பாஜக மத்திய சென்னை மாவட்ட எஸ்.சி அணி தலைவர் வெட்டிக் கொலை

பாரதிய ஜனதா கட்சி மத்திய சென்னை மாவட்ட எஸ்.சி. அணித்தலைவர் பாலச்சந்தர் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம்.ஆர். ஷோபனா

  1. தைராய்டு நோய் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?

  2. நன்றி நேயர்களே

    இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது.இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ:

    • யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திவரும் போர் உலகளாவிய பிரச்னை என்று ஜப்பானில் நடைபெற்று வரும் 'குவாட்' உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
    • உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் வரும் மே 26ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
    • மத்திய சிறையில் அனுமதியின்றி முருகன் வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசிய வழக்கில், உரிய சாட்சியம் இல்லாத காரணத்தினால் முருகன் விடுதலை ஆகியுள்ளார்.
    • இலங்கையிலுள்ள திருகோணமலை மற்றும் அதனை அருகே உள்ள கடற்கரை பகுதிகளின் ஊடாக வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயன்றதாக 67 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
    • காங்கிரஸ் கட்சிக்கான அரசியல் விவகாரங்கள் குழு, 2024ஆம் ஆண்டு நடக்கும் பொதுத் தேர்தலுக்கான செயல்பாட்டுக் குழு ஆகியவற்றை அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார்.
    • கேரளாவில் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த விஸ்மயா நாயர் வழக்கில், அவரது கணவர் கிரண் குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கொல்லம் கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
    • காவிரி டெல்டா குறுவைப் பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அணையைத் திறந்து வைத்தார்.
  3. மத்திய சென்னை மாவட்ட பாஜக எஸ்.சி அணி தலைவர் கொலை

    bjp

    பட மூலாதாரம், facebook

    பாரதிய ஜனதா கட்சி மத்திய சென்னை மாவட்ட எஸ்.சி. அணித்தலைவர் பாலச்சந்தர் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என்பதால் கடந்த சுமார் இரண்டு ஆண்டுகளாக போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

    காவல்துறை இவரது காவலுக்காக நியமித்திருந்த, தனி பாதுகாப்பு அலுவலர் (PSO) உடன் இருக்கும் போதே சிந்தாதிரி பேட்டை மீன் மார்க்கெட் அருகே அவரை இன்று இரவு சுமார் 8 மணியளவில், இவரை சராமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

    பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் கொலை நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வு நடந்த இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில்தான் சிந்தாதிரிபேட்டை காவல் நிலையம் மற்றும் திருவல்லிக்கேணி துணை ஆணையர் அலுவலகம் ஆகியவை உள்ளன.

    இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் பாலச்சந்தரை கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் ராஜீவகாந்தி அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

  4. காவிரியில் முன்கூட்டியே நீர் திறப்பதால் விவசாயிகளுக்கு என்ன பயன்?

  5. விசா முறைகேடில் தனக்கு எந்த வகையிலும் சம்பந்தம் இல்லை - கார்த்தி சிதம்பரம்

    விசா முறைகேடு தொடர்பான வழக்கில் தனக்கு சம்பந்தமில்லை என்று கூறி, தன் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மத்திய அரசு தனது முகமைகள் மூலம் தன் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் திரிக்கப்பட்டவை. விசா முறைகேடில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த சம்பந்தமும் இல்லை. இந்த குற்றச்சாட்டுகளுக்கு தான் மறுப்பு தெரிவிக்கிறேன்'', என்று கூறியுள்ளார். கடந்த மே 17ஆம் தேதியன்று, இந்த வழக்கு தொடர்பாக ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் வீடுகளிலும் அவர்களுடன் தொடர்புடைய அலுவலகங்களிலும் சிபிஐ சோதனை நடத்தியது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  6. மாநிலங்களவை தேர்தல்: அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் தாமதம் ஏன்?

