இலங்கையில் அரசு எதிர்ப்பு போராட்டத்தில் களம் இறங்கிய இ.தொ.கா

இலங்கையில் ஆளும் அரசின் கூட்டணிக்கு ஆதரவான இலங்கை தொழிலாளர் கட்சியும் அரசுக்கு எதிரான போராட்ட களத்தில் இணைந்திருப்பது பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது. மலையகத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. இலங்கை அரசியலில் ராஜபக்ஷே குடும்பம் பெரும் செல்வாக்கை பெற்றது எப்படி?

  2. வணக்கம். இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது.

    இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து நேரலைப் பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.

    இதுவரையிலான இன்றைய முக்கிய நிகழ்வுகள்.

    • இலங்கையில் நடைபெறும் போராட்டங்கள் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளது.
    • பெட்ரோல், டீசல் விலை குறித்த பிரதமர் நரேந்திர மோதியின் பேச்சுக்கு, தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதில் தெரிவித்துள்ளார்.
    • யுக்ரேன் அதிபர் வொலொடிமிர் ஸெலென்ஸ்கி நேற்றிரவு ஆற்றிய உரையில் ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்த எரிசக்தியை ஒரு ஆயுதமாக ரஷ்யா பயன்படுத்துவதாக தெரிவித்தார்.
    • பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தில், முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் பிரதமர் மோதி பேசியிருப்பதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    • திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்துள்ளோம். ஒருபோதும் வாட் வரியை உயர்த்தியதில்லை என்று நிதியமைச்சர் பழநிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
    • சென்னை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
    • ஸ்ரீரங்கம் கோயில் தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
    • தமிழ்நாட்டில் இனி வரும் காலங்களில் தேரோட்ட வீதிகளில் உள்ள மின் இணைப்புகள் புதைவட மின் கம்பிகளாக மாற்றப்படும் என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
    • இந்தி ஒருபோதும் நமது தேசிய மொழியாக இருந்ததும் இல்லை; இருக்கப்போவதும் இல்லை என்று கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
    • இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் இருவர் அகதிகள் போல் வந்ததாக தமிழ்நாடு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
    • ஆளுநர்களுக்கு மாநில அரசிடம் வேறுபட்ட கருத்து இருக்கலாம். கருத்து வேறுபாடு இருப்பதற்காக ஆளுநர்களை அவமரியாதையாக நடத்தக்கூடாது என்கிறார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்.
    • பன்முகத்தன்மை மிக்க இந்தியாவில் ஒற்றை தேசிய மொழியை கடைப்பிடிப்பது இயலாத ஒன்று என்று காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
    • தமிழ்நாட்டின் இந்த மனிதநேயம், இன்றைக்கு நாடு முழுவதும் ஒரு மாடலாக உருவாகி இருக்கிறது. இதுவும் ஒரு வகை திராவிட மாடல்தான் என்று மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
    • மத்தியப் பிரதேச சட்டப்பேரவையின் எதிர்கட்சித் தலைவராக ஸ்ரீ கோவிந்த் சிங் தேர்வாகியுள்ளார். முன்னாள் முதலமைச்சரும் மாநில காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் முன்னதாக பதவி விலகியுள்ளார்.
    • ரஷ்யாவிற்கு எதிராக, ராணுவ கூட்டணி யுக்ரேனுக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.
    • கொரோனா தொற்றின் காரணமாக சீனாவில் இருந்து இந்தியா வருவோருக்கு சுற்றுலா விசா வழங்கும் பணியை மீண்டும் தொடங்க உரிய நேரம் இன்னும் வரவில்லை என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    • மலேசியாவிற்கு கடத்த, பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 12 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தூத்துக்குடியில் பறிமுதல் செய்தனர்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், குறிப்பாக, யுக்ரேன் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழின் இணைய தளம், முகநூல், ட்விட்டர், இண்ஸ்டாகிராம் பக்கங்களில் இணைந்திருங்கள். நன்றி.

  3. பெட்ரோல் விலை: மத்திய, மாநில அரசுகள் மோதுவது ஏன்? 5 கேள்விகள், எளிய விளக்கங்கள்

  4. இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக போராட்ட களத்தில் குதித்த இ.தொ.கா, ரஞ்சன் அருண் பிரசாத், இலங்கை

    இலங்கையில் ஆளும் அரசின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இலங்கை தொழிலாளர் கட்சியும் அரசுக்கு எதிரான போராட்ட களத்தில் இணைந்திருப்பது பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது.

