You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நேஷ்னல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன்
நேஷ்னல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
ஜோ மகேஸ்வரன்
காங்கிரஸ் கட்சியில் தொண்டர்கள் இல்லை - ஜெ.பி.நட்டா
காங்கிரஸ் கட்சியில் மகாமந்திரிகள், மந்திரிகள் உள்ளனர் ஆனால், தொண்டர்கள் இல்லை என்று பா.ஜ.க தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா மத்திய பிரதேசத்தில் உள்ள விமான நிலையத்தில் கூறுகையில், "காங்கிரஸ் கட்சிக் தொண்டரை நேற்று நான் சந்தித்தேன். காங்கிரஸ் கட்சியில் 40 மகாமந்திரிகள், 156 மந்திரிகள் உள்ளனர். ஆனால், தொண்டர்கள் இல்லை என்று அவர் என்னிடம் கூறினார்.' என்றார்.
மேலும், 'தேசத்திற்கு முதலிடம் என்ற கொள்கையை பா.ஜ.க பின்பற்றுகிறது. நாட்டுக்கு உழைக்க வேண்டும் என்கிற தொண்டர்களால், உலகின் மிகப்பெரிய கட்சியாக பாஜகவை மாற்றியுள்ளனர்.'' என்றும் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகுமார் குன்னத் உடலில் காயங்கள் - விசாரணையைத் தொடங்கிய கொல்கத்தா போலீஸ்
போலி ஆவணங்கள் மூலம் ரூ.97 லட்சம் மோசடி - வங்கி மேலாளர் கைது
இல்லாத மகளிர் சுய உதவி குழுக்களுக்கு போலி ஆவணத்தைக் கொண்டு, கடன் வழங்கி ரூ. 97 லட்சம் மோசடி செய்ததாக வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் குடியாத்தம் கிளையில், கடந்த 2018 - 19ம் ஆண்டுகளில் மேலாளராக பணியாற்றியவர் உமா மகேஸ்வரி. அப்போது, போலி ஆவணங்கள் தயாரித்து, குடியாத்தம் நகரை சுற்றியுள்ள கிராமங்களில், இல்லாத மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுமார் 97 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கி, மோசடி செய்துள்ளதாக கண்டறியப்பட்டது.
இது குறித்து, கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் அளித்த புகாரையடுத்து வேலூர் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், தற்போது வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி வரும் உமா மகேஸ்வரியை போலீசார் கைது செய்தனர்.
கடைமடைக்கு சென்ற காவிரி - விவசாயிகள் மலர் தூவி வழிபாடு
காவிரியின் கடைமடை மாவட்டமான மயிலாடுதுறைக்கு சென்று சேர்ந்த தண்ணீரை விவசாயிகள் மலர்தூவி வரவேற்றனர்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையினால், நடப்பாண்டில் வழக்கத்தை விட முன்னதாகவே, மேட்டூர் அணை குறுவை சாகுபடிக்காக மே 24ம் தேதி திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து 27ம் தேதி திறக்கப்பட்டது.
இன்று அதிகாலை(01ம் தேதி) மயிலாடுதுறை மாவட்ட எல்லையான திருவாலங்காடு காவிரி, ஆற்றின் தலைப்பு பகுதியில் உள்ள நீர் தேக்கிக்கு தண்ணீர் வந்தடைந்தது. நீர்வளத்துறை, பொதுப்பணித்துறையினர், விவசாயிகள் மலர்தூவி வழிபாட்டனர். சிறப்பு பூஜைக்கு பிறகு காவிரி மதகுகளின் கதவுகளைத் திறந்து, தண்ணீரை திறந்து விட்டனர்.
முதல் கட்டமாக 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் குடகு பகுதியில் உற்பத்தியாகும் காவிரி, சுமார் 800 கி.மீ தூரம் கடந்து, மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் பகுதியில் கடலில் கலக்கிறது.
ஹார்ட் அட்டாக், கார்டியாக் அரெஸ்ட் - வேறுபாடு என்ன?
தொடர்ந்து இணைந்திருங்கள்
வணக்கம்.
நான் ஜோ மகேஸ்வரன். இதுவரை க.சுபகுணம் வழங்கிக் கொண்டிருந்த நேரலைப் பக்கத்தை இனி நான் தொகுத்து வழங்குகிறேன். தொடர்ந்து இணைந்திருங்கள்.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.
குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
மதுரை மாநகராட்சி பணியாளர்களின் 28 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற ஆட்சியர் வாக்குறுதி
மதுரை மாநகராட்சி பணியாளர்களின் 28 அம்ச கோரிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாகவும்மக்கள் நலன் கருதி பணிக்குச் செல்வதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
மதுரை மாநகராட்சி தூய்மை மற்றும்பொறியியல் பிரிவு பணியாளர்கள் 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியது.
