இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது
வணக்கம்.
இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து நேரலைப் பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.
இதுவரையிலான முக்கிய நிகழ்வுகள்.
- இலங்கை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.
- இலங்கை தலைநகர் கொழும்பு காலி முகத் திடல் வன்முறை சம்பவத்தில் தொடர்புடையதாக எம்.பிக்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள்.
- திருநெல்வேலியில் கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 15 லட்ச ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
- உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட இடத்தை பாதுகாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- யுக்ரேனின் மேரியோபோலில் உள்ள அஸவ்ஸ்டால் ஆலையில் இரு மாதங்களுக்கு மேல் சிக்கியிருந்த யுக்ரேன் படையினர் அங்கிருந்து மனிதநேய வழித்தடம் மூலமாக வெளியேற்றப்பட்டதாக யுக்ரேன் தெரிவித்துள்ளது.
- சீன நாட்டினருக்கு விசா வழங்க லஞ்சம் வாங்கியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட 5 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
- பாஜகவின் எதிர்மறை எண்ணமும் வெறுப்பு அரசியலும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணையதளம், முகநூல், ட்விட்டர், இண்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ந்து இணைந்திருங்கள்.