    மலையகத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றன.ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஆட்சியிலிருந்து, தற்போது சுயாதீனமாக செயற்படும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை ஏற்பாடு செய்திருந்தது.

    இலங்கை போராட்டம்

    பட மூலாதாரம்,

    இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கட்சி சார்பில் இன்று மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் மற்றும் பேரணிகள் என பல எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தது. குறிப்பாக பதுளை மாவட்டம் ஹபுத்தலை நகரில் இன்று இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கையில், வெளிநாட்டவர்களும் கலந்துக்கொண்டு, அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் இன்றைய தினம் இடம்பெற்ற போராட்டங்களில் கலந்து கொண்டனர்.இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலுக்கு தற்போதைய ஆட்சியாளர்களே காரணம் என கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.இவ்வாறான நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் அண்மையில் மலையகத்தில் பாரிய போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இலங்கை போராட்டம்

    பட மூலாதாரம்,

    அதன்பின்னர், மலையகத்தில் சிறு சிறு போராட்;டங்கள் மற்றும் ஆர்பபாட்டங்கள் இடம்பெற்று வந்த நிலையில், இன்று அரசாங்கத்தின் அங்கத்துவமாக செயற்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், எதிர்ப்பு போராட்டங்களை ஆரம்பித்துள்ளது.இதன்படி, மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பல்வேறு விதமான போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன.நுவரெலியா, ஹட்டன், கொட்டகலை, யட்டியாந்தோட்டை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

    இலங்கை போராட்டம்

    பட மூலாதாரம்,

    அரசாங்கத்தை வெளியேறுமாறும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை வெளியேறுமாறு கோரி, மலையக மக்கள் கோஷங்களை எழுப்பியிருந்தனர்.மலையகத்தில் இன்று போராட்டங்கள் காரணமாக, மலையகத்தின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.இதேவேளை, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று முன்னெடுக்கப்பட்ட பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக, நாட்டின் பல்வேறு துறைகள் இன்றைய தினம் முடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  5. டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதி மாற்றம்

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் வரும் ஜூன் 26ம் தேதி ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.

    இந்த தேர்வு வரும் வரும் ஜூலை 2-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி ( TNPSC) செயலாளர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார்.

  6. சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு ஜூன் 6க்கு தள்ளிவைப்பு

    சாத்தான்குளம் பிபிசி

    பட மூலாதாரம்,

    படக்குறிப்பு, ஜெயராஜ், பென்னிக்ஸ்

    தமிழ்நாட்டின் சாத்தான்குளத்தில் தந்தை மகன் சந்தேக மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை மதுரை மாவட்ட நீதிமன்றம் ஜூன் 6ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு பின்னர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.

    காவல்நிலையத்தில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்ததாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பான வழக்கு உள்ளூர் காவல்துறையிடம் இருந்து சிபிசிஐடி வசமும் பிறகு சிபிசிஐடி வசமிருந்து சிபிஐக்கும் மாற்றப்பட்டது.

    இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேர் மீது மதுரை நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வுத்துறை குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தது.

    இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது காவலர் முருகன் தரப்பில் பிணையில் விடுதலை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது கோரிக்கையை பரிசீலித்த நீதிபதி, இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 6ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

  7. தமிழ்நாட்டில் இன்று 73 பேருக்கு கொரோனா தொற்று - மொத்தம் 488 பேர் சிகிச்சையில்

    கொரோனா

    பட மூலாதாரம், Getty Images

    தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் மட்டும் மொத்தம் 73 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அதிகபட்சமாக சென்னையில் 44 பேருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரும்பான்மையான மாவட்டங்களில் புதிதாக தொற்று உறுதி செய்யப்படவில்லை.

    மேலும், கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த 32 பேர் குணமடைந்துள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் என தற்போது வரை மொத்தம் 488 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  8. மலேசியாவிற்கு கடத்த இருந்த ரூ. 12 கோடி மதிப்பு செம்மரக் கட்டைகள் - தூத்துக்குடியில் பறிமுதல்

