இலங்கை மக்களுக்கு உதவ திமுக ஒரு கோடி ரூபாய் நிதி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இலங்கை மக்களுக்கு உதவ திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும். திமுக எம்.எல்.ஏக்கள் ஒரு மாத ஊதியத்தை அளிக்கிறார்கள் என்று திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. யுத்த நாயகன் மஹிந்த: ராஜபக்ஷேக்கள் வளர்ந்த கதை

  2. தருமபுர ஆதீனத்துக்கு பல்லக்குத் தூக்க தடை: "உயிரே போனாலும் பல்லக்கு தூக்குவோம்" - மதுரை ஆதீனம்

  3. இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது

    வணக்கம். இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. இதுவரை இணைந்திருந்தமைக்கு நன்றி.

    இது வரையிலான முக்கிய செய்திகள்.

    • இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,568 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,911 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்.
    • இலங்கை மக்களுக்கு உதவ திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும். திமுக எம்.எல்.ஏக்கள் ஒரு மாத ஊதியத்தை அளிக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
    • சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர்,தன்னை கொலை செய்ய திட்டமிடப்படுவதாக' நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளஅனல் மின் நிலையத்தில் 210 மெகா வாட் உற்பத்தி செய்யும் 5 யூனிட்டுகள் உள்ளன. நிலக்கரி பற்றாக்குறையால் 4 யூனிடுகளில் 840 மெகாவாட் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
    • யுக்ரேனில் ரஷ்யப்படையினர் முற்றுகையிட்டுள்ள இரும்பு ஆலையில் ரஷ்யப்படைகள் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளதாக, யுக்ரேன் தெரிவித்துள்ளது.
    • யுக்ரேனில் ரஷ்யப்படையினர் முற்றுகையிட்டுள்ள இரும்பு ஆலையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இன்னும் சிக்கியுள்ளனர்.
    • தமிழ்நாட்டுக்கு செல்ல முயன்றதாக இலங்கை வவுனியாவை சேர்ந்த 4 பேர் யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • இஸ்லாமியர்கள் குறி வைக்கப்படுகிறார்கள். சவால்களையும் ஆபத்துகளையும் சந்திக்கின்றனர் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
    • சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளை புலி தாக்கி பணியாளர் காயம் அடைந்தார்.
    • சிவகங்கை மாவட்டம் கீழடியில் மனித முகம் கொண்ட சுடுமண் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
    • ராஜஸ்தான் ஜோத்பூரில் ஜலோரி கேட் பகுதியில் நேற்றிரவு இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு இணைய சேவையை துண்டித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
    • தூத்துக்குடியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் கர்ப்பிணி உட்பட இருவர் உயிரிழந்தனர்.
    • இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில், தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • சென்னையில் படப்பிடிப்பு நடத்த நடிகர் அஜித்திடம் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
    • இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.
    • திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் நிலக்கரி முனையத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்.
    • நூல் விலை உயர்வைக் கண்டித்து வரும் 16 -21 தேதிகளில் வேலை நிறுத்தப்போராட்டம் நடத்த உள்ளதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
    • சென்னை ராயப்பேட்டையில் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு சேர்ந்தவர் உயிரிழந்தார்.
    • பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முகக் கவசம் கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
    • சென்னை புற நகர் பகுதியில் போதை மாத்திரைகளை விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை குறிப்பாக, யுக்ரேன் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணையதளம், முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ந்து இணைந்திருங்கள்.

  4. ராகுல் காந்தியின் பார்ட்டி வீடியோ: பாஜக எழுப்பிய சர்ச்சை; காங்கிரஸ் தந்த விளக்கம்

  5. ஜோத்பூர்: ஈத் பண்டிகை ஏற்பாடுகள் தொடர்பான வன்முறையால் பதற்றம்

  6. சென்னையில் போதை மாத்திரைகள் விற்ற இருவர் கைது

    போதை ஊசிகள்

    சென்னை மதுரவாயலில் போதை மருந்து மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 300 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு சென்னை கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் பகுதியில், ஆன்லைன் மூலம் போதை மாத்திரை விற்பனை செய்த வடிவுநாதன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 30 ஆயிரம் மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்நிலையில் மதுரவாயில் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சாலையோரம் நின்றிருந்த இரண்டு இளைஞர்களிடம் , போலீசார் சோதனை செய்தனர். அப்போது, மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி, அதிக அளவில் மாத்திரைகளை வைத்திருப்பது தெரியவந்தது.