  7. யுக்ரேன் போர் உலகளாவிய பிரச்னை - குவாட் மாநாட்டில் அமெரிக்க அதிபர்

    ஜோ பைடன்

    பட மூலாதாரம், Getty Images

    யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திவரும் போர் உலகளாவிய பிரச்னை என்று ஜப்பானில் நடைபெற்று வரும் 'குவாட்' உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதனை சர்வதேச சட்ட ஒழுங்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அவர் தெரிவித்துள்ளார்.

    ''நாம் பகிர்ந்துகொள்ளும் வரலாற்றில் இருண்ட காலத்தை இந்த உலகம் கடந்துகொண்டிருக்கிறது'' என்று யுக்ரேன் போர் குறித்து அமெரிக்காவின் முக்கிய ஆசியக் கூட்டாளி நாடுகளின் தலைவர்களிடம் அவர் கூறியுள்ளார்

    மேலும், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவும், ஆசியாவில் இதுப்போன்ற படையெடுப்பு நடக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

    ஜோ பைடன் அதிபரான பிறகு, முதன்முறையாக ஆசியாவுக்கு வருகை தந்துள்ளார்.ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கலந்து கொண்டுள்ள இந்த குவாட் உச்சி மாநாட்டில், ஆசியாவில் சீனாவின் ஆதிக்கம் வளர்ந்து வருவது, ரஷ்ய படையெடுப்பு குறித்து நாடுகளிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் உட்பட பல்வேறு பாதுகாப்பு மற்றும் பொருளாதார விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்பட்டன.

  8. நெல்லை கல்குவாரி விபத்து - 55 குவாரிகளை ஆய்வு செய்ய ஆறு சிறப்புக் குழுக்கள்

    நெல்லை கல்குவாரி விபத்து

    நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் குவாரி விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, அம்மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளையும் ஆய்வு செய்ய ஆறு சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் இன்று முதல் ஆய்வு பணியை தொடங்கி குவாரிகளை ஆய்வு செய்துவருகின்றனர்.

    இந்த குழுவில் கனிமவளத்துறை, வருவாய்த்துறை, காவல்துறையைச் சேர்த்தவர்கள் நியமிக்கப்பட்டு ஆய்வு செய்வார்கள் என ஆட்சியர் விஷ்ணு கூறியிருந்தார்.

    இந்த ஆறு குழுக்களும் தனித்தனியாக பிரிந்து ஆய்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதில் விதிமுறைகள் மீறல் உள்ளதா, உரிமங்கள் சரியாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

  9. "கல்விக் கட்டணத்தைக் காரணம் காட்டி கல்வி சான்றிதழ் வழங்குவதை நிறுத்த கூடாது"

    அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    தமிழ்நாட்டில் பள்ளி கல்வி கட்டணம் கட்டாததைக் காரணமாக கூறி மாணவர்களுக்கு கல்வி சான்றிதழ் வழங்குவதை நிறுத்த கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார்.

    தஞ்சை மாவட்டம் தாரமங்கலத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் தனியார் பள்ளி உள்ளிட்ட எந்த பள்ளியும் கல்வி கட்டணம் கட்டினால்தான் உள்ளே விடுவேன் என பள்ளி நிர்வாகம் மாணவர்களை தடுக்கக் கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளோம்.

    சேலத்தில் பள்ளி கட்டணம் கட்டாததால் மாணவி ஒருவரை வளாகத்தில் உட்கார வைத்ததை புகைப்படமாக அனுப்பி புகார் தெரிவித்தபோது அந்த பள்ளி நிர்வாகத்தின் மீது விளக்கம் கேட்கப்பட்டது என தெரிவித்த அமைச்சர், கல்விக்கட்டணம் காரணம் காட்டி டி.சி வழங்குவதை நிறுத்தக் கூடாது, மாணவர்கள் பள்ளிக்கு வருவதை நிறுத்தக் கூடாது என எச்சரிக்கையாக இல்லாமல் வேண்டுகோளாக கேட்டுக் கொள்வதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

  10. சிறையில் அனுமதியின்றி வீடியோ கால் பேசிய வழக்கில் முருகன் விடுதலை, பிரசன்னா வெங்கடேஷ்

    முருகன்

    பட மூலாதாரம், POLICE

    மத்திய சிறையில் அனுமதியின்றி முருகன் வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசிய வழக்கில், உரிய சாட்சியம் இல்லாத காரணத்தினால் முருகன் விடுதலை ஆகியுள்ளார்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் கடந்த 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முருகன் கடந்த 2020ஆம் ஆண்டு சிறையிலிருந்து சிறையின் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியது தொடர்பாக சிறைத்துறை புகார் அளித்தது. அதன் அடிப்படையில் பாகாயம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு வேலூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1இல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் போதிய சாட்சியம் இல்லாததால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உள்ள முருகன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

    ஏற்கனவே முருகன் 6 நாள் அவசர கால விடுப்பு கேட்டு சிறைத்துறைக்கு மனு அளித்த போது, இந்த வழக்கையும், சிறை அறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கையும் நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி விடுப்பு நிராகரிக்கப்பட்டு இருந்தது.

    இதைத் தொடர்ந்து முருகன் சிறையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

  11. டி. ராஜேந்தர் உடல்நிலை இப்போது எப்படி உள்ளது? - சிலம்பரசன் அறிக்கை

  12. ஞானவாபி மசூதி வழக்கு மே 26ம் தேதிக்கு ஒத்திவைப்பு

    ஞானவாபி மசூதி

    பட மூலாதாரம், Getty Images

    உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் வரும் மே 26ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

    முன்னதாக, இந்த மசூதி தொடர்பான கள ஆய்வு பணிகள் குறித்த அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை குறித்து இருதரப்பும் எழுத்துப்பூர்வமான தங்களின் கருத்துகளை தெரிவிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

    மசூதி உள்ள இடத்தில் ஆய்வு நடத்துவது 1991 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி, விதிமீறும் செயல் என்று ஞானவாபி மசூதியை நிர்வகிக்கும் அஞ்சுமன் ஜாமியா கமிட்டி கூறியுள்ளது. இச்சட்டத்தின்படி, நாட்டில் உள்ள வழிபாட்டு தலங்களின் சமய இயல்பை மாற்றுவதற்கான வழக்குகளை தொடர முடியாது.

    வரும் மே 26ம் தேதி, முஸ்லிம் தரப்பு மனுவை நீதிமன்றம் விசாரிக்கும்.

    முன்னதாக, ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் இருப்பதாக இந்து மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

  13. பேரறிவாளன் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி: தனிமைச் சிறைவாசம் எப்படி இருந்தது?

  14. "பாஜகவின் பி டீம்தான் சீமான்…" - ஜோதிமணி

    பாஜகவின் பி டீம்தான் சீமான் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கூறியுள்ளார்.

    ஜோதிமணி
  15. "உடன்குடி அனல்மின் நிலையத் திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும்", பிரபுராவ் ஆனந்தன்

    மேதா பட்கர்  மற்றும் சுப உதயகுமார்

    விவசாயிகள், மீனவர்கள் நலன் கருதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு உடன்குடி அனல்மின் நிலையத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று சுப. உதயகுமார் மற்றும் மேதா பட்கர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

    திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடியில் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 660 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகள் அமைக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் அனல் மின் நிலையம் அமைக்கப்படும் சுற்றுவட்டார பகுதிகளை சமூக ஆர்வலர் மேதா பட்கர், அணு உலைக்கு எதிரான மக்கள் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் ஆகியோர் பார்வையிட்டு அங்குள்ள மக்களின் கருத்தைக் கேட்டறிந்த, பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

    அப்போது பேசிய அவர்கள், “உடன்குடி அனல்மின் நிலையம் செயல்பாட்டிற்கு வந்தால் சுற்று வட்டார கிராமங்களின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும்," என்றனர்.

    அனல் மின் நிலையத்தினை சுற்றியுள்ள 70-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் , விவசாயம் மற்றும் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தனர்.

