காஷ்மீர் படுகொலைகள்: ராணுவ தளபதியுடன் அமித் ஷா ஆலோசனை

காஷ்மீர் தொடர் படுகொலைகள் குறித்து இந்திய உள்துறை அமைச்சர், ராணுவ தளபதி, ஆளுநர் மற்றும் அதிகாரிகள்கொண்ட உயர்மட்ட குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது

    வணக்கம்.

    இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.

    இதுவரையிலான இன்றைய முக்கிய செய்திகள்.

    • கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
    • இலங்கையில் பாணந்துறை, பேருவளை ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட இருவேறு துப்பாக்கி பிரயோகங்களில் 2 பேர் உயிரிழந்தனர். இன்று முற்பகல் நடத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
    • ரஷ்யா யுக்ரேனின் 20 சதவீதத்தை கைபற்றியதாக யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
    • காஷ்மீர் தொடர் படுகொலைகள் குறித்து இந்திய உள்துறை அமைச்சர், ஆளுநர் மற்றும் உயரதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினார்.
    • சென்னை அருகே உள்ள ஃபோர்டு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • சீர்திருத்தங்களால் இந்தியா வலிமையுள்ள நாடாகியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
    • ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், ஞானவாபி விவகாரம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ஒவ்வொரு மசூதியிலும் ஏன் சிவலிங்கத்தைத் தேடுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணைய தளம், முகநூல், ட்விட்டர், இண்ஸ்டாகிராம் பக்கங்களில் பக்கங்களில் இணைந்திருங்கள். நன்றி

  2. ஐஏஎஸ் கனவு: தமிழ் வழியில் படித்து சிறு வயது லட்சியத்தை அடையும் நிலையில் தஞ்சாவூர் ஏஞ்சலின்

  3. ஒவ்வொரு மசூதியிலும் ஏன் சிவலிங்கத்தை தேட வேண்டும்? ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கேள்வி

  4. பறந்து சென்ற பாடும் நிலா நினைவுகள்: "மனிதர்கள் இருக்கும் வரை எஸ்.பி.பி. குரல் ஒலிக்கும்"

  5. பிபிசி தமிழுக்கு பொன்னையன் பேட்டி: "தமிழ்நாட்டுக்கு ஏற்ப பாஜக கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும்"

  6. காஷ்மீர் படுகொலைகள் - ராணுவ தளபதியுடன் அமித் ஷா ஆலோசனை

    காஷ்மீர் தொடர் படுகொலைகள் குறித்து இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ தளபதி, ஆளுநர் மற்றும் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்து வருகிறார்.

    இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரின் குல்காம் பகுதியில் வங்கி மேலாளர் விஜய்குமார் நேற்று தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஒரு மாத காலத்தில் அங்கு, 4வது நபர் கொல்லப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், காஷ்மீரில் தற்போதுள்ள சூழ்நிலை, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உயர்மட்டக் குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இதில், ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், காஷ்மீர் டிஜிபி தில்பேக் சிங், உள்துறை செயலாளர் அஜய் பல்லா, மத்திய ரிச்ர்வ் போலீஸ் இயக்குநர் குல்தீப் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. அமெரிக்காவின் மத சுதந்திர அறிக்கை: “இந்தியாவில் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் அதிகரிப்பு”

  8. ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை விற்பனை - போலி ஆவணம் தயாரித்தவர் தலைமறைவு

    சிறுமி கருமுட்டை விற்பனை

    பட மூலாதாரம், Getty Images

    ஈரோட்டில் தாயே தனது 16 வயது மகளின் கருமுட்டையை விற்பனை செய்த விவகாரத்தில், போலி ஆவணம் தயாரித்த நபர் தலைமறைவாகியுள்ளார்.

    ஈரோடு மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பெண்ணிற்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார். கணவரைப் பிரிந்து மற்றொருவருடன் வசித்து வருகிறார். சிறுமியின் தாய், தனியார் மருத்துவமனைகளில் தனது கருமுட்டையை விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

    தனது மகளையும் கருமுட்டை விற்பனை செய்வதில் ஈடுபடுத்தியுள்ளார். சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்வதற்கு, அவரது வயது அதிகமாக இருக்க வேண்டும் என்பதால், போலி ஆவணங்களை தயார் செய்து உள்ளனர்.

    ஈரோடு, சேலம், பெருந்துறை, ஓசூர் ஆகிய இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு சிறுமியை அவரது தாயும் இடைத்தரகர் மாலதியும் அழைத்துச் சென்று, கருமுட்டையை விற்பனை செய்துள்ளனர்.

    இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி அவர்களிடமிருந்து சிறுமி தப்பியுள்ளார். உறவினர் வீட்டிற்கு சென்று தஞ்சம் அடைந்துள்ளார் . உறவினர்கள் சிறுமியை அழைத்துக் கொண்டு ஈரோடு சூரம்பட்டி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தாய், அவரது கணவர், புரோக்கர் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    அவர்களுக்கு போலி ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தயாரித்த ஈரோட்டைச் சேர்ந்த நபர் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

  9. BBC தமிழ் இணைய தளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டிய செய்திகள்

  10. அதிமுகவிற்கு பாஜக துரைசாமி சான்றளிக்க வேண்டியதில்லை - எடப்பாடி பழனிச்சாமி

    ஓபிஎஸ் - இபிஎஸ்

    பட மூலாதாரம், ADMK Official

    அதிமுக செயல்பாடு குறித்து பாஜக மாநில துணைத் தலைவர் சான்றளிக்க வேண்டிய அவசியமில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

    அதிமுக சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியின்றி தேர்வு பெற்ற சி.வி.சண்முகம், தர்மர் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான சான்றிதழை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இன்று பெற்றுக் கொண்டனர்.

    இதையடுத்து, தலைமை செயலகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், "காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதால், சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. இதனால், தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. கொலை நடக்காத நாட்களே இல்லை என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை..'' என்றார்.

    ரெய்டுக்கு பயந்து ஊழல் குறித்து, அதிமுக சட்டப்பேரவையில் பேசுவதில்லை. நாங்கள்தான் உணமையான எதிர்க்கட்சி என்று பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறியது குறித்து கேட்டதற்கு,

    'அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைத்துக் கூட பார்க்க முடியாது. அவர் எந்தக் கட்சியில் இருந்து சென்றவர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் போல கட்சி மாறி செல்பவர்கள். நாங்கள் இல்லை. அதிமுகவின் சட்டப்பேரவை செயல்பாடு மக்களுக்கு நன்கு தெரியும். வி.பி.துரைசாமி சான்றளிக்க வேண்டிய அவசியமில்லை' என்றார்.

  11. ஆரணியில் சிக்கன் சாப்பிட்டு மாணவன் இறந்ததாகப் புகார், கடையை மூட உத்தரவு: என்ன நடந்தது?

  12. மு.கருணாநிதி பிறந்த நாள்: எழுத்தாளர்களுக்கு விருதுகள், வீடுகள் - மு.க.ஸ்டாலின் வழங்கினார்

    விருது பெறும் ஆரூர் தாஸ்

    பட மூலாதாரம், CMOTamilnadu

    படக்குறிப்பு, விருது பெறும் ஆரூர் தாஸ்

    தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் திமுக முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு, 'கலைஞர் எழுதுகோல் விருது', 'கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது' & 'கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் 6 பேருக்குக் குடியிருப்பு ஆணைகள் உள்ளிட்டவை இன்று வழங்கப்பட்டன.

    சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுத்தாளர்களுக்கு இன்று வழங்கினார். இதன்படி, மூத்த பத்திரிகையாளர் . ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருது, ரூ. 5 லட்சத்திற்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழை முதலமைச்சர் வழங்கினார்.

    தொடர்ந்து, சாகித்திய அகாதமி விருது, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது ஆகிய விருதுகளைப் பெற்ற ந.செகதீசன் என்கிற ஈரோடு தமிழன்பன், கவிஞர் புவியரசு என்கிற சு.ஜகன்னாதன், முனைவர் இ.சுந்தரமூர்த்தி, பூமணி என்கிற பூ.மாணிக்கவாசகம், முனைவர் கு.மோகனராசு, இமையம் என்கிற வெ.அண்ணாமலை ஆகிய ஆறு எழுத்தாளர்களுக்கும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.

    மேலும், கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது, 10 லட்சத்திற்கான காசோலையினை, புகழ்பெற்ற திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸுக்கு முதலமைச்சர் வழங்கினார்.

    கருணாநிதி பிறந்த நாள் விருதுகள்

    பட மூலாதாரம், CMOTamilnadu

    படக்குறிப்பு, எழுத்தாளர்களுடன் மு.க.ஸ்டாலின்
  13. பிபிசி தமிழுக்கு பொன்னையன் பேட்டி: "தமிழ்நாட்டுக்கு ஏற்ப பாஜக கொள்கையை மாற்றிக்கொள்ளவேண்டும்"

  14. காஷ்மீர் தொடர் படுகொலைகள் - ஆளுநர், அதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை

    காஷ்மீர் கொலைகள்

    பட மூலாதாரம், Khursheed Alam

    காஷ்மீர் தொடர் படுகொலைகள் குறித்து இந்திய உள்துறை அமைச்சர், ஆளுநர் மற்றும் உயரதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.

    இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரின் குல்காம் பகுதியில் வங்கி மேலாளர் விஜய்குமார் நேற்று தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஒரு மாத காலத்தில் அங்கு, 4வது நபர் கொல்லப்பட்டுள்ளார்.