    செம்மரக் கட்டைகள்

    மலேசியாவிற்கு கடத்திச் செல்வதற்காக, பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 12 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    தமிழ்நாட்டில் தூத்துக்குடி துறைமுகம் வழியாக மலேசியாவுக்கு கடத்தி செல்வதற்காக, செம்மரக்கட்டைகள் தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, பெங்களூருவில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து , திருப்பூரில் இருந்து மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக கடந்த 26 ஆம் தேதி கொண்டுவரப்பட்ட சரக்குப் பெட்டகத்தை , அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, சரக்குப் பெட்டகத்தில் இருந்த 9 பெட்டிகளில், ஒவ்வொரு பெட்டியிலும் மேல் பகுதியில் இரும்பு குழாய்களும், அடிப்பகுதியில் கருப்பு பிளாஸ்டிக்கால் சுற்றப்பட்டு செம்மரக்கட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து, சரக்குப் பெட்டகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 டன் செம்மரக்கட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 12 கோடி வரை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தொடர்ந்து லாரி ஓட்டுநர் உள்ளிட்ட இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    செம்மரக் கடத்தல்
  9. சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கு தீப்பற்றி எரிவது ஏன் ? - விளக்கும் காணொளி

    சென்னை மாநகரம் பெருங்குடி குப்பைக் கிடங்கில் நேற்று பற்றிய தீ இன்றும் தொடர்ந்து எரிந்தது. குப்பைக் கிடங்குகள் அடிக்கடி எரிவது ஏன் ? பாதிப்புகள் மற்றும் தடுக்கவும் தவிர்க்கவும் செய்ய வேண்டியது என்ன ? என்பது குறித்து இந்த காணொளியில் காணலாம்.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  10. தமிழ்நாட்டின் மனித நேயம் நாட்டிற்கே மாடல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

    மு.க.ஸ்டாலின்

    பட மூலாதாரம், M.K.Stalin

    படக்குறிப்பு, மு.க.ஸ்டாலின்

    தமிழ்நாட்டின் இந்த மனிதநேயம், இன்றைக்கு நாடு முழுவதும் ஒரு மாடலாக உருவாகி இருக்கிறது. இதுவும் ஒரு வகை திராவிட மாடல்தான் என்று மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

    சென்னை கொளத்தூரில் ரமலான் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, பேசுகையில், ''இஸ்லாமியர்களின் புனிதமான மாதம் இந்த மாதம். தங்களை வருத்திக் கொண்டு, ஏழை, எளிய மக்களுக்கு உதவி வருகிறார்கள். ரமலான் மாதத்தில் செய்யக்கூடிய உதவி, மனித நேயத்தின் மறு உருவமாக உள்ளது.

    தமிழ்நாட்டின் இந்த மனிதநேயம், இன்றைக்கு நாடு முழுவதும் ஒரு மாடலாக உருவாகி இருக்கிறது. இதுவும் ஒரு வகை திராவிட மாடல்தான். இதை சொன்னால் பலருக்கு எரிச்சல், ஆத்திரம், கோபம் வரும்.

    அதற்கெல்லாம் நாம கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. எல்லோருக்கும் எல்லாம். அனைவருக்கும் உதவி சேர வேண்டும். இதுதான் திமுக அரசின் கொள்கை, திமுகவின் லட்சியம், அந்த அடிப்படையில்தான் திராவிட மாடல் என்கிறோம்.

    சிறுபான்மையினருக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்தது திமுக. எதிர்கட்சியாக இருந்தாலும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் திமுக சிறுபான்மை மக்களுடன் திமுக இருக்கும். அதுதான் சிறுபான்மையினர் நம்பிக்கையாக இருக்கிறது,'' என்றார்.

  11. மத்திய பிரதேச எதிர்கட்சித் தலைவராக ஸ்ரீ கோவிந்த் சிங் தேர்வு - பதவி விலக கமல்நாத்

    மத்தியப் பிரதேச சட்டப்பேரவையின் எதிர்கட்சித் தலைவராக ஸ்ரீ கோவிந்த் சிங் தேர்வாகியுள்ளார். முன்னாள் முதலமைச்சரும் மாநில காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் எதிர்கட்சித் தலைவராக இருந்தார். முன்னதாக கமல்நாத் அப்பதவியில் இருந்து விலகினார்.

    இதையடுத்து, போபாலில் உள்ள அவரது இல்லத்தில் ஸ்ரீ கோவிந்த் சிங் சந்தித்தார். அப்போது கமல்நாத், அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். ஸ்ரீ கோவிந்த் சிங் தனது புதிய பொறுப்பை வெற்றிகரமாக நிறைவேற்றுவதன் மூலம் கட்சியை மேலும் பலப்படுத்துவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  12. யுக்ரேனுக்கு உதவ ராணுவ கூட்டணி தயார் - நேட்டோ பொதுச் செயலாளர்

    நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்

    ரஷ்யாவிற்கு எதிராக, ராணுவ கூட்டணி யுக்ரேனுக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.

