இலங்கைக்கு எங்களின் ஆதரவு தொடரும்: கொழும்பில் உள்ள இந்திய தூதர்

இலங்கையில் தொடரும் போராட்டம், வன்முறையையடுத்து இந்திய உள்துறை கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளது. இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 17 பேர் வெளிநாடு செல்ல கொழும்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. வந்துகொண்டிருக்கும் செய்தி, இலங்கை நெருக்கடி: பிரதமராக பொறுபேற்க தயார் - சஜித் பிரேமதாச

    இலங்கை

    பட மூலாதாரம்,

    சில இணக்கப்பாடுகளுக்கு மத்தியில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவராக தான் பிரதமர் பதவியை ஏற்க தயாராக உள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.ஏனைய கட்சிகளுடன் இணைந்து குறுகிய கால அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, சஜித் பிரேமதாஸ நான்கு யோசனைகளை முன்வைத்துள்ளார்.01.குறிப்பிட்ட குறுகிய கால எல்லைக்குள் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதற்கு இணக்கம் வெளியிடுதல்.02.இரண்டு வார காலத்திற்குள் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன், அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை அமல்படுத்தி, நடைமுறைப்படுத்துதல்.03.தம்மால் தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 21வது திருத்தத்தின் ஊடாக, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வதற்காக, அரசியலமைப்பிலுள்ள சரத்துக்களுக்கு அமைய, மிகக் குறுகிய காலத்தில் அனைத்து கட்சிகளின் ஆதரவை பெற்று, அதனை செயற்படுத்தல்.04.பொதுமக்களின் வாழ்க்கையை வழமைக்கு கொண்டு வந்து, சட்டவாதிக்கத்தை உறுதிப்படுத்தி, மேல் குறிப்பிட்ட அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்தியதன் பின்னர், நிரந்தர அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்காக மக்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கும் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துதல்.மேல் குறிப்பிட்ட அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் பாதாளத்திற்கு செல்லாது தவிர்ப்பதற்கும் தமது குழுவிடம் நிரந்தரமான வேலைத்திட்டமொன்று உள்ளது எனவும் அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.இந்த நிபந்தனைகளின் பிரகாரம், பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள தயார் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு கடிதமொன்றின் ஊடாக அறிவித்துள்ளார்.

    இலங்கை நெருக்கடி

    பட மூலாதாரம்,

  2. தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் - பிரதமர், தலைமை நீதிபதிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

    சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வலியுறுத்தி இந்திய பிரதமர் மோதி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகியோருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அந்த கடிதத்தில், ' உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியைப் பின்பற்ற வேண்டும். உச்சநீதிமன்றத்தின் நிரந்தர கிளைகளை சென்னை, கொல்கத்தா, மும்பையில் அமைக்க வேண்டும்.

    சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதித்துறையும் நமது அரசியலைப்பில் பொதிந்துள்ள கூட்டாட்சித் தத்துவத்தின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் அமைய வேண்டும்,'' என்று குறிப்பிட்டுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  3. ஜெயஸ்ரீ கொலை: பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க சர்வதேச ஒப்பந்தம் ஏற்பட காரணமான வழக்கு

  4. கோட்டாபய ராஜபக்ஷ பேச்சுக்குப் பின்னால் ரணில் தந்த யோசனைகளா? என்ன திட்டம்?

  5. இலங்கை நெருக்கடி: நாட்டை விட்டு செல்ல மாட்டோம் - நாமல் ராஜபக்ஷ

    இலங்கையை விட்டு நானும் என் தந்தையும் செல்லும் எண்ணம் இல்லை. விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன் என்று மஹிந்த ராஜபக்ஷ மகன் நாமல் தெரிவித்துள்ளார்.

    இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மகன் நாமல் ராஜபக்ஷ தனது ட்விட்டர் பக்கத்தில், ''கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற துரதிஷ்டவசமான சம்பவங்கள் குறித்து நடைபெறும் எந்த விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்கிறேன். நானும் என் தந்தையும் (மஹிந்த ராஜபக்ஷ) தொடர்ந்து இங்குதான் இருப்போம். நாட்டை விட்டுச் செல்லும் எண்ணம் இருவருக்கும் இல்லை.'' என்று தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  6. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜிவ்குமார் நியமனம்

    இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜிவ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ள சுஷில் சந்த்ராவின் பதவிக் காலம் மே 14ம் தேதி நிறைவு பெறுகிறது.

