இலங்கையில் நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை வெளியேறுமாறும் கோரி மே 6ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெற்ற நிலையில், நள்ளிரவு முதல் அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. ஆதீனங்கள் என்றால் என்ன? அவை தோன்றிய வரலாறு என்ன?

  2. மத்திய பிரதேசம்: பழங்குடியினர் படுகொலையில் பஜ்ரங் தளத்துக்கு பங்கு உள்ளதா?

  3. பாட்டியை தீக்கிரையாக்கிய பேத்திகள் - நெல்லையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம்

  4. வந்துகொண்டிருக்கும் செய்தி, இலங்கையில் அவசரநிலையை பிரகடனம் செய்தார் ஜனாதிபதி

    இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசரநிலையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமல்படுத்தியுள்ளார்.

    ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த நாடு தழுவிய அவசரகால நிலை அமலுக்கு வருகிறது.

    ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

    இலங்கை

    பட மூலாதாரம், SRILANKA PMD

  5. ஆளுநர் ரவியின் சர்ச்சைப் பேச்சால் கொதிப்படையும் இஸ்லாமிய அமைப்புகள்

  6. மதுரையில் சிறுமி பாலியல் வன்கொடுமை - இரண்டு பேர் கைது

    சிறுமி பாலியல் வன்கொடுமை

    பட மூலாதாரம், Getty Images

    மதுரை மாவட்டத்தில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு முதியவர்களை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டத்தில் உள்ள 15 வயது சிறுமி 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். தாயுடன் தனியாக வசித்து வருகிறார். தன் தந்தையின் நண்பர் ஒருவர் இவர்களுக்கு உதவி செய்து வந்துள்ளார்.

    இந்நிலையில், சிறுமி வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்ற போது, 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக, சிறுமியின் தாய் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சிறுமியிடம் விசாரணை நடத்தினர். சிறுமியின் வீட்டு அருகே உள்ள முருகேசன் என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    இதை அறிந்த ரமேஷ் என்பவரும் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

  7. வந்துகொண்டிருக்கும் செய்தி, ஹைதராபாத்: கலப்புத் திருமணம் செய்த இந்து இளைஞர் கொலை பற்றி மாநில அரசிடம் விளக்கம் கேட்கும் ஆளுநர் தமிழிசை

    தமிழிசை செளந்தரராஜன்
    படக்குறிப்பு, தமிழிசை செளந்தரராஜன்

    தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஹைதராபாதில் தலித் இளைஞர் நாகராஜுவை அவரது இஸ்லாமிய மனைவியின் உறவினர்கள் கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்த விரிவான நிலவர அறிக்கையை மாநில அரசிடம் கேட்டுள்ளார்.

    நாகராஜு கொலை வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஹைதராபாத் காவல்துறையிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையமும் அறிக்கை கோரியுள்ளது.

    தெலங்கானா படுகொலை

    பட மூலாதாரம், NCSC

  8. நெல்லையில் 500 கிலோ மாம்பழங்கள் அழிப்பு: ரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்பட்டதால்

    மாம்பழங்கள் அழிப்பு

    நெல்லை சந்திப்பில் ரசாயன கற்களைக் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழத்தை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

    திருநெல்வேலி மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, தெலுங்கான, கர்நாடகா, மகராஷ்ட்ராஉள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான டன் மாம்பழங்கள் விற்பனைக்காக வருகின்றன.

    மாம்பழங்கள் சுகாதாரமற்ற முறையில், ரசாயன கற்களைக் கொண்டு பழுக்க வைக்கப்படுவதாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து, மாவட்ட நியமன அலுவலர் சசிதீபா தலைமையில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் நெல்லை ரயில்வே சந்திப்பு கண்ணம்மன் கோயில் தெருவில் உள்ள மொத்த விற்பனை பழக்கடையில் சோதனை நடத்தினர்.

    அப்போது 500 கிலோ மாம்பழங்கள் ரசாயனக்கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்டது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து, அழித்தனர். தொடர்ந்து பழக்கடைகளில் சோதனை நடத்தப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

  9. ஹைதராபாத்தில் மனைவி கண்முன்னே நடந்த கொலை. ஏன் ?

    தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கலப்பு மணம் செய்த நாகராஜ் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இஸ்லாமிய பெண்ணை மணந்த இந்து இளைஞருக்கு நடந்த கொடூரம். விரிவான காணொளி.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  10. காரைக்குடியில் பயணத்தில் தீப்பிடித்த கார் - 4 பேர் தப்பியது எப்படி?