    மேலும் "காலநிலை மாற்றம் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்ற நிலையில் உடன்குடியில் அனல்மின் நிலையம் அவசியமற்றது. கூடங்குளம் அணுவுலை, தேனி நியூட்ரினோ திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம் போன்றவற்றில் திமுக அரசு எடுத்துள்ள நிலைப்பாட்டைப் போன்றே உடன்குடி அனல்மின் நிலையத்திலும் ஒரு நிலைப்பாட்டை அரசு எடுக்க வேண்டும்" என்றனர்.

  16. இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு - மக்கள் என்ன சொல்கிறார்கள்?

  17. அமைச்சரை பதவி நீக்கம் செய்த பஞ்சாப் முதல்வர் - பாராட்டிய அரவிந்த் கெஜ்ரிவால்

    பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்கலாவைப் பதவி நீக்கம் செய்ததை டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பாராட்டியுள்ளார்.

    அமைச்சரை பதவி நீக்கம் செய்த பக்வந்த் மான், தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆம் ஆத்மி கட்சி நேர்மையான அமைப்பை உருவாக்கியுள்ளது. ஊழலை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளமாட்டோம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் எப்போதும் கூறுவார். அதனால், அமைச்சர் ஊழல் செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்த பிறகு, சுகாதாரத்துறை அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்,” என்று தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  18. இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயன்றதாக 67 பேர் கைது, ரஞ்சன் அருண் பிரசாத்

    இலங்கை - கைது

    பட மூலாதாரம், SRI LANKA NAVY

    இலங்கையிலுள்ள திருகோணமலை மற்றும் அதனை அருகே உள்ள கடற்கரை பகுதிகளின் ஊடாக வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயன்றதாக 67 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

    வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் நபர்களை நேற்றைய தினம் கைது செய்ததாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

    திருகோணமலை மற்றும் சாம்பல் தீவு ஆகிய கடல் பிராந்தியங்களில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

    சாம்பல் தீவு பகுதியில் கடற்படை மற்றும் நிலாவெலி போலீசார் இணைந்து நேற்றிரவு நடத்திய சுற்றி வளைப்பில் 30 வயதுக்கும், 40 வயதுக்கும் இடைப்பட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கடற்படைக்கு சொந்தமான அதிவிரைவு படகுகளை பயன்படுத்தி திருகோணமலை கடற்பரப்பில் விசேட சோதனை நடவடிக்கையொன்று நடந்துள்ளது.

    இந்த விசேட சோதனை நடவடிக்கையில் படகொன்றில் பயணித்துக்கொண்டிருந்த 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    45 ஆண்களும், 7 பெண்களும், 3 சிறு குழந்தைகளும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவிக்கின்றது.

    கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து ஆட்கடத்தல் காரர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

    இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், அம்பாறை, ரத்தினபுரி, கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்களையும் கடற்படையினர், போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

    சட்டவிரோதமான முறையில், உயிர் அச்சுறுத்தலுடன் வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சிப்பதன் ஊடாக, தமது உயிர் மற்றும் சொத்துகளை இழக்க வேண்டாம் என கடற்படை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

  19. மலேரியா கொசுக்களைக் கட்டுப்படுத்த மரபணு மாற்று முறை - இதில் சிக்கல் என்ன?

  20. நாடாளுமன்றத் தேர்தல் - 3 குழுக்களை அமைத்தது காங்கிரஸ்

    காங்கிரஸ் கட்சிக்கான அரசியல் விவகாரங்கள் குழு, 2024ஆம் ஆண்டு நடக்கும் பொதுத் தேர்தலுக்கான செயல்பாட்டுக் குழு ஆகியவற்றை அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார். மேலும், 'பாரத் ஜோடோ யாத்ரா'வுக்கான மத்திய திட்டமிடல் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரையை காங்கிரஸ் கட்சி, மக்களுடனான உறவை மேம்படுத்தும் வகையில், வரும் அக்டோபர் மாதம் நாடு முழுவதும் மேற்கொள்ளவுள்ளது.

    தேர்தல் வியூக வகுப்பாளரான சுனில் கனுகொலு செயற்பாட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

    ஜி23 குழுவைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா ஆகியோர் அரசியல் விவகாரக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

    காங்கிரஸ்

    பட மூலாதாரம், AICC