    இதையடுத்து அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜிவ்குமாரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். வரும் 15ம் தேதி ராஜிவ் குமார் பொறுப்பேற்கிறார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. வந்துகொண்டிருக்கும் செய்தி, இலங்கை நெருக்கடி: மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 17 பேர் வெளிநாடு செல்ல தடை

    மஹிந்த ராஜபக்ஷ

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, மஹிந்த ராஜபக்ஷ

    இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 17 பேருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இலங்கை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (12) இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. கொழும்பில் கடந்த 9ம் தேதி ஏற்பட்ட மோதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆகியவற்றினால் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணைகளையடுத்து, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    இதன்படி, முன்னாள் அமைச்சர்களான நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பவித்ரா வன்னியாராட்ச்சி, ரோஹித்த அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க, சனத் நிஷாந்த, சஞ்ஜிவ எதிரிமான, காஞ்சன ஜயரத்ன, சம்பத் அத்துகோரல, ரேணுக பெரேரா, மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட 17 பேருக்கே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அத்துடன், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன்னிற்கும் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த நபர்களுக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடையுத்தரவை குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு அறிவிக்குமாறும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டவர்களின் கடவூச்சீட்டுக்களை நீதிமன்றத்தின் பொறுப்பிற்கு எடுக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

  8. தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப்பிரவேச விழா இன்று தொடங்கியது

    தருமபுரம் ஆதீனத்தில் கொடியேற்றம்

    தருமபுரம் ஆதினத்தில் உள்ள ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

    தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 18ஆம் தேதி சுவாமி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி, 20ம் தேதி பஞ்சமூர்த்திகள் திருத்தேர் உற்சவம், 21ஆம் தேதி காவிரியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

    குருமுதல்வர் ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரியரின் குருபூஜை பெருவிழா 10 நாள் நடைபெறுகிறது. இதில், திருநெறி தெய்வத் தமிழ் மாநாடு, தமிழ் சைவம் சார்ந்த கருத்தரங்குகள் நடைபெறுகின்றன.

    விழாவின்11ம் நாளான வரும் 22 ஆம் தேதி ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை பல்லக்கில் சுமந்து, வீதி உலா வரும் பட்டினப்பிரவேசம் நிகழ்வும் நடைபெறுகிறது.

    பட்டினப் பிரவேச நிகழ்வில், ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்லும் நிகழ்வுக்கு தி.க உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, மனிதனை மனிதன் சுமக்கும் பல்லக்கில் சுமப்பதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்தது.

    இதற்கு ஆதரவும் எதிப்பும் என்று சர்ச்சை ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதற்கான தடையை அரசு நீக்கியது.

  9. இலங்கை நெருக்கடி: தமிழ்நாட்டு கடலோரப் பகுதிகளி தீவிர கண்காணிப்பு

    கடலோர ரோந்து போலீசார்

    பட மூலாதாரம், bb

    இலங்கையில் தொடரும் போராட்டம், வன்முறையையடுத்து இந்திய உள்துறை கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளது.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், அங்கிருந்து பலரும் தமிழ்நாட்டுக்கு வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அங்கு நடைபெற்று வரும் வன்முறையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்ற வழக்குகளில் தொடர்புடைய 50 பேர் தப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இவர்கள், தமிழ்நாட்டிற்குள் ஊடுருவாமல் தடுக்க, கடலோர பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்ட கடற்கரை முழுவதும், ரோந்து கப்பல் மற்றும் படகு மூலம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும், தூத்துக்குடி கடல் பகுதியில் உள்ள வான் தீவு, முயல் தீவு, நல்ல தண்ணி தீவு உள்ளிட்ட பகுதிகளில் இலங்கையில் இருந்து தப்பி வருபவர்கள் மறைந்து இருக்கலாம் என்கிற சந்தேகத்தில் அங்கு போலீசார் திடீர் சோதனையும் நடத்தி வருகின்றனர்

  10. தமிழ்நாட்டில் தீண்டாமை கொடுமை கடைபிடிக்கும் 445 ஊர்கள்: ஆர்.டி.ஐ மூலம் வெளியான தகவல் என்ன?