    இதை ஆன்லைன் மூலம் பணத்தை பெற்றுக்கொண்டு ஆயிரம் ரூபாய் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை விற்பனை செய்து வந்து இருப்பதும் தெரியவந்தது.

    அதே பகுதியை சேர்ந்த சிவா மற்றும் சக்திவேல் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை புறநகர் பகுதிகளில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் போதை மாத்திரைகள் விற்பனை தொடர்பாக 2 கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் ஆயிரக்கணக்கான மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

  7. பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாணவர்களுக்கு முகக் கவசம் கட்டாயம்

    இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், நாளை மறுதினம் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்குகிறது. இந்நிலையில், பத்தாம் வகுப்பு, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும்.

    தேர்வுப் பணிகளில் ஈடுபடும் கண்காணிப்பாளர்கள், ஆசிரியர்களும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.' என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

  8. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட ஆய்வாளர் கடிதம்

    சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தன்னை கொலை செய்ய திட்டமிடப்படுவதாக மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த தந்தை, மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் காவல் நிலையத்தில் கொலையான வழக்கில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் மதுரை மத்திய சிறையில் உள்ளனர். இவர்களில் முதல் குற்றவாளியாக உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘'ஜெயராஜ், பென்னிக்ஸை ஏ 2 முதல் ஏ 9 வரை ஒன்று சேர்ந்து, காவல் நிலையத்தில் கொடூரமாக அடித்தும் பொய் வழக்கு பதிவு செய்தும் தந்திரமாக சிறையில் அடைத்தனர். இதனால், இருவரும் இறந்து விட்டனர்.

    இந்த வழக்கில் என்னையும் மாட்டி விட்டீர்களே என்று கேட்டதற்கு தகராறு ஏற்பட்டது. அவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கெட்ட வார்த்தைகளால் திட்டியும் அடிக்கவும் முற்பட்டனர். அவர்களின் இடையூறுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    ஜெயராஜை அடித்து கொலை செய்தது போல் என்னையும் கொலை செய்ய திட்டம் தீட்டி வருகிறார்கள். விசாரணைக்கு வரும் போதும் சிறையிலும் என்னை கேவலமாக திட்டி வருகின்றனர். எனவே விசாரணைக்கு வரும்போது தனி பாதுகாப்பு வாகனம் வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும்.'என்று தெரிவித்துள்ளார்.

    சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ்
    படக்குறிப்பு, சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ்
  9. "அஜித் படப்பிடிப்பால் தொழிலாளர்களுக்கு நஷ்டம்" - ஆர்.கே.செல்வமணி

  10. 'இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள்' - நடிகை சுஹாசினி

    நடிகை சுஹாசினி

    “இந்தி நல்ல மொழி. அதை கற்றுக்கொள்ள வேண்டும். இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள்.எல்லோரும் அனைத்து மொழிகளையும் மதித்து அவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும்” - நடிகை சுஹாசினி கருத்து தெரிவித்துள்ளார்.

    மேலும், 'தமிழர்களும் நல்லவர்கள். அவர்களும் தமிழில் பேசினால் சந்தோஷப்படுவார்கள்.' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்தி மொழி குறித்து இந்தி, கன்னட திரைத்துறையினரின் கருத்துகள் கடந்த சில நாட்களாக கவனம் ஈர்த்து வரும் நிலையில், தமிழ் திரைப்பட நடிகை சுஹாசினி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

  11. இலங்கை மக்களுக்கு திமுக ஒரு கோடி ரூபாய் நிதி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    மு.க.ஸ்டாலின்

    பட மூலாதாரம், M.K.Stalin/Twitter

    படக்குறிப்பு, மு.க.ஸ்டாலின்

    இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில், தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்திருந்தார்.

    இதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    "கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும்.

    இதேபோல், திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரின் ஒரு மாத ஊதியத்தையும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்கின்றனர்.'' என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    மேலும், தமிழ்நாட்டில் இருந்து உணவு, உயிர் காக்கும் மருந்துகள், அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்க இந்திய அரசிடம் தமிழ்நாடு அரசு அனுமதி கேட்டிருந்தது. இதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.

    இதையடுத்து, முதல்கட்டமாக, தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

  12. கோவிட் 19 பூஸ்டர் தடுப்பூசி பலன் தருகிறதா? ஆய்வு சொல்லும் 7 விஷயங்கள் என்ன?

