இன்றைய நேரலை நிறைவுபெறுகிறது
வணக்கம். இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து நேரலைப்பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.
இதுவரையிலான இன்றைய முக்கிய நிகழ்வுகள்.
- தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு மொத்தம் 86, 912 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில், தமிழ்நாட்டுக்கு ரூ. 9, 602 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- இலங்கையின் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியாக ஜெனரல் ஷவேந்திர சில்வா, ராணுவ தளபதியாக விக்கும் லியனகே நியமிக்கப்பட்டுள்ளனர்.
- நேபாளின் மஸ்டாங் மாவட்டத்தில், விமான விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து தற்போது கருப்புப் பெட்டி கிடைத்துள்ளது.
- தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது நாளாக இன்றும் ஆய்வு செய்தார். இந்த ஆண்டும் அதிக நெல் சாகுபடி , அதிக மகசூல் கிடைக்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- திண்டுக்கல் மாவட்டத்தில் அரசியல் கட்சி சார்பான கருத்துகளை முகநூலில் பகிர்ந்து வந்த காவலரை பணியிடை நீக்கம் செய்து, காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
- உலகின் முதல் நிலை வீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த்.
- திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள், விடுதலை செய்யக்கோரி 12வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம். இதில், உடல்நலம் பாதிக்கப்பட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய, பிபிசி தமிழ் இணையதளம், முகநூல், ட்விட்டர், இண்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ந்து இணைந்திருங்கள்.





