லடாக் வாகன விபத்து - ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழப்பு

தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம்.ஆர். ஷோபனா

  1. கச்சத்தீவில் கண்டது என்ன? உயிர் பயம் காட்டிய படகு அனுபவம் - ஒரு செய்தியாளரின் பயணக்குறிப்பு

  2. ராமேஸ்வரம் பாலியல் வன்கொடுமை வழக்கு - இருவர் மீதான குற்றச்சாட்டு உறுதி

    ராமேஸ்வரம் பாலியல் வன்கொடுமை வழக்கு

    ராமேஸ்வரம் அருகே வடகாடு பகுதியில் மீனவப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், செவ்வாய்க்கிழமை இரவு ஆறு வடமாநில இளைஞர்களை காவல்துறை கைது செய்தது. இதில், இருவர் இவ்வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் என காவல்துறை தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அந்த இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விசாரணையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் ரஞ்சன் ராணா ஆகிய இருவரும் அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்முறை செய்து அவர் அணிந்திருந்த தங்க ஆபரணம் மற்றும் வெள்ளி பொருளை அவரிடமிருந்து கொள்ளையடித்து, அதை நகைக்கடை ஒன்றில் விற்பனை செய்ய முயற்சி செய்தது தெரியவந்துள்ளது.

    கைது செய்யப்பட்ட இருவரும் இன்று மாலை ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுடன் கைது செய்யப்பட்ட மேலும் 4 வட மாநில இளைஞர்களுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லை என்பதால் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

  3. வணக்கம் நேயர்களே!

    நான் எம். ஆர். ஷோபனா. இதுவரை நந்தினி வெள்ளைச்சாமி வழங்கிய நேரலையை இனி நான் தொகுத்து வழங்கவுள்ளேன். உலகம், இந்தியா மற்றும் தமிழக அளவிலான முக்கிய செய்திகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்.

  4. திறந்தவெளியில் மலம் கழித்தல்: 6-வது இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டு ஊரகப் பகுதி

  5. மதுரை - தேனி அகல ரயில் பாதை: முதல் பயணம் தொடங்கியது

    மதுரை - தேனி அகல ரயில் பாதை

    மதுரை - தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே அமைக்கப்பட்ட புதிய அகல ரயில் பாதையின் முதல் ரயில் பயணம் மதுரை சந்திப்பில் இன்று காலை தொடங்கியது.

    மதுரை - தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே இருந்த மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில், இத்திட்டத்தை பிரதமர் மோதி நேற்று சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து இன்று காலை மதுரை சந்திப்பில் மதுரை - தேனி ரயில், பயணிகள் மகிழ்ச்சி, ஆரவாரத்திற்டையே தனது முதல் பயணத்தை தொடங்கியது.

  6. திண்டுக்கல் - லோயர் கேம்ப் அகல ரயில் பாதை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் - ஓ.பி.ரவீந்திரநாத்

    ஓ.பி.ரவீந்திரநாத்

    விரைவில் திண்டுக்கல் லோயர் கேம்ப் அகல ரயில் பாதை திட்டம் செயல்படுத்தப்படும் என, அதிமுக எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார்.

    90.4 கி.மீ தூரமுடைய மதுரை - போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை வழித்தடத்தில், தற்போது தேனி வரையில் உள்ள 75 கி.மீ தூரமுடைய பணிகள் முடிவடைந்தது.‌ இதனை பிரதமர் நரேந்திர மோதி நேற்று சென்னையில் நடைபெற்ற விழாவில் காணொளி காட்சி வாயிலாக கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    இதனையொட்டி நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.‌ 11 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் இருந்து புறப்பட்டு தேனி வந்தடைந்த ரயிலை மாவட்ட மக்கள் ஆரவாரத்துடன் உற்சாகமாக வரவேற்றனர்.

    விழாவில் பங்கேற்ற ரவீந்திரநாத் எம்.பி. உள்ளிட்டோர் மலர் தூவி தேனி வந்த ரயிலை வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரவீந்திரநாத் கூறுகையில், "தேனியில் இருந்து போடி இடையிலான 15 கிலோமீட்டர் தூர ரயில் பாதையும் மூன்று மாதத்தில் நிறைவு பெறும். தொடர்ந்து போடியில் இருந்து சென்னை வரையிலான ரயில் சேவை தொடங்கிவிடும்.

    திண்டுக்கல் - லோயர்கேம்ப் ரயில் சேவை திட்டத்திற்காக கடந்த குளிர்கால கூட்டத்தொடரில் தெரிவித்தேன். அதன் தொடர்ச்சியாக இந்த திட்டத்திற்கான டி.பி.ஆர் ரிப்போர்ட் தயார் செய்வதற்கு ரயில்வே துறை அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி பிரதமரிடம் இதனை எடுத்துரைத்து தேனி மாவட்டத்திற்கு இத்திட்டத்தை விரைவில் கொண்டு வருவேன்" என்றார்.

