இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்து செல்பவருக்கு ஹெல்மெட் கட்டாயம்
சென்னையில் இன்று முதல் இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயமானது.
ஹெல்மெட் அணிவதில் உள்ள சிக்கல் என்ன?
அதற்கான தீர்வு என்ன?
You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தண்டனை விதிக்கப்பட்ட ரஷ்ய கமாண்டர் வாதிம் ஷிஷிமரின், யுக்ரேனின் வட கிழக்கு பகுதியில் உள்ள சுபாகிவ்கா என்ற கிராமத்தில் ஒலெக்சாண்டர் ஷெலிபோவ் என்ற 62 வயது முதியவரை கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டது.
விஷ்ணுப்ரியா ராஜசேகர்
சென்னையில் இன்று முதல் இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயமானது.
ஹெல்மெட் அணிவதில் உள்ள சிக்கல் என்ன?
அதற்கான தீர்வு என்ன?
நெல்லை கல்குவாரி விபத்தில் பாறைகளுக்கு இடையே சிக்கியிருந்த ஆறாவது நபரான லாரி டிரைவர் ராஜேந்திரனின் உடல் நேற்று நள்ளிரவு மீட்கப்பட்டது.
நெல்லை விபத்தில் நடந்தது என்ன?
யுக்ரேனின் கிழக்கு பகுதியில் ஒரு நாளில் 50 – 100 பேர் வரை உயிரிழக்கின்றனர் என யுக்ரேன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஞாயிறன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்டவர்கள் யுக்ரேனை மிக மோசமான திசைகளிலிருந்து காப்பதற்காக கொல்லப்பட்டவர்கள் எனவும் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேற்கொண்டு விவரங்கள் எதையும் செலன்ஸ்கி வழங்கவில்லை என்றாலும், யுக்ரேன் ராணுவத்தினரின் உயிரிழப்பை குறிப்பிட்டுதான் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் என தெரிகிறது.
அதேபோல அவரின் பேச்சு, கிழக்கில் சண்டை எத்தனை தீவிரமாக உள்ளது என்பதை விளக்குகிறது.
யுக்ரேனின் கிழக்கு பகுதியில் இருக்கும் டான்பாஸ் பகுதியில் நகரங்களை கைப்பற்றும் முனைப்புடன் ரஷ்யப் படையினர் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரித்து கொண்டிருக்கிறது.
குறிப்பாக மே மாத தொடக்கத்தில் தலைநகர் டெல்லியின் சில பகுதிகளில் வெப்பநிலை 49.2டிகிரி செல்சியஸ் வரை பதிவானது.
மார்ச் மாதத்திலிருந்தே டெல்லி மற்றும் இந்தியாவின் வட மாநிலங்களில் தீவிர வெப்ப அலை ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று காலை டெல்லியில் பெய்த மழையால் வெப்பம் சற்று தணிந்துள்ளது.
இதனால் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை சற்று தடைப்பட்டது.
ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல்களும் ஏற்பட்டன.
சில இடங்களில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது.
டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் இந்த வாரத்தில் பரவலாக மழை பொழியும் என இந்திய வானிலை மையம் திங்களன்று தெரிவித்துள்ளது.
11ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இன்று இந்தோனீசிய தலைநகர் ஜகார்டாவில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
இதை தவிர்த்து ஓமன் மற்றும் மலேசிய அணிகளும் இன்று மோதுகின்றன.
இந்திய நேரப்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.
நான் விஷ்ணுப்ரியா ராஜசேகர். இதுவரை நந்தினி வெள்ளைச்சாமி வழங்கிய நேரலையை இனி நான் தொகுத்து வழங்கவுள்ளேன். உலகம், இந்தியா மற்றும் தமிழக அளவிலான முக்கிய செய்திகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்.
இரானில் அதிகாரம் மிக்க இரான் புரட்சிகர பாதுகாப்புப் படையை சேர்ந்த கர்னல் நிலையிலான அதிகாரி ஒருவர் தெஹ்ரானில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
சயாத் கொதாய் என்ற அந்த அதிகாரியை மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் சுட்டுக் கொன்றனர். சயாத் கொதாய் காரில் இருந்தபோதே அவர்கள் 5 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அவரது வீட்டுக்கு வெளியிலேயே இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
இதுவரை இந்த செயலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. சுட்டுவிட்டுத் தப்பியவர்களைத் தேடும் பணி நடந்துவருகிறது. 2020ம் ஆண்டு அந்நாட்டின் முன்னணி அணுக்கரு விஞ்ஞானி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு அந்நாட்டில் நடந்த பெரிய அதிர்ச்சிகரமான படுகொலை இது.