    பிரஸ்ஸல்சில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் பேசிய ஸ்டோல்டன்பெர்க், "நீண்ட காலத்திற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்" என்றார்.

    தொடர்ந்து அவர் கூறுகையில், "இந்தப் போர் பல மாதங்கள், ஆண்டுகள் நீடிக்கும். நீடிக்கும் சாத்தியம் உள்ளது," என்றார்.

    நேட்டோ நாடுகள் மற்றும் இந்த அணியில் அங்கம் வகிக்காத நாடுகள் ஜெர்மனியில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் சந்தித்தன. அப்போது யுக்ரேன் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கு உதவுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

    யுக்ரேனின் நட்பு நாடுகள் ஆயுதங்களை வழங்க தயாராகி வருவதாக நேட்டோ தலைவர் கூறினார். பிப்ரவரி 24 அன்று ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிலிருந்து பல நாடுகள் யுக்ரேனுக்கு ராணுவ, நிதி உதவிகளை வழங்கி வருகின்றன.

  13. கொரோனா தாக்கம்: சீனர்களுக்கு சுற்றுலா விசா மறுப்பது ஏன்? வெளியுறவுத்துறை விளக்கம்

    கொரோனா தொற்றின் காரணமாக சீனாவில் இருந்து இந்தியா வருவோருக்கு சுற்றுலா விசா வழங்கும் பணியை மீண்டும் தொடங்க உரிய நேரம் இன்னும் வரவில்லை என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி செய்தியாளர்களிடன் கூறுகையில், ''ஷாங்காய் போன்ற சீன நகரங்களில் கொரோனா தொற்று குறித்து இந்தியா அறிந்துள்ளது.

    சீனாவே இந்தியாவிற்கு இன்னும் விசா வழங்கவில்லை. 2020ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்கு விசா வழங்குவதற்கு தடை விதித்துள்ளனர். எனவே, சீனாவுக்கான சுற்றுலா விசா வழங்குவது குறித்து விவாதிக்க இது சரியான நேரம் அல்ல.''என்றார்.

    சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தொற்றின் பாதிப்பு, கணிசமாக அதிகரித்துள்ளது. இப்போதும் கடுமையான ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.

    இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தலைநகர் டெல்லியிலும் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  14. ஆளுநர் Vs முதல்வர்: ஊட்டி மாநாட்டில் பங்கேற்ற துணை வேந்தர்கள் மீது நடவடிக்கை பாயுமா?

  15. வெறுப்பு அரசியலுக்கு முடிவு காணுங்கள் - பிரதமருக்கு கடிதம் எழுதிய முன்னாள் அதிகாரிகள்

    இந்திய அரசின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட குடிமைப்பணிகளின் முன்னாள் அதிகாரிகள் 108 பேர் பிரதமர் மோதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.

    அந்த கடிதத்தில், ''இந்திய அரசியலமைப்புச் சட்டம் பலி பீடத்தில் இருக்கிறது. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் மீது, குறிப்பாக இஸ்லாமியர்கள் எதிரான வெறுப்பு வன்முறை அரங்கேறி வருகின்றன.

    இவை பயமுறுத்தும் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளன. இவ்வளவு சமூக அச்சுறுத்தல் முன்பு உங்கள் மவுனம் சத்தமாக கேட்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளனர்.

    ஏன் இவ்வாறு கடிதம் எழுதியுள்ளனர் ? விரிவாக காண இந்த காணொளியைப் பாருங்கள்.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  16. வீர் மஹான்: WWE-ல் மிரட்டும் இந்திய வீரர் - யார் இவர்?

  17. போராட்டதால் இலங்கையில் முடங்கிய இயல்புநிலை - வீதிதோறும் போராட்டம்

  18. போதைப் பொருள் கடத்தில் வழக்கில் தொடர்புடைய இருவர் கைது - இலங்கையில் இருந்து அகதிகள் போல் வந்தவர்கள்

    இலங்கைத் தமிழர்கள்

    இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் இருவர் அகதிகள் போல் தமிழ்நாட்டுக்கு வந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக உயிர் வாழ முடியாமல் தமிழ்நாட்டில் அகதியாக வந்ததாக இன்று காலை தொண்டி புதுக்குடி கடற்கரை பகுதிக்கு இருவர் வந்தனர். அவர்களிடம் மத்திய, மாநில உளவுத்துறையினர் மற்றும் கடலோர காவல் படை போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், இலங்கையில் போதைப் பொருள் வழக்கு நிலுவையில் உள்ளதால் யாழ்ப்பாணத்தில் இருந்து படகை திருடிகொண்டு தமிழ்நாட்டுக்கு தப்பி வந்தது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இருவரும் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் குருநகர் பகுதியை சேர்ந்த சீலன, அருள்ராஜ் என்பது தெரியவந்துள்ளது.

    விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்ததால் சந்தேகமடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள போலீஸ் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு இருவர் குறித்து தகவல் சேகரித்தனர்.

    அப்போது, இருவர் மீதும் போதைப் பொருள் கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

    இருவரையும் மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கவில்லை. அவர்கள் மீது சட்டவிரோதமாக இந்தியாவுக்குள், கடவுச்சீட்டு இன்றி ஊடுருவியதாக தேவிபட்டினம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  19. 'கருப்பு பற்றி மட்டும் பேசுபவர்கள் காவிக்கும் காது கொடுத்துள்ளார்கள்' - தெலங்கானா ஆளுநர் தமிழிசை பேச்சு

    ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்
    படக்குறிப்பு, தமிழிசை செளந்தரராஜன், தெலங்கானா மாநில ஆளுநர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர்

    ஆளுநர்களுக்கு மாநில அரசிடம் வேறுபட்ட கருத்து இருக்கலாம். கருத்து வேறுபாடு இருப்பதற்காக ஆளுநர்களை அவமரியாதையாக நடத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளார் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்.

    தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆக உள்ள தமிழிசை செளந்தரராஜன் கோவை பேரூர் தமிழ் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் இன்று பங்கேற்றார்.அப்போது அவர் பேசுகையில், ''தமிழ்நாடு அரசு சமீபத்தில் மடாபதிகளை அழைத்து பேசியுள்ளது வரவேற்கத்தக்கது. மடாதிபதிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்க வேண்டும்.

    கருப்பு பற்றி மட்டும் பேசுகிறவர்கள், காவியையயும் காது கொடுத்து கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி.

    தமிழையும் ஆன்மிகத்தையும் வளர்ப்பது காவி. ஆன்மீகத்தால் தான் தமிழ் வளர்த்துள்ளது.` என்றார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஆளுநர்களுக்கு மாநில அரசிடம் வேறுபட்ட கருத்து இருக்கலாம். கருத்து வேறுபாடு இருப்பதற்காக ஆளுநர்களை அவமரியாதையாக நடத்தக்கூடாது.

    மாநில அரசுக்கு பேச்சுரிமை இருப்பதைப் போல ஆளுநருக்கும் பேச்சுரிமை இருக்கிறது. ஆளுநர்கள் எல்லாருமே நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள்.

    அரசியல் கட்சி சார்பில்லாமல் இருப்பதற்காக ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மாநில அரசுக்கு தன்னுடைய கருத்தை வெளிப்படுத்த உரிமை இருக்கிறது. நான் எந்தவொரு மாநிலத்தையும் குறிப்பிட்டு பேசவில்லை.

    ஆளுநர்களும் முதலமைச்சர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும். எதிர்வினையாற்றிக் கொண்டே இருப்பது மாநிலத்தின் வளர்ச்சிக்கு நன்மையாக இருக்காது` என்றார்.

  20. பன்முகத்தன்மை மிக்க இந்தியாவில் ஒற்றை மொழி இயலாது - ஒமர் அப்துல்லா

    பன்முகத்தன்மை மிக்க இந்தியாவில் ஒற்றை தேசிய மொழியை கடைப்பிடிப்பது இயலாத ஒன்று என்று காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ''இந்தியா ஒரு பன்முகத் தன்மை மிக்க நாடு. இங்கு, ஒரு மொழியை தேசிய மொழியாக கொள்ள இயலாது. அனைவருக்கும் இடம் கொடுப்பதே இந்தியாவின் தத்துவம்.'' என்றும் ''இந்திய ரூபாய் நோட்டில் அனைத்து மொழிகளும் இடம் பெற்றுள்ளன. இது, ஒரு மொழி, ஒரு கலாச்சாரம் மற்றும் மதம் என்பதை விட பெரிது என்று புரிந்து கொள்ள வேண்டும்.'' என்று தேசிய மாநாடு கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு