"பஞ்சாப் ஒன்றும் சோதனைக் களம் அல்ல" - ராகுல் காந்தி

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் இன்று காளி மாதா கோயில் அருகே காலிஸ்தான் ஆதரவு குழு மற்றும் சிவசேனை ஆகிய இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக மாறியது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. மனித உரிமை ஆர்வலர் மஹிந்த: ராஜபக்ஷக்கள் வளர்ந்த கதை

  2. வணக்கம். இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது.

    வணக்கம். இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து நேரலைப் பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.

    இதுவரையிலான முக்கிய நிகழ்வுகள்.

    • பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் இன்று காளி மாதா கோயில் அருகே காலிஸ்தான் ஆதரவு குழு மற்றும் சிவசேனை ஆகிய இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக மாறியது.
    • பஞ்சாப் ஒன்றும் சோதனைக் களம் அல்ல. பாட்டியாலாவில் இருந்து வரும் காட்சிகள் கவலையளிப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
    • வன்முறை யாருக்கும் பயனளிக்காது. நாம் எப்போதும் அகிம்சையை விரும்பி, அமைதிக்கு முன்னுரிமை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
    • யுக்ரேனில் கீயவ் நகர் மீதான ரஷ்யாவின் குண்டு தாக்குதலில் ரேடியோ லிபர்டியின் செய்தியாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
    • ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ கூட்டெரஷின் பயணத்தின்போது யுக்ரேனின் கீயவ் மீதான ரஷ்யாவின் வான்வழி தாக்குதல், 'மனிதாபிமானமற்றது' என்று ஜெர்மனி விமர்சித்துள்ளது.
    • இந்தியை தேசிய மொழியாக குறிப்பிடும் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் கருத்துக்கு எதிர்வினையாற்றிய கன்னட நடிகர் சுதீப்பின் கருத்து சரியே என்று கூறியிருக்கிறார் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை.
    • டெல்லி ஜஹாங்கிர்புரி வன்முறையில் குற்றம் சட்டப்பட்ட முக்கிய நபர் மேற்குவங்கத்தில் கைது செய்யப்பட்டார்.
    • இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. டெல்லியில் ஒரு நாளில் 1,367 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
    • தஞ்சாவூர் களிமேடு திருவிழா விபத்து உயிரிழப்பு குறித்து குழு விசாரணை நடத்தி வருகிறது.
    • யுக்ரேன் மீதான ர்ஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது.
    • இலங்கைத் தமிழர்களுக்கு உதவ தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை அதிமுக,பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரித்தன.
    • இந்தியை ஒருபோதும் ஏற்க மாட்டோம் இந்தியாவில் தமிழ் தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
    • கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே காதலர்களிடம் மிரட்டி பணம் பறித்த இரண்டு ஆயுதப் படை காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தரமற்ற அரிசி வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் 10 பேர் பணி இடைநீக்கம் செய்யபட்டுள்ளனர்.
    • கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வரும் சிறப்பு குழு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
    • ஆப்ரிக்க நாடான கேமரூன் பெண்ணை தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்துமாரியப்பன் காதல் திருமணம் செய்து கொண்டார்.
    • ம.தி.மு.கவின் சிவகங்கை, திருவள்ளூர், விருதுநகர் மாவட்டச் செயலாளர்கள் கட்சி பொறுப்புகளில் இருந்து தற்காலிக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
    • விருதுநகர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் தன்னை தாக்கி மானபங்க படுத்தியதாகக் கூறி பெண் ஒருவர் சமீபத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தை பாஜக கையில் எடுத்துள்ளது.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், குறிப்பாக, யுக்ரேன் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழின் இணைய தளம், முகநூல், ட்விட்டர், இண்ஸ்டாகிராம் பக்கங்களில் இணைந்திருங்கள். நன்றி.

  3. 'தனது நூலுக்கு பரிசு வேண்டாம்' - அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு

    தமிழ்நாடு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ''தமிழில் வெளியிடப்படும் சிறந்த நூல்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தில், 2018ம் ஆண்டின் சிறந்த நூல்கள் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்வு செய்யப்பட்டடன.

    இதில், 'மூளைக்குள் சுற்றுலா' என்கிற எனது படைப்பிற்கு, இந்த ஆண்டு நடைபெறும் விழாவில், தலைமைச் செயலாளராக பரிசு பெறுவது ஏற்புடையது அல்ல. எனது படைப்பிற்கு வழங்கும் பரிசை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

  4. இலங்கை மக்களுக்கு உதவிட அனுமதி - இந்திய பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால், தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தமிழர்கள் பலர் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர்.

    பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு மருந்து, உணவு மற்றும் அத்தியாவசி்ய பொருட்களை வழங்கி உதவிட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காலை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த இந்த தீர்மானத்திற்கு எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவளி்த்தன. இந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி, இந்திய பிரதமர் மோதி்க்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், ''இலங்கை மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்பிவைக்க உரிய அனுமதிகளை வழங்க வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டுமென.'' வலியுறுத்தி்யுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  5. தஞ்சாவூரில் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் 7 பேர் கைது - உறவினர்கள் எதிர்ப்பு

    வல்லம் காவல் நிலையத்தில் போராட்டம்

    தஞ்சாவூர் அருகே 22 வயது பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தஞ்சாவூர் அருகே உள்ள பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல பணி முடித்து விட்டு தனது சொந்த ஊருக்கு செல்லும்போது, கொடிஅரசன் என்ற இளைஞர், அந்த பெண்ணை அழைத்துச் சென்று வீட்டில் விடுவதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.

    ஆனால் வீட்டிற்கு அழைத்து செல்லாமல், அருகில் உள்ள காட்டுப் பகுதி அழைத்துச் சென்று தனது நண்பர்களுடன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண்ணின் உறவினர்கள் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரை தொடர்ந்து வல்லம் துணை காவல் கண்காணிப்பாளர் பிருந்தா விசாரணை நடத்தினார். அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரித்த போது, அவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து, சம்பவத்தில் ஈடுபட்டதாக கொடியரசன், கண்ணன், சாமிநாதன், சுகுமாரன், தமிழரசன் ஆகிய 5 பேரும் அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக 2 பேர் என மொத்தம் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட இளம் பெண் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்துள்ளவர்கள் மீது பொய் வழக்கு போடக் கூடாது என்று அவர்களது உறவினர்கள் காவல் நிலையம் முன்பு தர்னாவில் ஈடுபட்டனர்.

  6. "பஞ்சாப் ஒன்றும் சோதனைக் களம் அல்ல" - ராகுல் காந்தி

  7. பஞ்சாப் பாட்டியாலா வன்முறையால் பதற்றம் - ஆளும் கட்சியை இலக்கு வைக்கும் எதிர்கட்சிகள்

  8. திருமணத்தன்று போதையில் மணமகன் - மணப்பெண் வீட்டார் அதிரடி முடிவு

    மகாராஷ்டிரா மாநிலத்தில் திருமணத்தன்று மணமகன் 4 மணி நேரம் தாமதமாக சென்றுள்ளார். உறவினர்களும் மது போதையில் சென்றுள்ளனர். அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார் எடுத்த அதிரடியை இந்த காணொளியில் பார்க்கலாம்.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  9. நகைச்சுவை நடிகை ரங்கம்மாள் காலமானார்

    நடிகை ரங்கம்மாள்

    தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த நடிகை ரங்கம்மா(84) உயிரிழந்தார்.

    நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் பல்வேறு படங்களில் ரங்கம்மாள் நடித்துள்ளார். நீண்ட காலமாக உடல் நலக் குறைவால், பாதிக்கப்பட்டிருந்த ரங்கம்மாள் கோவை மாவட்டம் அன்னூர் அருகே தெலுங்குபாளையத்தில் உறவினர்கள் இல்லத்தில் வசித்து வந்தார். ரங்கம்மாள் பாட்டியின் இறுதிச்சடங்கு தெலுங்குபாளையத்தில் நடைபெறுகிறது.

  10. தலைப்பாகையுடன் சீக்கிய பிரதிநிதிகளை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோதி

    நரேந்திர மோதி

    பட மூலாதாரம், PMO INDIA

    பிரதமர் நரேந்திர மோதி இன்று டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் சீக்கிய பிரதிநிதிகளுக்கு விருந்தளித்து உரையாற்றினார்.

    இந்த நிகழ்வின் காட்சிகளில் பிரதமர் மோதி சிவப்பு நிற டர்பன் (சீக்கிய பாணி தலைப்பாகை) அணிந்தபடி விருந்தினர்களை வரவேற்றார்.