தனது காரில் சீட் பெல்ட் அணிந்த நிலையில், ரத்தம் தோய்ந்த மனிதர் இறந்துகிடக்கும் காட்சியைக் காட்டும் படங்கள் சம்பவ இடத்தில் இருந்து வருகின்றன என்று கூறும் பிபிசி மத்திய கிழக்குப் பிரிவு ஆசிரியர் செபாஸ்டியன் உஷர், கர்னல் கொதாய் இரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் ரகசியப் பிரிவான குத்ஸ் படையில் மூத்த அதிகாரி என்றும், இந்தப் படை வெளிநாடுகளில் தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் கூறியுள்ளார். இந்தப் படை பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு தருவதாகவும், மத்தியக் கிழக்கு நெடுகிலும் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு இந்தப் படையே பொறுப்பு என்றும் அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது. "உலக அளவிலான அடாவடியில் ஈடுபடும் பயங்கரவாத முகவர்களான இரானின் பரம எதிரிகள்" கர்னல் சயாத் கொதாயை கொன்றிருப்பதாக இரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சயீத் கதீப்சாதே கூறியுள்ளார். அமெரிக்காவையும் அதன் கூட்டாளிகளையுமே அவர் இப்படி மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதாக கூறும் பிற நாடுகள் வருந்தத்தக்க விஷயத்தில் அமைதிகாப்பதாகவும், இதை ஆதரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் 8 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று சத்திய பிரமாணம் செய்துகொண்டனர்.கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த பதவிப்பிரமாண நிகழ்வு இன்று முற்பகல் இடம்பெற்றது.இதன்படி, இன்றைய தினம் 8 புதிய அமைச்சர்கள், ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்துகொண்ட நிலையில், முழு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது.புதிய அமைச்சர்களின் விபரங்கள்மஹிந்த அமரவீர - விவசாயம், வனவிலங்கு, மற்றும் வனாந்தர அமைச்சர்பந்துல குணவர்தன - ஊடகம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்கெஹெலிய ரம்புக்வெல - நீர்வழங்கல் அமைச்சர் (சுகாதார அமைச்சு பொறுப்பும் கெஹெலிய ரம்புக்வெல வசம் காணப்படுகின்றது)டக்ளஸ் தேவானந்தா - கடற்றொழில் அமைச்சர்ரமேஷ் பத்திரண - தொழில்துறை அமைச்சர் (பெருந்தோட்டத்துறை அமைச்சு பொறுப்பும் ரமேஷ் பத்திரண வசம் காணப்படுகின்றது)விதுர விக்ரமநாயக்க - புத்தசாசனம், சமயம் மற்றும் கலாசார விவகார அமைச்சர்நஷிர் அஹமட் - சுற்றாடல் அமைச்சர்
ரொஷான் ரணசிங்க - விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க கடந்த 12ம் தேதி பதவி பிரமானம் செய்துகொண்டதை அடுத்து, முதல் கட்டமாக கடந்த 14ம் தேதி 4 அமைச்சர்கள் சத்திய பிரமாணம் செய்துகொண்டனர்.ஜீ.எல்.பீரிஸ் - வெளிவிவகார அமைச்சர்
தினேஷ் குணவர்தன - பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்
பிரசன்ன ரணதுங்க - நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்
காஞ்சன விஜேசேகர - மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சர்
கடந்த 20ம் தேதி மேலும் 9 அமைச்சர்கள் பதவி பிரமாணம் செய்தக்கொண்டனர்.நிமல் சிறிபால டி சில்வா -துறைமுகங்கள், கடற்துறை மற்றும் விமான சேவைகள்
சுசில் பிரேமஜயந்த - கல்வி அமைச்சர்
கெஹெலிய ரம்புக்வெல - சுகாதார அமைச்சர்
விஜேதாஸ ராஜபக்ஸ - நீதி, சிறைச்சாலைகள், அரசியலமைப்பு சீர்திருத்தம் அமைச்சர்
ஹரின் பெர்ணான்டோ - சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர்
ரமேஷ் பத்திரண - பெருந்தோட்டத்துறை அமைச்சர்
மனுஷ நாணயக்கார - தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்
நலின் பெர்ணான்டோ - வர்த்தகம், வணிகம், உணவு பாதுகாப்பு அமைச்சர்
டிரான் அலஸ் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
கொரோனா தொற்று, குரங்கு அம்மை, யுக்ரேன் போர் என, கடும் சவால்களை உலகம் எதிர்கொண்டு வருவதாக, உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரெயேசூஸ் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் நடைபெற்ற ஐநா சுகாதார முகமை கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதில் பேசிய அவர், "காலநிலை மாற்றம், சமத்துவமின்மை மற்றும் புவிசார் அரசியல் போட்டி ஆகியவற்றால் மோசமடையும் நோய், வறட்சி, பசி மற்றும் போர் போன்ற கடுமையான நெருக்கடிகளை நாம் எதிர்கொள்கிறோம்" என அவர் தெரிவித்துள்ளார்.
நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.
குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.