  13. “கைக்குழந்தைக்கு மருந்துகூட வாங்க முடியவில்லை” – தமிழகம் வந்த இலங்கை தமிழர்கள்

  14. அஜித்திடம் கோரிக்கை வைக்கும் ஆர்.கே.செல்வமணி - சென்னையில் படப்பிடிப்பு நடத்துங்கள்

    ஆர்.கே.செல்வமணி

    பட மூலாதாரம், Roja Selvamani/Twitter

    படக்குறிப்பு, ஆர்.கே.செல்வமணி

    தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (FEFSI) தலைவர் ஆர்.கே. செல்வமணி 'தயாரிப்பாளர்கள் சங்கம் - பெப்சி இடையிலான பிரச்சனைக்கு முக்கிய காரணம் புரிதலின்மைதான்' என்று தெரிவித்துள்ளார்.

    திரைப்பட இயக்குநரும் பெப்சி அமைப்பின் தலைவருமான ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்கள் சந்திப்பில் ‘எப்பொழுதும் பணிவாகவும் நட்பாகவும் போவதில் எங்களுக்கு பிரச்சனையில்லை. நாங்கள் வலிமையாக இருக்கிறோம் என்பதற்காக அவர்களை அடிக்கவோ அவமானப்படுத்தவோ விரும்பவில்லை. நாங்கள் அனைவரும் ஒரே துறையை சார்ந்தவர்கள்’ என கூறினார்.

    பல முன்னணி நடிகர்களும் சென்னையில் படப்பிடிப்பு நடத்தாதது குறித்து ஏன் FEFSI அமைதி காக்கிறது ? என கேட்டதற்கு, 'விஜய், ரஜினி உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்களிடம் பேசியதால் தான் 'காலா' போன்ற படங்களின் படப்பிடிப்பு இங்கு நடந்தது. பல சமயங்களில் இங்கும் அது போன்ற பிரம்மாண்டமான செட்கள் அமைக்க வசதி இல்லாமல் போய் விடுவது உண்மைதான்.

    ஆனால், நடிகர் அஜித்திடம் நாங்கள் நேரடியாகவே இப்போது கோரிக்கை வைக்கிறோம். நீங்கள் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடத்துவதால், இங்கு பல தொழிலாளர்கள் நஷ்டம் அடைந்திருக்கிறார்கள்' என நேரடியாக அஜித், தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் ஹெச்.வினோத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.

    மேலும், 'விஜய் இருமொழி படம் செய்யும் போது அங்கே போவதை தவிர்க்க முடியாது. ஆனால், அதற்கு ஏற்றாற் போல அடுத்த படத்தில் செய்து கொடுப்பார். நாங்களும் இங்கே மட்டும் தான் படப்பிடிப்பு வைக்க வேண்டும் என சொல்லவில்லை.

    ஆனால், தொடர்ச்சியாக வெளி மாநிலத்தில் படப்பிடிப்பு நடத்துவது ஏற்புடையதல்ல. நம் சென்னையிலேயே செட் அமைப்பதற்கான அனைத்து இடங்களும் பாதுகாப்பாக உள்ளது.' எனவும் தெரிவித்தார்.

  15. இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களுடன் அண்ணாமலை சந்திப்பு

    அண்ணாமலை - விக்னேஸ்வரன் சந்திப்பு

    பட மூலாதாரம், K Annamalai

    இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.

    இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், பா.ஜ.க தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை அங்கு சென்றுள்ளார்.

    இலங்கை முன்னாள் நீதிபதி, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்து பேசினார். அப்போது, இலங்கைக்கு உதவும் இந்திய பிரதமருக்கு நன்றி தெரிவித்தாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

    இதைத் தொடர்ந்து, இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களை அண்ணாமலை சந்தித்து பேசினார்.

  16. எண்ணூர் நிலக்கரி முனையத்தில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

    எண்ணூர் நிலக்கரி முனைய லாரிகள்

    திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் நிலக்கரி முனையத்தில் இருந்து தனியார் அனல் மின் நிலையங்கள், இரும்பு உருக்கு ஆலை மற்றும் தொழிற்சாலைகளுக்கு நிலக்கரி கொண்டு செல்லும் பணியில், ஒப்பந்த அடிப்படையில் சுமார் 500 டிப்பர் லாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 2020, பிறகு இரண்டு ஆண்டுகளாக வாடகை உயர்த்தப்படாத நிலையில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், சுங்க கட்டணம், மற்றும் வாகன உதிரி பாகங்களின் விலை உயர்வு காரணமாக, வாடகை சரக்கு வாகன தொழில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக கூறி லாரி வாடகை 30%சதவீதம் உயர்த்தி தர வேண்டும் என டிப்பர் லாரி ஓட்டுனர் சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர்.