    மத்திய அமைச்சரும் சீக்கியருமான ஹர்தீப் சிங் பூரியின் பக்கவாட்டில் ஒரு மேடையில் நரேந்திர மோதி அமர்ந்திருந்தார். அந்த மேடையின் முன்பக்கத்தில் "சத்பவனா" (நன்மைக்காக) என்ற வார்த்தை இந்தியில் எழுதப்பட்டுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோதி சமீபத்திய மாதங்களில் சீக்கியர் சமூகத்துடன் கலக்க பலமுறை முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

    குரு தேக் பகதூரின் 400வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் அவர் சமீபத்தில் செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் தனது உரையில் முகலாய மன்னர் ஔரங்கசீப்பை தாக்கிப் பேசினார்.

    ஔரங்கசீப்பின் கொடுங்கோல் சிந்தனைக்கு முன்னால், குரு தேக் பகதூர் ஜி, 'ஹிந்த் தி சதர்' ஆகி, பாறை போல் நின்றார்," என்று பிரதமர் மோதி கூறினார்.

    ஔரங்கசீப்பும், அவரைப் போன்ற கொடுங்கோலர்களும் பலரின் தலையை துண்டித்திருக்கலாம் என்பதற்கு செங்கோட்டையே சாட்சி என்று மோதி குறிப்பிட்டார்.

    முன்னதாக, மார்ச் மாத தொடக்கத்தில், சீக்கிய பிரமுகர்கள் மற்றும் அறிவுஜீவிகள் அடங்கிய குழுவை பிரதமர் சந்தித்தார்.

    சீக்கியர்களுடனான தனது தொடர்பு மற்றும் அவர்களுக்காக தமது அரசாங்கம் செய்த பணிகள் குறித்து பிரதமர் மோதி பேசினார். பிரதமர் இல்லத்தில் இந்த சந்திப்பு 90 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  11. பஞ்சாப் ஒன்றும் சோதனைக்களம் அல்ல - ஆம் ஆத்மி கட்சிக்கு ராகுல் காந்தி அறிவுரை

    பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் இருந்து வரும் காட்சிகள் கவலையளிப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், "பஞ்சாப் போன்ற உணர்ச்சிகரமான எல்லை மாநிலத்திற்கு அமைதியும் நல்லிணக்கமும் மிக முக்கியம்," என்று ட்வீட் செய்துள்ளார்.

    மேலும், பஞ்சாபின் ஆம் ஆத்மி அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ள ராகுல், "பஞ்சாப் மாநிலம் சோதனை நடத்தக்கூடிய இடம் அல்ல. பஞ்சாப் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்படுத்த வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  12. ஆப்ரிக்க பெண்ணை மணந்த தமிழர்: கோவையில் இந்து, கிறிஸ்தவ முறைப்படி திருமணம்

    ஆப்பிரிக்க பெண்ணை மணந்த தமிழர்

    ஆப்ரிக்க நாடான கேமரூன் பெண்ணை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இன்று காதல் திருமணம் செய்து கொண்டார்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் முத்துமாரியப்பன். இவர் கடந்த 8 வருடங்களாக மேற்கு ஆப்பிரிக்க நாடான கேம்ரூனில் உள்ள ஒரு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தில் சி.என்.சி. மெசின் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்துள்ளார்.

    அதே நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றிய வால்மி இனாங்கா மொசொக்கேவை காதலித்து வந்துள்ளார். இருவரும் தங்களின் காதலை அவரவர் குடும்பத்திடம் தெரிவிக்க இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.

    கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த வால்மி இனாங்கா மொசொக்கே இந்தியாவிற்கு வந்து, இந்து முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என தனது விருப்பத்தை அவரது வீட்டில் தெரிவித்துள்ளார். இதற்கு அவரது தாயாரும் உறவினர்களும் சம்மதம் தெரிவித்தனர்.

    இதையடுத்து உறவினர்கள் 10 பேருடன் இந்தியா வந்தனர். கோவை துடியலூர் அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இன்று இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் கிறித்தவ முறைப்படியும் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர்.

    ஆப்பிரிக்க பெண்ணை மணந்த தமிழர்
  13. பஞ்சாப் பாட்டியாலாவில் வன்முறை: காலிஸ்தான் ஆதரவு குழு -சிவசேனை கட்சி மோதல்

    பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் இன்று காளி மாதா கோயில் அருகே இரு பிரிவினருக்கு இடையே மோதல் வன்முறையாக மாறியது.

    தற்போது அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான Gurpatwant Singh Pannu of Sikhs for Justice, ஏப்ரல் 29 ஆம் தேதி காலிஸ்தான் நிறுவப்பட்ட தினத்தைக் கடைப்பிடிக்க அழைப்பு விடுத்திருந்தது.

    அதையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலிஸ்தானி கொடி ஏற்றப்படும் என்றும் அந்த அமைப்பு கூறியிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பால் தாக்கரே சிவசேனை கட்சி பேரணி நடத்தியது.

    இந்த நிலையில், ஏப்ரல் 29ஆம் தேதி காலையில் காலிஸ்தானி ஆதரவு குழுவினரும் சிவசேனை கட்சியினரும் ஒரே இடத்தில் குழுமினர். இரு தரப்பினரும் பரஸ்ரம் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர்.

    இது குறித்து பஞ்சாபில் உள்ள பிபிசி செய்தியாளர் மன்பிரீத் கவுர் கூறும்போது, பாட்டியாலாவில் காலிஸ்தானி ஆதரவு கோஷத்தை சிலர் எழுப்பியதால் பதற்றம் ஏற்பட்டது. அவர்களுக்கு எதிராக சிவசேனை கட்சியினரும் முழக்கமிட்டனர்.

    இதனால் ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து, தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் தெரிவித்துள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கருத்தில், பாட்டியாலா சம்பவம் துரதிருஷ்டவசமானது என்றும் அது பற்றி மாநில காவல்துறை தலைமை இயக்குநரிடம் பேசியதாகவும் கூறியுள்ளார்.

    பாட்டியாலாவில் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்த தகவலை பாட்டியாலா சரக காவல் துறை தலைவர் ராகேஷ் அகர்வால் வெள்ளிக்கிழமை மாலையில் செய்தியாளர்களிடம் பேசும்போது உறுதிப்படுத்தினார்.

    பஞ்சாபில் வன்முறை தொடர்வதாக வெளிவரும் வதந்திகளுக்கு யாரும் செவிசாய்க்க வேண்டாம் என்றும் காவல்துறை அதிகாரி கேட்டுக் கொண்டார். அமைதியை நிலைநாட்ட துணை ஆட்சியர் கூட்டம் நடத்தியுள்ளார்.

    மேலும் கலவரம் நடந்த பகுதியில் அமைதியை கொண்டுவர கொடி அணிவகுப்பு நடத்துகிறோம்.

    மேலும் கூடுதலாக காவல்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளன” என்றார். இந்த நிலையில், பாட்டியாலா வன்முறை தொடர்பாக அரசு உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் பகவந்த் மான் இன்று மாலையில் ஆலோசனை நடத்தினார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  14. வன்முறை யாருக்கும் பயனளிக்காது - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

    வன்முறை யாருக்கும் பயனளிக்காது. நாம் எப்போதும் அகிம்சையை விரும்பி, அமைதிக்கு முன்னுரிமை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

    மேலும், 'வன்முறை யாருக்கும் பயனளிக்காது. வன்முறைக்கு முன்னுரிமை கொடுத்த சமூகங்கள் இப்போது தங்களின் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றன. அனைந்து சமூகங்களும் ஒன்றிணைந்து மனித நேயத்தை காப்பது அவசியம்,'' என்றும் தெரிவித்துள்ளார்.

    மோகன் பாகவத்
  15. கீயவ் நகர தாக்குதலில் வானொலி செய்தியாளர் கொலை

    யுக்ரேன் போர்

    யுக்ரேனில் கீயவ் நகர் மீதான ரஷ்யாவின் குண்டு தாக்குதலில் ரேடியோ லிபர்டியின் செய்தியாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

    ரேடியோ லிபர்ட்டியின் செய்திப்படி, செய்தியாளர் வேரா ஹைரிச் தனது வீட்டில் இருந்தபோது, ​​அந்த கட்டடத்தை ஏவுகணை தாக்கியது. அவர் "ஒரு கனிவான, அறிவுத்திறன் மிக்க நபர். உண்மையான தொழில்முறை செய்தியாளர்" என்று பாராட்டப்பட்டவர்.