  11. தொடர்ந்து இணைந்திருங்கள்

    வணக்கம். நான் ஜோ மகேஸ்வரன்.

    இது வரை நந்தினி வெள்ளைச்சாமி தொகுத்து வழங்கிய நேரலைப் பக்கத்தை இனி நான் வழங்குகிறேன்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இணைந்திருங்கள்

  12. பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு

    கூலித் தொழிலாளி உயிரிழப்பு

    பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.

    சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் பாதாள சாக்கடை பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு, கான்கிரீட் போடப்பட்டுள்ளது. இருப்பினும் கான்கிரீட்டின் பக்கவாட்டில் பள்ளம் முழுமையாக மூடப்படாமல் இருந்துள்ளது.

    இரு தினங்களாக மழை பெய்து ஈரப்பதமாக இருந்ததால் இன்று காலை பணிக்கு வந்த கொல்கத்தாவை சேர்ந்த கூலித் தொழிலாளியான திரேஸ் சர்க்கார் (50) என்பவர், மேலே கால் வைத்தபோது மண் சரிவில் சிக்கி உயிரிழந்தார்.

    தகவலறிந்து சென்ற சிட்லபாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

  13. இலங்கை நெருக்கடி - புதிய அரசாங்கம் அமைப்பது குறித்து ஜனாதிபதி ட்விட்டரில் பதிவு

    இலங்கையில் புதிய அரசு அமைப்பது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பகிர்ந்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், "நாட்டில் அராஜாக நிலையை தடுப்பதற்காகவும் நாட்டு விவகாரங்களை தொடர்ந்து கவனிக்கவும் புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என தெரிவித்துள்ளார்.

    மேலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெற்று மக்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய பிரதமர் இந்த வாரத்திற்குள் நியமிக்கப்படுவார் என்றும் அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    மேலும், "புதிய அரசாங்கத்திற்கு ஒரு புதிய திட்டத்தை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்படும். நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல அதிகாரம் அளிக்கப்படும்.

    நாடாளுமன்றத்திற்கு மேலும் அதிகாரம் அளிக்கும் வகையில் 19வது திருத்தத்தை மீண்டும் அமல்படுத்தும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

    மேலும் அந்த பதிவில், "நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து விடுக்கப்பட்ட கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.

    மக்களின் உயிர்கள் மற்றும் அவர்களின் உடைமைகளைப் பாதுகாக்கும் வகையில் அரசு தடையின்றி செயல்பட உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

  14. இந்தி மொழி சர்ச்சை: ஜிப்மர் இயக்குனர் உருவப்படத்தை எரித்து விசிக போராட்டம்

    ஜிப்மர் மருத்துவமனை - இந்தி மொழி சர்ச்சை

    இந்தி மொழியை திணிப்பதாக கூறி ஜிப்மர் நிர்வாகத்தைக் கண்டித்து ஜிப்மர் இயக்குனர் உருவப்படம் மற்றும் சுற்றறிக்கையை எரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் ராகேஷ் அகர்வால் கடந்த சில தினங்களுக்கு முன்பு 4 சுற்றிக்கைகளை வெளியிட்டார். அதில் ஒரு சுற்றிக்கையில் முடிந்தவரை அலுவல் மொழியாக இந்தியை பயன்படுத்த வேண்டுமென குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதனிடையே, இந்திய அரசு ஜிப்மர் மருத்துவமனையில் திணிக்க முயற்சிப்பதாக கூறி பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும், பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ஜிப்மர் மருத்துவமனையில் இந்தியை திணிக்க முயற்சி செய்வதாக கூறி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சார்ந்த 50க்கும் மேற்பட்டோர் ஜிப்மர் மருத்துவமனையை முற்றுகையிட முயன்றனர்.

    அப்போது ஜிப்மர் நிர்வாக இயக்குனர் ராகேஷ் அகர்வால் உருவப்படம் மற்றும் சுற்றறிக்கை நகலை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும், ஜிப்மரை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் முற்றுகையில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை புதுச்சேரி தி.நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

  15. "தொலைநோக்கியில் தேடினாலும் பிரதமர் மோதி போன்ற தலைவர் ஒருவர் கிடைக்கமாட்டார்" - அமித் ஷா

    "தொலைநோக்கியில் தேடினாலும் பிரதமர் நரேந்திர மோதி போன்ற தலைவர் ஒருவர் கிடைக்கமாட்டார்" - இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்த கருத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பதை பிபிசி தமிழின் இந்த ட்விட்டர் பதிவுக்கு சென்று தெரிவியுங்கள்:

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  16. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயத்தை பாதிக்கும் ஆலைகளுக்கு அனுமதி இல்லை - ஸ்டாலின்

    மு.க.ஸ்டாலின்

    பட மூலாதாரம், FACEBOOK/M.K.STALIN

    பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயத்தை பாதிக்கும் ஆலைகளுக்கு அனுமதி இல்லை என, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டல அமைப்பின் முதல் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "டெல்டா பகுதியின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், தமிழ்நாட்டின் 34 விழுக்காடு அரிசி உற்பத்தியை அளித்து வருகிறது. மிகப்பெரிய வேளாண் மண்டலமாக இது காணப்படுகிறது.

    அரிசி, உணவு உற்பத்தியில் சிறந்து விளங்கினாலும் பல்வேறு நெருக்கடிகளுக்குட்பட்ட பகுதியாகவும் உள்ளது. வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களும் இங்கு ஏற்படுகின்றன. காவிரி நீரை பெற அரசியல், சட்ட ரீதியாக போராடி கொண்டிருக்கிறோம்.

    விவசாயிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டமாக இருந்தாலும், விவசாயிகள் பாதுகாப்புக்கான சட்டமாக இருப்பதால், அதனை செயல்படுத்துவதில் அரசு உறுதியாக இருக்கிறது.

    80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ஆண்டும் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகளிடம் இருந்து கருத்துகளை பெற்று வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இங்கு விவசாயத்தை பாதிக்கும் எந்தவொரு தொழிற்சாலைகளுக்கும் இந்த அரசு அனுமதி அளிக்காது. வேளான் சார்ந்த தொழிற்சாலைகள் மூலம் அதிக வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபடும்" என்றார்.

  17. இலங்கை நெருக்கடி: வன்முறைகளில் ஈடுபடுவோரை எவ்வழியிலும் கட்டுப்படுத்துவோம் - ராணுவத் தளபதி

  18. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,827 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,827 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தியா முழுதும் 24 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர் 3,230 பேர் இத்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போதுவரை 19,067 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  19. திருகோணமலை கிழக்கு கடற்படை பிரிவு தலைமையகத்தில் இருந்து நேரலை

    இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் திருகோணமலை கிழக்கு கடற்படை பிரிவு தலைமையகத்தில் இருந்து நேரலை

  20. மதுரை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல் - ஒருவர் கைது

    தங்கம் பறிமுதல்

    மதுரை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 43 லட்சத்து 24 ஆயிரத்து 524 ரூபாய் மதிப்பிலான 831 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

    துபாயில் இருந்து மதுரை வரும் பயணிகள் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக, சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதையடுத்து, துபாயிலிருந்து இன்று மதுரை வந்த விமானத்தின் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஒரு பெண்ணை சோதனை செய்ததில், உடலில் மறைத்து வைத்து 3 பச்சை நிற களிமண்ணில் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.

    அதனை தொடர்ந்து, அந்தப் பெண் மீது சுங்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். 831 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.43 லட்சத்து, 24 ஆயிரத்து 524 ஆகும்.

    மேலும், தங்கம் கடத்தி வந்த நபரிடம் யாராவது கமிஷன் கொடுப்பதாக கூறி, தங்கத்தை கொடுத்தனுப்பினரா அல்லது அவரே கடத்தி வந்தாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.