இலங்கை மக்களுக்கு உதவ திமுக ஒரு கோடி ரூபாய் நிதி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இலங்கை மக்களுக்கு உதவ திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும். திமுக எம்.எல்.ஏக்கள் ஒரு மாத ஊதியத்தை அளிக்கிறார்கள் என்று திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
ஜோ மகேஸ்வரன்
ஆஸ்துமா பரம்பரை நோயா ? தடுக்க மருத்துவ நிபுணர் சொல்லும் ஆலோசனைகள், ஜோ மகேஸ்வரன்
பட மூலாதாரம், Getty Images
நீண்டகால ஒவ்வாமையினால் நுரையீரல் மற்றும் சுவாசக் குழாய்களில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக ஏற்படும் இளைப்பு நோயே ஆஸ்துமா எனப்படுகிறது.
அதிகப்படியான மூச்சுத் திணறல் அல்லது இளைப்பு, அதிகப்படியான இருமலால் ஏற்படும் தூக்கமின்மை, நெஞ்சில் ஏற்படும் வலி, இறுக்கம் ஆகியவற்றை ஆஸ்துமாவின் அறிகுறிகளாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆஸ்துமா பரம்பரை நோயா? தடுக்கவும் கட்டுப்படுத்தவும் என்ன செய்ய வேண்டும்? என்பன உள்ளிட்ட சந்தேகங்களுக்கு மருத்துவ நிபுணர்கள் அளித்துள்ள விளக்கங்களை விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உற்பத்தி நிறுத்தம் : 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அனல் மின் நிலையத்தில் 210 மெகா வாட் உற்பத்தி செய்யும் 5 யூனிட்டுகள் உள்ளன. இதன் மூலம் நாள்தோறும் 1, 050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
நாள்தோறும் ஐந்து பிரிவுகளிலும் மின்னுற்பத்தி முழு அளவில் ( 210 mw ) உற்பத்தி செய்ய வேண்டுமென்றால் 25 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும். கோடைகால மின்சார தேவைக்காக ஐந்து பிரிவுகளிலும் முழு மின் உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில், நிலக்கரியின் கையிருப்பு தட்டுப்பாட்டால் 5 பிரிவுகளிலும் முழு மின் உற்பத்தி செய்வது கடந்த ஒரு மாதமாக தடைபட்டுள்ளது.
அனல் மின்சாரத்தின் நிலக்கரி தேக்கி வைக்கும் பகுதியில், இன்றைய நிலவரப்படி 25 ஆயிரம் டன் மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளது. தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் நியு மங்களுர் துறைமுகத்தில் இருந்து 30 ஆயிரம் டன் நிலக்கரி இறங்கி வருகிறது. ஆனால் இந்த நிலக்கரியை கொண்டு 5 நாட்கள் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தடையின்றி நிலக்கரி கிடைத்தால் மட்டுமே 5 பிரிவுகளிலும் முழுமையான மின் உற்பத்தி செய்ய முடியும் என்கின்றனர். இன்று காலை 4 பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 1வது யூனிட்டில் மட்டும் 210 மெகாவாட் மட்டுமே மின்னுற்பத்தி தற்போது நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து அனல்மின் நிலைய தலைமை செயற்பொறியாளர் கிருஷ்ணகுமாரிடம் கேட்ட போது, ‘தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் போதுமான நிலக்கரி உள்ளது. மேலும், தேவையான நிலக்கரி வந்து கொண்டு இருக்கிறது.
தற்போது ஒரு கப்பலில் 55 ஆயிரம் டன் நிலக்கரி வந்து துறைமுகத்தின் வெளிப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அந்த நிலக்கரியும் அனல் மின்நிலையத்துக்கு வரும்போது, 10 நாட்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லாமல் மின்உற்பத்தி எந்திரங்களை இயக்க முடியும்’ என்றார்.
மேலும் இன்று 11.30 மணிக்கு 2 வது யூனிட்டும், 12 மணிக்கு 3வது யூனிட்டும், 12.30 மணிக்கு 4வது யூனிட்டும், மாலை 3.30 மணிக்கு 5வது யூனிட்டும் இயக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
படக்குறிப்பு, தூத்துக்குடி அனல் மின் உற்பத்தி நிலையம்
திருப்பூர்: மே 16 -21 தேதிகளில் வேலை நிறுத்தம் - நூல் விலை உயர்வைக் கண்டித்து
நூல் விலை உயர்வைக் கண்டித்து வரும் 16 -21 தேதிகளில் வேலை நிறுத்தப்போராட்டம் நடத்த உள்ளதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஜவுளித்துறைக்கு அடிப்படை மூலப்பொருளான பருத்தியின் விலை கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. இதனால் ஏற்பட்ட தட்டுப்பாட்டை போக்க பருத்தி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதனைத் தொடர்ந்து மத்திய அரசு பருத்தி மீதான இறக்குமதி வரியை வருகின்ற செப்டம்பர் மாதம் வரை ரத்து செய்தது.