    தீப்பிடித்த கார்

    காரைக்குடியில் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காரில் இருந்து, விரைந்து வெளியேறியதால் 4 பேர் உயிர் தப்பினர்.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பொன் நகரில் வசிப்பவர் குப்புசாமி. இவர் தனது காரில் குடும்பத்தினர் 4 பேருடன் காரைக்குடி நகராட்சி அலுவலகம் எதிரே சென்று கொண்டிருந்தார். அப்போது காரின் முன் பக்கத்திலிருந்து புகை வந்துள்ளது.

    அதை பார்த்த குப்புசாமி, உடனடியாக காரை சாலையோரம், நிறுத்தினார். காரில் இருந்த தனது மகள், பேத்திகளை விரைந்து வெளியேற்றி, பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

    அதற்குள் கார் மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து அருகே இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கார் முற்றிலும் எரிந்த நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையினர் தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தீப்பிடித்த கார்
  11. மகாராஷ்டிராவில் வாகன விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

    மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் சரக்கு லாரி ஒன்று ஷேர் ஆட்டோ மீது மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இன்று காலை இந்த விபத்து நடைபெற்றதாக காவல்துறையின் தகவலை மேற்கோள்காடி பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “அதிவேகமாக வந்த சரக்கு லாரி, பயணிகளை ஏற்றிச் சென்ற ஷேர் ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் 2 மாணவர்கள், 2 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தன. ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.'' என்று தெரிவித்தார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  12. அமர்நாத் யாத்திரை பாதையில் துப்பாக்கிச் சூடு - 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்

    காஷ்மீர் மாநிலம் அனந்த்நாகில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டனர்.

    காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் யாத்திரை செல்லும் வழியில் இந்த துப்பாக்குச் சூடு நடைபெற்றது.

    இதில், தீவிரவாதிகள் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டது காவல் துறையினருக்கு பெரும் வெற்றியாகியுள்ளது. என்று காஷ்மீர் காவல்துறை ஐ.ஜி விஜய்குமார் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  13. இலங்கை நெருக்கடி: உள்ளூராட்சி சபைகளைக் கலைத்து 150 கோடி ரூபாய் மிச்சப்படுத்த யோசனை

  14. கொரோனா இறப்புகள் - மோதி மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு

    கொரோனா இறப்புகள் எண்ணிக்கை குறித்து அறிவியல் பொய் சொல்லாது. ஆனால் மோதி சொல்லுவார் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    கொரோனாவினால் தற்போது வரை அரை மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளை இந்தியா அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளது. கடந்த 2020 ஜனவரி 1 முதல் 2021 டிசம்பர் 31ம் தேதி வரை 481,000 பேர் கொரோனாவினால் இறந்துள்ளதாக பதிவாகியுள்ளன.

    ஆனால், உலக சுகாதார அமைப்பின் கணக்கீடு, இந்த எண்ணிக்கையை விட 10 மடங்கு அதிகமாக உள்ளது. உலகளவில் கொரோனா இறப்புகளில் சற்றேறக்குறைய மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ளது. இந்தியாவில் 47 லட்சம் பேர் இறந்துள்ளனர்.'' உலக சுகாதார் அமைப்பு தெரிவித்துள்ளது. இதை இந்தியா ஏற்கவில்லை. ஆனாலும், இந்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களும் உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்பும் முரண்பட்டுள்ளதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விபரத்தைக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அதில், "இந்திய அரசு கூறியது போல் 4.8 லட்சம் பேர் கொரோனாவினால் இறக்கவில்லை. 47 லட்சம் பேர் இறந்துள்ளனர். அறிவியல் பொய் சொல்லாது. ஆனால் மோதி சொல்லுவார்.'' என்று தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  15. பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா பற்றி ஆளுநர் ரவி சர்ச்சை பேச்சு: முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு

  16. 'மனிதனை மனிதன் சுமப்பது இழிவு' - சீமான்

    பட்டினப்பிரவேசம் என்பதையே நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் தருமபுர ஆதீனத்தில் நடைபெறும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பல்லக்கு தூக்கும் நிகழ்விற்கு, வருவாய் கோட்டாட்சியர் அனுமதி அளிக்கவில்லை. இதை ஆதரித்தும் எதிர்த்தும் தொடர் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு,

    "மனிதனை மனிதன் சுமப்பது இழிவு. இதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த காலத்தில் வாகன வசதி இல்லாத காரணத்தால், தோளில் தூக்கிச் சென்றார்கள். இன்றைய காலத்தில் நவீன வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஆகையால், பட்டினப் பிரவேசம் என்பதையே நான் ஏற்றுக்கொள்ளவில்லை.;'' என்றார்.

