக்கும் பொது தீட்சிதர்கள் தரப்பில் முழு ஒத்துழைப்பு அளிக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த விசாரணைக் குழு அதிகாரி சுகுமார், "ஆணையரின் உத்தரவுப்படி குறைபாடுகள் என்னென்ன இருக்கின்றன என்பது குறித்து ஒரு குழுவாக ஆவணங்களை ஆய்வு செய்ய வந்தோம். அந்த ஆவணங்களை பார்வையிடவும், ஒப்படைக்கவும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டோம். ஆனால் அவர்கள் ஒத்துழைக்கவில்லை. அதன் காரணமாக அடுத்தகட்டமாக சட்டபூர்வமான நடவடிக்கை என்னவோ அதை நாங்கள் செய்ய இருக்கிறோம்,” என்று தெரிவித்தார்.

  6. தமிழகத்தில் கடைகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி - அரசாணை வெளியீடு

    கடைகள் - அரசாணை

    பட மூலாதாரம், Getty Images

    தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    இந்த அரசாணையில், குறைந்தபட்சம் 10 பேர் கொண்டு கடைகள், ஆண்டில் அனைத்து நாட்களும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 5ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த அரசாணை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இதில், கடைகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும், இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் பணியாற்றக்கூடாது, ஊழியர்களுக்கு கழிவறை உட்பட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து தர வேண்டும் என்பன போன்ற நிபத்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

  7. சிறுவாச்சூர் கோயில் மோசடி: கைதான பாஜக ஆதரவு யூட்யூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன்

  8. ரூ. 300 கோடி அந்திய செலாவணி மோசடி வழக்கு - முக்கிய நபர் நீதிமன்றத்தில் சரண்

    அருண்குமார்
    படக்குறிப்பு, அருண்குமார்

    கோவையை மையமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆல்ஃபா ஃபோரெக்ஸ் என்கிற அந்நிய செலாவணி முதலீடு நிறுவனம் ரூ.300 கோடி வரை மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இந்நிறுவனத்தை கோவையைச் சேர்ந்த விமல் குமார் என்பவர் நடத்தி வந்தார். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆல்ஃபா ஃபோரெக்ஸ் நிறுவனம், விமல் குமார் மீது புகார் அளிக்கப்பட்டது.

    கோவை மாநகர காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு இந்த வழக்குகளை விசாரித்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இந்த வழக்கின் முக்கிய நபரான விமல் குமார் தலைமறைவாக உள்ள நிலையில், அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றிருக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்த நிலையில் வழக்கில் மற்றொரு முக்கிய நபரான அருண்குமார் என்பவர் இன்று கோவை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

    ஆல்ஃபா ஃபோரெக்ஸ் நிறுவனத்தின் மேலாளராக அருண் குமார் பணியாற்றி வந்துள்ளார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் ஏழாவது நபராக இருந்து வந்தார். ஆல்ஃபா ஃபோரெக்ஸ் நிறுவனத்தின் வங்கிக்கணக்குகள் இவர் பெயரில்தான் இயங்கி வந்துள்ளன.

  9. கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கு: தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்பு

  10. மித்தாலி ராஜ் ஓய்வு: இந்திய பெண்கள் கிரிக்கெட் ராணியின் சாதனைகள் என்னென்ன?

  11. "வட கொரியா எந்த நேரத்திலும் அணு ஆயுத சோதனை நடத்தலாம்"

    வட கொரியா

    பட மூலாதாரம், Getty Images

    வட கொரியா எந்த நேரத்திலும் தமது ஏழாவது அணு ஆயுத சோதனையை நடத்தலாம் என அமெரிக்க அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

    சில நாட்களுக்கு முன், எட்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்தது. இந்நிலையில், வட கொரியாவுக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி சுங் கிம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

    அத்தகைய அணு ஆயுத சோதனைக்கு விரைவாகவும், வலுவாகவும் பதிலளிக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் வெண்டி ஷெர்மன் செய்தியாளர்களிடம் கூறினார்.

    கடந்த ஐந்து ஆண்டுகளாக, வட கொரியா அணு ஆயுத சோதனையை நடத்தவில்லை.