ஆனாலும் பருத்தி விலை குறையாமல் இருப்பதாக நூற்பாலைகள் குற்றம் சாட்டியிருந்தனர். இதனால் நூலின் விலையும் தற்போது அதிகரித்துள்ளது. ஜவுளிக்கு பயன்படுத்தப்படும் நூலின் விலை கிலோவுக்கு 40 ரூபாய் அதிகரித்துள்ளது.
இதனால் ஜவுளித்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து திருப்பூரில் ஜவுளி துறையினரின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில் நூல் விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 16ம் தேதி முதல் 21ம் தேதி வரை அனைத்து அமைப்புகளும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளன.
மேலும் அவசர ஆலோசனை கூட்டத்தில் பருத்தி, நூல் உள்ளிட்டவற்றை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இணைக்க வேண்டும், பஞ்சு, நூல் போன்ற முக்கியமான மூலப் பொருட்களை உள்நாட்டுத் தேவைக்குப் போக மட்டுமே ஏற்றுமதி செய்ய வேண்டும்.
பிற மாவட்டங்களில் உள்ள ஜவுளி அமைப்புகளை தொடர்பு கொண்டு, மாநிலம் தழுவிய போராட்டமாக முன்னெடுக்க வேண்டும்' போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து இணைந்திருங்கள்
வணக்கம். நான் ஜோ மகேஸ்வரன்.
இது வரை நந்தினி வெள்ளைச்சாமி வழங்கிய நேரலைப் பக்கத்தை இனி நான் தொகுத்து வழங்குகிறேன்.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள், விளையாட்டு, சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்துறை செய்திகள் ஆகியவற்றை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.
குறிப்பாக, யுக்ரேன் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
கொரோனா: சுய இன்பம் செய்வது நோயெதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்துமா?
தமிழகம் செல்ல முற்பட்ட இலங்கை தமிழர்கள் கைது
தமிழகம் செல்ல முற்பட்ட வவுனியாவை சேர்ந்த 4 பேர் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வந்து, அல்லைப்பிட்டி கடற்பகுதி வழியாக இந்தியா செல்ல முற்பட்ட போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரையும் சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை இந்தியாவுக்கு அனுப்பவதற்கான ஏற்பாடு செய்த நபர்கள் தொடர்பிலான விசாரணைகளையும் போலீசார் நடத்தி வருகின்றனர்.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளை புலி தாக்கி பணியாளர் காயம்
படக்குறிப்பு, செல்லய்யா
வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளை புலி தாக்கி பணியாளர் காயம் அடைந்தார்.
சென்னை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஒவ்வொரு விலங்குக்கும் தனித்தனி பராமரிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன.
விலங்குகளின் நடவடிக்கைகளில் ஏதேனும் சிறு மாற்றங்கள் ஏற்பட்டாலும் உடனடியாக பராமரிப்பாளர் மூலம் மருத்துவக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
அந்த வகையில், ஆறு வெள்ளை புலிகளை பராமரிக்க செல்லய்யா என்பவர் உட்பட இன்னும் சில பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். இதில் நகுலன் என்கின்ற வெள்ளை புலி சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது.
இதையடுத்து செல்லய்யா மருத்துவக் குழுவிடம் தகவல் தெரிவித்துள்ளார். மருத்துவக் குழுவும் சோர்ந்திருந்த வெள்ளை புலிக்கு சிகிச்சை அளிக்க அதன் ஆசனவாய் வாயிலாக மாதிரியை சேகரிக்க முயற்சித்திருக்கிறார்கள்.