    இது குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாததால், கடந்த இரண்டு நாட்களாக நிலக்கரி கொண்டு செல்லும் சுமார் 500க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் சுரேஷ் பிபிசி தமிழிடம் கூறுகையில், 'நிலக்கரி தேவைப்படும் தனியார் நிறுவனங்களில் நிலக்கரி கையிருப்பு இருக்கும் காரணத்தினால், எங்களின் நியாயமான கோரிக்கையை கூட அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

    தற்போது நிலவி வரும் டீசல் விலை உயர்வு மற்றும் லாரிகளின் உதிரபாக விலை உயர்வு போன்ற காரணங்களால் டிப்பர் லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதோடு பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம்.

    எனவே எங்களுக்கு 30 சதவீதம் வாடகை உயர்வு கிடைக்கும் வரை நிலக்கரி தேவைப்படும் நிறுவனங்களுக்கு நிலக்கரியை கொண்டு செல்ல மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.' என்றார்.

  17. 'ஹிட்லர் உடலில் யூத ரத்தம்' - ரஷ்ய அமைச்சர் பேச்சால் இஸ்ரேல் கோபம்

  18. 'இலங்கை மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள்' - தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

    இலங்கை மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு உதவிடும் வகையில், தமிழ்நாட்டில் இருந்து உணவு, உயிர் காக்கும் மருந்துகள், அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்க இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

    இதன்படி, முதல்கட்டமாக, தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

    இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் நம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டிய தருணம் இது.

    எனவே, மனிதாபிமான அடிப்படையில் இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் வழங்கிடும் உதவிகள் மூலம் தேவையான பொருட்களாக வாங்கி, அனுப்பி வைக்கப்படும்.'' என்று தெரிவித்துள்ளார்.

    மேலும்,

    நன்கொடைகளை காசோலை, வரைவு காசோலை மூலம் வழங்க விரும்புவோர், அரசு இணைச் செயலாளர் மற்றும் பொருலாளர், முதலமைச்சர் பொது நிவாரண நிதி, நிதித்துறை (மு.பொ.நி.நி), தலைமைச் செயலகம் சென்னை - 6000 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

    மின்னணு பரிவர்த்தனை மூலம் வங்கிக் கணக்கிலும் செலுத்தலாம். முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குவோர் 80-ஜியின் கீழ் வருமான வரி விலக்கு பெறலாம் என்றும் அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  19. இஸ்லாமியர்கள் குறி வைக்கப்படுகிறார்கள் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

    பட மூலாதாரம், Joe Biden/Twitter

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் திங்கள்கிழமை ரமலான் திருநாளை கொண்டாடினார்.

    ரமலான் பண்டிகையையொட்டி வெள்ளை மாளிகைக்கு வந்திருந்த மக்களிடம் அமெரிக்க அதிபர் பேசுகையில், “இன்று உலகம் முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை அதிக அளவில் பார்க்கிறேன். யாரும் யாரையும் அவர்களின் மத அடையாளத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டவோ, ஒடுக்கவோ கூடாது.

    முஸ்லிம்கள் நமது நாட்டை ஒவ்வொரு நாளும் பலப்படுத்துகிறார்கள், ஆனால் அவர்கள் சமூகத்தில் சவால்களையும் ஆபத்துகளையும் எதிர்கொள்கிறார்கள். வன்முறையை எதிர்கொள்வதுடன், இஸ்லாமோஃபோபியா மூலமாகவும் குறிவைக்கப்படுகிறார்கள்.'' என்றார்.

    பில் கிளிண்டன் அதிபராக இருந்த போது, வெள்ளை மாளிகையில் ஈத் பெருநாள் கொண்டாடும் வழக்கம் தொடங்கியது. இதை டொனால்ட் ட்ரம்ப் அதிபராகியதும் இது நின்று போனது. இந்த ஆண்டு மீண்டும் தொடங்கியுள்ளது.

  20. உலக முஸ்லிம்கள் ஒரே நாளில் ரமலான் கொண்டாடுவது இல்லையே, ஏன்?