கோரிக்கைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் எழுத்துபூர்வமாக உறுதி அளித்ததையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், “மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் 8 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் முன்னிலையில் நடைபெற்ற 5 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.மாநகராட்சி நிர்வாகம் கோரிக்கை நிறைவேற்றுவது தொடர்பாக எழுத்துப் பூர்வமாக உத்திரவாதம் அளித்தது,” எனக் கூறினார்.
இலங்கையிலிருந்து அகதிகளாக தனுஷ்கோடி வந்த இலங்கைத் தமிழர் குடும்பம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த கோதண்டராமர் கடற்கரைக்கு வந்துள்ளனர்.
இவர்களை மீட்ட மெரைன் போலீசார் ராமேஸ்வரம் மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு 83 இலங்கை தமிழர்கள் அகதிகளாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
"பாஜக-வின் வளர்ச்சி அதிமுகவுக்கு நல்லதல்ல" - முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன்
பாஜக அதிமுகவின் கூட்டணிக் கட்சிதான் என்றாலும் அதன் வளர்ச்சி அதிமுகவுக்கு நல்லதல்ல என்று முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் தெரிவித்துள்ளார். அக்கட்சியின் ஜெயலலிதா பேரவையின் பயிற்சிப் பட்டறையில் பேசிய பொன்னையன் இதைக் கூறினார்.
அதிமுகவின் இந்த பயிற்சிப் பட்டறையில் பேசிய பொன்னையன், "பாஜகவின் வளர்ச்சி கட்சிக்கோ, தமிழ்நாட்டிற்கோ, திராவிடக் கொள்கைகளுக்கோ நல்லதல்ல என்று கூறினார். தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராக பாஜக செயல்படுவதாகக் கூறிய பொன்னையன், காவிரி பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னை போன்றவற்றில் இரட்டை நிலைப்பாடுகளை எடுப்பதாகக் கூறினார்.
தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தரக் கூடாது என கர்நாடக மாநில பாஜக கூறிவரும் நிலையில், தமிழ்நாட்டு பா.ஜ.க. அதை வேடிக்கை பார்த்து வருவதாகவும்.' தெரிவித்தார்.
அதிமுகவின் ஐடி விங், பாஜகவை சமூக வலைதளங்கள் மூலம் அம்பலப்படுத்த வேண்டுமென்றும் மிகக் கவனமாக இருக்க வேண்டுமென்றும் பாஜக தமிழ்நாட்டிற்கு ஆதரவாகத் தனது கொள்கைகளை மாற்றிக் கொண்டால் மட்டுமே, இங்கு வளர முடியும்.' என்றும் பொன்னையன் கூறினார்.
“இந்தியாவில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வரப்படும்” – மத்திய அமைச்சர் பிரஹலாத் படேல்
இந்தியாவில் விரைவில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் படேல் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூருக்கு, ‘கரிப் கல்யான் சம்மேளனத்தில்’ கலந்து கொள்வதற்காக மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் செவ்வாய்க்கிழமை சென்றிருந்தார்.
பிடிஐ செய்தி முகமையின்படி, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுச் சட்டம் குறித்து படேலிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, “அது விரைவில் கொண்டு வரப்படும், கவலைப்பட வேண்டாம். இத்தகைய வலுவான மற்றும் பெரிய முடிவுகள் எடுக்கப்படும்போது, இதேமாதிரியான வேறு முடிவுகளும் எடுக்கப்படும்,” என்று கூறினார்.
ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதிகளைக் குறிவைத்து நடத்தப்படும் கொலைகள் குறித்து அவர் கூறுகையில், “பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகான நிலைமையைப் பற்றிப் பேசுபவர்கள், 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்வதற்கு முந்தைய காலத்துடன் அதை ஒப்பிடுகிறார்கள். இலக்கு வைத்துக் கொல்லப்படும் போதெல்லாம், அதற்குப் பின்னால் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆதரவு சக்திகள் எனப் பல காரணங்கள் உள்ளன.
மேலும், “பயங்கரவாதிகளின் கடைசியாக முயற்சியாக நான் இதைக் கூறுவேன். இந்திய அரசு, இந்திய ராணுவம், துணை ராணுவப் படைகள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை முழு அர்ப்பணிப்புடன் தங்கள் கடமைகளைச் செய்கிறது. பயங்கரவாதிகள் வேரோடு பிடுங்கப்படுவார்கள்,” என்றும் பிரஹலாத் படேல் கூறினார்.
"பயங்கரவாதிகளின் கடைசி முயற்சி என்று நான் கூறுவேன். இந்திய அரசு, நமது ராணுவம், துணை ராணுவப் படைகள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீசார் முழு அர்ப்பணிப்புடன் தங்கள் கடமைகளை செய்கிறார்கள், பயங்கரவாதிகள் வேரோடு பிடுங்கப்படுவார்கள்" என்று படேல் கூறினார்.
வணக்கம் நேயர்களே!
நான் க.சுபகுணம். பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.
குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள். உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.