அப்போது திடீரென ஆவேசம் கொண்ட வெள்ளை புலி பராமரிப்பாளர் செல்லய்யாவை தாக்கியுள்ளது. உடனே சுதாரித்துக் கொண்ட சக ஊழியர்கள் வெள்ளை புலியை கூண்டில் வைத்து அடைத்து காயமடைந்த செல்லய்யாவை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளித்திருக்கிறார்கள். தற்போது அவர் நலமுடன் இருக்கிறார் என பூங்கா நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
கீழடியில் மனித முகம் கொண்ட சுடுமண் சிற்பம் கண்டெடுப்பு
கீழடியில் மனித முகம் கொண்ட சுடுமண் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி கீழடியில் மட்டும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அகழாய்வு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
பின்னர் கொந்தகை, அகரம் ஆகிய இடங்களில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனிடையே கீழடியில்
மனித முகம் கொண்ட சுடுமண் சிற்பத்தை கண்டெடுத்துள்ளனர். மனித முகம் கொண்ட சுடுமண் சிற்பத்தை தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், இதன் உயரம், அகலம், சிற்பத்தின் தலையில் உள்ள கொண்டை போன்றவற்றை தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
2600 ஆண்டுகளுக்கு முன்பு இதனை தமிழர்கள் எதற்காக பயன்படுத்தினார்கள், யாருடைய நினைவாக இதனை செய்தார்களா? என தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மனித முகம் கொண்ட இந்த சுடுமண் சிற்பம் வரும் நாட்களில் அதிக அளவில் கிடைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
ஜோத்பூர் வன்முறை: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சேவை துண்டிப்பு
பட மூலாதாரம், ANI
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஜலோரி கேட் பகுதியில் நேற்றிரவு இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு இணைய சேவையை துண்டித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நேற்றிரவு அப்பகுதியில் ஒரு சமூகத்தினர் பரசுராம் ஜெயந்தியை முன்னிட்டு ஏற்றிய கொடியை, மற்றொரு சமூகத்தினர் அகற்றி தங்கள் கொடியை ஏற்றி, ஒலிபெருக்கியை பொருத்தியதாக குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து அங்கு மோதல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை உபயோகித்தும், தடியடியும் நடத்தி அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த மோதலில்,காவல் துணை ஆணையர் உட்பட காவல் துறையை சேர்ந்த இருவர் மற்றும் செய்தியாளர் ஒருவர் என மூன்று பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து திரும்பினர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு, 1
இதையடுத்து, இன்று காலை ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். ஜோத்பூர் காவல் ஆணையர் நவ்ஜோதி கோகாய், "அப்பகுதியில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையை சேர்ந்தவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம், குறித்து விசாரித்து வருகிறோம்" என தெரிவித்ததாக, ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.
"கொடி ஏற்றுவதில் சர்ச்சை எழுந்த நிலையில், இன்று காலை அக்கொடியை அகற்றிவிட்டு அந்த இடத்தில் தேசிய கொடியை மாவட்ட நிர்வாகம் ஏற்றியது" என சம்பவ இடத்தில் இருந்த பெயர் தெரிவிக்க விரும்பாத செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ட்வீட் செய்துள்ள மாநில முதலமைச்சர் அசோக் கெலோட், "இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது, அனைவரும் அமைதிகாக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு, 2
தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என்றுகூட பெயர் மாற்றுவார்கள் - ஜெயக்குமார்
கிழக்கு கடற்கரை சாலையின் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: "போகிற போக்கை பார்த்தால், தமிழ்நாட்டை கூட கருணாநிதி நாடு என்றுகூட பெயர் மாற்றம் செய்தாலும் செய்வார்கள்" - அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரின் கருத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பதை பிபிசி தமிழின் இந்த ட்விட்டர் பதிவுக்கு சென்று தெரிவியுங்கள்:
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
ஜெர்மனியில் உற்சாகமாக டிரம்ஸ் வாசித்த பிரதமர் மோதி
ஜெர்மனியில் உற்சாகமாக டிரம்ஸ் வாசித்த இந்திய பிரதமர் நரேந்திர மோதி
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
நாஜிக்களிடம் இருந்து தப்பிக்கப் பதுங்கிய பெண்ணின் டைரி- லட்சக்கணக்கில் விற்பனையானது ஏன்?
எரிபொருள் கொள்முதலுக்கு இந்தியாவிடமிருந்து மேலதிக கடன் பெற எதிர்பார்த்துள்ளோம் - இலங்கை அமைச்சர்
பட மூலாதாரம், GETTY IMAGES
இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் எரிபொருள் கொள்முதலுக்காக கிடைக்கப்பெறும் கடனுதவி தொகைக்கு மேலதிகமாக கடன் தொகையை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக, இலங்கை மின்சாரம் மற்றும் வலுசக்தி துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதாக, 'வீரகேசரி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், "இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 1.2 பில்லியன் டொலர்களை வழங்குவதாக ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையின் ஊடாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை உத்தியோகப்பூர்வமான அறிவிப்பு கிடைக்கப் பெறவில்லை" என்றார்.
ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவா அல்லது மூன்று வேளை உணவா? - எது சிறந்தது?
பட மூலாதாரம், GETTY IMAGES
ஒரு நாளைக்கு எட்டு மணிநேரத்திற்கு எதுவும் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருப்பது குறித்து ஆராய்ச்சிக்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. ஒரு நாளைக்கு குறைந்தது 12 மணிநேரம் உணவு இல்லாமல் இருக்கும் நிலையை நம் உடலுக்கு கொடுப்பதால், செரிமானத்திற்கு ஓய்வு அளிக்கிறோம் என்று கலிபோர்னியாவில் உள்ள உயிரியல் ஆய்வுகளுக்கான சால்க் இன்ஸ்டிட்யூட்டில் மருத்துவ ஆராய்ச்சியாளராக உள்ள எமிலி மனோகன் தெரிவிக்கிறார்.
"ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரம் சாப்பிடாமல் இருப்பது, சில நன்மைகளை தரும்", என்று விஸ்கான்சின் பல்கலைக்கழக மருத்துவம் மற்றும் பொது சுகாதாரப் பள்ளியில் இணைப் பேராசிரியரான ரோசலின் ஆண்டர்சன் கூறுகிறார்.
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் கர்ப்பிணி மற்றும் தாய் உயிரிழப்பு
தூத்துக்குடியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் கர்ப்பிணி உட்பட இருவர் உயிரிழந்தனர்.
தூத்துக்குடி அண்ணாநகர் 3வது தெருவில் முத்துராமன், அவரது மனைவி காளியம்மாள், மகள் காத்தம்மாள் என்ற கார்த்திகா ஆகியோர் வசித்து வருகின்றனர்.
கார்த்திகாவுக்கு திருமணம் முடிந்து பத்து மாதம் ஆகிறது.
படக்குறிப்பு, கார்த்திகா
கர்ப்பிணியான இவரை கடந்த வாரம் வளைகாப்பு நடத்தி தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர் முத்துராமன் - காளியம்மாள் தம்பதி.
இவர்கள் நேற்றிரவு வழக்கம் போல் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அதிகாலை 4 மணியளவில் வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய கர்ப்பிணி கார்த்திகா மற்றும் தாய் காளியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படக்குறிப்பு, காளியம்மாள்
வீட்டின் ஒரு ஓரத்தில் படுத்திருந்ததால் முத்துராமன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கிய இரு உடல்களையும் மீட்டு உடற்கூராய்வு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தென்பாகம் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,568 பேருக்கு கொரோனா
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,568 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,911 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 19,137 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் நேற்று முன்தினம் 3,157 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இந்த எண்ணிக்கை தற்போது சற்று குறைந்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
வணக்கம் நேயர்களே!
நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள், விளையாட்டு, சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்துறை செய்திகள் ஆகியவற்றை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.
குறிப்பாக, யுக்ரேன் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள். உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.
நேற்றைய நேரலை பக்கத்தின் முக்கியமான செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:
இந்தியாவில் நேற்று ஒரு நாளில் 3,157 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 19,500 ஆக இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.
யுக்ரேனில் உள்ள ராணுவ ஆயுதக் கிடங்குகள், கட்டுப்பாட்டு அறைகள் உள்ளிட்ட 38 இலக்குகளில் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டு பள்ளிகளில் மாதந்தோறும் பெற்றோர்-ஆசிரியர்-மாணவர் சந்திப்பு நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கருங்கடல் பகுதியில் ரஷ்யாவின் ரோந்து கப்பல்கள் இரண்டை தாக்கி அழித்ததாக யுக்ரேன் ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்கும் சிறப்பு குழு, முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டியின் உதவியாளர் நாராயணசாமியிடம் விசாரணை நடத்தியது.
இரண்டு மாத கைக்குழந்தையுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.
மக்கள் நல்லாட்சியை நோக்கி பயணிக்க உள்ளேன் என்று தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் கண்டமங்கலத்தில் கிராமசபை கூட்டத்தில் அரசு அதிகாரியை காலணியால் தாக்கியதாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை நெருக்கடி: உணவு, மருந்துகள் அனுப்பி உதவும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு இலங்கை எம்.பிக்கள் சுமந்திரன், ஜீவன் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்திய பிரதமர் மோதியின் 8 ஆண்டுகால தவறான நிர்வாகத்தால், மின்சாரம், வேலை, பணவீக்க நெருக்கடி என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் அலுவலக ஆலோசகராக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி தருண் கபூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறும் பட்டணப் பிரவேச நிகழ்வில், பல்லக்கு தூக்குவதற்கு அனுமதி மறுத்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல்லில் லாரி ஓட்டுநரின் மகளை கடத்திய கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர்.
இந்தியா ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற தமிழ்நாடு அணியினர் முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றனர்.
பிரதமர் நரேந்திர மோதி ஐரோப்பாவின் மூன்று நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் முதலாவதாக ஜெர்மனி சென்றடைந்துள்ளார்.
சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கவில்லை எனவும், ஆங்கில மொழிபெயர்ப்பை மட்டுமே உறுதிமொழி ஏற்றோம் எனவும், மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் சங்கத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.
தடுப்பூசி கட்டாயம் என்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்றம், தடுப்பூசி செலுத்திக் கொள்ள கட்டாயப்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளது.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சம்ஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்டது கண்டனத்திற்குரியது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.