பாஜக மத்திய சென்னை மாவட்ட எஸ்.சி அணி தலைவர் வெட்டிக் கொலை

பாரதிய ஜனதா கட்சி மத்திய சென்னை மாவட்ட எஸ்.சி. அணித்தலைவர் பாலச்சந்தர் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம்.ஆர். ஷோபனா

  1. வந்துகொண்டிருக்கும் செய்தி, விஸ்மயா வரதட்சணை கொடுமை வழக்கில், கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை

    கேரளாவில் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த விஸ்மயா நாயர் வழக்கில், அவரது கணவர் கிரண் குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கொல்லம் கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திங்கள்கிழமையன்று, விஸ்மயா நாயரின் கணவர்தான் குற்றவாளி என கொல்லம் கூடுதல் நீதிமன்றம் தெரிவித்தது.கேரளாவில் விஸ்மயா என்னும் ஆயுர்வேத மருத்துவப் படிப்பு இறுதி ஆண்டு மாணவிக்கு கிரண் குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. கணவர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் விஸ்மயா தற்கொலை செய்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில், நேற்று அவரது கணவரைக் குற்றவாளி என அறிவித்த கொல்லம் கூடுதல் நீதிமன்றம், இன்று அவருக்கான தண்டனையை அறிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  2. இனி வாட்சப் மூலம் டிஜிலாக்கர் சேவையை பெறலாம். எப்படி?

  3. குறுவை பாசனத்துக்கு மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

    மேட்டூர் அணை - ஸ்டாலின்

    காவிரி டெல்டா குறுவைப் பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அணையைத் திறந்து வைத்தார்.

    மேட்டூர் அணையின் வலது கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று காலை 11.15 மணி அளவில் மதகுகளை திறந்துவைத்தார் முதல்வர். முதலில் சுமார் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி என்ற அளவில் நீர் திறந்து விடப்பட்டது.

    அணையில் நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் என நீர்வள ஆதார அமைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 10,508 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 117.76 அடியாக உள்ளது.

    நீர் திறப்பு குறைவாக உள்ளதால், அணை நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. அணையில் நீர் இருப்பு 89.94 டி.எம்.சி-யாக உள்ளது.

    குறுவை பாசனம் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 5.21 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். குறுவை சாகுபடிக்கு 125. 68 டி.எம்.சி. நீர் தேவைப்படுகிறது. குறுவை சாகுபடிக்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 89 ஆண்டுகளில் 1936 முதல் 1947 வரையிலான காலகட்டங்களில் 11 ஆண்டுகள் ஜூன் 12க்கு முன்பே அணை திறக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில், நாடு சுதந்திரமடைந்த பிறகு மே மாதத்தில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவது இதுவே முதல்முறை.

  4. மாசுபாடு இல்லாத நாடாக இந்தியா மாற என்ன தேவை?

    வீசும் காற்றில் விஷம் பரவினால் வாழ்க்கை மோசமாகும் என்பது நீங்கள் அறிந்ததுதான். ஆனால், வீசும் காற்றே விஷமாக மாறினால் விளைவு எப்படி இருக்கும் என்பதை அண்மையில் வெளியான லான்செட் அறிக்கையின் தரவுகள் இதை நமக்கு புரியவைக்கின்றன.

    உலகம் முழுவதும் சுமார் 90 லட்சம் பேர் இறந்ததாக தெரிவிக்கும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது என்ன? இந்த காணொளியைப் பாருங்கள்.

    காணொளிக் குறிப்பு, மாசுபாடு இல்லாத நாடாக இந்தியா மாற என்ன தேவை?
  5. குவாட் அமைப்பின் உச்சி மாநாடு - பிரதமர் நரேந்திர மோதி பேசியது என்ன?

    பிரதமர் நரேந்திர மோதி

    பட மூலாதாரம், Getty Images

    ஜப்பானில் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோதி தனது தொடக்க உரையில், உலக அரங்கில் இந்த அமைப்பு குறுகிய கால கட்டத்தில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், “இந்த அமைப்பு, ஜனநாயக சக்திகளுக்கு புதிய பலத்தையும், ஆற்றலையும் அளிக்கும்.

    கொரோனா தொற்று காலத்தில் கடினமான சூழல் நிலவிய போதும், தடுப்பூசி விநியோகம், காலநிலை மாற்றத்திற்கான திட்டங்கள் , பேரிடர் மேலாண்மை மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவற்றில் இந்த அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரித்திருக்கிறோம்”, என்று அவர் தெரிவித்தார்.

    இந்த மாநாட்டில், இந்தியாவை தவிர அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கலந்துக்கொண்டுள்ளன.

  6. வணக்கம் நேயர்களே!