    சீமான்
  17. கேரளா நடிகை பற்றி அவதூறு: தமிழ்நாட்டு எல்லையில் இயக்குநர் கைது

    மலையாள இயக்குநர் கைது

    பட மூலாதாரம், Getty Images

    கேரளா முன்னணி நடிகை குறித்து சமூகவலைத்தலங்களில் அவதூறு பரப்பியதாக மலையாள திரைப்பட இயக்குநர் தமிழ்நாடு எல்லையில் கைது செய்யப்பட்டார்.

    தமிழில் அசுரன் உள்ளிட்ட படங்கள் மற்றும் மலையாள முன்னணி நடிகையும்மான மஞ்சுவாரியர் குறித்து, பிரபல இயக்குநரும் வழக்கறினருமன சணல்குமார் சசிதரன் அண்மையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

    அந்த பதிவில், 'மஞ்சுவாரியர் உயிருக்கு ஆபத்து. சிலர் பிடியில் சிக்கி இருப்பதாகவும்'' என்று தெரிவித்திருந்தார். இது குறித்து மஞ்சுவாரியர் எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருந்து வந்தார்.

    இந்நிலையில், தன்னைப்பற்றி மர்ம நபர் ஒருவர், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவதாக மஞ்சுவாரியார் போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, தமிழ்நாடு - கேரள எல்லையில் உள்ள பாறசாலை மகாதேவர் கோயில்லில் சணல் குமார் குடும்படுத்தினருடன் தரிசனம் செய்தார்.

    அப்போது, கேரளா சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்து எர்ணாகுளம் அழைத்து சென்றனர்.

  18. ''பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு ஆபத்தானது'' - தமிழ்நாடு ஆளுநர் கருத்து

    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

    பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு ''மிக ஆபத்தான இயக்கம்" என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். இது சர்ச்சைய ஏற்படுத்தியுள்ளது.

    ஆளுநர் ஆர்.என். ரவியின் கருத்தைக் கண்டித்து பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப் போவதாக அறிவிப்புத்துள்ளனர். ஆளுநர் ஆர்.எஸ்.எஸ்சின் குரலாக ஒலிக்கிறார் என்றும் குற்றச்சாட்டியுள்ளனர்.

  19. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஒத்தி வைப்பு: கொரோனா பரவல் காரணமாக

    சீனாவின் ஹாங்ஷோ நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த போட்டிகள் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. போட்டி நடத்தப்படும் மறு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

    ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 10 - 25 தேதிகளில் நடத்த திட்டமிட்டு, அனைத்து ஏற்பாடுகளையும் போட்டி ஏற்பாட்டாளர்கள் செய்துள்ளனர்.

    ஆனால், சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

    ஆசிய விளையாட்டுப் போட்டி

    பட மூலாதாரம், Getty Images

  20. சென்னை விக்னேஷ் மரணம்: தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் விசாரணை

    சென்னை விக்னேஷ் மரணம்

    பட மூலாதாரம், Getty Images

    சென்னையில் விக்னேஷ் என்ற இளைஞர் போலீஸ் காவலில் உயிரிழந்த விவகாரத்தை தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு எடுத்துள்ளது.

    சென்னையில் விக்னேஷ் என்ற இளைஞர் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, பிறகு போலீஸ் காவலிலேயே சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துபோன வழக்கில், உடற்கூறு ஆய்வின் அறிக்கை ஊடகங்களில் வெளியானது. அதில் அவரது உடலில் 13 இடங்களில் கடுமையான காயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விளக்கமளித்தார்.

    இந்நிலையில், விக்னேஷின் மரணம் குறித்த விவகாரத்தை தாமாகவே முன்வந்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு எடுத்துள்ளது. என்ன நடந்தது ? என்பது குறித்து 4 வாரங்களுக்குள் விளக்கமளிக்க, சென்னைப் பெருநகர காவல் ஆணையரிடம் கேட்டுள்ளது.

    மேலும், வழக்கை சிபிசிஐடி விசாரித்துவரும் நிலையில், காவல் ஆய்வாளர், இரண்டு உதவி ஆய்வாளர்கள் உட்பட 9 காவலர்கள் சிபிசிஐடி அலுவலகத்திற்கு விசாரணைக்கு சென்றுள்ளனர்.