    இந்நிலையில், ‘ப்ளூம்பெர்க்’ என்ற செய்தி ஊடகத்தின் தகவல்படி, அடுத்த கட்ட ஏவுகணை சோதனை எப்போது நடத்தப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த வட கொரிய அதிபர் கிம் ஜாங், எந்த நேரத்திலும் நடக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

  12. படேல் சிலையில் தூய்மைப் பணிக்காக போராடும் பழங்குடிப் பெண்கள்

    ஒருமைப்பாட்டு சிலையில் தூய்மைப் பணியாளர்களாக இருந்த 150 பழங்குடியினப் பெண்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். தங்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று அவர்கள் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டம் பற்றிய காணொளி இது.

    காணொளிக் குறிப்பு, படேல் சிலையில் வேலைக்காக போராடும் பழங்குடிப் பெண்கள்
  13. கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கு: தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்பு

    கண்ணகி - முருகேசன்

    பட மூலாதாரம், HANDOUT

    கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில், கண்ணகி சகோதரர் மருதுபாண்டிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கண்ணகியின் தந்தை உள்ளிட்ட பத்து பேருக்கான ஆயுள் தண்டனை உறுதிசெய்யப்பட்டது.

    தமிழ்நாட்டில் 18 ஆண்டுகளுக்கு முன்பு விருத்தாசலம் அருகே நடந்த இந்த ஆணவக் கொலை தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதியன்று கடலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும் மற்ற 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

    இதனை எதிர்த்து தண்டிக்கப்பட்டவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் பி.என். பிரகாஷ் மற்றும் நக்கீரன் அமர்வு விசாரித்து வந்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில், இந்த வழக்கு முதலில் தற்கொலை வழக்காகப் பதிவுசெய்யப்பட்டு பிறகுதான் கொலை வழக்காக மாற்றப்பட்டது என்றும் சம்பத்தை நேரில் பார்த்த சாட்சியங்கள் இல்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பட்டியலினத்தவரும் இருப்பதால், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கைப் பதிவுசெய்தது பொருந்தாது எனவும் வாதிடப்பட்டது. நடந்தது ஆணவக் கொலை என்பது நிரூபிக்கப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், கண்ணகியின் சகோதரர் மருது பாண்டிக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. கண்ணகியின் தந்தை துரைசாமி உட்பட 10 பேருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதிசெய்யப்பட்டது.

    ஏற்கனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த ரங்கசாமி, சின்னதுரை ஆகிய இருவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

  14. இந்தியாவின் கோதுமை ஏற்றுமதித் தடை - உலக நாடுகளுக்கு என்ன பாதிப்பு?

    யுக்ரேன் போர்

    பட மூலாதாரம், Getty Images

    யுக்ரேன் போரை அடுத்து உலக உணவு விநியோக நிலைமை மோசமாகலாம் என்ற விமர்சனத்திற்குப் பிறகும், கோதுமை ஏற்றுமதியைத் தடை செய்யும் முடிவை இந்தியா நியாயப்படுத்துகிறது. "எல்லோரும் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கினால்... அது நெருக்கடியை மோசமாக்கும்" என்று மே மாதம் தடை அறிவிக்கப்பட்ட பிறகு ஜெர்மன் உணவு மற்றும் விவசாய அமைச்சர் செம் ஓஸ்டெமிர் கூறினார். ஆனால், இந்தியாவின் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், ஏற்றுமதித் தடை உலகச் சந்தைகளைப் பாதிக்காது என்று கூறுகிறார். ஏனெனில், இந்தியா ஒரு பெரிய கோதுமை ஏற்றுமதியாளர் அல்ல என்கிறார் அவர். அப்படியென்றால் இந்தியாவின் நடவடிக்கையின் தாக்கம் என்ன?மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்.