    "ஒரு அற்புதமான நபர் இறந்து விட்டார்" என்று அவரது சக ஊழியர் ஒலெக்சாண்டர் டெம்சென்கோ தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    ரேடியோ ஃப்ரீ ஐரோப்பா என்றும் அழைக்கப்படும் ரேடியோ லிபர்ட்டி, அமெரிக்க நிதியுதவி பெறும் நிறுவனம். வெளிவராத பல செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். முன்னதாக, கியவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ, நேற்றைய ஏவுகணை தாக்குதலுக்குப் பிறகு ஒரு உடல் மீட்கப்பட்டதாகக் கூறினார்,

    இருப்பினும் கொல்லப்பட்ட நபரின் கூடுதல் விவரங்கள் அந்த நேரத்தில் தெரிவிக்கவில்லை. யுக்ரேன் இலக்குகளை தாக்கியதை ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது, ஆனால் கட்டிடத்தின் மீதான தாக்குதல் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    யுக்ரேனின் மத்திய கியவ் பகுதியில் நடந்த தாக்குதலில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளின் கீழ் தளங்கள் அழிக்கப்பட்டுள்ளன. முன் சுவர் முழுவதும் இடிந்து, குடியிருப்புகளின் உட்புறம் உடைந்து, எரிந்தது. தடயவியல் குழுக்கள் அங்கு ஆய்வு செய்தனர்.

    மீட்புப் பணியாளர்கள் நடைபாதையில் இருந்து இடிபாடுகள் மற்றும் இரும்பு குவியல்களை அகற்றி, உடல்கள் அல்லது உயிர் பிழைத்தவர்களை இடிபாடுகளிடையே தேடினர். ரஷ்யாவின் தாக்குதல் இலக்கு அந்த பகுதியில் உள்ள ஆர்ட்டெம் என்ற ராணுவ தொழிற்சாலையாக இருந்திருக்கலாம்.

  16. யுக்ரேன் கீயவ் மீதான தாக்குதல் - ஜெர்மனி கண்டனம்

    கீயவ் மீதான ரஷ்யா தாக்குதல்

    பட மூலாதாரம், Reuters

    ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ கூட்டெரஷின் பயணத்தின்போது யுக்ரேனின் கீயவ் மீதான ரஷ்யாவின் வான்வழி தாக்குதல், 'மனிதாபிமானமற்றது' என்று ஜெர்மனி விமர்சித்துள்ளது.

    "கீயவ் மீதான ரஷ்ய ஏவுகணை தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். கூட்டெரஷ் நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்" என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் வொல்ப்காங் புச்னர் கூறினார்.

    நேற்றிரவு கீயவைத் தாக்கியதை ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது, ஆனால், தங்களின் இலக்கு ராணுவம் என்றும் குறிப்பாக, ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை என்றும் தெரிவித்துள்ளது.

    அமெரிக்க நிதியுதவி பெற்ற ஒளிபரப்பு நிறுவனமான ரேடியோ லிபர்டி கூறுகையில், அதன் பத்திரிக்கையாளர்களில் ஒருவரான விரா ஹைரிச்சின் வீட்டில் ஏவுகணை தாக்குதலில் தாக்குதலில் கொல்லப்பட்டார்.' என்று தெரிவித்துள்ளது.

  17. திருவண்ணாமலையில் போலீஸ் விசாரணைக்கு சென்றவர் சந்தேக மரணம்

  18. 'இந்தி விவகாரத்தில் நடிகர் சுதீப் சொன்னது சரிதான்' - கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை

    இந்தியை தேசிய மொழியாக குறிப்பிடும் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் கருத்துக்கு எதிர்வினையாற்றிய கன்னட நடிகர் சுதீப்பின் கருத்து சரியே என்று கூறியிருக்கிறார் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை.

    இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், "இந்தி மொழி விவகாரத்தில் நடிகர் கிச்சா சுதீப் சொன்னது சரிதான். மொழிவாரி அடிப்படையில் ஒரு மாநிலம் உருவாகும்போது பிராந்திய மொழிதான் மிகவும் முக்கியமானவை" என்று கூறியுள்ளார்.

    பசவராஜ் பொம்மாய்
  19. “விலைவாசி அதிகரித்தாலும் ஊதியத்தில் மாற்றம் இல்லை” - இலங்கை அரசுப் பணியாளர்களின் துயரம்

  20. மதிமுக மாவட்டச் செயலாளர்கள் மூவர் இடைநீக்கம் - வைகோ அறிவிப்பு

    ம.தி.மு.கவின் சிவகங்கை, திருவள்ளூர், விருதுநகர் மாவட்டச் செயலாளர்கள் கட்சி பொறுப்புகளில் இருந்து தற்காலிக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

    ம.தி.மு.க தலைமை நி்லையச் செயலாளராக வைகோ மகன் துரை வைகோவுக்கு பொறுப்பு அளிக்கப்பட்டதை விமர்சித்து பேசிவந்த நிலையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    மதிமுக அறிவிப்பு

    பட மூலாதாரம், MDMK