    இதையடுத்து, காஷ்மீரில் தற்போதுள்ள சூழ்நிலை, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காஷ்மீர் துணைநிலை ஆளுநருடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், காஷ்மீர் டிஜிபி தில்பேக் சிங், உள்துறை செயலாளர் அஜய் பல்லா, மத்திய ரிச்ர்வ் போலீஸ் இயக்குநர் குல்தீப் சிங் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

  15. 'விக்ரம்' திரைப்படம் குறித்து ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?

  16. ஃபோர்டு தொழிற்சாலையில் 5வது நாளாக போராட்டம்

    ஃபோர்டு தொழிலாளர்கள் போராட்டம்
    படக்குறிப்பு, ஃபோர்டு தொழிலாளர்கள் போராட்டம்

    சென்னை அருகே உள்ள ஃபோர்டு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் ஃபோர்டு தொழிற்சாலையில் "தொழிற்சாலைக்குள் நுழைந்தால் நான், எந்தவொரு ஆர்ப்பாட்டமும் செய்யாமல், நிர்வாகத்திற்கு கட்டுப்பட்டு என் வேலை உண்டு. நான் உண்டு என்றிருப்பேன்'' என்ற ஒரு படிவத்தை கொடுத்து, நுழைவு வாயிலிலேயே கையெழுத்திட சொல்கிறார்கள் என்றும்

    அவ்வாறு கையெழுத்திட்டால் மட்டுமே தொழிற்சாலைக்குள் அனுப்புவோம் என்கின்ற நிர்வாக உத்தரவை எதிர்த்து, தொழிற்சாலையின் உள்ளேயும், வெளியிலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும், ஊக்க தொகை, ஓய்வூதியம் உள்ளிட்டவை குறித்த பேச்சுவார்த்தையில் இதுவரை உடன்பாடு எட்டப்படாத நிலையில் தொழிலாளர்களை தமிழ்நாடு அரசு கைவிட்டதாகவும், ஃபோர்டு நிர்வாகமும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அக்கறை இன்றி இருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 1996ஆம் ஆண்டில் சென்னைக்கு அருகில் மறைமலைநகர் கீழக்கரணை கிராமத்தில் கார் தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவியது. இங்கு ஃபோர்டு ஐகான், ஃபோர்டு என்டவர், ஃபோர்டு ப்யூஷன், ஃபோர்டு, பியஸ்டா உள்ளிட்ட 9 வகையான கார்களை தயாரிக்கின்றனர்.

    ஃபோர்டு தொழிலாளர்கள் போராட்டம்
    படக்குறிப்பு, ஃபோர்டு தொழிலாளர்கள் போராட்டம்
  17. உணவகங்களில் சர்வீஸ் சார்ஜ் செலுத்துவது கட்டாயப்படுத்தப்படுகிறதா?

  18. விக்ரம்: எப்படி இருக்கிறது படம்?

  19. இந்தியா சீர்திருத்தங்களால் வலுவாகியுள்ளது - பிரதமர் நரேந்திர மோதி

    சீர்திருத்தங்களால் இந்தியா வலிமையுள்ள நாடாகியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

    உத்தரபிரதேச மாநிலம் லக்னேளவில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்றுள்ளார். அப்போது அவர் பேசுகையில், ''ஒரே நாடு ஒரே வரி ஜிஎஸ்டி, ஒரே நாடு ஒரே ரேசன் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் நம்முடைய தெளிவான திட்டங்களை வெளிப்படுத்துகின்றன.

    சீர்திருத்தங்களால் வலிமையான இந்தியாவை உருவாக்கியுள்ளோம். உலக நாடுகள் இந்தியாவின் திறனை பார்த்து பாராட்டுகின்றன. ஜி 20 நாடுகளின் பொருளாதாரத்தில், இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது.

    சில்லறை வர்த்தக குறியீட்டில் உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளோம்.'' என்று பிரதமர் தெரிவித்தார்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  20. வந்துகொண்டிருக்கும் செய்தி, இலங்கையில் துப்பாக்கிச் சூடு - இருவர் உயிரிழப்பு, ரஞ்சன் அருண் பிரசாத்

    இலங்கையில் பாணந்துறை, பேருவளை ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட இருவேறு துப்பாக்கி பிரயோகங்களில் 2 பேர் உயிரிழந்தனர்.

    இலங்கையில் நடைபெற்ற இந்த துப்பாக்கி பிரயோகங்கள் இன்று முற்பகல் நடத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

    பேருவளை - மொரகல்ல பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மொரகல்ல - மருதானை வீதியூடாக சிறிய ரக லாரியில் பயணித்த நபர் மீது, துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

    இளநீர் கொண்டு சென்ற ஒருவர் மீதே, இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. பேருவளை பகுதியைச் சேர்ந்த 43 வயதான ஒருவரே இந்த துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.

    இதேவேளை, பாணந்துறை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாணந்துறை - நிர்மல மாவத்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களினால், இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் ஊடாக தெரிய வந்துள்ளது.

    இந்த இருவேறு துப்பாக்கி பிரயோகங்களும் நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், போலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.