  15. நிதி மோசடி வழக்கு - யூட்யூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு ஜாமீன்

    கார்த்திக் கோபிநாத்

    பட மூலாதாரம், KARTHIK GOPINATH-ILAYA BHARATHAM

    மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்ட யூட்யூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு பூந்தமல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

    கோயில் புனரமைப்பு என்ற பெயரில் நிதி வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக யூட்யூபர் கார்த்திக் கோபிநாத் என்பவரை காவல்துறை கடந்த மே 30ஆம் தேதி கைதுசெய்தது. இதையடுத்து, அவர் ஜாமீன் கோரி பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஜூன் 1ஆம் தேதி அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுவைத் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரியும் தன் மீதான எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரியும் உயர் நீதிமன்றத்தை கார்த்திக் கோபிநாத் அணுகினார்.

    இதில், ஜாமீன் விவகாரத்தில் விசாரணை நீதிமன்றமே முடிவு எடுக்க வேண்டும் என்று கூறிய உயர் நீதிமன்றம், எஃப்ஐஆர் ரத்து செய்யும் வழக்கை திங்கட்கிழமையன்று விசாரிப்பதாகத் தெரிவித்தது. இந்த நிலையில், கார்த்திக் கோபிநாத்தின் ஜாமீன் மனு இன்று மீண்டும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

  16. வந்துகொண்டிருக்கும் செய்தி, மித்தாலி ராஜ் ஓய்வு

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் மித்தாலி ராஜ் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    39 வயதாகும் மித்தாலி ராஜ் ஒரு நாள் போட்டிகளில் 7805 ரன்கள் எடுத்து உலகிலேயே மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

    89 டி20 போட்டிகளிலும் 12 டெஸ்ட் போட்டிகளிலும் இவர் விளையாடியுள்ளார்.

    இவர் தலைமையிலான இந்திய மகளிர் அணி 2017இல் உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை சென்றது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    mithali raj retirement

    பட மூலாதாரம், Getty Images

  17. அண்ணாமலை கருத்துக்கு சீமான் பதில்

    2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவளிக்குமாறு அழைப்பு விடுத்த அண்ணாமலைக்கு சீமான் பதில் - இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

    பிபிசி தமிழின் ட்விட்டர் பக்கத்தில் உங்கள் கருத்துகளை பகிருங்கள்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  18. 'முகமது நபியை அவமதிக்கும் யாரையும் கொலை செய்வோம்': அல்-கய்தா

  19. சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பிரதமர் ரணில் பேச்சுவார்த்தை

    இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க

    பட மூலாதாரம், PMM

    சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவுடன், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

    இந்த கலந்துரையாடல் நேற்று (ஜூன் 7) மாலை இடம்பெற்றதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

    இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமை குறித்து, இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

    சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் மட்டத்திலான குழு விரைவில் இலங்கைக்கு வருகை தருவதன் மூலம், பணியாளர் மட்டத்திலான உடன்படிக்கையை முடிவு செய்ய முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

    தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்திவதற்கான நிதி அளிப்பது (பிரிட்ஜிங் நிதி) தொடர்பான பேச்சுவார்த்தைகள், இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் அளவிலான உடன்படிக்கையை நம்பியிருப்பதாகவும் பிரதமர் விளக்கமளித்துள்ளார்.

    இந்த நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு உதவிகளை வழங்க தமது விருப்பத்தை சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

  20. "கர்நாடகாவில் மேகதாது அணையை கட்டும் பணிகள் தொடர்ந்தால் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவோம்"

    பி.ஆர்.பாண்டியன்

    தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், "கர்நாடகாவில் மேகதாது அணையை கட்ட அம்மாநில அரசு நடவடிக்கையை தொடர்ந்தால் தமிழகத்தில் விவசாயிகள் அனைவரையும் ஒன்றிணைத்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்," என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், "குறித்த தேதிக்கு முன்னதாக மேட்டூர் அணையை திறந்தும் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு பயன் இல்லை.

    அணையில் இருந்து குறைந்தபட்சம் விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்தால் மட்டுமே கடைமடை வரை தண்ணீர் வந்தடையும்.

    தண்ணீரை எதிர்பார்த்து இதுவரை குறுவை சாகுபடியை தொடங்காமல் இருக்கும் விவசாயிகள் விரைந்து சாகுபடியைத் தொடங்க காலம் தாழ்த்தாது உடனடியாக அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும்," என்றார்.