  7. தாய்மொழிக்கு ஊக்கமளிக்கும் வகையில் கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின்

    மு.க.ஸ்டாலின்

    பட மூலாதாரம், GETTY IMAGES

    படக்குறிப்பு, மு.க.ஸ்டாலின் - கோப்புப்படம்

    தாய்மொழிக்கு ஊக்கமளிக்கும் வகையில் கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

    சென்னை பள்ளிக்கரணையில் தனியார் பள்ளிக்கூடத்தை இன்று திறந்துவைத்து தமிழ்நாடு முதலமைச்சர் பேசுகையில், "அரசின் சார்பில் 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறோம். இதன்மூலம் பள்ளிகளிலிருந்து இடைநின்ற லட்சக்கணக்கான மாணவர்களை நாங்கள் மீண்டும் பள்ளிகளில் சேர்த்துள்ளோம். கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது.

    மாணவ, மாணவிகள் உண்மையுடனும் ஒழுக்கத்துடனும் வாழ வேண்டும். தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    தாய்மொழிக்கு ஊக்கமளிக்கும் வகையில் கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும். கல்வி நிறுவனங்களின் மிகச் சிறந்த திட்டங்களுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    தாய்மொழி பற்றும் தாய்நாடு பற்றும் ஒவ்வொரு மனிதனுக்கும் மிகமிக முக்கியம் என்பதன் அடிப்படையில் இந்த வேண்டுகோளை வைக்கிறேன்" என தெரிவித்தார்.

  8. இலங்கை நெருக்கடி: "ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பட்டினியால் மக்கள் இறக்கும் நிலை ஏற்படும்"

  9. கீதாஞ்சலி ஸ்ரீ: சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் இந்திய மொழி எழுத்தாளர்

    கீதாஞ்சலி ஸ்ரீ

    பட மூலாதாரம், ANDREW FOSKER/SHUTTERSTOCK/BOOKER PRIZES

    இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ இலக்கியத்திற்காக வழங்கப்படும் புகழ்வாய்ந்த சர்வதேச புக்கர் பரிசை வென்றுள்ளார். இதன்மூலம், சர்வதேச புக்கர் பரிசை வெல்லும் முதல் இந்திய மொழி எழுத்தாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    அவரது நாவலான 'ரெட் சமாதி' (Ret Samadhi) என்ற நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'டூம் ஆஃப் சாண்ட்'க்கு (Tomb of Sand) இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு குடும்பக் கதை இது. இந்நாவல், கணவர் இறந்த பிறகு வாழும் 80 வயதான ஒரு பெண்ணைப் பின்தொடர்கிறது.

  10. சிபிஐ வழக்கு - மக்களவை சபாநாயகரிடம் கார்த்தி சிதம்பரம் புகார்

    பொய் வழக்குகளை போட்டு நாடாளுமன்றத்தில் தனது குரலை ஒடுக்க சிபிஐ நினைப்பதாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு தெரிவித்து, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    "நாடாளுமன்றத்தில் எனது செயல்பாடுகளை சிபிஐ தடுக்க நினைப்பது ஜனநாயக மாண்புகள் மீதான தாக்குதல். நாடாளுமன்றத்திற்கான சிறப்புரிமையை மீறும் பிரச்னை பற்றி உடனே கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுங்கள்" என, கார்த்தி சிதம்பரம் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், "எனது தலையீடு இல்லாத 11 ஆண்டுகால பழைய வழக்குக்காக எனது வீட்டை பரிசோதித்துள்ளது.

    இதனிடையே, விசா முறைகேடு விவகாரம் தொடர்பான விசாரணைக்காக, காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். மேலும், நேற்று சென்னை சிபிஐ அலுவலகத்தில் வைத்து கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடைபெற்றது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  11. விசா முறைகேடு புகார் - கார்த்தி சிதம்பரம் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்

    விசா முறைகேடு விவகாரம் தொடர்பான விசாரணைக்காக, காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    முன்னதாக, அவர் செவ்வாய்கிழமையன்று (மே 24) வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பினார். மேலும், சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கியதாக கூறப்படும் விவகாரத்தில், தனக்கு சம்பந்தமில்லை என்று கூறி, தன் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

    கடந்த மே 17ஆம் தேதியன்று, இந்த விவகாரம் தொடர்பாக ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் வீடுகளிலும் அவர்களுடன் தொடர்புடைய அலுவலகங்களிலும் சிபிஐ சோதனை நடத்தியது.

    மேலும், இவ்விவகாரம் தொடர்பான விசாரணைக்காக கார்த்தி சிதம்பரம், சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேற்று விசாரணைக்காக ஆஜராகியிருந்தார்.

  12. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.

    • சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் அரசு விழாவில், ரூ.31,500 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோதி.
    • ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் நான்கு வெவ்வேறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • விசா முறைகேடு வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை நடைபெற்றது.
    • பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இருந்து முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சி விலகியுள்ளார்.
    • இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,628 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
    • சென்னையில் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், சேலம் மாவட்டத்தில் பதுங்கியிருந்த நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
    • கடற்பாசி எடுக்கச் சென்ற மீனவப் பெண்ணை வடமாநில இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்முறை செய்து கொலை செய்த வழக்கில், ராமநாதபுரம் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், பாஜக தொண்டர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள்தான் நாட்டிற்கு மிகப்பெரிய எதிரிகளாக உள்ளனர் என்றார்.