    நான் எம். ஆர். ஷோபனா. இதுவரை பிரசாந்த் முத்துராமன் வழங்கிய நேரலையை இனி நான் தொகுத்து வழங்கவுள்ளேன். உலகம், இந்தியா மற்றும் தமிழக அளவிலான முக்கிய செய்திகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்.

  7. ஒரு வீரரைக் கூட இழக்காமல் முகலாயர்களை தோற்கடித்த ஷேர்ஷா: இந்திய நிர்வாகவியல் முன்னோடி

  8. ராமநாதபுரம் இளைய மன்னர் குமரன் சேதுபதி காலமானார்

    குமரன் சேதுபதி

    பட மூலாதாரம், ராமநாதபுரம் அரண்மனை

    படக்குறிப்பு, குமரன் சேதுபதி

    ராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்தின் இளைய மன்னரும் ராமேஸ்வரம் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவருமான என். குமரன் சேதுபதி ராமநாதபுரம் அரண்மனையில் இன்று மாரடைப்பால் காலமானார்.

    இத்தகவலை ராமநாதபுரம் சமஸ்தானத்தின் திவான் இதனை உறுதி செய்துள்ளார்.

  9. வேலூர்: சுவரில் துளையிட்டு தங்கம், வெள்ளி கொள்ளை

    அடகு கடையின் சுவர்
    படக்குறிப்பு, அடகு கடையின் சுவர்

    அடகுக் கடையின் சுவரைத் துளையிட்டு வேலூரில் 750 கிராம் தங்கம், 30 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

    வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே அமைந்துள்ள சேர்க்காடு கூட்டுசாலையில் உள்ள, மேல்பாடி பகுதியை சேர்ந்த அனில்குமார் என்பவர் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார்.

    நேற்று (மே 23) மாலை வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்ற நிலையில், கடையின் பின் பக்க சுவர் துளையிடப்பட்டு இருப்பதாக அணில்குமாருக்கு அப்பகுதி வாசிகள் காலையில் தகவல் தெரிவித்துள்ளனர். அணில்குமார் நேரில் வந்து பார்த்த போது, நள்ளிரவில் கொள்ளையர்கள் அடகு கடையின் பின்னால் இருந்து சுவற்றை துளையிட முயற்சி செய்திருப்பது தெரியவந்தது.

    அடகு கடையின் சுவர் கான்கிரீட் என்பதால் கொள்ளையர்களால் சுவற்றை துளையிட முடியவில்லை. இதையடுத்து அடகு கடையின் பக்கத்தில் உள்ள பழக்கடையின் சுவரைத் துளையிட்டு, அதன் வழியாக கடைக்குள் சென்று, அங்கிருந்தபடி அடகு கடையின் பக்கவாட்டு சுவற்றில் துளையிட்டு உள்ளே சென்று சுமார் 750 கிராம் தங்கம், 30 கிலோ வெள்ளி ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. அத்துடன், சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க்கையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

    இதுகுறித்து அனில்குமார் அளித்த புகாரின் பேரில் காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  10. இன்றைய செய்திகளைத் தொடங்கும் முன்

    இன்றைய நேரலைப் பக்கத்தைத் தொடங்கும் முன் கவனிக்க வேண்டிய சில நிகழ்வுகள் :

    • ஜப்பானில் நடைபெறும் இன்று குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்பு
    • யுக்ரேனில் நடைபெற்ற போர்க் குற்ற விசாரணையில் ரஷ்ய படை வீரர் ஒருவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    • கேரளாவில் வரதட்சணை கொடுமையால் 24 வயது பெண் உயிழந்த சம்பவத்தில் கணவர் குற்றவாளி என கொல்லம் கூடுதல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    • பதவியேற்ற பிறகு முதன்முறையாக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தோ பசிபிக் பொருளாதார கட்டமைப்பை (IPEF) தொடங்கியுள்ளார்.
    • கேரள மாநிலம் லச்சத்தீவு அருகே ரூ.1,526 கோடி மதிப்பிலான 218 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக குமரி மீனவர்கள் உட்பட 20 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
    • திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளை ஆய்வு செய்ய வெளி மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்ட ஆறு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • தைவான் மீது சீனா படையெடுத்தால், தைவானை பாதுகாக்க அமெரிக்கா தன் படைகளை பயன்படுத்தும் என அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.
    • யுக்ரேனின் கிழக்கு பகுதியில் ஒரு நாளில் 50 – 100 பேர் வரை உயிரிழக்கின்றனர் என யுக்ரேன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
  11. வணக்கம் நேயர்களே!

    நான் பிரசாந்த் முத்துராமன். பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள் ட்விட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.

    இன்றைய செய்திகளைத் தொடங்குவோம்.