வந்துகொண்டிருக்கும் செய்தி, விஸ்மயா வரதட்சணை கொடுமை வழக்கில், கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை
கேரளாவில் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த விஸ்மயா நாயர் வழக்கில், அவரது கணவர் கிரண் குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கொல்லம் கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திங்கள்கிழமையன்று, விஸ்மயா நாயரின் கணவர்தான் குற்றவாளி என கொல்லம் கூடுதல் நீதிமன்றம் தெரிவித்தது.கேரளாவில் விஸ்மயா என்னும் ஆயுர்வேத மருத்துவப் படிப்பு இறுதி ஆண்டு மாணவிக்கு கிரண் குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. கணவர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் விஸ்மயா தற்கொலை செய்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில், நேற்று அவரது கணவரைக் குற்றவாளி என அறிவித்த கொல்லம் கூடுதல் நீதிமன்றம், இன்று அவருக்கான தண்டனையை அறிவித்துள்ளது.